Tuesday, September 1, 2009

சொல்லிட்டேன்...ஆமா


(Photo by CC Licence thanks feverblue)

ட நடக்க
பேசி சிரிக்க
குழந்தைகளை
குளிப்பாட்ட
சோறூட்ட

னக்கு போலவே
எனக்கும் வாய்த்தது
அப்பா.

புகைக்க
குடிக்க
கடன் வாங்க
ஆட்டை தூக்கி
குட்டியில் போட
குட்டியை தூக்கி
ஆட்டில் போட

னக்கு போலவே
எனக்கும் வாய்த்தது
அப்பா.

கீரை
வாங்கியாந்து
கிணற்றடியில் வைத்து
சிரித்து கொண்டே
செத்து போக...

னக்கு போலவே
எனக்கும் வாய்க்கணும்
அப்பா.

40 comments:

Kannan said...

என்னைக் கொன்றே விட்டாய்...!!!

நட்புடன் ஜமால் said...

படம் நச்

வரிகள் நச் நச்

கடைசியில் கண்ணன் சொல்லியதே

na.jothi said...

என்னாச்சி அண்ணா

na.jothi said...

சந்தோசமான மரணம் எல்லோருக்கும் வாய்க்குமா கேள்வி குறி தான்

rvelkannan said...

நின்று விட்டது இதய துடிப்பு இறுதி வரியில். இனி அடுத்த கவிதை இதே மாதிரியாக இருக்க கூடும் என்றல் தயவு செய்து முன் அறிவிப்பு செய்து விடவும்
(மென்மையான இதயம் உள்ளவர்கள்
படிக்க வேண்டாம்) என்று .
இன்னும் சில பொழுதுகள் உங்கள் கவிதை கொடுத்த அதிர்ச்சி இருக்கும்.

மண்குதிரை said...

romba iyalpa arputhama irukkunney

சந்தனமுல்லை said...

மிகவும் அருமை!! வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை!!

நேசமித்ரன் said...

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

:)

நேசமித்ரன் said...

மீண்டும் பொருள் வயிற் பயணத்திற்கு முந்தைய துரிதங்களால்

பிரியமானவர்களின் பின்னூடங்களுக்கு படைப்புகளை வாசிக்கவோ நேரமில்லை பா.ரா

இந்தக்க் கவிதை பற்றியும் மனுஷ்ய புத்திரனுடனான சந்திப்பு பற்றியும்

பெயர் சொன்னவுடன் அகம் மலர்ந்து நம் கவிதைகள் தன்னை பாதித்து இருப்பதாக சொன்னது பற்றியும் மிக நீண்ட உரையாடல் பற்றியும் தனிமடல் அல்லது தொலை பேசி வழி பகிர்கிறேன்

நர்சிம் said...

அப்பா...

Vidhoosh said...

திடும் என்று இதயம் திடுக்கிட்டது கடைசியில். அப்பா... !!
-வித்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிரித்துக்கொண்டே சாக எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது.

கவிதையின் கடைசிவரியும் அதற்குத் தேர்ந்தெடுத்த படமும் வெகு அருமை.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஏன் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு? ??????? சிரித்துக் கொண்டே செத்துப் போன என் அம்மம்மா நினைவு வந்து விட்டது நண்பரே.

S.A. நவாஸுதீன் said...

நண்பா என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனக்கு எங்க வாப்பாவின் (அப்பா) மரணம் தான் நினைவுக்கு வருகிறது.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

செத்துப்போக என்கிற வார்த்தையில் உயிர் பெற்று எழுகிறது கவிதை. அருமை!

படம் அப்படியே கருவோடு ஒத்துப்போகிறது

-ப்ரியமுடன்
சேரல்

அகநாழிகை said...

மிகவும் அருமை.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Ashok D said...

போட்டோவும்
லே-அவுட்டும்
பொருந்துகிறது

கவிதாசிவகுமார் said...

மிகவும் மன அதிர்ச்சியை ஏற்படுத்தியது கவிதை!!!

Unknown said...

Anna....,

Chittppavin....uyirppanna..sirippu...
Evvallavu kalangal...

Evallavu anubavangal...

En mahan birth day varumpolluthu..chittppavum kooda varuvar...

amma thangarasu...netruthan pesikondirunthome....

we are so lucky to have them in our life period...

Thairiymaka irru...

Thairiam kodu...

yours
Mathi

விநாயக முருகன் said...

இயல்பாக படித்துக்கொண்டே வந்தேன்.

கீரை
வாங்கியாந்து
கிணற்றடியில் வைத்து
சிரித்து கொண்டே
செத்து போக...

இந்த பாரா எனக்குள் ஏதோ ‌சில சலனங்களை ஏற்படுத்தி கவிதை தன்னை முழுமைப்படுத்தி முடித்துவிட்டு சென்றது.

மாதவராஜ் said...

மௌனமே மிஞ்சுகிறது....

ப்ரியமுடன் வசந்த் said...

அதிர்ச்சி...மட்டுமே....இப்போ.....

பா.ராஜாராம் said...

அப்பா
நீ
இறந்து
சரியாய் ஒருவருடத்தின் நிறைவு
இது...
"அப்பா..நீ மட்டும்தான்
இல்லை இப்போ.
முகமறியா
இவ்வளவு
நீ
கிடைத்திருக்கிறார்கள்
இங்கெனக்கு.
பார்க்கிறாய்தானே,.
பிறகு
தூங்கேன் நிம்மதியாய்...

ஹேமா said...

ராஜா அண்ணா உறவுகளின் இழப்பு இல்லாமல் போதல் என்பது கொடுமை.
யாரிலும் எவரிலும் அதீதமான அன்பு வைக்கவே பயமா இருக்கு.

யாத்ரா said...

\\கீரை வாங்கியாந்து
கிணற்றடியில் வைத்துசிரித்து கொண்டே
செத்து போக...
உனக்கு போலவேஎனக்கும் வாய்க்கணும்
அப்பா.\\

அருமை.

Nathanjagk said...

எளிய பொருள்களில் இனிய நினைவுகள் அழுத்தமாக ஏறிவிடுவது எவ்வளவு நன்றாக இருக்கிறது! கீரையும் கிணற்றடியுமாக ஒரு மனிதனின் ஜென்மத்து நினைவுகள் ​தொடர்ந்தே வருவது புண்ணை ​நேசிப்பது போலுள்ளது! வாழ்த்துக்கள் பாரா!

ஆ.ஞானசேகரன் said...

புகைப்படமும், வரிகளும் அருமை,.. எதார்த்தமான வரிகளில் மகிழ்ச்சியான சாவைப்பற்றி அப்படியே எழுதியது மிகவும் அருமை... சாவு என்றதும் கொஞ்சம் மனம் கனக்கதான் செய்கின்றது... பாராட்டுகள்

உயிரோடை said...

விழி துளிர்க்க‌ செய்யும் வ‌ரிக‌ள். வாழ்த்துக‌ள்

துபாய் ராஜா said...

வலிக்காத மரணம் என்றாலும் கடைசி ஆசை மட்டும் இப்போதைக்கு வேண்டாம் அண்ணாச்சி.

சி.கருணாகரசு said...

ஏனய்யா விரத்தி... இருந்தும் கவிதை அருமை.

நந்தாகுமாரன் said...

இந்த நடையில் ஒரு அருமையான கவிதை கொஞ்ச நாள் கழித்து இப்போது தான் படிக்கிறேன்

கவிதாசிவகுமார் said...

வாசிக்கும் அனைவரையும் தந்தையின் அன்புக்கு இணையாக ஒப்பிட்டு தாங்கள் எழுதியிருப்பது மிகவும் உருக்கமாக இருந்தது.

பா.ராஜாராம் said...

ப்ரியங்களில் நிறைந்த என்...
கண்ணா...(ஒரு கை,குறைவா இருக்கேடா...)
ஜமால்..(நேற்றிரவு நம் நவாசுடன் இருந்தேன் ஜமால்..அற்புதமான தருணங்கள்!பிறகு மெதுவாய் பேசுவோம்)
ஜோதி...(எழுத்தில் குரல்தரும் என் சகோதரா..)
வேல்கன்னா...(அற்புத கவிஞனே..)
மண்குதிரை..(இந்த,"இருக்குண்ணே" ரொம்ப அழகாய் இருக்கு மண்குதிரை.)
சந்தன முல்லை..(நல்லா இருக்கீங்களா,சந்தன முல்லை..)
நேசா...(வந்துட்டியா?..நலமா நம் நேயா முதற்கொண்டோர் நேசா?)
நர்சிம்..(செயல் வீரா,மக்கா நலமா..)
வித்யா..(உற்சாகம் வித்யா,தொடர்வருகை)
அமித்தம்மா(அருமையான சிறுகதையாளர்..)
ஜெஸ்...(நலமா தோழி யாவரும்,விரிய திறந்த வீட்டு தோட்டமும்?)
நவாஸ்..(மறக்க இயலாத,முகமும்,புன்னகையும்,பொழுதும் நவாஸ்...பத்திரத்தில் வைக்கவேண்டிய நாளில் ஒருநாள் நேற்று.)
சேரல்(வரம் பெற்ற கவிஞனே..)
வாசு அண்ணா...(ரொம்ப நாள் ஆச்சுண்ணா..எதுனா கோபமா என்மேல்..)
அசோக்...(பிடித்த பின்னூட்டகாரரே..)
உதிரா..( வட்டம் சுருங்குகிறது உதிரா..உற்சாகம்!)
விநாயகம்..(மொழி விளையாட்டின் புது தீபமே..)
மாதவன்(நன்றி, மாது என்றனுமதித்த என் மாதவன்..)
வசந்த்...(தீரா ப்ரியனே..)
ஹேமா..(என் சகோதரி..)
யாத்ரா..(என் சகோதரா..)
ஜெகா...(குருநாதா..)
சேகர்...(பிரபஞ்ச நேசா..)
உயிரோடை...(அனுஜன்யா,"உயிரோடை நீங்களா?"என கேட்டது நினைவு வருகிறது.அதே மீள் பதிவு இங்கும் உயிரோடை!நன்றி அனு!)
ராஜா...(அண்ணாச்சி,என உருக்கும் மற்றொரு ஜோதி,யாத்ரா!)
கருணா..(சரி கருணா..நீங்கள் எல்லோரும் இருக்கீர்கள் தானே..)
நந்தா(கண்ணாடிக்கு பின்னாடி.கவிதை முன்னாடி!,மிகுந்த ப்ரியனே..)
நிறைந்து போய் இருக்கிறது மனசு,ஆத்மா...
எல்லோருக்கும் என்
அன்பும் நன்றியும்!

பா.ராஜாராம் said...

வணக்கம் சந்தான சேகர்.நல்வரவும் நன்றியும்!

ஷங்கி said...

ஒண்ணும் சொல்ல முடியல அன்பரே! நல்லாருக்கு வாழ்த்துகள்

இரசிகை said...

sabaash.........!!!!

thamizhparavai said...

வலித்தது...

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்..

சங்கா
இரசிகை
தமிழ்ப்பறவை

நிறைய அன்பும் நன்றியும் எல்லோருக்கும்!

Rajan said...

புருவம் குவித்த வாசிப்பானுபவம்!
நெடுநாட்கள் கழித்து...
விழியோரம் சுரக்கிறது....

sriramsharma said...

iyyaa..andha kinatradiyai vittu ennaai azhaithuppongalen plssssssss