இது நம்ம ஜெஸ்வந்தி மேடம் பார்த்த வேலை. நாலும் நம்ம கூடத்தான் இருக்கு. இதை பத்தி எழுதுவதற்காக யோசிக்கிற தருணம் இப்பவே வாய்க்குது... எழுதுவதற் கு இதில் ஒண்ணுமே இல்லை போல ரொம்ப வெறிச்சோடி வருது. எப்பவும் நாம் நம்மையே நினைத்து கொண்டிருப்பதில்லை, அது போல. "ராஜா உன்னை பத்தி ஒரு கட்டுரை எழுது" என யாராவது சொன்னால் மலைப்பேனே.. அது போல.
"தலை உரலுக்குள்ள இனி தப்ப ஏலாது மாப்ள" என்று சிரிக்கிறார்கள் ஜெஸ்!... ஜெஸ், நமக்கு ரொம்ப புடிக்கும் மக்கா, அவுங்களுக்கா க ஏதாவது செய்யத்தான் வேணும். அதுனால முதல்ல கடவுள எடுக்கலாம். அதுதான் ஈசி சப்ஜக்ட் . இந்த நாலுகூடவும் என்னை பொறுத்திக்கிறேன் ஜெஸ்...அவ்வளவுதான்.
கடவுள்
(picture by CC license, Thanks Samurai Shiatsu)
ரொம்ப புடிக்கும் ஜெஸ்! நட்புல ரொம்ப நம்பிக்கை இருக்கு. அது போலதான் கடவுளும்! யார் என்ன சொன்னாலும் நான் நினைக்கிறதைத்தான் செய்வேன். நினைக்கிறதை செஞ்சுட்டு, நண்பர்கள் ட்ட பேசுறது மாதிரி கடவுளையும் வச்சுருக்கேன். இது வேணும் அது வேணுமுன்னு எப்படி நண்பர்கள்ட்ட கேட்க முடியாதோ அப்படி அவன்ட்டையும் கேட்க்கிரதில்லை. நண்பர்கள் தர்றது எதையும் மறுக் கிரதில்லை. மறுத்தால் அவன் கஷ்ட்ட படுவானே என்கிற காரணமில்லை. எனக்குன்னு வாங்கிட்டு வந்திருக்கான். எப்பு டி மாட்டேன்னு சொல்ல முடியும்? அப்புடி!.. நல்லது, கெட் டது எல்லாம் கேக்குறதுக்கு அவன் தயார். அப்புறம், சொல்றதுக்கு எனக்கென்ன கஷ்ட்டம்? இதுல ஒரு சின்ன unbalance இருக்கு மக்கா. புடிச்சது புடிக்காது எல் லாம் அவன்ட்ட நான் பேசுறது மாதிரி, அவன் எனக்கிட்ட பேசுறது இல்லை. கேட்டால் கடவுள்ங்குறான். கெட்ட ராஸ்கல், இந்த நல்ல நண்பன்!
பணம்
எனக்கென்னவோ இதை எழுதுற அளவுக்கு பெரிய விஷயமாய் தோணலை ஜெஸ். எனக்கிட்ட இதெல்லாம் எழுதுடான்னு கேட்டுருக்கீங்க எனக்கென்ன தோணுதோ அதுதான் எழுத முடியும். சரியா? இது எனக்கிட்ட இல்லாத போது யார்க்கிட்டயாவது கேக்குறேன். கி டச்சுருது. சில நேரம் கிடைக்காமையும் போயிருது. கிடைக் கிற வரைக்கும் அலையறேன். கிடச்சதை திருப்பி கொடுக்கணுமுங்குற நியாயம் இதுல இருப்பதால், சில நேரம் ஆப்ட்டுக்குறேன். திட்ட மிடாத சி க்கல் இது. அல்லது, சக்தியை மீறி ய சிக்கலாவும் இருக்கு. கொஞ்சம் திட்டமிடலும், செயல் படுத்தலும் இருந்தால், இந்த "சக்தியை மீறிய" என்பதை சந்திக்க உதவியாக இருக் கும்.
அழகு
சிவகங்கையில் இருந்து 13 கி.மீ. கண்டுப்பட்டி காளி கோயில். அங்கு நடந்து வருவதாக ஒரு நேர்த்தி இருந்தது. அதி காலை நாலு மணிக்கெல்லாம் நடையை கட்டினோம். நாட்டரசன் கோட்டை ரயில்வே கேட்ட கடந்ததும் ஒரு சின்ன குடிசை வீடு. சின்னதுன்னா, ரொம்ப சின்ன! குடிசை வீட்டுக்குள்ள, ஒரு என்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் அந்த அதி காலையில் சோடா பாட்டிலினால் சப்பாத்தி தேய்த்து கொண்டிருந் தார். நியுஸ் பேப்பரில் நாலைந்து சப்பாத்தி தேய்த்து கிடக்கு.சிம்மினி விளக்கொளி இரு க்கு. அருகே, அந்த மூதாட்டி சுள்ளிகளை கொண்டு அடுப்பு மூட்டிக்கொண்டிருந்தாள் . அந்த காட்சி என்னை மேற்க்கொண்டு நடக்க அனுமதிக்கவி ல்லை. குடிசையின் முன்னாள் கிடந்த கல் பெஞ்சில் அமர்ந்து விட்டேன். "அய்யா,கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?" என்று பேச்சை தொடங்கினேன். பேச்சு, நூல் பிடித்து, நூல் பிடித்து சப்பாத்தியில் வந்து நின்றது.
"ரெண்டு நாளாய் சப்பாத்தி வேணுமுன்னு அடம் பண்றாப்பூ" என்றார். இருவருக்கும் பல் அறவே காணோம். வயசானதுனால செமிக்க சிரமமாகுமே என்பது போல நான் கேட்க...
"பொங்கலுக்கு ஊற வச்சு தீபாவளிக்கு திங்கட்டும்" என்றார். எவ்வளவு வயசு. எவ்வளவு அன்யோன்யம். எவ்வளவு நகைச்சுவை. எவ்வளவு அழகும் கூட!
காதல்
(picture by CC license, Thanks eyesplash Mikul)
இது அழகான சப்ஜக்ட் மக்கா! இதை பேசி, பேசி, பேசி, பேசி, பேசி, தீராது. அதுனால, உணர, உணர, உணர, உணர, உணர, மட்டும் செய்வோம்! மத்ததெல்லாம், உன்வரைக்கும் பேசீ னியல்ல அது மாதிரி இதையும் பேசேன் என்று கேட்கிற ஜெஸ்... கடவுள், காசு, அழகு மாதிரி இதை பொதுவா பேச ஏலலை. அது அவ்வளவு புனிதமாக இருக்கலாம். அல்லது அந்த புனிதம் பற்றி பேசுகிற அருகதை எனக்கில்லாது இருக்கலாம். அதுனால... இந்த ஸ்டாப்பில் பஸ் நிக்காது. போலாம் ரைட்ஸ்ஸ்ஸ்ஸ்!
நன்றியும் அன்பும் ஜெஸ்!
அன்புடன்,
பாரா
28 comments:
அன்புள்ள பா.ரா அண்ணா..
கடவுள், பணம், அழகு, காதல்... இதில் 'அழகு' அழகாய் இருந்தது.
மன்னிக்கவும் உங்களை உடனடியாக தொடர்புகொள்ள முடியவில்லை. என்னுடைய அலை எண் 0565896530. உங்கள் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்.
செ.சரவணக்குமார் said...
//இதில் 'அழகு' அழகாய் இருந்தது.//
வ்ழிமொழிகிறேன்.
//"பொங்கலுக்கு ஊற வச்சு தீபாவளிக்கு திங்கட்டும்" என்றார்.//
ரசித்தேன்:)!
அப்பத்தா கவிதை அருமை
சும்மாதான் எடுத்துப்போட்டோம்
என்ன நச்சுன்னு ஒரு வரி
அப்புற்ம் கடவுள் பணம் அழகு காதல்
எல்லாத்துலயும் ஸ்கோர் பண்றீங்க ராஜாராம்
///இதுல ஒரு சின்ன unbalance இருக்கு மக்கா. புடிச்சது புடிக்காது எல்லாம் அவன்ட்ட நான் பேசுறது மாதிரி, அவன் எனக்கிட்ட பேசுறது இல்லை. கேட்டால் கடவுள்ங்குறான். கெட்ட ராஸ்கல், இந்த நல்ல நண்பன்! ///
I like this lines very much
simply superb
ஏங்க என்னதான் நெனச்சுற்றுக்கீங்க ?
கடவுளப்பத்தி எழுதுன்னா நண்பனப்பத்தி,
*அழகப்பத்தி எழுத்துன்னா, சிறுகதை,
காதலப்பத்தி எழுதுன்னா, கண்டக்டரப்பத்தி
என்னதான் நடக்கு ?
0
*அழகு .... ரொம்ப ரொமப ,அழகு
நல்லாருக்கீங்களா?
பண்டிகை என்றால் கொண்டாட்டம் என்பதையும் தாண்டி, முதல் தியாகம் பெண்களின் சொந்த விருப்பங்கள் தான். :(
பதிவுகள் பக்கம் வரவே முடியல. அதுக்குள்ளையும் நானூறு பதிவுகள். :) போட்டிருக்காங்க reader-ரில்.
அழகை ரொம்ப இரசித்தேன்.
மீதி எல்லாம் ம்ம்ம்.
-வித்யா.
அண்ணே! அந்த அழகு இருக்கே அது ரொம்ப அழகுண்ணே!
தங்கள் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகின்றேன்.
சங்கிலித் தொடர் இடுகை பார்த்தவுடன், முதலில் பார்த்தது யார் மாட்டிகிட்டாங்கன்னு, ஒரு சுவாரசியம்.
அப்புறம் இந்த அவார்ட் எல்லாம் வாங்கிட்டீங்களான்னு அடுத்த சுவாரசியம்.
அடுத்தது நான் பின் தொடர்பவராக ஆனது.
இதெல்லாம் முடிஞ்சுதான் இடுகையைப் படிக்க ஆரம்பிச்சேன்.
பின்னூட்டம் தொடரும்...
பணத்தைப் பற்றின உங்களின் தெளிவு அருமை...
//"பொங்கலுக்கு ஊற வச்சு தீபாவளிக்கு திங்கட்டும்" என்றார். எவ்வளவு வயசு. எவ்வளவு அன்யோன்யம். எவ்வளவு நகைச்சுவை. எவ்வளவு அழகும் கூட!//
அழகு...உண்மையான காதல்... இதையே காதலுக்கும் சொல்லியிருக்கலாம்...
azhau azhakoo azhakunnee.
oru maari solla mutiyaatha unarvu.
கடவுள், பணம், அழகு, காதல் நான்கையும் பற்றி உங்கள் எண்ணங்களை அழகாக கூறியுள்ளீர்கள்.
கடவுளை நண்பனாக வரித்தது பணத்தைவிட அழகு.
அழகு பற்றி கூறியதில் உள்ளவை காதலுக்கும் பொருந்துகின்றது.
மொத்தத்தில் சிம்பிளி சூப்பர்..
azhagu... miga azhagu!!athanul iruntha kaathal mikka azhagu!!!!
(barathithaasan ninaivu vanthaar..)
kadavul nalla nanban..unmaithaan:)
panam pesa vishayam illainu sonnathileye mudinthuvittathu yellaamum!!
moththaththil saththamai...oru SABAASH!!
நாலுமே நல்லா இருக்குன்னாலும் அழகு கொள்ளை அழகு ராஜா. கோபர் வந்து கொஞ்சம் இல்லை நிறைய கத்துக்கனும் நண்பா
அண்ணே பா.ரா. வுக்கு உரிய எழுத்து நடை!! காதல் ஸ்டாப் வந்ததும் மனுஷன் என்னமா பாஸ்ட்டா ஒடுறார் பாருங்க, துள்ளுவதோ இளமை!! ஹா ஹா ஹா.
நீங்கள் குறிப்பிட்டிருந்த அழகு அட்டகாசம் :)
காலங்கள் மாறலாம்
மனதில் படிந்த காட்சிகள் மாறாது
அதை அப்படியே எழுத்தில் எமக்கு காணத்தந்தமைக்கு நன்றி
நிலை மாறாத அன்பே அழகு!
கலக்கிட்டீங்க ராஜாராம்! இது தெரிந்து தானே உங்களை இங்கே மாட்டி விட்டேன்.
கடவுள் சப்ஜெக்ட் அபாரம். ஆனால் பாருங்கோ அதில ஒரு சின்ன தப்பு உண்டு .அவன் பாட்டுக்குக் என் பிரதாபத்தைக் கேட்டிட்டு இருக்கான். பதில் சொல்றான் இல்லை என்று சொல்லி .......தப்பு ராஜா. வாயால் கதைக்காமல் இருக்கலாம். அவனுக்கு வெவ்வேறு வகையில் கதைக்கத் தெரியுமே! உங்களுக்கு அவன் மொழி புரியவில்லை என்று சொல்லுங்கோ.
நிறைய எழுதாவிட்டாலும், காதல் ஒரு பெரிய விடயமென்பதை உணர்ச்சியோடு 'நச்' என்று ஒரு வரியில்,
'' இது அழகான சப்ஜக்ட் மக்கா! இதை பேசி, பேசி, பேசி, பேசி, பேசி, தீராது. அதுனால, உணர, உணர, உணர, உணர, உணர, மட்டும் செய்வோம்!
ரொம்ப அழகு மக்கா.
முழுப் பதிவையும் என்னோடு பேசற மாதிரிப் போட்டு என்னைப் புல்லரிக்க வைத்து விட்டீர்கள். நன்றி நண்பா.
எங்க பதில் சொல்லி இருக்காரு எல்லாம் எஸ்கேப்
இதெல்லாம் ஒத்துக்க முடியாது
உள்ளேன் ஐயா!
வயதான தம்பதியின் அன்னியோன்யம் அழகு. சப்பாத்தி என்ன கல்லுகூட ஜீரணம் ஆயிருமே.
kalaththula erangiduvom atha vida vera enna vendi kidakku
nandri maams
அழகு அழகோ அழகு...
கலக்கியிருக்கீங்க பா.ரா..
பூனேயிலிருந்து சென்னைக்கு விடுமுறையில் வந்திருப்பதால்
பதிவுகள் பக்கமே வரமுடியவில்லை.
இந்த தலைப்பில் எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம்
இருந்தது.ஞாபகம் வைத்து அழைத்ததற்கு மிக்க நன்றி.
கண்டிப்பாக எழுதுகிறேன் !!
முதுமையிலும்
காதல் அழகு..
குணம் மாறும்
பணத்திற்குள்
கடவுள்....
இந்தத் தொடரில் நான் வாசித்த மிக அழகான அருமையான வித்தியாசமான இடுகை!!
எல்லா தலைப்பின் கீழும் நீ ங்கள் பதிவு செய்தது ஆழமானவை. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.கடவுள் பற்றிய உங்களின் எண்ணம் போல் எல்லாருக்கும்
இருந்து விட்டால் எவ்வளவு நல்ல இருக்கும் ? அதுவும் நட்பையும் கடவுளையும் இணைத்து அழகு.
எதிர்பாராத நட்பை அடைந்தவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்
(நாங்களும் தானே),
எதிர்பாரா பா.ரா வாழ்க !
@ செ.சரவணகுமார்
ஆகட்டும் சரவணா.உங்களையும் தொடர்பு படுத்திக்கொண்டதில் சந்தோசம்.மிகுந்த அன்பும் நன்றியும் சரவணா.
@ராமலக்ஷ்மி
சந்தோசம் ராமலக்ஷ்மி.நிறைய அன்பும் நன்றியும்.
@ தேனம்மைலக்ஷ்மணன்
பூக்களை கொண்டாடும் தேனு!நல்வரவாகட்டும்.நன்றியும் அன்பும் நிறைய.
@ காமராஜ்
நன்றி காமராஜ்!ரொம்ப சந்தோசமாய் இருக்கு.அன்பும் நன்றியும் மக்கா.
@விதூஷ்
நல்லா இருக்கேன் வித்யா.நல்லா இருக்கீங்களா?பத்து நாளாய் ஒரு கை குறைஞ்சிருந்தது.சந்தோஷமும் அன்பும் வித்யா.
@தமிழ் நாடன்
ஆகட்டும் தமிழ் நாடன்.நிறைய அன்பும் நன்றியும்.
@இராகவன் நைஜீரியா
வரணும் வரணும் தல.ரொம்ப சந்தோசம்!நீங்கள் இல்லாத குறைதான் இவ்வளவு நாளாய்.நிறைஞ்சு போச்சு!நிறைய அன்பும் நன்றியும் அண்ணாச்சி.
@க.பாலாஜி
நன்றி பாலாஜி.மிகுந்த அன்பும் கூட மக்கா.
@மண்குதிரை
நல்லா இருக்கீங்களா மண்குதிரை.மடல் கிடைத்தது.பதில் எழுதணும்-சற்று தாமதமாக.அன்பு நிறைய மக்கா.
@ரசிகை
ஆகட்டும் மக்கா.நானும்,மொத்தத்தில் சத்தமாய் ஒரு நன்றி!அன்பு நிறைய ரசிகை.
@S.A.நவாசுதீன்
வாங்க விகடன் மாப்ள!நான் அங்க வரலாமுன்னு இருக்கேன்.நீங்க இங்க வர்றீங்களா?விகடன் பிரசுரத்திற்கு வாழ்த்துக்கள் நவாஸ்.அன்பும் நன்றியும் மக்கா.
@சபிக்ஸ்
உங்க ஐடியாஸ் படிச்சவுடனே நினைச்சேன்,"வேட்டு,இங்கையும் உண்டுன்னு".குசும்பர் சபிக்ஸ்!நன்றி மக்கா.அன்பு நிறைய.
@அமிர்தவர்ஷினி அம்மா
ஆகட்டும் அமித்தம்மா.ரொம்ப சந்தோஷமும்,நன்றியும்.அமித்துக்கு அன்பு நிறைய.
@ஜெஸ்வந்தி
பிறகு இல்லையா?இந்த முழு பதிவுக்கும்,இவ்வளவு சந்தோசங்களுக்கும்,இவ்வளவு மக்களை தேடி தந்ததிற்கும்,இவ்வளவு பேருக்கும் நான் நன்றி சொல்வதற்கும், நீங்கதான் காரணம்!நன்றி நான் சொல்லணும் மக்கா.நிறைய நன்றியும் அன்பும் ஜெஸ்.
@நேசமித்ரன்
டேய்,மக்கா..பங்காளி...சமத்துல்ல,..தூங்குங்க!ரே..ரே..ரே..
@D.R.அசோக்
புடிங்கையா..அந்த ஆளை!ஆங்கில வாத்யார் சுந்தர் வருவாரு சொல்லி தர்றேன்...நன்றியும் அன்பும் அசோக்..
@உதிரா
அப்படியா அப்பத்தா..ரொம்ப சந்தோசம்!நன்றிடா பயலே!
@பாலா
ஆகட்டும் மாப்ள.குரலும் சிரிப்பும் நுரை கிளப்பியது மாப்ஸ்!நன்றியும் அன்பும் பாலா..
@ப்ரியமுடன் வசந்த்
இன்னும் அந்த "யப்பத்தா..."தான் நினைவு வருது வசந்த்.நிறைய அன்பும் நன்றியும் மக்கா.
@அ.மு.செய்யது
செய்யது-வை மறக்கத்தான் முயற்ச்சி செய்யணும்.ஞாபகம் வைப்பது எளிது செய்யது.அன்பும் நன்றியும் மக்கா.
@சந்தான சங்கர்
பின்னூட்ட கவிஞரே..நன்றியும் நிறைய அன்பும்!
@சந்தன முல்லை
ரொம்ப நன்றிங்க முல்லை.ரொம்ப நிறைவா இருக்கு. பப்புக்கு என் அன்பை சொல்லுங்கள்.அன்பு நிறைய முல்லை.
@வேல்கண்ணன்
வேல் கண்ணா,நல்லா இருக்கீங்களா..ரொம்ப நாள் ஆனது போல இருக்கு,உங்கள் தளத்தில் பார்த்தும்.மிகுந்த நெகிழ்வும் நன்றியும் மக்கா.
எவ்வளவு அழகாக எழுதியிருக்கீங்க? இதை தொடர நம்மால சாத்தியமான்னு மலைப்பா இருக்கு ராஜா!!
//நினைக்கிறதை செஞ்சுட்டு, நண்பர்கள்ட்ட பேசுறது மாதிரி கடவுளையும் வச்சுருக்கேன்// ஐ!! அப்ப நான் கூட கடவுளா??
//கிடச்சதை திருப்பி கொடுக்கணுமுங்குற நியாயம் இதுல இருப்பதால்// நியாயமான சிந்தனை!
//சோடா பாட்டிலினால் சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்தார்// மறக்கவே முடியாத படிமம். IRON BOXல் ஆம்லெட் போட்ட அனுபவம் உண்டு; ஆனால் இது நிழல்போல ஒரு வறுமையை சுட்டுகிறது! அதுவே
//பொங்கலுக்கு ஊற வச்சு தீபாவளிக்கு திங்கட்டும்// என்ற அன்யோன்யத்தில் மனசு லேசாகி மிதக்கிறது. எத்தனை எளிமையாக இந்த உலகு நமக்கு மாற்றுப் பாதைக்கான கதவைத் திறந்து வைக்கிறது!
//புனிதம் பற்றி பேசுகிற அருகதை எனக்கில்லாது இருக்கலாம்//
புனிதமா? அதுக்கு அளவுகோல் ஏதும் இருக்கா என்ன? அப்ப அதைப் பத்திப் பேச யாருக்கும் அருகதை, அருசிறுகதை கூட கிடையாது! ஆனா எனக்கு இருக்கு - நான் ஒருக்கா - டிப்ளமோ படிக்கும் போது புனிதா-ங்கிறபொண்ணை (அவ வேற காலேஜ்) செமத்தியா டாவு கட்டிக்கிட்டிருந்தேன். ஸோ ஸேட்!!! மூணு மாசமா டிரை பண்ணியும் கிளி படியலே! என்னென்னவோ சீன் வுட்டுப் பாத்தும் முடியலேலேலே! சரியான சாமியாரிணின்னு தோணுச்சு.படியாத லிஸ்ட்ல இதுவும் ஒண்ணுன்னு நெனச்சுக்கிட்டு அன்புச்செல்விமேல 'கான்ஸன்ட்ரேட்' பண்ண ஆரம்பிச்சேன். கல்யாணி ப்ரெண்டோட டாவு. எனக்கு UPS (உடன் பிறவா சகோதரி) கல்யாணி ஒருநாள் நான் படிச்ச பாலிடெக்னிக்கு டைப்பிங் எக்ஸாமுக்காக போயிருந்தா.. அங்க புனிதாவும் எக்ஸாமுக்கு ஆஜர். இவங்க ரெண்டுபேரும் யதேச்சையா மீட் பண்ணிக்கிட்டாங்க.
கல்யாணி சும்மா இல்லாம,
"எங்கண்ணன் இந்த பாலிடெக்னிக்லதான் படிச்சாரு" என்று ஆரம்பித்திருக்கிறாள். பாவம் பாலிடெக்னிக்கை மையமாக வைத்து இருவருக்கும் பேச்சு வளர்த்த வேறு விஷயம் எதுவும் சிக்கவில்லை போல
புனிதா உடனேயே சொன்னாளாம்:
"எனக்கு தெரிஞ்சு ஒரு பையன் கூட இங்கதான் படிச்சான்"
அப்புறம் இவங்க உடன்பிறவா அண்ணன்தான் அவங்க 'தெரிஞ்ச' பையன்கிற சீக்கிரம் தெரிஞ்சுக்கிட்டாங்களாம்.
கடைசியா புனிதா சொன்னது:
"உங்கண்ணன் என்பின்னாடி ஆறுமாசமா சுத்திக்கிட்டிருந்தான்/ர்"
கல்யாணி எக்ஸாம் அடிச்சுமுடிச்ச விரல்களோட எங்கிட்ட வந்து,
"ஏண்ணே நீங்க பாலிடெக்னிக் படிக்கும் போது புனிதாங்கிற பொண்ணு பின்னாடி ஆறுமாசமா சுத்திக்கிட்டிருந்தீங்களா??" என்று கேட்டாள்.
எனக்குப் பயங்கர கோபமாகிவிட்டது.
"நான்சென்ஸ்.. சுத்தப்பொய். யார் சொன்னது?" என்றேன்.
அப்புறம் கல்யாணி மூலமாகவே புனிதா இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டு நேரே அவள் வேலை செய்யும் கம்ப்யூட்டர் சென்டர் சென்று,
"ஆறுமாசம்ன்னு ஏன் பொய் சொன்னே? வெறும் மூணு மாசந்தான்"
என்று சொல்லிவிட்டு அப்பிடியே அங்கேயேகொஞ்ச நேரம் உட்கார்ந்துபேச ஆரம்பித்தேன்.
அவளோ ரொம்ப கெட்டிக்காரி கம்ப்யூட்டரிலிருந்து தலையைத் திருப்பாமலேயே, என் அம்மா அப்பா வீடு என்று ஒவ்வொருவரை பற்றியும் கேட்டு என்னைப் பற்றி எனக்கு எவ்வளவு தெரியும் என்று சுட்டிக்காட்டிவிட்டாள். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது இந்த சாமியாரிணியா இவ்வளவுமேட்டர் கலெக்ட் பண்ணியிருக்கா என்று. பொண்ணுக அளவுக்கு நமக்கு சமர்த்து போதாது என்று புரிந்து கொண்டேன்.
- இதை இடுகையா எழுதாம ஏன் இங்க வந்து பின்னூறேன்னு தெரியும்தானே? :-)
ஓகே.. ரைட்.. அன்புக்கு நன்றி ராஜா! ஜெஸ்- தொடங்கி வைத்த உரலுக்குள் தலை விளையாட்டுக்கு நானும் தயார். அடுத்த பதிவு பீட்டரு, லாக்கரு, டக்கரு, மேட்டரு-தான்!!
ஒண்ணே முக்கா வருசமா, எந்த தொடர் பதிவுலையும் சிக்காம இருந்தேண்ணே.
இப்பிடிக் கிடந்து புலம்ப வச்சிட்டீயளே?
புலம்பப் போறது நானில்ல. படிக்க வாரவகதான்.
ஏற்கெனவே விசிட்டர் கவுன்ட்டர் நாளைக்கு ஒத்தைப் படை நம்பராவே காட்டிட்டு பயமுறுத்துச்சு.
இனிமே அதுக்கு வேலையே இருக்கப் போறதுல்ல இல்லியா? (!!!!!!!!!!!!!! :-))))) )
ரொம்ப நன்றிண்ணே.
நண்பனாகிய கடவுள் அருமை. அழகு அற்புதம். காதலைப் பத்தி தனி இடுகைகள் வருதோ?!
Post a Comment