வீடு வருவேன்.
அன்பையும்
ஆக்கி வைத்திருப்பாய்.
குழந்தைகள் குறித்து
கேட்டாலும்
"முதலில் சாப்பிடுடா"
என
சிரிப்பு தருவாய்.
எங்கிருந்து எடுத்தாயோ
இந்த
எண்ணெய் கத்திரி
குழம்பை.
காய்ச்சல் கருமாதிக்கு
தலை தடவி
மார்பிறுக்குவாய்.
உடல்சூடு
ஒரு
மருந்தென்பாய்.
குடி
கூடிய
உபத்திரவத்தையும்
குழந்தைகள் பார்க்கவேணாமே
என
கையேந்துவாய்.
கூட கூட
திரியும் குறிப்புணர்ந்து
"இந்த மசுரை சொல்லு உனக்கு"
என
மன முறிப்பாய்.
வெளியில் இருந்து
பார்க்கிறேன்.
வீடு தெரிகிறது.
உள்
நுழைந்த பிறகு
வெளியறிய காணோமே...
என்ன ஜென்மமோ
நீ
என்
யம்மோவ்..
31 comments:
அருமை!
என்ன சொல்ல அண்ணா.
அப்பா அம்மாவின் அன்பை நிறையத் தவற விட்டிருக்கும் நான்...!
நெகிழ வைத்தது...
கதிர்வேல் முனியம்மாள்
------------------------------------------
நன்றியும் அன்பும் திரு.கதிர்வேல்!
ஹேமா
-----------
இது, அம்மா மாதிரியான உன் அண்ணி ஹேமா..
//என்ன ஜென்மமோ
நீ
என்
யம்மோவ்..//
அருமை அருமை
//வீடு வருவேன்.
அன்பையும்
ஆக்கி வைத்திருப்பாய்.
குழந்தைகள் குறித்து
கேட்டாலும்
"முதலில் சாப்பிடுடா"
என
சிரிப்பு தருவாய்.
காய்ச்சல் கருமாதிக்கு
தலை தடவி
மார்பிறுக்குவாய்.
உடல்சூடு
ஒரு
மருந்தென்பாய்
உள்நுழைந்த பிறகுவெளியறிய காணோமே...
என்ன ஜென்மமோ
நீ என் யம்மோவ்//
ஆமாம் அண்ணாச்சி,அன்பால் நம்மை சேயாக்கும் தாரமும் ஒரு தாய்தான்.
//எங்கிருந்து எடுத்தாயோ
இந்த
எண்ணெய் கத்திரி
குழம்பை.//
அம்மாவின் சமையலுக்கு ஈடுஇணை இவ்வுலகில் கிடையாது சார்
கவிதையில் பாசம் கொட்டி கிடக்கிறது
யம்மாடி!!!! யம்மாவ்... அற்புதம்ங்க.
--வித்யா
நல்லாயிருக்கு நண்பரே
வெளியே வந்து பார்த்தவுடனேதான் அண்ணியோட அருமை புரியுதா ?அண்ணே
:-) நல்லாருக்கு!
akak intha eliya thoniyil kirangkip pooyvitteen
udampus suutu, ennai kaththarik kuzhampu
en amma nii.
//எங்கிருந்து எடுத்தாயோஇந்தஎண்ணெய் கத்திரிகுழம்பை//
பழைய சோறும் அம்மாவின் கையில்
ருசி தான் ஏனெனில் அதை அன்பில்
பிழிந்து எடுக்கிறாள்.
மென்மையான அன்பு கவிதை
நல்லாயிருக்கு ராஜாராம்!
கவிதை அற்புதம் நண்பா. உங்களால் மட்டும் தான் முடிகிறது. அண்ணி ஞாபகம் அதிகம் ஆயிடுச்சு போல. சரி சரி ஊருக்கு போயிட்டு வாங்க.
மிகவும் அருமை!
யம்மோவ் ...
எனக்கு இப்படியெல்லாம் நேர்ந்தது இல்லை.
மற்றபடி எல்லொரும் பாராட்டியிருக்கீங்க. நானும் நல்லயிருக்குன்னு சொல்லிக்கிறேன்.
:)
உங்கள் கவிதை பாசக் கடலாக ஓடுகிறது ராஜாராம். அற்புதம்.
தன் சார்ந்த தன்னை சுற்றிய அனைத்தையுமே கவிதையாய் பார்க்கும் பாங்கு மிக அழகு. ஒரு புறம் கூடபிறந்தவர்களின்மேல் வெளிப்படுத்தும் பாசம், இன்னொருபுறம் பாசமிக்க அப்பாவை நினைத்து மருகும் பாசம், மற்றொருபுறம் தன் தாரத்தை அன்பான தோழியாய், கருணைமிகு தாதியாய், பாசமிகு தாயாய் பார்க்கும் அழகு. அத்தனையும் கவிதை வெளிப்பாடாய். அற்புதம். வாழ்த்துக்கள்.
தன் சார்ந்த தன்னை சுற்றிய அனைத்தையுமே கவிதையாய் பார்க்கும் பாங்கு மிக அழகு. ஒரு புறம் கூடபிறந்தவர்களின்மேல் வெளிப்படுத்தும் பாசம், இன்னொருபுறம் பாசமிக்க அப்பாவை நினைத்து மருகும் பாசம், மற்றொருபுறம் தன் தாரத்தை அன்பான தோழியாய், கருணைமிகு தாதியாய், பாசமிகு தாயாய் பார்க்கும் அழகு. அத்தனையும் கவிதை வெளிப்பாடாய். அற்புதம். வாழ்த்துக்கள். அம்மாடியோவ்!
மிக அருமையானக் கவிதை. நெஞ்சைத் தொட்ட கவிதை.
தலைப்பு அந்த ஒற்றை வார்த்தை போதும் ராஜாராம்...அருமை !!! அருமை !!!!
ப்ரியங்கள் நிறைந்த என்..
திரு.கதிர்வேல்,
ஹேமா,
தமிழ்ப்பறவை,
சேகர்,
ராஜா,
வசந்த்,
வித்யா,
தண்டோரா,
பாலா,
சந்தனமுல்லை,
மண்குதிரை,
வேல்கண்ணன்,
சுந்தரா,
நவாஸ்,
சென்ஷி,
ஜமால்,
அசோக்,
ஜெஸ்,
உதிரா,
அரங்கப்பெருமாள்,
செய்யது,
நல்லா இருக்கீங்களா மக்கா?நிறைய அன்பும் நன்றியும் எல்லோருக்கும்!
என்ன அன்பரே, ரொம்ப நெகிழ்ந்து போயிருக்கீங்க போலிருக்கு?! அருமை.
// வீடு வருவேன்.
அன்பையும்
ஆக்கி வைத்திருப்பாய்.//
அருமை .
- ப்ரியமுடன் ,
பிரவின்ஸ்கா
//வீடு வருவேன்.அன்பையும்ஆக்கி வைத்திருப்பாய்.//
அருமை
:)
படித்து முடித்துவிட்டு என்ன கமெண்ட் போடுவதென்றே தெரியவில்லை.
அந்தளவுக்கு ஒற்றை சொல்லில் உயிரை கொடுத்துவிடுகிறீர்கள் உங்கள் கவிதைகளுக்கு
அருமையான கவிதை.
ப்ரியங்கள் நிறைந்த என்..
சங்கா
பிரவின்ஸ்கா
உயிரோடை
இரசிகை
அமிர்தவர்ஷினி அம்மா
யாத்ரா
நிறைய அன்பும் நன்றியும் எல்லோருக்கும்!
Post a Comment