Tuesday, July 14, 2009

விருப்பமான வரி...



குடிவரி கேட்டு
நீள் செவ்வக நோட்டேந்தி
நாலு பேர் வருவதுண்டு
ஊர் கோவில்
திருவிழாவிற்கு.

சிறகு முளைத்த
அதே
நீள் செவ்வக
கடிதமொன்று
நான்கு முனை
மஞ்சள் அணிந்து
கடல் கடந்த களைப்போடு
கை அடைகிறது
வருடா வருடம்.

வீடு விட்டு
வீடு மாறி
நாடு விட்டு
நாடு போனாலும்
விட்டு விடுவாளா
வீரமாகாளி?....

39 comments:

Kannan said...

பகட்டில்லாத, மிக எளிமையான வரிகள்.

கவிக்கிழவன் said...

நன்றாக உள்ளது
இலங்கையில் இருந்து யாதவன்

நேசமித்ரன் said...

எந்த விஷயத்தையும் கவிதையாய் பார்க்கும் உங்கள் பார்வை
இந்த கவிதையை போலவே அழகு ....!
மாகாளி விட்டாலும் நாங்கள் விடப் போவதில்லை கவிஞரே..!

கவிதாசிவகுமார் said...

எல்லைதாண்டி போனாலும் மறவாமல் காத்து நிற்கும் மாகாளி அவள். பலே!

பா.ராஜாராம் said...

நன்றிடா கண்ணா...நீ கார் ஓட்டும்
கதையை ஒரு கவிதை எழுதும் தீர்மானங்கள்
இருக்கு.labels-நகைச்சுவை என்றாகும்..
பரவாயில்லையா...

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றி யாதவன்...
சிவகங்கையில் இருந்து ராஜாராம்!..
நான் சந்தோசமாகவே சொன்னேன்.
நீங்களும் சொல்லவேணும்.சொல்வீர்கள்!
about me-மிகுந்த வலி ஏற்படுத்தியது யாதவன்..
முதல் நேசிப்பை நாம் நம்மில் இருந்துதானே
தொடங்கவேணும்!அன்பும்,நன்றிகளும்!..

பாலா said...

ahah touch ngo nalla irukku

சுந்தர் பாலன் said...

Rajaram, romba nalaikapuram ungalai kandupidithathil mikka makzhchi.

பா.ராஜாராம் said...

தீரா ப்ரியங்களோடு
கரம் நீட்டும் என் நேசன்...
எப்பவும் போலான அன்பும்
நன்றியும்..

பா.ராஜாராம் said...

கவிதும்மா,எல்லை தாண்ட நம்
மாகாளி அனுமதிப்பதில்லை,
விரித்து தருகிறாள்!...
நாமும் உள்ளில்தான் பறக்கிறோம்.
ஆனால் பறக்கிறோம்தானே...

பா.ராஜாராம் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி பாலா.சாவகாசமாய்
வீடு வரணும்.தென்னைக்கு கீழ்
ஒரு நிழல் வைத்திருங்கள்!

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் சுந்தர் ராம்!
எங்கிருக்கிறீர்கள்...என்ன சொல்லட்டும் சுந்தர்,
தேடி எடுக்க நண்பர்கள் இருக்கிறார்கள் என
திரும்பி,திரும்பி தொலையலாம் போல...
தொடர்பு கொள்ள...b.rajaram29@gmail.com.

இரசிகை said...

chattunnu sirichchutten..vaasiththavudan!

appuram..
nara nara nnu laam sir sollala..
santhosamaaththaan sonnen:)

appuram..
pinnoottangalukku pathil naan sollurathulla..
kavithaikkuriya karuththukkalin pathivukal mattum angu irukkanumnu ore yennam..athanaalathaan..
remba thevaina mattum pathil solluren..(ungalukku solliyirunthathu pola)

nantrilaam manasula irukkunga:)

பா.ராஜாராம் said...

ஆகட்டும் ரசிகை...
அதே சந்தோஷமும்,அன்பும்!
(கவிதை பத்தி ஒன்னும் சொல்லாம
போய்ட்டீங்க ரசிகை நீங்கள்...பேச்சு... கா!)

Nathanjagk said...

யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய்! (பாரதியார்). கடல் தாண்டியும் காளி வருகிறாளோ இல்லையோ, திருவிழா நோட்டீஸ் வந்திரும். நான் காளி திருவிழா பாத்து ரொம்ப நாளாச்சு. திருவிழாவுக்குன்னே ஒரு வாசம் இருக்கு - அத இப்ப உணர்கிறேன்!

Nathanjagk said...

திருவிழாவுக்கு வருகின்ற அசலூர்காரர்கள், குழந்தைகளின் பலூன்களை குத்தி உடைத்திவிட்டு ​செல்கிறார்கள்-ன்னு ஒரு கவிதையும் நினைவுக்கு வருது. யார் எழுதுனதுன்னு​தெரியல்ல.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வீடு விட்டு
வீடு மாறி
நாடு விட்டு
நாடு போனாலும்
விட்டு விடுவாளா
வீரமாகாளி?....//
விடவேமாட்டாள் என்று தெரிகிறது. உங்கள் தொலைந்த நட்புகளைத் தேடித் தேடிக்
கொண்டு வருகிறாளே!

பா.ராஜாராம் said...

மிகுந்த அன்பு ஜெகன்..
உங்கள்"சங்காவுடன் ஒரு பேட்டி"
படிச்சுட்டு,மனசு நிறைந்து வந்தேன்.இங்கு வந்தால்,
"திருவிழாவின் வாசம்" சிலாகிக்கும்
வேறு மனசு வைத்திருக்கிறீர்கள்!நல்ல சிநேகம்
கிடைத்த சந்தோசம் எனக்கு..

பா.ராஜாராம் said...

ஆமாம் ஜெஸ்..
தொலைய அனுமதிக்க மாட்டேன்கிறார்கள்
நல்ல நண்பர்கள்."என் பிரிய பபிதா"
எழுதிய சோகம் மாற,ஜெகநாதனின்
"சங்காவுடன் ஒரு பேட்டி" பாருங்கள்...
உற்சாகம் தொற்றிகொள்ளும்..
நன்றி ஜெஸ்..

அண்ணாதுரை சிவசாமி said...

வீரமாகாளி என்றதும் அத்தான் கும்பாபிஷேகம் நடத்தியதும்
'குரங்கு ஆறுமுகம் எங்கிருந்தாலும் வரவும்'என்று மைக்கில்
கூப்பிட்டதும்.......அவர் கொதித்துபோய் வந்ததும்....ஞாபகம்
இருக்காடா.....ராஜா.....

கவிதாசிவகுமார் said...

திருக்கவிதைக்கு பொருத்தமான படத்தேர்வு.

Kannan said...

இன்னைக்கு நேத்தா..!!, என் பெயரை பஞ்சராகுவதில் உனக்கு அலாதி பிரியமாச்சே..!! நடத்து. என்ன, permission கேட்டு கேட்டு பஞ்சராக்கும் ஒரே ஆள் நீயாய் தான் இருப்ப.

நந்தாகுமாரன் said...

இந்த இறுதி வரிகள் ஒரு தனி கவிதை ... எனக்கு மிகப் பிடித்திருக்கிறது ...

//

வீடு விட்டு
வீடு மாறி
நாடு விட்டு
நாடு போனாலும்
விட்டு விடுவாளா
வீரமாகாளி?....

//

கேள்விக்குறியையும் தொடர்குறியையும் நீக்கிக் கொள்கிறேன் என் மன சௌகரியம் கருதி :)

தெய்வா said...

ஸ்கைப் waiting.....

கவிதாசிவகுமார் said...

பிரபஞ்சமே அவளுள் அடக்கம் என்று தலையில் குட்டு வைத்து உணர்த்திய மறுமொழி. இதற்காகத்தான் குறிப்பிட்டேன் வல்லுநர் என்று.

பா.ராஜாராம் said...

ஒரு கவிதையின் காட்சிகளை
தொடர் காட்சிகளாக்கும் ஞாபகம்
வரபிரசாதம் சித்தப்பா.
"ஒரு கொள்ளிவாய் பிசாசும் கிருத்துவ சுடுகாடும்" மில்
உங்களின்,ஆக சிறந்த நினைவு திறன் வெளிப்பட்டது.
தொடர்ந்து பதியுங்கள் சித்தப்பா.நமக்கு வேண்டாம்தான்
வாரிசுகளுக்கு தர வேறு எதுவும் இல்லைதானே..

பா.ராஜாராம் said...

திரு கவிதை என்பதில் கூச்சம்
இருக்கு மீனாக்ஷி!..பட தேர்வில்...
கூசனுமே ரமேஷ்,...

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..ஹா.. கண்ணா..

பா.ராஜாராம் said...

கண்டிப்பாக நந்தா...
இது உங்கள் வீடு சவுக்கர்யமாக இருக்கவேணும்.

பா.ராஜாராம் said...

என்னடா நீ, தெய்வா ...நான் வரும்போது நீ தூங்குவாய்
நீ எழும் போது நான் தூங்குவேன்.விடு.மலரட்டும்!

பா.ராஜாராம் said...

போச்சுடா ...கவிதுமா,தலையில் குட்டெல்லாம்
இல்லை,வல்லுனரும் விரும்பவே இல்லை.
ஆனால் "பிரபஞ்சமே அவளுள் அடக்கம்" என்று
நீ சொல்லியது அழகாய் இருந்தது..யார் சொன்னால் என்ன,
அழகு அழகுதானே..

இரசிகை said...

vaasiththavudan siruchchittennu sonnathu inthak kavithaiyap paththithaan!

migach chiriya vishayam..
athaiyum kavithaiyaa solleetiga..
santhosap paduththukirathu ungal kavithai..
inthamaathiri kavithaikal yenakku ishttam..

"ka".. illa "pazham".. ok va..:)

பா.ராஜாராம் said...

ஆமாவா ரசிகை?
அப்படி ஒரு அர்த்தமும் இருக்குதான்...
(அவ்வளவு பத்தாது ராஜாவுக்கு,..கிராமத்துகாரன்தானே...)
விடுங்கள்.பிழைக்கட்டும்.பழத்திற்கும் சேர்த்து,
மிகுந்த அன்பும்,நன்றியும்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

இயல்பான நிகழ்வுகளையும் உங்கள் கவிப் பேனா விட்டு வைக்காது போல. :)))

nice

இரசிகை said...

pazham.. yaetruk kondatharkku nantri:)

innaikku yethum post seiyalaya?

பா.ராஜாராம் said...

நன்றியும் அன்பும் அமித்து அம்மா!
அமித்துக்கு என் அன்பை சொன்னீர்களா...

பா.ராஜாராம் said...

மிகுந்த அன்பும் நன்றியும் ரசிகை..
இதோ போட்டாச்சு...காலத்தின் வாசனையை
உணர்ந்ததும் எழுதுங்கள்...

மதன் said...

ரசித்தேன்.. வாழ்த்துக்கள்!

பா.ராஜாராம் said...

நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும் மதன்