Tuesday, July 7, 2009

தாள்களுக்குள் வைத்த மயிலிறகுகள்.



சோமு மாமா
வாங்கி தந்த
மென் ஊதா
மர்பி ரேடியோ
சுமதி அக்காவுடையது.

ள்ளதிலேயே பெரிய
உணவருந்தும் பூந்தட்டு
புனிதா அக்கா
வைத்திருப்பாள்.

சாயம் போயும்
விடாமல் வைத்திருந்தாள்
தேவி
கத்தரி பூ கலர்
தாவணியை.

யில் கழுத்து
நிறமொப்பிய
தலையணையும்
மஞ்சள் போர்வையும்
இந்திராவுக்கானது.

வரவர் பொருள்
அவரவர் தொட மட்டுமே.

த்தான்கள் வந்து
கொண்டு சென்றார்கள்
அக்கா தங்கைகளை.

போட்டது போட்டபடி போன
அக்கா தங்கைகள்
பிரிய பொருட்களையும்
போட்டே போனார்கள்.

வீடெடுத்து வீதியில் வீச
வீட்டிற்கு இயலாது.
வீட்டிலிருந்த மனிதர்களும்
வீடு போலவே.

யினும்...
வீட்டிலில்லை எது ஒன்றும்...

பிரியமான எதுவும்
அரவமின்றி தொலையும் போல.

பொதுவாய்!...

(தினமணி நாளிதழில் வெளியான எனது கவிதை)

42 comments:

ஆபிரகாம் said...

கலக்..!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பிரியமான எதுவும்
அரவமின்றி தொலையும் போல.//

Excellent.

அ.மு.செய்யது said...

யதார்த்தம் !!! அழகு !!!

வித்தியாசமாக இருந்தது தோழரே !!!

சென்ஷி said...

//
வீடெடுத்து வீதியில் வீச
வீட்டிற்கு இயலாது.
வீட்டிலிருந்த மனிதர்களும்
வீடு போலவே.//

நல்லாயிருக்குங்க!

இரசிகை said...

nallaayerunthathunga..

பா.ராஜாராம் said...

"இப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்து விடுகிறது."
என்று எழுதும் அபிரகாம்
வீடு வந்திருப்பது அவ்வளவு சந்தோசமாயிருக்கிறது..
அன்பும் நன்றியும் ஆபிரகாம்...

பா.ராஜாராம் said...

நன்றி ஜெஸ்..
சீக்கிரமே வந்துட்டீங்க,
அன்பும்..

பா.ராஜாராம் said...

ஆகட்டும் செய்யது..
(மழைக்கு ஒதுங்கலையே..)
நன்றியும் தோழரே..

பா.ராஜாராம் said...

"பொய்களை போல்
எளிதில் கிட்டுவதில்லை
புன்னகைகள்."
எழதும் சென்ஷி..
எனக்கு புன்னகை வேணும் சென்ஷி...
மிகுந்த அன்பும்..

பா.ராஜாராம் said...

அடர் கருப்பு பின்னணி,
ரசிகை கையில் மரமாக போகும் செடி..
விரிந்து பரவுகிறது...
காட்சியிலும்,கவிதைகளிலும்...
கவிதை.
நல்ல ரசிகை!
வரணும் ரசிகை..

கவிதாசிவகுமார் said...

அத்தைகளைப் பற்றிய அழகான கவிதை.மிக நாசூக்காக பாசத்தை வெளிப்படுத்தும் அற்புதக் கவிதையும்கூட!

நேசமித்ரன் said...

நெல்லி மரத்து அணில்
பதினோரு மணி காக்கை
குளியலறையின் அதிகாலை செல்லச் சண்டைகள்
மருதாணி இரவுகள்
மின்சாரம் அறுந்த மொட்டை மாடி கூட்டாஞ்சோறு
பரீட்சை நேர பரிவு
நோய்க்கால்த்து நேசம்

எல்லாமும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது உங்கள் கவிதை
அற்புதம்

நந்தாகுமாரன் said...

//

அத்தான்கள் வந்து
கொண்டு சென்றார்கள்
அக்கா தங்கைகளை

//

இந்த வரிகளை ரசித்தேன் ... எளிமையான அழகு பிரம்மாண்டமான பாதிப்புகளை மனதிற்குள் ஏற்படுத்துகிறது அல்லவா :)

நந்தாகுமாரன் said...

இதையும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது ...

ஜன்னல் வைத்த வீடு என்ற உங்கள் கவிதைக்கு நான் ரெண்டாவது பின்னூட்டம் இட்டிருக்கிறேன் ...

அதைப் படிப்பீர்களோ என்னவோ ... எனவே இங்கேயும் ...

ராஜாராம் என் பின்னூட்டத்திற்கான உங்கள் பின்னூட்டம் என்னை நெகிழச் செய்துவிட்டது ... எப்போதோ கணையாழியில் நான் எழுதிய ஒரு கவிதையின் வரியை நீங்கள் படித்து இன்னும் நினைவில் வைத்திருப்பது என்பது ... இம்மாதிரி அனுபவம் எனக்கு முதல் முறை ... கடவுளே / சைத்தானே ...

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்ச்சியான பின்னூட்டம் நேசா..
கைகளை பிடிச்சுக்கணும் போல் இருக்கு..
முன்பே கேட்கணும் என்று இருந்ததுதான்
"பிடிச்சுகட்டா?"....

பா.ராஜாராம் said...

எளிது..நந்தா..
சில கவிதைகள் மனிதம் போலவே.
சில மனிதம் கவிதைகள் போலவும்.
நந்தா பார்த்ததும்,அதே நந்தாதானா என
உறுதி செய்ய தளத்திற்கும் போனேன்.
கல்யாண்ஜியின்,"மனசு குப்பையாச்சு"
இப்ப,நேச மித்ரனின்"அலகில் துள்ளும் மீன்"
இன்று பார்க்க கிடைத்த வாசு அண்ணாவின்"ஒரு பொழுது"
யாத்ராவின் "எறும்பின் பயணம்"
கார்த்தியின்(kartin)மழைகூடு..இப்படி நிறைய போகும்...
மறக்கத்தான் முயற்சி செய்யவேணும்.இல்லாவிட்டால்
காலத்துக்கும் கிடக்கும்...
நன்றி நந்தா!

தெய்வா said...

நீரையும் அன்பையும் பொழியாமல் இருக்க
மழையாலும் முடியாது
மனிதர்களாலும் முடியாது

உன் கவிதை Superb..

ச.முத்துவேல் said...

இப்போ ஊருக்குப் போனாலும் என் தட்டு, என் டம்ளர், என் அலமாரி என்று ஒவ்வொன்றையும் சொந்தம் கொண்டாடியது, பார்க்கும்போது புன்முறுவலைத் தரும்.

பொதுவா,ரொம்ப ஈர்த்துட்டீங்க.

இரசிகை said...

kandippanga:)

இரசிகை said...

naan ungaloda yellaa kavithaikalaiyume vaasiththutten..

athathanaiyum azhagu:)

yenakkuth therinthavangattaiyum kooda sonnen..
avungalum vaasippaanga!

niraya yezhuthunga:)

பா.ராஜாராம் said...

நன்றிடா கவிதுமா!..

பா.ராஜாராம் said...

அது சரி..நீ எப்போ எழுத வருகிறாய் தெய்வா,
சந்தோசமாய் இருக்குடா... வாயேன் சீக்கிரம்.இரவு பேசுவோம்டா.
லக்ஷ்மிக்கும்,சக்திக்கும் என் அன்பை தா.

பா.ராஜாராம் said...

இந்த புன்முறுவல்தான்,நம்மை எழத அழைத்ததும்.
"நிறைய பேசிவிட்டேன் போல"என்கிற வெட்கமும்!
இல்லையா முத்து?...
நீங்க மட்டும் என்னவாம்?....

பா.ராஜாராம் said...

ஆகட்டும் ரசிகை...
பிரமாதமான அன்பும்,
பிரமாதமான வெட்கமும்!(பாலு மகேந்திரா படம்
பார்க்க போன முத்து தருகிறது போல...)

தெய்வா said...

இன்று உங்களது திருமண நாள்...
20 வருடத்திற்கு மேல் இருக்குமே...

எங்களது வாழ்த்துக்கள்....

லக்ஷ்மியின் படம் இல்லாமல்...

anujanya said...

சுந்தர் தளத்தின் மூலம் தெரிந்து கொண்டு இங்க வந்தால் அதகளம். மனசுக்கு நெருக்கமாக எழுதும் உங்கள அறிஞ்சதில் ரொம்ப சந்தோசம். இங்க வந்து பார்த்தால் யாத்ரா, நந்தா, நேசமித்ரன், சென்ஷி என்று எல்லாரும் தெரிந்த நண்பர்கள்.

எனக்கும் நந்தா சொல்லிய அதே வரிகள் மிகப் பிடித்தது.

//அத்தான்கள் வந்து
கொண்டு சென்றார்கள்
அக்கா தங்கைகளை//

எனக்கும் இதுபோலவே நடந்ததால்.

அனுஜன்யா

Kannan said...

டேய் நண்பா..!!
கல்யாண நாள் வாழ்த்துக்கள்...!! நேத்து தான் மங்களத்தில் உன் திருமணம் நடந்தது போல இருக்கு....கல்யாணத்துக்கு முதல் நாள் மொட்டை மாடியில் நீயும் நானும் பேசிய பேச்சு பசுமையாய் நினைவு இருக்கு...!!

பா.ராஜாராம் said...

பிறந்த நாள்,திருமண நாள்,குழந்தைகள் பிறந்த நாள்,
இப்படி,பல தருணங்களில்,லக்ஷ்மியின் ஓவியங்களை,
கொண்டுவந்து,முகத்துக்கு அருகில் காட்டி,கீழ் கண்ணில்
புன்னகைக்கும்...மனைவியின் தூரம் உணர்த்துகிறது-
ஒட்டகங்கள் இழுபடும் பாலை!...
நன்றிடா தெய்வா..

பா.ராஜாராம் said...

ஆமாம்டா கண்ணா..
மறு நாள்,விடியாமலே இருந்திருக்கலாம்...
மகாவின்,பின்னூட்டம் பார்க்கும்
துரதிர்ஷ்ட்டம் இல்லாமலாவது
இருந்திருக்கும்...
நன்றிடா பயலே!..

நேசமித்ரன் said...

உங்களின் பிரியம் நெகிழ்வூட்டுகிறது
நான் எப்போதோ உங்கள் கைகளை பிடித்துக் கொண்டேன்
:)
'நிலாப்பசிக்கும் நாட்களில்
நீருள் கிடக்கும் நாணயம் மேகத்தின் நடுவே..

ஒரு நாகலிங்கப்பூவின் குடைக்கு கீழே


இன்று தாள்களுக்குள் வைத்த மயிலிறகில்... '

பா.ராஜாராம் said...

ரொம்ப சந்தோசம் அனுஜன்யா..உங்களை அறிமுகமாக்கி கொண்டதிலும்.
சுந்தர் மட்டும் தான் நேரடியாக தெரியும்.மற்ற நண்பர்கள் எல்லோரும்
அவர்கள் எழுத்து மூலமாகத்தான்,(எனக்கு dsp யை தெரியும்...
அவருக்கு என்னை தெரியாது என்பது போல்..).ஒரு வேலை "வாசு அண்ணாவில் "
நீங்கள் குழம்பியிருக்கலாம்.ஜீவராம் சுந்தரை,சுந்தரா எனவும் வாசுவை, வாசு அண்ணா
எனவும் அழைக்க எது சொல்லித்தருகிறது என இன்னும் அறுதியிட இயலவில்லை.
தோனுதிறதை,மீறி செய்ய இயலாமல் போய் விடுகிறதுதான்.
ஆக...
எல்லா அத்தான்களும் ஒரே மாதிரித்தான் போல..
அன்பும் நன்றியும் அனுஜன்யா..

பா.ராஜாராம் said...

அவ்வ்வ்வ்வ்வளவு சந்தோசம் நேசா...

அண்ணாதுரை சிவசாமி said...

ஒரு நாள் தாமதம்.32 பின்னூட்டங்கள்.17 ரசிகர்கள்.சந்தோசமா
இருக்குடா ராஜா.நான் சொன்னதற்காக முற்றிலும் சைவமாக
இருந்து விடாதே.ஒன்னு ரெண்டு உன்னோட அசைவத்தையும்
எடுத்து விடு.

அண்ணாதுரை சிவசாமி said...

ராஜா,மனமார்ந்த கல்யாண நாள் வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

"இந்நேரத்துக்கு வந்திருப்பாரே"என தேடிக்கொண்டுதான்
இருந்தேன் சித்தப்பா.சந்தோசமாய் இருக்கேன்...
கேட்டது, வந்துகொண்டிருக்கு "காலத்தின் வாசனையில்"..
பிறகு திட்டக்கூடாது நீங்கள்.வாழ்த்துக்கு நன்றியும் அன்பும் சித்தப்பா...

கவிதாசிவகுமார் said...

கவிஞர் சித்தப்பாவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.

கவிதாசிவகுமார் said...

என் தாயாருக்கு அடுத்தபடியாக என்னை "கவிதுமா" என்று அழைத்த சித்தப்பாவிற்கு நன்றி.

பா.ராஜாராம் said...

சந்தோசம்டா கவிது.கவிதுமா!

தமிழன்-கறுப்பி... said...

நந்தா சொன்ன வரிகள் எனக்கும் பிடித்திருக்கிறது...

பா.ராஜாராம் said...

'ஒரு பெண்மையிடம் தோற்றவன்"
என்பதில் தொடங்குகிறது உங்கள் வெற்றி கறுப்பி..
(கறுப்பி மிக அழகு...எங்கிருந்து எடுத்தீர்கள் இந்த பெயரை..)
நிறைய நன்றியும் அன்பும் கறுப்பி...

Venkatesh Kumaravel said...

அருமையான விவரிப்பு...
கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து அப்படியே கதை மாதிரி ஆகிவிடுகிறது... ரொம்ப கவர்ந்த கவிதை!

பா.ராஜாராம் said...

ஆகட்டும் வெங்கி...
படிக்கிற காலம் தொட்டே எழுத வருவது பார்க்க அவ்வளவு அழகாய் இருக்கிறது.மிகவும் ரசனையான உங்களின் புகைப்படமும் கூட.விசாலமான அன்பிற்கு நெகிழ்வான நன்றி வெங்கி.