(picture by CC licence, Thanks hj91)
வளர் பிஞ்சு
நகம்கொண்டு
நரம்பு
கிழித்தாடுகிறது
சற்றுமுன் உதிர்ந்த
சருகொன்றை.
தாய் பிரித்த
விடலைப்பூனை.
கிழிக்க கிழிக்க
கொடுத்துக்கொண்டிருக்கிறது
சருகும்.
பூனைக்கும்
சருகுக்கும்
யாருக்கும்
தாய் பிரிக்கிற
தருணம்
போதும் போல
ருதுவாக.
22 comments:
ரண வலி உணர்கின்றேன்..!!
கவிதை ரொம்ப நன்றாக இருக்கிறது.
நிஜத்தை கவிதை வரிகளாக படித்தபோது கண்ணீர் சுரந்தது. வலி குறைய சற்று நேரம் ஆகும்.
அருமை.
//பூனைக்கும்சருகுக்கும்யாருக்கும்
தாய் பிரிக்கிறதருணம்போதும் போலருதுவாக.//
இறுதி வரிகள் அதிர வைத்தன.. நல்ல கவிதை!
மனம் சருகாகிவிட்டது..
பா.ராய்..
//பூனைக்கும்சருகுக்கும்யாருக்கும்
தாய் பிரிக்கிறதருணம்போதும் போலருதுவாக.//
அண்ணா பிரிவின் வரிகள் கலங்க வைக்கிறது.
தாயின் பிரிவு வலியாக நன்கே வெளிப்பட்டிருக்கிறது இந்த கவிதையில்......
தாயின் பிரிவின் வலியை பூனைக்குட்டிக்காக தாங்கி தந்துக் கொண்டிருக்கிறது சருகு...ஐந்தறிவின் உணர்வையும் புரிந்து புனையப்பட்டது அற்புதம் சருகையும் இங்கு மெருகுபடுத்தியது புதுமை...
நண்பா! பிரிவின் வலியின் வரிகள் நெஞ்சையும் நனைத்தது.
உங்களுடைய ஒவ்வொரு படைப்பும் பிரமிக்கவைக்கிறது
கவிதை மனதை பிழிகிறது ராஜாராம்...நல்லா இருக்கு ..!!!
வலியின் வரிகளை நெகிழ்வாய் சொல்லி இருக்கின்றீர்கள் புலவரே.
தாய் பிரித்து வைத்ததால் ஏற்பட்ட மரத்துப்போன வலி மீண்டும் உயிர் கொண்டுவிட்டது.
பூனையும், சருகுமாய் காட்சிகள் விரிந்து தத்துவ தரிசனம் போல் உறைகிறது.
வெற்று வெளியெங்கும்
வலி நிரம்புகிறது
இறுதி வரிகள், குறிப்பாய் ஒற்றைச்சொல் ருதுவாக..........
ஆழமாகவும், அதிரவும் வைக்கிறது உங்கள் கவிதை !
//தாய் பிரித்த
விடலைப்பூனை//
அழகான வ(லி)ரிகள்....
என்ன சொல்லட்டும் பா.ரா
ருதுவாக - > அந்த ஒற்றை வரியில் துவங்குகிறது கவிதை
பரிணமிக்கும் செல் அழிவதும் புதுப்பிப்பதும் தானே இயக்கம்
அழகு ... சருகுதிரும்போதில் மற்றும் சுழல் பயணம் ... தன்னிச்சையாகப் புன்னகைத்தேன்
ப்ரியங்கள் நிறைந்த என்...
கண்ணா
யாத்ரா
உதிரா
D.R.Ashok
துபாய் ராஜா
சென்ஷி
சந்தான சங்கர்
ஹேமா
தமிழரசி
நவாஸுதீன்
செய்யது
ஷஃபிக்ஸ்
கல்யாணி சுரேஷ்
மாதவராஜ்
velkannan
அமிர்தவர்ஷினி அம்மா
இரவுப்பறவை
நேசமித்ரன்
Nundhaa
எல்லோருக்கும் என் நிறைந்த நன்றியும் அன்பும்!
vali!!!
:(
@ரசிகை.
நன்றி ரசிகை.
Post a Comment