Friday, October 9, 2009

கடவுளும் ப்ரியசாமி பிள்ளையும்


(picture by CC licence, Thanks B. Sandman)

ஒன்று:
தெருவோரத்தில்
இருக்கிறோம்
என
தெரியாமலே
இருக்கிறோம்.

ழை
காற்று
வெயில்
பனி
போல

வாழ்ந்து பார்க்க
ப்ரியமெனில்

முறுக்கு மீசை
மழித்தவிழ்த்து
வாடா
கடவுள்
தெருவோரம்.

இரண்டு:
பீத்துணி
கசக்கி
ப்ரியத்தில்
முகரும்
எட்டாவது மகள்
கருப்பாயிக்கு
ஏன்டா கடவுள்
தரலை
பூப்பும்
காய்ப்பும்?

43 comments:

thamizhparavai said...

:-(

தமிழ் நாடன் said...

கடவுள் மீது அப்படியென்ன கோபம்?
ஆனாலும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. அவந்தான் எல்லோருக்கும் பொதுவானவன் ஆச்சே!

கவிதைகள் நிதர்சனங்கள்!

S.A. நவாஸுதீன் said...

பீத்துணிகசக்கிப்ரியத்தில்முகரும் எட்டாவது மகள்கருப்பாயிக்கு ஏன்டா கடவுள்தரலைபூப்பும்காய்ப்பும்?

நண்பா என்னிடம் வார்த்தைகள் இல்லை

கல்யாணி சுரேஷ் said...

கடவுள் கூட சில நேரம் மனிதர்கள் போல நடந்து கொள்ளும்போது என்ன சொல்ல? இந்த கவிதை இனம் புரியாத வலியை தருகிறது அண்ணா.

மண்குதிரை said...

nalla irukkunney

irandaavathu mathari onnu suyambu ezhuthiyirukkaarnney athuvum nalla irukku

பாலா said...

இரண்டு:

பீத்துணி
கசக்கி
ப்ரியத்தில்
முகரும்
எட்டாவது மகள்
கருப்பாயிக்கு
ஏன்டா கடவுள்
தரலை
பூப்பும்
காய்ப்பும்?


chance less

Vidhoosh said...

நெஞ்சை அறுப்பதற்கென ஒரு தொகுப்பே வைத்திருக்கிறீர்களா என்ன ராஜாராமா?

-வித்யா

மணிஜி said...

/ஏன்டா கடவுள்//

கடவுளா? என்றிருந்தால்...

ஹேமா said...

அண்ணா எனக்குச் சொல்லிட்டு உங்களுக்கு ஏன் இவ்ளோ கோவம் கடவுள்மேல !

இரசிகை said...

chaattaiyaala adichathu pola irukku.....rajaram sir!!!

pinni pedala kazhattureenga.......

thodarungal...

naan yeppothum rasihai..ungal varikalukku:)


//பீத்துணிகசக்கிப்ரியத்தில்முகரும் எட்டாவது மகள்கருப்பாயிக்கு ஏன்டா கடவுள்தரலைபூப்பும்காய்ப்பும்?//

arumai...

Ashok D said...

நச்...

rvelkannan said...

நிதர்சன வெட்ட வெளியான உண்மை
அப்படியே பதிவாய் இருக்குகிறது உங்களின்
கவிதை மொழியில்

துபாய் ராஜா said...

வலி மிகுந்த வரிகள்.

இன்றைய கவிதை said...

கடவுளைப் பழிப்பதற்குப்
பதிலாகக் கரங்களை
நீட்டியிருக்கலாமே?

பார்ப்பதற்காகவே
படைக்கப்பட்டவை கண்கள்....
கொடுப்பதற்காகவே
படைக்கப்பட்டவை கைகள்...
கைகளைக் கொண்டு
இம்மாதிரி கவிதைகளை
உழுவதை விட
இல்லாதவர்களுக்கு உதவலாமே?!

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக்
காண்பதை விட்டுவிட்டு
கடவுளைக் குறை
சொல்வது
என்ன நியாயம்?

மன்னித்துவிடுங்கள்!
என்னால் இம்மாதிரியான
கவிதைகளையும், தொடர்ந்து வரும்
'அண்ணா' பிதற்றல்களையும்
ஏற்கத்தான் முடியவில்லை!

காமராஜ் said...

புகைந்துகொண்டிருக்கும்
நெடுநாள் கேள்விகளை அவிழ்த்து
கணகணவென எறிய விட்ட கவிதை.

அருமை பாரா...
கவிதை,
நகர விடாது சஞ்சலப்படுத்துகிறது.

காமராஜ் said...

பிள்ளையார் பால் குடித்தாரெனவும்
தேங்காய் மூடியில் கண்ணீர் வருகிறதெனவும்,
மஞ்சள் சேலை உடுத்த சோதர தோஷம் விலகும் எனவும்,
அட்சய த்ரிதியில் தங்கம் வாங்கினால் கல்லாப்பெட்டி நிறையும் எனவும்
விடுகிற சரடுகளை நம்பலாம். அதுவெல்லாம் பிதற்றல் இல்லையாம்,
வலிகளை, அவமானங்களை,பஞ்சம் பசி பட்டினியைச் சொன்னால்
மட்டும் பொத்துக்கொண்டு வருவதேன்.
கடவுள் என ஒருவர் இருப்பதாக
வாதிட்டாலும் கூட,
அவர் ஒரு சாரார்க்கு மட்டுமானவரில்லையே
இதோ இது எவ்வளவு அழகான விமர்சனம்.

//கடவுள் மீது அப்படியென்ன கோபம்?
ஆனாலும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. அவந்தான் எல்லோருக்கும் பொதுவானவன் ஆச்சே!

கவிதைகள் நிதர்சனங்கள்!//

பாலா said...

அய்யா "இன்றைய கவிதை " முதல்ல
கவிதைய கவிஞனோட ஒப்பிட்டு பார்க்காதீங்க
கவிதையோடதான் கவிஞன் இருக்கனும்னா
பயித்தியமாதான் போக முடியும் .
அந்த இரண்டாவது
கவிதை இயலாமையில் வரும் கோபம் அதுவும் கடவுள் மேல் .

நேசமித்ரன் said...

திராவகத்தை குடித்த இரவு கேட்கும்
மரணச் செய்தி
பதுங்கு குழியில் பூப்பெய்திய
மகளுடன் உள்ளொடுங்கும் தாய்
பிரசவத்திற்கு பிறகு மகவிறந்த
செய்தியை மனைவியிடம் சொல்ல
நேர்கிற கணவனின் முதல் சொல்
எதுவும் ஈடாகாது பா.ரா பீத்துணி
முகர்ந்து பார்ப்பவளின் வலியை பேசும்
வரிக்கு

ஆ.ஞானசேகரன் said...

//பீத்துணிகசக்கிப்ரியத்தில்முகரும் எட்டாவது மகள்கருப்பாயிக்கு ஏன்டா கடவுள்தரலைபூப்பும்காய்ப்பும்?//


ஞாயமான கோவம் வரிகளும் அழகு...

சந்தான சங்கர் said...

//பீத்துணி
கசக்கி
ப்ரியத்தில்
முகரும்
எட்டாவது மகள்
கருப்பாயிக்கு
ஏன்டா கடவுள்
தரலை
பூப்பும்
காய்ப்பும்?//

விதி செய்தவனின்
மதிக்கு
மறுதலிக்கும்
வார்த்தைகள்..

எழுச்சி..

ப்ரியமுடன் வசந்த் said...

//மழை
காற்று
வெயில்
பனி
போல//

இதைத்தான் எதிர்பார்த்தேன்....

ப்ரியமுடன் வசந்த் said...

//பீத்துணி
கசக்கி
ப்ரியத்தில்
முகரும் //

அன்பின் எல்லையை தேடுபவர்களுக்கு எடுத்துக்காட்டு..

ப்ரியமுடன் வசந்த் said...

//முறுக்கு மீசை
மழித்தவிழ்த்து
வாடா
கடவுள்
தெருவோரம்.//

அதுக்கும் அவனுக்கு நாமதான் மழிப்புக்கத்தியோ,சேவிங்செட்டோ வாங்கித்தரவேண்டும் அந்த நிலையில்தான் அவன் இருக்கிறான்

காமராஜ் said...

//அதுக்கும் அவனுக்கு நாமதான் மழிப்புக்கத்தியோ,சேவிங்செட்டோ வாங்கித்தரவேண்டும் //

அப்படிப்போடுங்க வசந்த்..

அம்மிடியான் மம்பட்டியத் தூக்கிட்டா கடவுள் வந்தாலும் ''செத்த ஒக்காரும் தண்ணி பாச்சிட்டு வந்து பேசிக்கிருவம்''
என்பாராம்.

'பசியோடிருப்பவனுக்கு ஒரு பிடி சோறு தெய்வம்' சொன்னது புரட்சிக்காவி விவேகானந்தர்

விநாயக முருகன் said...

இரண்டாவதின் கவிதை வரிகள் எனக்கு பிடித்திருக்கிறது ராஜாராம்

வெண்ணிற இரவுகள்....! said...

மழை
காற்று
வெயில்
பனி
போல


வாழ்ந்து பார்க்க
ப்ரியமெனில்
//
விளிம்பு நிலை ........
நான் இந்த சமுதாயத்தை நினைத்து தலை குனிகிறேன்

சந்தான சங்கர் said...

தேவதையின்
வரமிட்டிருக்கின்றேன்
உங்கள்
கரமிட்டுச்செல்லுங்கள்..

ரௌத்ரன் said...

//பீத்துணி
கசக்கி
ப்ரியத்தில்
முகரும்
எட்டாவது மகள்
கருப்பாயிக்கு
ஏன்டா கடவுள்
தரலை
பூப்பும்
காய்ப்பும்?//

என்னவோ செய்கிறது.நன்றி ஒரு சிறுகதை தந்தமைக்கு..விரைவில் எழுதுகிறேன்.

SUFFIX said...

நல்லா இருக்கு அண்ணே.

நட்புடன் ஜமால் said...

என்ன சொல்றதுன்னு தெரியலை ... :(

Anonymous said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
நல்லா இருக்கு அண்ணே


ஆமோதிக்கிறேன்...

ராகவன் said...

அன்பு ராஜாராம்,

விரல்களை பற்றிக்கொண்டதற்கு நன்றி! உடன் வருகிறேன், வழி நடத்துங்கள். தி.ஜா.படிக்கிற/பிடிக்கிற உங்களுக்கு கைய பிடிச்சுக்கத் தோன்றியதில், வியப்பேதுமில்லை, எனக்கு கட்டிக்கொள்ள தோன்றும், பாலின வேறுபாடின்றி.

உங்கள் கவிதை எனக்கு பிடித்தது, எனக்கு என்னமோ கடவுள் ஒரு குறியீடாய் தெரிகிறது, முறுக்கு மீசை மழித்தழித்து....யார் இந்த கடவுள்... கடைசி நாலு வரிகளில் கவிதை சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராகவன்

மாதவராஜ் said...

வதைக்கின்றன வரிகள்.
வேறெதுவும் சொல்லமுடியவில்லை இப்போது.

விஜய் said...

யதார்த்தமும் கவிதையும் பின்னி பிணைகிறது உங்களிடம்.

வாழ்த்துக்கள்.

விஜய்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்லா இருக்குன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். கவிஞனின் கோபத்தை நல்லா இருக்குன்னு சொல்றது அநாகரீகம் னு தோணுது எனக்கு

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்,
தமிழ்ப்பறவை,
தமிழ்நாடன்,
நவாஸ்,
கல்யாணி,
மண்குதிரை,
பாலா,
வித்யா,
மணிஜி,
ஹேமா,
ரசிகை,
அசோக்,
வேல்கண்ணா,
ராஜா,
இன்றைய கவிதை,
காமராஜ்,
நேசா,
சேகர்,
சங்கர்,
வசந்த்,
விநாயகம்,
வெண்ணிற இரவுகள்,
ரவுத்திரன்,
சபிக்ஸ்,
ஜமால்,
தமிழ்,
ராகவன்(நல் வரவு மக்கா)
மாதவன்,
விஜய்,
சேரல்,

எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும் நண்பர்களே!

ஷங்கி said...

அருமை, அருமை!

Rajan said...

அக்னிக் குஞ்சு!!!

Rajan said...

அக்னிக் குஞ்சு!!!

கவிதாசிவகுமார் said...

கடவுளை நண்பனாகப் பாவித்து உரிமையுடன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நியாயமான கோபம்தான்.

anujanya said...

இரண்டுமே நல்லா இருக்கு. எப்பவும் போல மனச என்னவோ செய்கிறது. (அதனாலேயே இங்க வர ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு :))) )

அனுஜன்யா

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்..
ஷங்கி,(வரணும் மக்கா,மன்னியுங்கள்)
ராஜன்,(நல்வரவு ராஜன்..)
உதிரா,(எங்கடா காணோம்?)
அனு.(வாங்க தல..)
நிறைய அன்பும் நன்றியும் மக்கா.

அன்புடன் அருணா said...

நம்ம கடவுள்தானே நாம் உதைக்காம யார் உதைக்கப் போறாங்க!?