Sunday, October 11, 2009

தகப்பனாக இருப்பது


(picture by CC license, thanks babasteve)

"ப்பா இன்னும் வரலை"
எனக்கூறும்
மகனின் பொய்யை
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

வீட்டினுள்
இருந்தபடி.

"போயிட்டாருப்பா"
என திரும்பும்
மகனின் முகம்
காண இயலாததாய்
இருக்கிறது.

டன்காரனாக
இருப்பதையும் விட
கொடுமையானது
சில நேரம்...

கப்பனாய்
இருப்பது.

89 comments:

இரசிகை said...

yenna sir.........ippadi kollureenga!!!

unarvuppoorvamaa irukku!!

இரசிகை said...

:)

அன்புடன் மலிக்கா said...

அருமை அருமை

இரசிகை said...

m..........sir,naan peerthi vidai pinnoottathai(oru vazhiyaa) vaasiththu vitten:)

"vada pochchennu" kavalaip patten...marupadiyum paarcel seithu koduththatharkku nantri...:)

ungal nesaththin vaasam vaarththaikalil.."appa" pola!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு ராஜாராம்.

பிரபாகர் said...

//கடன்காரனாகஇருப்பதையும் விடகொடுமையானதுசில நேரம்...
தகப்பனாய்இருப்பது.//

அற்புதமான வைர வரிகள்....

சந்தோஷமாய் இருப்பதை அதிகப்பத்திக்கொள்வது, சிலநேரம்
இது போன்ற கவிதைபடிப்பது.

பிரபாகர்.

ராகவன் said...

அன்பு ராஜாராம்,

என்ன சொல்றது தெரியலை, ராஜாராம். ரொம்ப அழகான அவஸ்தையான கவிதை. வாழ்க்கையை மிகச்சிறந்த சொற்சித்திரமாய் மாற்றி இருக்கிறீர்கள். இதைவிட இயல்பாக ஒரு வறுமையை சொல்ல முடியாது, வறண்ட நாக்குகளில் சுடுமணலை தின்பது மாதிரி, தகப்பன் நிலை என்னை நிலைகுலைய வைக்கிறது.

வாழ்த்துக்கள் ராஜாராம், உங்கள் கைகளை இறுகப் பிடித்துக்கொள்கிறேன். இளஞ்சூடு என்னுள்ளும் பரவ..

அன்புடன்
ராகவன்

Anonymous said...

கவிதை அருமை.

இதே கருவில், மகனின் வார்த்தைகளாக, நளன் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.
http://nalann.blogspot.com/2009/08/blog-post_19.html

rvelkannan said...

என்ன சொல்ல ?
//கடன்காரனாகஇருப்பதையும் விடகொடுமையானதுசில நேரம்...
தகப்பனாய்இருப்பது.//
இருந்தால் தான் தெரியும் என்றில்லை
உங்களின் கவிதையின் வழியாகவும்
வலி தெரிகிறது

vasu balaji said...

பெரும்பாலான தகப்பனின் வலிகள். ஏதோ ஒரு காரணமாய். அற்புதம்.

கல்யாணி சுரேஷ் said...

சிறு வயதில் சந்தித்த பல நிகழ்வுகள் நினைவுக்கு வருதுண்ணா. :(

Unknown said...

Nice.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வலி நிறைந்த வாழ்வின் இன்னொரு கொடுமையான பக்கம் சார் இது!

வார்த்தைகளில் அழகாய் வார்த்தெடுத்திருக்கிறீர்கள்.

மண்குதிரை said...

romba romba nalla irukkuthu

ஆ.ஞானசேகரன் said...

//கடன்காரனாக
இருப்பதையும் விட
கொடுமையானது
சில நேரம்...

தகப்பனாய்
இருப்பது.//

வலிகளோடு எதார்த்த உண்மையும் சொல்லியுள்ளீர்கள் நண்பா...

thamizhparavai said...

மனதைப் பிசைகிறீர்கள் ராஜாராம் சார்...

ஆரூரன் விசுவநாதன் said...

அருமையான, வரிகள்


வாழ்த்துக்கள் பா.ரா

Prapa said...

அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..

S.A. நவாஸுதீன் said...

கடன்காரனாகஇருப்பதையும் விடகொடுமையானதுசில நேரம்...
தகப்பனாய்இருப்பது.

என்ன வரிகள் நண்பா இது. இப்படி போட்டு தாக்குறீங்க. பேசாம உங்க வாசகனா மட்டும் இருந்திடலாம்னு தோனுது போங்க

Vidhoosh said...

பேனா வச்சுதானே எழுதுறீங்க ராஜாராம். கமெரா கீமரா வச்சி எடுத்த படம் போலவே காட்சிகள் வேதனை செய்கிறதே?

-வித்யா

பாலா said...

இந்த பதிவுக்கு
பின்னூட்டம் போடனும்னா ஓரமா ஒக்கார்ந்து அழுதுட்டுதான்
போடணும் மாமா
என்ன சொல்றதுன்னு தெரியல
உங்கள் கைக்கு ஆயிரம் முத்தங்கள் மாம்ஸ்

அ.மு.செய்யது said...

நான் இன்று பிளாக்கை திறப்பதற்குள் இரண்டு பேர் ஜிடாக்கில் உங்களின் இந்த கவிதை லிங்கை
ஒரே நேரத்தில் தந்தனர்.

வலையுலகில் குறிப்பிடத்தக்க கவிதைகளுள் ஒன்றாக இருக்கும் பா.ரா இது.

வேறொன்றும் என்னால் சொல்ல இயலவில்லை....!!!!!!!!!!

ராஜா சந்திரசேகர் said...

யதார்த்தம் வீசும் வாளிலிருந்து விழும் சில ரத்தத் துளிகள் வரிகளாகி விடுகின்றன.வலி பேசும் கவிதையாகின்றன.

இராகவன் நைஜிரியா said...

கொடிது, கொடிது இளமையில் வறுமை...

உங்கள் வரிகளைப் படிக்கும் போது, இந்த வரிகள்தான் ஞாபகத்திற்கு வந்தன.

Anonymous said...

கருத்து சொல்லி தீராது இந்த வலி...

நட்புடன் ஜமால் said...

வரிகளின் அழகை சொல்வதா

அதில் இருக்கும் வலியை சொல்வதா

ரொம்ப யோசிக்கனும் நண்பா

இதுக்கு கருத்து சொல்லனுமான்னு ...

கபிலன் said...

ரொம்ப அருமை..
வரிகள் குறைவே...அதிலும், புரியாத வார்த்தை ஜாலங்கள் இல்லை..
எண்ணங்களை வாசகர்களே தேர்வு செய்து கொள்ளட்டும் என்ற நடை அருமை!

தமிழ் நாடன் said...

அருமையான சொற்சித்திரம்!

கடன்காரனையாய் இருப்பதை விட கொடுமையானதுதான் கடன்கார தகப்பனாய் இருப்பது! மனதை சுடும் உண்மை!

ஹேமா said...

கொடுமை அண்ணா.அதைக் கோர்த்திருக்கும் விதம் அருமை.

இரவுப்பறவை said...

நிதர்சனங்கள்... கடனாய் கொஞ்சம் வார்த்தைகள்..
-இரவுப்பறவை

Ashok D said...

கடன்பட்டார் நெஞ்சம் போலே கலங்கினான் இலங்கை வேந்தன்.

இன்னைக்கி காலையல தான் நெனச்சேன், கார் பங்களாவோட வாழலன்னாலும் கடன்யில்லாமா வாழனும் அதான் மகிழ்ச்சியான வாழ்வு என.

அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லிட்டீங்கண்ணே..

புலவன் புலிகேசி said...

அருமை....

சத்ரியன் said...

பா.ரா,

அப்பா.....டி!

அற்புதம்!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையான வரிகள். இதயத்திலிருந்து வந்தவை என்று அடையாளம் தெரிகிறது. அப்பாவை இருப்பது மிகவும் கடினம் தான்.

நேசமித்ரன் said...

தகப்பனுக்கு தன் இளமைத் தந்த மகன் யயாதியின் கதை
தகப்பனின் ஆசைக்கு தன் உயிரைத்தந்த இந்திரசித்து
குலம் தழைக்க தகப்பனுக்குத் தம்மைத் தந்த மகள்கள்
பைபிளின் இப்ராஹீம் கதை
ஈரக் குலையை அறுக்கும் இந்தக் கவிதையும் அப்படித்தான்

SUFFIX said...

அண்ணே பா.ரா. !! சிம்ப்பிளான் மேட்டர சூப்பர சொலவதில் உங்கள அடிச்சுக்க ஆளு இல்லைங்க!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வெகு நாட்களாகி விட்டது உங்கள் கவிதைகளைப் படித்து.....மீண்டும் நெகிழ்வதற்காக வந்திருக்கிறேன். முதல் கவிதையிலேயே சாய்ந்து கிடக்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

க.பாலாசி said...

//கடன்காரனாக
இருப்பதையும் விட
கொடுமையானது
சில நேரம்...
தகப்பனாய்
இருப்பது.//

மிக ஆழமான வரிகள் அன்பரே....

ஈரோடு கதிர் said...

நிஜமான வலி

காமராஜ் said...

ஆமாம், இந்த ராஜாராமின் கவிதைகள் ரொம்ப இயல்பாகச் சொருகுகிறது,
வாழ்க்கையின் வலிகளை.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. கவிதையின் பொருளோ மிகக் கொடுமைதான்.

மணிஜி said...

நானும் செய்திருக்கிறேன்(பின்னர் மாட்டிக் கொண்டு அவமானப்பட்டது வேறு கதை)

விஜய் said...

ஒவ்வொரு நடுத்தர வர்கத்தினனும் கடந்து வந்த பாதை.

மிக யதார்த்த வழிகள்.

விஜய்

G.S.Dhayalan said...

சிக்கன வார்த்தைகளில் காட்சி சித்திரங்கள் விகாசமாக விரிய, உணர்வுகளும் துல்லியம் கொண்டுள்ளன

துபாய் ராஜா said...

அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை.... :((

செ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு பா.ரா. அண்ணா...

ப்ரியமுடன் வசந்த் said...

அந்த இயலாமையே நம்மை சாகடித்துவிடும்...

அண்ணா நெஞ்சில் வேலைப்பாய்ச்சுகிறீர்கள்...

விநாயக முருகன் said...

//கடன்காரனாக
இருப்பதையும் விட
கொடுமையானது
சில நேரம்...
தகப்பனாய்
இருப்பது.


அருமை .நல்லா இருக்கு

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் said...

அழ வச்சிட்டீங்களே..:(

இரசிகை said...

49-comments.......

yevvalavu santhosamaa irukku theriyumaa...?

yellarum unga varikalai patri mattume pesiyirukkaanga:)

neega yaarkoodayum pesala..
ungal varikal mattum yellaaraiyume pesa vaikkuthu...

ithuthaan kavithai..ku kidaiththa nijamaana vetri...
niraya vazhththukal rajaram sir..
unga thalaththai follow seivathil athega perumai yenakku!!!

niraya yezhuthunga:)

ஷங்கி said...

நச்சுன்னு இருக்கு அன்பரே!

அன்புடன் நான் said...

கவிதை யதார்த்தத்தை அப்பட்டமாக உணர்த்துகிறது.பாராட்டுக்கள்.

உயிரோடை said...

ரொம்ப நல்லா இருங்க பா.ரா.

Rajan said...

நிஜம் தான்...

கவிதாசிவகுமார் said...

மனதைப் பிசைந்து ஒருவித அவஸ்தையை ஏற்படுத்தியது கவிதை.

இன்றைய கவிதை said...

இந்த கவிதையை
ஏற்கெனவே படித்த நினைவு...
நினைவுக்கு வரவில்லை!

-கேயார்

anujanya said...

அப்பா! முகத்தில் அறைகிறது. ராஜா...........

அனுஜன்யா

ரௌத்ரன் said...

கொன்னுட்டீங்க போங்க...

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

விருந்தினர்களால் நிறைந்திருக்கு என் முதலாளி வீடு.விருந்தினர்களை,குட்டி,குஞ்சு,குலுமான்களை நாங்கள் யாரும் பார்க்க இயலாது.ஆனால்,அதற்கான வேலை அமளியை எங்களால் அனுபவிக்க இயலும்.அதே போல,முதலாளி, வெளிநாடு போய் விட்டார் எனில்,அறவே ஒரு வேலையும் இராது. இரண்டு மாதம் கூட சும்மா சாப்பிட்டு தூங்க நேரிடும்.

சும்மா சாப்பிட்டு தூங்கி சம்பளம் வாங்கும் போது ஏற்படும் குற்ற உணர்ச்சியை,இந்த மாதிரி தருணங்களில்,வேலைகளை இழத்து தலையில் போட்டுக்கொண்டு பார்த்து நேர் செய்து கொள்ள வேண்டியதுதான்.இந்த தருணங்களில்,என் குடம்பமும்,குழந்தைகளும் இருப்பதால் இதை நான் குறை வைக்க இயலாது.

இதன் பொருட்டு இங்கு முன்பு போல வர இயலவில்லை.ஆனாலும்,வர போக இருக்கும் போது உங்கள் எல்லோரின் வரவையும்,இக் கவிதை குறித்த உங்கள் சிலாகிப்பையும் பார்த்து நிறைந்து கொண்டேன்.எப்போ நேரம் கிடைத்தாலும்,ஓடியே வந்து உங்களுடன் நெருக்கியடித்து உட்க்கார்ந்து கொள்கிறேன்.

உங்கள் எல்லோருக்கும்,மிக நிறைவான நன்றி மக்கா..நன்றி சொல்லும் போது என் சூழலையும் சொல்லணும் என தோன்றியது...

கல்யாணி சுரேஷ் said...

மற்றவர்களின் நிலை தெரியவில்லை. ஆனால் நான் உங்களை காணோமென்று தேடினேன், கருத்துகளுக்கான பதிலுக்காக அல்ல. ஒரு இடைவெளி விழுந்தது போல உணர்ந்தேன் அண்ணா.

Ravichandran Somu said...

நெகிழ வைத்து விட்டீர்கள் ராஜாராம்.

கனத்த மனத்துடன்,
-ரவிச்சந்திரன்

செல்வநாயகி said...

அருமை.

சி. சரவணகார்த்திகேயன் said...

tats good..
i have added it to the படித்தது / பிடித்தது series in my site -
http://www.writercsk.com/2009/10/77.html

ஜோதிஜி said...

பாரா ன்னு பேர் வச்சுருந்தாவே புத்திசாலியாக மட்டும் தான் இருப்பாங்களோ? நான் வியந்து பார்த்த நீங்கள் இரண்டாவது பாரா.

பா.ராஜாராம் said...

கல்யாணி சுரேஷ்,ரவிச்சந்திரன்,செல்வநாயகி,csk,ஜோதிஜி,மிகுந்த அன்பும் நன்றியும்!

கட்டபொம்மன் said...

நச் ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு பா ரா சார்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

- யெஸ்.பாலபாரதி said...

தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

:)

தோழன்
பாலா

ப்ரியமுடன் வசந்த் said...

தமிழ்மண வெற்றிக்கு பா.ரா.ட்டுகள் அண்ணா...

தமிழ் said...

வெற்றிக்கு வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு மக்கா.

தமிழ்மணம் 2009 விருது என் பா.ரா.வுக்கு கிடைச்சது ரொம்ப சந்தோசம்.

செந்தில் நாதன் Senthil Nathan said...

தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

முனைவர் இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே..

Kumky said...

விருது பெற்றமைக்கு மனம் இனித்த வாழ்த்துக்கள் பா.ரா.

கவிதை தந்த அதிர்வு, சொற்களையும், சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் கடந்து நீடித்துக்கொண்டே செல்கிறது.

சாதாரணமாக கவிதைகளின் பாலான உணர்வுகள் சில நொடிகளேனும் அல்லது நிமிடங்களிலேனும் கடந்து அடுத்த செயலுக்கு போய்விடுவோம்...
ஆனால் இதை படித்தபின் அயர்ந்துபோய் ஒன்றும்தோன்றாமலாகிவிட்டது.
நாமும் தகப்பனாக இருப்பதில் பழுதில்லை...ஆனால் கடன்காரனாகவும் இருந்து தொலைக்கவேண்டியதிருக்கிறதே....

MJV said...

வாழ்த்துக்கள் தலைவரே. அற்புதமான கவிதைக்கு முதல் பரிசு. மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது! ஆழமான கருத்து!!!

பாலா அறம்வளர்த்தான் said...

வாழ்த்துக்கள் பா ரா !!!
"வீட்டில் இருந்தபடி" என்கிற வரியை சரியாகப் படிக்காமல் இந்த கவிதையை கடனைத் திருப்பிக் கேட்க வந்தவன் மன நிலையில் படித்தேன் - அதுவும் நன்றாகவே இருந்தது :-)

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள் தல‌

இரவுப்பறவை said...

அன்புமிகு பா ரா அவர்களுக்கு,
தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்!!!

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு..

இந்த "தகப்பனாக இருப்பது"கவிதைக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரமும்,விருதும் கிடைத்தது மிக்க சந்தோசம் மக்கா.இதை எழுதிய போது கிடைத்த சந்தோசத்தைவிட இந்த சந்தோசம் அலாதியாய் இருக்கிறது.இதற்க்கெல்லாம் உங்கள் எல்லோருடைய அன்புதான் காரணம் எனும் போது....

அகிலாண்டத்து அம்மாயி காலில் விழுந்து திருநூறு வாங்கும் போதெல்லாம் சொல்வார்கள் "பெரிய வீட்டுக்காரனாய் இருடா"வென.

"இவ்வளவு பெரிய வீட்டுக்காரனாய் இருப்பேன் என தெரியலையே அம்மாயி."

அம்மாயிக்கும், அம்மாயி போன்ற என் நண்பர்களுக்கும்,தமிழ்மணத்திற்கும்.........

"அந்த வார்த்தையை சொல்லனுமா மக்கா?"

Nathanjagk said...

தமிழ்மணக்குது இங்கே விருதாய்...!
ஒளிவதின் வேதனை ஒளிர்கிறது கவிதையில். வாழ்த்துக்கள்!!!

ராமலக்ஷ்மி said...

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் பா ரா:)!

நீச்சல்காரன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்

தோழி said...

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் பா ரா. :-)

கண்ணகி said...

கஸ்டம்தான் தகப்பனாக இருப்பது.

வாழ்த்துக்கள்.

Vediyappan M said...

தமிழ்மணம் விருதுபெற்ற நண்பர் பா.ராஜாராம் அவர்களுக்கு டிஸ்கவரி புக் பேலஸ் தனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

கொஞ்சம் காலம் தாழ்ந்த வாழ்த்துக்கள் தான். இருப்பினும் ஏற்றுக்கொள்ளுங்கள். இடைப்பட்ட காலத்தில் என்னுள்ளே புதைந்து கிடந்த என் தந்தையின் நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்தது உங்கள் கவிதை. உணர்ச்சிகளை இவ்வளவு ஆழமாக எழுத்தில் கொண்டு வருவது அனேகம் பேருக்கு கைவராத ஒன்று. மிகச் சிலரே எழுத்தில் பதித்த இது போன்ற உணர்வுகளை இங்கே மறுபடியும் காண்பதில் மெத்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்....

சுப. முத்துக்குமார் said...

fantastic sir.... i know this is a formal word to praise a verse... but i can't help to get more words other than this. Actually, the first words came out of mind when i read this verse. keep going sir.

Katz said...

very touching.

Unknown said...

Arumaiyana muthukal ovvoru variyum. Ungalai arinthavargal bhagyasaaligale. Nanri pa.ra.

Nesamithrarin variyoviyam itharkkum merugoottum. Avar innum sirappaga itharku ezhuthiyirukkanum.