Saturday, September 5, 2009

என்னமாத்தான் வருது...

ள்ளங்கை
தாமரை விரிப்பு.
மேலாக
முந்தானை நூல் சேலை.
மேலுக்கும் மேலாக
தளும்பும்
நீர்ச்செம்பு.

ய்யா மார்களுக்கு
கொண்டு வருகிற
நீர்ச்செம்பு.

முறுக்கு மீசை.
நெற்றி பொட்டு.
அங்கவஸ்திர தெறிப்பு.

ய்யா மார்களின்
அய்யா மார்கள் போலவே
அய்யாவும்.

நீர்ச்செம்பை வாங்கையில்
ஒரு ஈஷு.
கொடுக்கையில்
ஒரு ஈஷு.

டுங்கும்
அவளின் வெறுங்கழுத்தை
விழுங்கி
செரிமானத்துக்கு
நெளிக்கிறது

ங்கொய்யால...
தலை எழுத்து.

23 comments:

ஆ.ஞானசேகரன் said...

//ங்கொய்யால...
தலை எழுத்து.//

ம்ம்ம்ம்ம் நல்லாயிருக்கு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

:((

பாலா said...

இந்த ஏற்றத்தாழ்வு இன்னமும் இருக்கிறதா பா.ரா. (நான் புரிந்து கொண்டவரையில் )

ஷங்கி said...

சொல்ல வார்த்தை வரவில்லை.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மொழி சரளமாக உருண்டோடுகிறது வாழ்க்கையைச் சொன்னபடி.

//வெருங்கழுத்தை//

வல்லின று வரவேண்டுமோ?

-ப்ரியமுடன்
சேரல்

Vidhoosh said...

அருமையாக இருங்குங்க.
:)

--வித்யா

Ashok D said...

கவிதையை காட்சியாக விவரித்துள்ளீர் நன்று.

S.A. நவாஸுதீன் said...

நண்பா! கவிதை என்னமா வருது உங்களுக்கு. வார்த்தைகள் தவம் கிடக்கிறது உங்கள் வரிகளில் குடியேர.

துபாய் ராஜா said...

//அய்யா மார்களின்
அய்யா மார்கள் போலவே
அய்யாவும்.

நீர்ச்செம்பை வாங்கையில்
ஒரு ஈஷு.
கொடுக்கையில்
ஒரு ஈஷு.//

என்ன கொடுமை அண்ணாச்சி இது.... ??!! :((

ப்ரியமுடன் வசந்த் said...

//நடுங்கும்
அவளின் வெறுங்கழுத்தை
விழுங்கி
செரிமானத்துக்கு
நெளிக்கிறது//

உண்மைதான் உரக்கச்சொல்லுங்கள் நாவிருக்கும் ஆறறிவு நாய்களுக்கு

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

இரசிகை said...

nalla yezhuthi birukkeenga rajaram sir:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:((

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நடையும், எடுத்த கருவும் நன்றாக இருக்கிறது நண்பரே.

ஹேமா said...

அண்ணா எப்பிடி ஏதோ ஒரு தமிழில்...அசத்தலாயிருக்கு.கவிதை வலி.அது என்ன அண்ணா கொய்யாலன்னா?சொல்லக் கேட்டிருக்கேன்.

அண்ணா உங்களையும் சித்தப்பாவையும் உப்புமடச் சந்தில தொடர் பதிவுக்குக் கூப்பிட்டு இருக்கேன்.வாங்க.

நேசமித்ரன் said...

கால் சென்டர் டீம் லீடர்கள் ரீசெசசன் துவங்கியதும் ஆடிய ஆட்டங்கள் ,
மாடலிங் பெண்கள்,சினிமா தயாரிப்பாளர்கள், தொழில் அதிபர்கள் , விநியோகஸ்தர்கள் எங்கில்லை அய்யாக்கள்

இந்த கவிதை ஒரு சுமைதாங்கி . இதற்குபின் எத்தனைக் கதைகள்

கவிதாசிவகுமார் said...

நல்லாருக்கு.

Nathanjagk said...

தீண்டா​மை​யை இந்தமாதிரியான கணங்களுக்கா​வே மன்னித்து ஏற்றுக்​கொள்ள ​வேண்டும் ​போலிருக்கிறது. கவி​தை அரு​மை! என்.டி. ராஜ்குமாரின் ஒரு கவி​தை இப்​போது நி​னைவுக்கு வருகிறது! முழுக்கவி​தையும் நி​னைவில் இல்​லை. கருத்து இதுதான்.. வீட்டு ​வே​லைக்கார​னை பின்வாசல் வழியாக 'அ​ழைக்கும்' எஜமானி! ஆனால் முன்வாசல் வழியாக அவன; குடிக்கத் தண்ணி ​கையில் ஊற்றுவாளாம். இந்த காட்சி​​யை கண்ணில் ஊற்றும் அக்கவிதையின் க​டைசி வரி: குண்டி ​​கொடுப்பாளாம் / ​​கெண்டி தரமாட்டாளாம்!

rvelkannan said...

//ங்கொய்யால...தலை எழுத்து//
என்று 'முழுங்கி' கொள்ள வேண்டியிருக்கிறது
கவிதை வரிகள் அனைத்தும் அருமை

SUFFIX said...

தங்களுடைய ஆக்கங்கள் அனைத்தும் அருமை, நண்பர் நவாஸ் அறிமுகம் செய்து வைத்தார். தங்களை ஒரு தொடர்பதிவிற்க்கு அன்போடு இங்கே அழைத்திருக்கின்றேன் நண்பரே!!

யாத்ரா said...

மிகவும் பிடித்திருக்கிறது.

பா.ராஜாராம் said...

வீட்டில் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வரும்."இன்னென்ன..இப்படி இப்படி..இதெல்லாம் இந்தமாதிரி என".அததை அப்படி,அப்படியே வாங்கி கொண்டு வேலைக்கு ஓட நேரும்.வேலை சோராது இருக்க,குரல்களை எதுக்களிச்சு அசைபோட்டபடியே வேலை ஓடிக்கொண்டிருக்கும்.
வீடு போலவே ஆகிபோச்சு கருவேல நிழலும்,நீங்களும்!
வீட்டிலிருந்து வருகிற குரலதிர்வு போல் இருக்கு உங்கள் எல்லோரின் சிலாகிப்பும் அன்பும்!வேலை சோராதிருக்கிறது...
எப்பவும் போலான நன்றியும் அன்பும் என் எல்லோருக்கும்!

thamizhparavai said...

பிடித்திருந்தது...