(picture by CC license, Thanks Ajay Tallam)
பழைய வீடு போனேன்.
புது மனிதர்
இருந்தார்.
"ஓஹோ..அப்படியா"
என
உள் நுழைய
சொன்னார்.
புது வீடும் வருவேன்.
புத்தம் புது
மனிதரும்
இருப்பார்.
"ஓஹோ...அ.."
எனும்போதே
உள்நுழைந்திருப்பேன்.
ஒருநாள்..
முள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...
30 comments:
அண்ணா.. புரியலங்கனா...
(விஜய் ஸ்டயலில் படிக்கவும்) :)
எப்படி...?
@அசோக்
என்னா தல..
(உங்க ரசிகன் ஸ்டைலில் படிக்கவும்)
உங்கள் ஸ்டைல் எல்லாம் போகட்டும். இது என்னென்று எனக்கு உண்மையில் தெரிய வில்லை ராஜாராம்.
சிறு வயதில் குடியிருந்த பல வாடகை வீடுகளின் நினைவும், காலி செய்யும்போது ஏற்பட்ட வலிகளும் நினைவுக்கு வருது அண்ணா.
அதேதான்..கல்யாணி,நீங்கள்தான் என் சகோதரி.அசோக், ஜெஸ்-பேச்சுக்கா!
ம்...அண்ணா என்ன?
புது வீடும் வருவேன்.
புத்தம் புது
மனிதரும்
இருப்பார்.
"ஓஹோ...அ.."
எனும்போதே
உள்நுழைந்திருப்பேன்.
ஒருநாள்..
நமக்கு முன்னாடியே நினைவுகள் உள்நுழையும் என்பது இது
தானோ ?
நல்லா இருக்கு மாம்ஸ்
"ஓஹோ...அ.."
எனும்போதே
உள்நுழைந்திருப்பேன்.
]]
உரிமை.
அருமை.
சட்டென இன்று ந.பிச்சமூர்த்தியின் தொனியும், சாயலும் உங்கள் கவிதைகளில் இருப்பதாகப் பட்டது.
ரசித்தேன்...
பழைய வீட்டில்
புது மனிதனாய்,
புது வீட்டில்
பழைய மனிதனாய்..
அழைப்பிதழ் இருந்தால்தான்
வருவீங்களா?
மீண்டும் அழைக்கின்றேன் நண்பரே...
//பழைய வீடு போனேன்.புது மனிதர்இருந்தார்.
"ஓஹோ..அப்படியா"எனஉள் நுழையசொன்னார்//
muthalil iruntha pazhaiya vaadahai veedu..
//புது வீடும் வருவேன்.புத்தம் புதுமனிதரும்இருப்பார்."ஓஹோ...அ.."எனும்போதேஉள்நுழைந்திருப்பேன்.
ஒருநாள்..//
neenga poga irukkum puthiya vaadahai veedu...
ippadiththaan purinthu konden..rajaram sir:)
romba nalla irukkunney
நமக்கு பிடித்தது எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் தான் விஜய் அல்ல. அது சும்மா டமாஸ்ங்கன்னா.
சாதாரணமா கவிதையை படிச்சுருந்தா புரிஞ்சியிருக்கும் ரொம்ப சீரியஸா பாத்தனால ஹிஹிஹிஹி
அருமை.பள்ளியில் பெஞ்சில் காம்பஸ் வைத்து எழுதி வைத்த பெயர் இன்னும் இருக்கிறதா என்று இப்பொழுதும் போய்ப் பார்ப்பதுண்டு.
என் பெயர் அல்ல.
beautiful
வாழ்ந்த வீடுகளின்மேல் உள்ள ஆத்மார்த்தமான பிடிப்பை வெளிப்படுத்துகிறது இக்கவிதை. யதார்த்தம்.
புது மனிதர்-புதிதாகப் பார்த்தவர்.
புத்தம் புது மனிதர்-மரபுகளை உடைத்து விட்டு வெளி வந்தவர்.
அப்படி ஒருவர் இருக்கும் போது சம்பிரதாயங்கள் எதற்கு...சட்டென உள் நுழந்து விட்டீர்கள்!
நான் புரிந்து கொண்டது சரியா?
வாடகை வீடு என்று தலைபிட்டிருப்பதால் வீட்டிற்கான பிம்பங்களையும் கொள்ள வேண்டியிருக்கிறது.
வாய்ப்பிருந்தால் உங்கள் பார்வையை விளக்குங்களேன்!
பிம்பம் எல்லாம் ஒண்ணுமில்லை வேல்ஜி.வாடகை வீட்டில் வசிப்பவனின் "பழைய வீட்டை பார்த்து வருவோமே" என்கிற சாதாரண மனோ நிலைதான் கவிதை.இன்னொரு புது வீடு போகும்போது இப்ப இருக்க வீட்டையும் பார்க்கவருவேன் என்பதாக யோசித்திருந்தேன்.மாதவராஜ்,ந.பிச்சமூர்த்தியின் தொணி,சாயல்,குறித்து பேசவும் ரொம்ப பயந்துட்டேன்.எட்டி பிடிக்க முடியாத உயரம்,ந.பி....மாதவன்,என் மேல் உள்ள அன்பினால்,பாத்திரம் அறியாது பிச்சை இட்டிருக்கிறார் என எடுத்து கொண்டேன்.இந்த பிச்சையை சாமி மாதிரியான என் அப்பா இடத்தில் வச்சுக்கிருவேன் மாதவன்.இருவருக்கும் நன்றி.
மிக்க நன்றி!
பழசும் புதுசும் மீண்டும் புதுசும் மாற்றம் ஒன்றே மாறாத தத்துவமில்லையா?
@அசோக்
உங்கள் ரசிகன் நான்.அதை சொன்னேன்.நன்றி மக்கா.
@கருணா
நன்றியும் அன்பும் சகோ!
@ஜெஸ்வந்தி
பின்னூட்டம் பாருங்கள் ஜெஸ்.எளிதே கவிதை.நன்றி மக்கா.
@கல்யாணி
நன்றியும் அன்பும்டா.
@ஹேமா
என்னடா ஹேமா?நீயும்தான்.என் முதல் சகோதரி இல்லையா!
@பாலா
நன்றி மாப்பு..வச்சுடீங்களே ஆ..(உங்கள் தளத்து கவிதை)
@ஜமால்
ரொம்ப நாளா உங்களை miss பண்ணியிருந்தேன் ஜமால்.வீடு நிறைஞ்சாச்சு.நன்றி மக்கா!
@மாதவராஜ்
ஆடிப்போயிட்டேன் மாதவன்.அன்பு மகத்தானது.நன்றி மக்கா!
@தமிழ்ப்பறவை.
நன்றியும் அன்பும் தமிழ்ப்பறவை.
@சந்தான சங்கர்
வந்துட்டேன் சங்கர்.உங்கள் உரிமை சந்தோசமாய் இருக்கு.நன்றியும் அன்பும்!
@இரசிகை.
சரிதான் ரசிகை.நீங்க யாரு?..நன்றி மக்கா.
@மண்குதிரை
ஆகட்டும் மண்குதிரை.அன்பு மக்கா!
@நர்சிம்
உங்க பேரை அவுங்க எழுதி இருப்பாங்கலாக்கும்?நன்றி மக்கா!
@நந்தா
power full நந்தா!
@உதிரா
ஆகட்டும்டா,உதிரா!நன்றி மக்கா!
@வேல்ஜி
நன்றியும் அன்பும் வேல்ஜி!
@உயிரோடை
வாங்க சகா.நன்றி நிறைய!
புது வீடும் வருவேன்.புத்தம் புதுமனிதரும்இருப்பார்."ஓஹோ...அ.."எனும்போதே உள்நுழைந்திருப்பேன்.
ஒருநாள்..
வாடகை வீடாயாலும் வெகுகாலம் தங்கியவர்களுக்கு வீடும், தெருவும் அதன் நினைவுகளும் ஒரு சிலிர்ப்பைத்தரும். என்றாவது கடந்துபோகும்போது தெருப்புழுதியும் நம்மைத் தெரிந்துகொண்டதுபோல் ஒரு உணர்வு.
அன்பு ராஜாராம்..! பாத்திரம் அறியாமல் சொல்லவில்லை. ந.பியின் உயரம்தான். யாரும் சிகரமல்லவே. உங்கள் பதில் பின்னூட்டம் பார்த்தபிறகு நேற்றிரவு ந.பியை படித்தேன். நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லையென்றே நினைக்கிறேன். சாயல் எனக்குத் தெரிகிறது.
சின்ன வயசுல எல்லாம் வாடகை வீடுதான். நிறைய மாறியிருக்கோம். சொந்த வீடு கட்டுனாலும் அதுல இருந்தது சில மாசங்கள்தான். பழைய வீடுகளுக்குப் போற அளவுக்குத் தைரியம் இல்ல, ஆனா அந்தத் தெருக்கள் வழியா நடந்து போய் நினைவை மீட்டியதுண்டு. அதே மாதிரி பழைய பள்ளி, கடைத்தெருக்கள்... இப்பவும், நாட்டை விட்டு வந்து கிட்டத்தட்ட பத்து வருஷம் ஆச்சு. திருப்பியும் ஒரு நடை போய்ட்டு வரணும். பார்க்கலாம். அப்புறமென்ன வழக்கமான வார்த்தைகள்தான் அன்பரே!
நாமிருந்த வீடுகளெல்லாமே நமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கின்றன........
@s.a.நவாசுதீன்
அதிரையின் தெருக்களுக்குள் போக வாய்த்ததா நவாஸ்.சந்தோசம்.நன்றியும் அன்பும் மக்கா.
@மாதவராஜ்
ஆகட்டும் மாதவன். ரொம்ப சந்தோசம்.கண்ணில் நீர் திரளும் படியான மோதிரவிரல் கொட்டு!ந.பி,பசுவையா,கல்யாண்ஜி,வண்ண நிலவன்,ஆ.மாதவன்,தி.ஜா,எல்லோரும் ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு
முன்பாக வலிக்க கீரியிருக்கார்கள்.
வடுக்களில் இருந்து எனை அறியாது கசிகிறதோ என்னவோ.
ஏனெனில்,என் முதல் சிறுகதை(காலத்தின் வாசனை) வாசித்த அனுஜன்யா கூட,
வண்ண நிலவனின் வாசனை கசிவது போல் அவர் தளத்தில் சிலாகித்திருந்தார்.
இதெல்லாம் சந்தோசமாகத்தான் இருக்கு.
"அப்புக்கு பிள்ளை தப்பாம வந்திருக்கியேடா" என சிரிக்கிற, குசலவன் மாமா குரல் கேட்பது போல.
@சங்கா
ரொம்ப நாள் ஆச்சு சங்கா...விடுபட்டு போன பதிவுகளுக்கெல்லாம் போய் மொய் எழுதியாச்சு போல.சந்தோஷமும் நிறைய அன்பும் மக்கா.
@துபாய் ராஜா
பயணம் நல்ல படியாக இருந்ததா சகோதரா?ஒரு பதிவை போடுங்கள்.அன்பும் நன்றியும் ராஜா.
குடியிருந்த பழைய வீட்டின் தெருவை
எப்போதாவது கடக்கையில் ஒருவித ஏக்கமும் , நினைவுகளும் மனதை ஏதோ செய்யும்.
கவிதை அருமை
Post a Comment