Wednesday, October 14, 2009

முன்னாடி..


(Picture by CC license, Thanks Crimfants)

"ன்ன நினைச்சுக்கிட்டு
இருக்க?"
என கோபமாகக்கூட
கேட்டுப் பார்க்கிறேன்.
சிரிச்சுக்கிட்டேதான்
நிற்கிறான்.

ந்த சிரிப்பு
எதுல போய்
முடியுமோ
என
பயமாகவும் இருக்கு.

"யமாகவும் இருக்கு"
என
வாயசைத்து
சிரிக்கிறான்.

முதுகில்
ரசம் பூசிய
பேசத்தெரியாத
சிரிச்ச பயல்.

37 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா...

இரசிகை said...

kuzhanthaiyaik kaattum mugak kannaadittap pesureengalo..?

nallaayirukku rajaram sir..

diwali vazhthukal...:)

சென்ஷி said...

அசத்தல் கவிதை.. ரொம்ப ரசிச்சு படிச்சேன்!

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு...சிரிப்பு!! :-)

நர்சிம் said...

ஆடி அருமை.

S.A. நவாஸுதீன் said...

பா.ரா. பின்றீங்க போங்க. அருமை

ஹேமா said...

டேய்...எங்கடா உன் உடுப்பெல்லாம்...!
ஆனாலும் அழகா இருக்கிறான்.

சத்ரியன் said...

//"பயமாகவும் இருக்கு"
என
வாயசைத்து
சிரிக்கிறான்.//

பா.ரா,

இப்படி பயப்படுபவர் எதுக்கு கண்ணாடிப் பக்கம் போறீங்க.

ஒவ்வொரு விசயத்தையும் மிகவும் உற்று கவனிக்கறீங்கன்னு நல்லா புரிஞ்சிடுத்து.

நல்லதொரு படிமம்.

velji said...

திரும்பவும் படிக்கத் தோன்றியது..இன்னொருமுறை கண்ணாடி முன் நிற்பது போல்!

அன்புடன் மலிக்கா said...

சூப்பர் கவிதையும் குழந்தையும்

இராகவன் நைஜிரியா said...

அருமை... உற்று நோக்கி எழுதும் திறமை அபாரம்.

க.பாலாசி said...

//முதுகில்
ரசம் பூசிய
பேசத்தெரியாத
சிரிச்ச பயல். //

நச் ன்னு இருக்கு தலைவரே....

நேசமித்ரன் said...

சிரிச்சு சிரிச்சு விக்கல்தான்யா வருது எப்புடி இப்புடி?!
ஆனா தொடர் இடுகை எழுத சொல்லிட்டு வேடிக்கை காட்டுறது நல்லா இல்ல ஆமா சொல்லிபுட்டேன்

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குண்ணா. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது

அன்புடன் நான் said...

அருமையான படபிடிப்பு.

//"என்ன நினைச்சுக்கிட்டு
இருக்க?"
என கோபமாகக்கூட
கேட்டுப் பார்க்கிறேன்.
சிரிசுக்கிட்டேதான்
நிற்கிறான்.//

இதுல‌ ஒரு த‌வ‌று"சிரிச்சுக்கிட்டே" என்று இருக்க‌ வெண்டும் பாரா.

Ashok D said...

ரைட்டு...

Radhakrishnan said...

ஹா ஹா! குழந்தை மனதை குதூகலமாக சொன்னவிதம் கலக்கல்.

பாலா said...

முன்னாடி பின்னாடி என்ன
இருந்துது .
முன்னாடி இருந்தது அது இப்போ இல்ல
--

கவிதாசிவகுமார் said...

'கொழுக், மொழுக்'---குழந்தை
'அபாரம், அருமை'---கவிதை.

மாதவராஜ் said...

யார்தான் இதனை ரசிக்க முடியாமல் போகும். அப்படி ஒரு கவிதை....!

சந்தான சங்கர் said...

கண்ணாடி ரசம்
மழலையில் வழிகிறது.

அருமை..

anujanya said...

புன்னகை தரும் கவிதை. இரணங்களை வருடவும் தெரியும்; வடுக்களைக் கீறவும் தெரியும். சூப்பர் ராஜா.

அனுஜன்யா

அ.மு.செய்யது said...

அனுஜன்யா சொன்னது போல உங்கள் எல்லா கவிதைகளும் புன்னகைக்க வைக்கின்றன.

ரௌத்ரன் said...

நல்லாருக்கு ராஜா சார்...

காமராஜ் said...

பாரா..... ஆஹா
ஹை க்ளாஸ் கவிதை,
மண்மனம் சுழன்றடிக்கிறது.
பிம்பங்களுக்குள்ளிருந்து
வெளியேற இயலவில்லை.

ஷங்கி said...

அருமை!!!

ஆ.ஞானசேகரன் said...

அழகான அசத்தல்

rvelkannan said...

கவிதையில் 'நகை''சுவை'
நல்ல இருக்கு பா.ரா.

துபாய் ராஜா said...

அருமையான வரிகள்.

அழகான படம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அந்தப் பேசத் தெரியாத சிரிச்ச பயல் ரொம்ப அழகாக இருக்கான். உங்கள் கவிதை அதில அடிபட்டுப் போயிடிச்சு.

ஹேமா said...

அண்ணா,இனிய மனம் நிறைந்த தீபஒளி வாழ்த்துக்கள்.
சித்தப்பாக்கும் கூட.

பிரவின்ஸ்கா said...

அருமை

பா.ராஜாராம் said...

@வசந்த்

தெய்வீக சிரிப்பையா உம் சிரிப்பு.நன்றியும் அன்பும் வசந்த்.

@ரசிகை

தலைப்பு கண்ணாடி என்று இருந்தால்,சரியாக இருக்கும் என்று இப்ப தோனுது ரசிகை.பையன் பொழைச்சுக்கிடான்.கவிதை போச்சு.நன்றி,மக்கா.தீபாவளி வாழ்த்துக்களும்.

@சென்ஷி

நன்றி சென்ஷி.அன்பு நிறைய மக்கா.

@சந்தன முல்லை

நன்றியும் அன்பும் முல்லை.

@நர்சிம்

நன்றி கிராமத்தான் நர்சிம்.அன்பு மக்கா.

@நவாசுதீன்

சாத்திரப்புக்கு,ஒரு கவிதையாவது நல்லா இல்லைன்னு சொல்லுங்க நவாஸ்.பிரியங்களை ஏந்த முடியாது இருக்கு.அன்பும் நன்றியும் மக்கா.

@ஹேமா

உதைக்கணும் அத்தை உங்களை.குளிக்கிற அறைக்குள் எட்டி பார்த்ததும் இல்லாம,உடுப்பு எங்கடா வேறயா?நன்றிடா ஹேமா.

@சத்ரியன்

வாங்க மாப்ள.சகோதரி,சாரல் நலமா?நெப்போலியன் ஒரு "கால்" பிடிச்சு வையும்.மருமகள் பார்ட்டிக்கு.நன்றி சத்ரியன்,(எ) முரளி.அன்பு மக்கா.

@வேல்ஜி

நன்றி மக்கா.அன்பும் கூட.

@மலிக்கா

வாங்க மலிக்கா.வேலைகள்.தளம் வரணும்.வர்றேன்.நன்றியும் அன்பும் மக்கா.

@இராகவன்

நன்றி அண்ணாச்சி.மிகுந்த சந்தோசம்.பூக்களின் புகைப்படத்தில் மனசு தொலைந்து போனது.அன்பு நிறைய அண்ணாச்சி.

@பாலாஜி.

ஆகட்டும் தலைவரே.கவிதைகள் பிரமாதமாக பண்ணுகிறீர்கள்.அன்பும் நன்றியும் மக்கா.

@நேசா

நன்றி,நேசா.நல்லா இருக்கியா மக்கா.ப்ரியத்தில்,காது பிடித்து திருக விரும்பும் ஆத்மா நீ நேசா.மிகுந்த பிரியமும் அன்பும் நேசா.

@கல்யாணி.

நன்றிடா கல்யாணி.கல்யாணி தந்த வாழ்த்தை வீடு சேர்த்தாச்சு.அன்பும் சந்தோஷமும்.

@யாத்ரா

நன்றி யாத்ரா.ரொம்ப நாளாச்சு எழுதுங்க மக்கா.அன்பு நிறைய.

@கருணா

நன்றி கருணா.உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் பயல்கள் மாத்திட்டார்கள் போல.அன்பு,மக்கா.

@அசோக்

ஒகே.நடக்கட்டும்.நன்றி அசோக்.

@raads

நல்வரவு மக்கா.நன்றியும் அன்பும்.

@பாலா

வாங்க மாப்ள.சோழ நாட்டு குசும்பா!நன்றியும் அன்பும் மாப்ள.

@உதிரா

தீபாவளி முடிந்ததா மக்கா.என்ன ஸ்பெசல்?அன்பும் நன்றியும்டா உதிரா.

@மாதவன்
நன்றி மாதவன்.அன்பு நிறைய மக்கா.

@அனு

நன்றி அனு.மிகுந்த சந்தோஷமும் அன்பும் மக்கா.

@செய்யது

ஆகட்டும் செய்யது.அன்பும் நன்றியும் மக்கா.

@ரவுத்திரன்

நன்றி ராஜேஷ்.அன்பும் மக்கா.

@காமராஜ்

நன்றி காமராஜ்.தளம் வரணும் மக்கா.தினம் ஒன்னு என உங்களுக்கும் மாதுக்கும் எப்படி வாய்க்குது என பெரிய பிரமிப்பு எனக்கு.அதிலும் மனசை குழைத்து எழுத.சந்தோசம் மக்கா,இயக்கம்.

@ஷங்கி

எனக்கும்,உங்களை பெரியண்ணா என கூப்பிட ஆசை ஷங்கி.ஜெகன்,சென்ஷி உதைப்பார்களோ என யோசனை.மிகுந்த நன்றி மக்கா.

பா.ராஜாராம் said...

@சேகர்

வாங்க சேகர்.ஊரில் யாவரும் நலமா?உங்கள் "நடமாட்டம்"பார்த்து சந்தோசமாக இருந்தது.வேலை பளுவில்,நிறைய இடங்கள் போக முடியாத குறைதான்.வரணும்.வருவேன்.நன்றி சேகர்.

@வேல்கண்ணா

சகோதரா,நலமா?தீபாவளியெல்லாம் எப்படி?அன்பும்,சந்தோஷமும்,நன்றியும் வேல்கண்ணா.

@துபாய் ராஜா

சுத்திஅடிச்சு வந்தாச்சா,ராஜா?கட்டுரைகள் வந்து வாசிக்கணும் மக்கா.வர்றேன்.நன்றி ராஜா.

@ஜெஸ்

வாங்க தோழி."உங்க கவிதை அதில் அடி பட்டு போய்விட்டது"வில் எவ்வளவு சந்தோசம்!ரமேஷ் கண்ணனை உதைக்கணும் ஜெஸ்.கவிதைக்கு ஒரு படம் போடுங்கடான்னா,கவிதைக்கு மேலாக ஒரு படத்தை போட்டு விட்டார்கள்.its lovely jes.படத்துக்கு நானே ஒரு பின்னூட்டம் போட தெரிஞ்சேன்.நன்றியும் அன்பும் ஜெஸ்.

@பிரவின்ஷ்கா

எங்க தல நீங்க?ரொம்ப தேடலாக இருக்கு உங்க கவிதை.எழுதுங்க மக்கா.நன்றியும் அன்பும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதுகில்ரசம் பூசியபேசத்தெரியாத சிரிச்ச பயல் //

இந்த வார்த்தைகளை படித்தவுடன் இதழோரம் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொள்கிறது :)

பா.ராஜாராம் said...

நன்றி அமித்தம்மா!