(picture by CC license, thanks bug-a-lug)
என்னிடம்
நாலு கனவுகள்
இருந்தது.
அவற்றை
குருவிக்கு தர
தீர்மானிக்கிறேன்.
குருவியை
தேர்ந்ததில்
மூன்று காரணங்கள்
இருந்தது.
ஒன்று,
குருவி
கனவை தா
என
கேட்க்காது.
இரண்டு,
தராவிட்டாலும்
ஏன் என
கேட்க்காது.
மூன்று,
குருவிதான்
கனவை கொறிக்காது
லபக்கென
விழுங்கும்.
நிராசைகளை
நான்
விழுங்குவது போல.
நாலு கனவுகள்
இருந்தது.
அவற்றை
குருவிக்கு தர
தீர்மானிக்கிறேன்.
குருவியை
தேர்ந்ததில்
மூன்று காரணங்கள்
இருந்தது.
ஒன்று,
குருவி
கனவை தா
என
கேட்க்காது.
இரண்டு,
தராவிட்டாலும்
ஏன் என
கேட்க்காது.
மூன்று,
குருவிதான்
கனவை கொறிக்காது
லபக்கென
விழுங்கும்.
நிராசைகளை
நான்
விழுங்குவது போல.
52 comments:
அழகான நெகிழ்வு.நெகிழ்வான உணர்வு.
பா.ரா நேரடித்தன்மை தரும் தலைப்பை மாற்றினால் இன்னும் பார்வை பெறும் கவிதை.
//
மூன்று,
குருவிதான்
கனவை கொறிக்காது
லபக்கென
விழுங்கும்
//
ஹிஹிஹிஹி
நான்கு கனவுகளைக்
குருவிக்குத் தரத் தீர்மானித்ததின்
மூன்று காரணங்களும்
வெகு அருமை:)!
உங்களின் இலகு மொழிதான் கவிதையை தூக்கிநிறுத்துவதே...................................
ஆஹா
நியாயமான சிந்தனை.மனிதனிடம் எதையும் பங்கிடுவதை விடுத்துப் பழகுவது நல்லது என்கிறீர்கள்.
நான் என் கனவொன்றை உங்களுக்கு தர தீர்மானித்துவிட்டேன்.
நண்பா...
மனிதர்களுக்கு குருவியே ஒரு அற்புதமான கனவுதான்.
கவித நன்று.
இந்த கவிதையை லபக்கென்று விழுங்கி விட வேண்டும் போலிருக்கிறது.
வழக்கம் போல கலக்கல் என்று சொல்லி வாய் சாரி கை வலித்து விட்டது.அட போங்க பாஸூ..
நிராசைகளை விழுங்கத்தான் வேண்டும்...
என்ன ஒரு அருமையான கவிதை...
அண்ணே சின்ன சின்னதா சொன்னாலும்
ஊசியேத்துற மாதிரி மனசுல பதிஞ்சு போச்சு....
ரசிகனாஉங்களைஉங்கள் கனவுகளை ஒரு நடிகனா குருவிய( விஜய குருவியா நினைச்சு நான் படிச்சேன் )நினைச்சுப்படிங்கப்பு புரியும் இது பாலிகான் வித்தை
அதாங்க பன்முகத்தன்மையில ஒரு கோணத்துல நினைச்சுப்படிச்சது
ராஜாண்ணே உங்க கவிதை அன்னிக்கு தப்பா சொல்லிட்டேன் அதுக்கப்புறம் நம்ம மாப்பி பாலா சொல்லிக்குடுத்தான்
இப்போ 1வது பாஸாயிட்டேன்னு நினைக்கிறேன் இன்னும் இதேமாதிரி எழுதுங்க நான் பட்டம் வாங்குற வரைக்கும்...ஹ ஹ ஹா
அருமை...
கனவை குருவி விழுங்க , நிராசைகளை நீங்கள் விழுங்குகிறீர்களா? ம்ம் ..நன்றாகத் தான் இருக்கிறது. பாவம் அந்தக் குருவி . கேள்வி கேட்காதென்பதால் அதற்குத் தண்டனையா..?
//
குருவிதான்
கனவை கொறிக்காது
லபக்கென
விழுங்கும்.
//
மிக அழகு....
குருவி இனி உங்களின் நிராசைகளை விழுங்கட்டும். உங்களின் கனவுகளும் ஆசைகளும் இனி நிச்சயம் நிறைவேறும்.
கவிதை நன்றாக இருக்கிறது ராஜாராம்,
ஏற்கனவே நான் கூறியது போல வரிகளை அமைப்பதில் மாற்றியிருக்கலாம்.
- பொன்.வாசுதேவன்
வாழ்த்துகள் திரு பா. ரா
ராஜாராம், நல்லா இருக்கு கவிதை.
//நிராசைகளை
நான்
விழுங்குவது போல.//
அருமை பா. ரா
வழக்கம்போல் அதே அதே அண்ணே!!
நான்காவதாக ஒரு காரணம்...
நகரங்களில்
குருவிகள்
இல்லாதது!!
ஒரு தடவையாவது, நல்லா இல்லேன்னாலும் பரவாயில்லை, சுமாராவாவது எழுதுங்க.
இப்படியே எழுதிகிட்டு இருந்தா சூப்பர்னு சொல்லாம வேற எப்படி ராஜா சொல்ல முடியும். எல்லாத்தையும் பாமரன் வாயால பளிச்சுன்னு சொல்லிப்புடுறீரு.
உங்களின் வரிகளை போலவே நானும் பல சமயங்களில் நிராசையை விழுங்கியதுண்டு. அருமையா இருக்குண்ணா.
ராமலக்ஷ்மி said...
நான்கு கனவுகளைக்
குருவிக்குத் தரத் தீர்மானித்ததின்
மூன்று காரணங்களும்
வெகு அருமை:)!
வழிமொழிகிறேன்
ஓயின் இன்னும் கொஞ்சம் ஊறி இருக்கலாமோ
என்றுத் தோன்றினாலும் நன்றாக இருக்கிறது கவிதை
நல்லதொர் ஓடை
நிராசைகளை விழுங்கிக்கொண்டு...
கனவுகளைப் போலவே, இன்று குருவிகளையும் காணவில்லை.
பா..ரா...
குருவியை எனோ ஒப்பவில்லை..
பதிலாக பாம்பை பொருந்திப்பார்த்துக்கொண்டேன்.
தலைப்பினை ஒளித்துவைக்கவேண்டியது சிறிதளவு சுவாரஸ்யம் கூட்டக்கூடுமல்லவா?
@ராஜா சந்திரசேகர்
நன்றி சந்திரா.ஆகட்டும் மக்கா.அவசியம் முயற்சி செய்கிறேன்.மேலான அன்புக்கு நன்றியும் அன்பும் சந்திரா.
@தியா
என்ன தியா,ஆளை காணோம்?வேலைகளா?நன்றியும் அன்பும் தியா.
@ராமலக்ஷ்மி
சந்தோசம்,ராமலக்ஷ்மி.தொடர் வாசிப்பு மிகுந்த உற்சாகம்.அன்பு நிறைய.
@பாலா
நன்றி மாப்ள.வந்தாச்சா ஊருக்கு?அன்பும் கூட,பாலா.
@நந்தா
நந்தா,நல்லா இருக்கீங்களா?நன்றி மக்கா!
@ஹேமா
ஏண்டா ஹேமா?கனவு,நிராசைகளை பகிர குருவி போதும் என ஒரு பார்வை.அவ்வளவுதான்,சகோதரி.!மனிதம் பார்க்க,தேட,அடைய இந்த ஜென்மம் போதாது கண்ணம்மா!நன்றிடா.
@வேல்ஜி
நானும் வாங்க தீர்மானித்துவிட்டேன்.உங்கள் குருவியாய் இருந்து.நன்றி மக்கா.
@மாதவன்
வாவ்!அப்படி போடுங்கள் மாதவன்!பார்த்தீங்களாடா ஹேமா?நன்றியும் அன்பும் மக்கா.
@செய்யது
ரொம்ப நன்றி செய்யது.உங்கள், நவாஸ்,பாலா பின்னூட்டம் இல்லை எனில் ஒரு குறைதான். நெகிழ்வாய் உணர்கிறேன் செய்யது.நன்றியும் அன்பும் மக்கா.
@இராகவன் அண்ணாச்சி
நன்றி அண்ணாச்சி.மிகுந்த உற்சாகம் எனக்கு.வர தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வருகிறீர்கள் இல்லையா?அன்பும் நன்றியும் அண்ணாச்சி.
@வசந்த்
எதுவும் தப்பா சொல்லலை வசந்த்.அன்புள்ள மக்களிடம் மட்டுமே உரிமையும் கூடுதலாகிறது.உங்கள் உரிமை சந்தோசமாக,நெருக்கமாகத்தான் இருந்தது.மனிதர்களை விட கவிதைகள் பெரிசில்லைதானே வசந்த்.பழக்கத்தில் கைகூடுவதுதான் இது வசந்த்.நேசன்,அனு,நந்தா,பாலா கவிதைகள் புரிந்ததும் ஒரு விசில் வரும் பாருங்கள்...அழகான பெண் பார்த்ததும் மனசடிக்கிற விசில் மாதிரி அது.(என் மகள்ட்ட சொல்லிராதீங்க)அன்பை உணர்ந்து வருகிறீர்களே இதற்க்கு மேலா கவிதை?நன்றி வசந்த்!
@சரவணா
அருமையான,நெருக்கமான எழுத்து உங்களது சரவணா.சிறுகதை எதிர் பார்க்கிறேன் உங்களிடமிருந்து.அன்பு நிறைய மக்கா.
@ஜெஸ்
ஐயையோ...இப்படி வர்ரிங்களா நீங்க.புளுகிராஸ் ஜெஸ்!
சந்தோஷமும்,நன்றியும் ஜெஸ்.
@சேகர்
நன்றி சேகர்.தொடர் வருகையும் உற்சாகமும்...அன்பு நிறைய நண்பா!
@உதிரா
ஆகா!நீயல்லவோ மகள்.நன்றியும் அன்பும்டா கவிதும்மா.
@அகநாழிகை
நன்றி வாசு.இன்னும் அந்த format பிடிபட மாட்டேங்குது.அடுத்த கவிதையில் இருந்து நீங்கள் சொல்வது போல format பண்ணலாம்-உங்களுக்கு சிரமம் இல்லை எனில்.மின் மடலில் பேசலாம்.அன்பு நிறைய வாசு.
படித்து முடித்ததும் சிட்டுக்குருவி போல சிட்டாக பறந்தது மனசு...
சின்ன சின்ன வார்த்தைகளில் நிறைய அர்த்தங்களை தருகிறீர்கள்
வாழ்த்துக்கள்
விஜய்
ரொம்பப் பிடிச்சிருக்குங்க கவிதை.
நான்கு கனவுகள்
மூன்று காரணங்கள்
இரண்டு வரிகளாய்
ஒற்றை பதிப்பாய்...
சிட்டுப்போல் மெட்டெடுத்து...
கவிதை நல்லா இருக்குங்க பா.ராஜாராம்
//மூன்று,
குருவிதான்
கனவை கொறிக்காது
லபக்கென
விழுங்கும்.//
சரிதான். உங்களின் கவிதை நன்றாக உள்ளது சிந்தனையுடன்.
நம்ம பக்கம் வரதே இல்லை
விஜய்
நிராசைகளை விழுங்காத மனிதருண்டா???
@ராஜன்
வரணும் ராஜன்.உங்கள் கவிதைகள் ரொம்ப பிடிச்சுருக்கு ராஜன்.ஆசுவாசமாய் வரணும்.நன்றியும் அன்பும் ராஜன்.
@சுந்தரா
நன்றி மக்கா.அன்புடா.
@வேல்கண்ணா
ஆகட்டும் வேல்கண்ணன்.நன்றியும் அன்பும்.
@சபிக்ஸ்
கொஞ்சம் வேலைகள் சபிக்ஸ்.தளம் வரணும்.வர்றேன் சீக்கிரம். நன்றி மக்கா.
@இன்றைய கவிதை
வாங்க கேயார்,சுந்தர்,ப்ரபா,ஜேகே!பின்னூட்டம் கொஞ்சம் புரியலை.அதனால் என்ன,எல்லா அன்பும் புரியனுமா என்ன?நிறைய அன்பும் நன்றியும் நால்வருக்கும்.
@நவாஸ்
ஆகட்டும் அழகான சிரிப்புக்காரரே!நன்றி மக்கா..உண்மையில் ரொம்ப சந்தோசமாய்,உற்சாகமாய் இருக்கு.அன்பு நவாஸ்.
@கல்யாணி
வேலைதாண்டா கல்யாணி.வேறெதுவும் இல்லை.இது என் வேலையின் இயல்பு.எப்பவும் தொடர்ந்து எழுதிகொண்டிருங்கள்.எப்ப நேரம் கிடைத்தாலும் அண்ணா கண்டிப்பா வருவான்.வீட்டில் எல்லோருக்கும் அன்பை சொல்லுங்கள் கல்யாணி..மிகுந்த
நன்றி கல்யாணி.
@அமித்தம்மா
வாங்க அமித்தம்மா.நீங்கள் சொன்ன "மஹா அப்பா" ரொம்ப பிடிச்சு இருந்தது.மொத்த மொத்தமா நன்றி சொன்னதில் இதை சொல்ல விட்டு போச்சு.சிவகங்கையில்,என் தெருவில்,என்னை அழைப்பது போல ஞாபகமாய் உணர்ந்தேன்.நன்றி அமித்தம்மா!அன்பும் கூட.
@நேசா
நல்லா இல்லைன்னு சொல்லேன்.நீ சொல்லாமல் யார் சொல்வது ராஸ்க்கல்!ஒயின்ஸ்!ரொம்ப நெருக்கமான வார்த்தை!ஒரு கவிதைக்கினையான..நன்றியும் அன்பும் மக்கா.
@அசோக்
வாங்க தல.அப்படியா?ரொம்பவும் சந்தோசம் அசோக்.நன்றி மக்கா.
@வீரா
வீரா!உள் குத்தா?...சரி,கோபிக்காதீங்க வந்துட்டா போச்சு!வேலை வீரா.வேறு காரணங்கள் இல்லை-மனசறிஞ்சு.எப்படியோ,நன்றியும் அன்பும் வீரா.
@கும்க்கி
வரணும் நண்பா.ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்திருக்கீங்க!எவ்வளவு அருமையாய் கவிதையை,குருவியை பார்க்கிறீர்கள்!ஆகட்டும் கும்க்கி நண்பர் சந்திரா கூட இதையே அபிப்ராய பட்டார்.செஞ்சிரலாம்.செஞ்சிட்டா போச்சு.நன்றி மக்கா.அன்பு நிறைய.
@விஜய்
ஆகட்டும் விஜய்.ரொம்ப சந்தோசம்.நன்றியும் கூட.
@யாத்ரா
நன்றி யாத்ரா.அன்பு நிறைய மக்கா.
@சங்கர்
வாங்க சங்கர்.நன்றி மக்கா.அன்பும்!
@லாவண்யா
நல்லா இருக்கீங்களா லாவண்யா?நன்றி மக்கா.
@பாலாஜி
நன்றி பாலாஜி.அன்பும் கூட!
@அருணா
அதானே!..நன்றி அருணா.தொடர் வருகை உற்சாகம்!
kadaisi varaikkum kanavu yennannu sollave illaye...:)
kuruvittaiyaavathu solleetteengalaa?
kavithai arumai:)
kadaisi varaikkum kanavu yennannu sollave illaye...:)
kuruvittaiyaavathu solleetteengalaa?
kavithai arumai:)
m....yenakku oru joke ngabakam varuthu sir...
kuruvi (vijay)padam vantha puthusil net-il kuruvi stills nu pottu varumaam...
vijay stils yaethir paaththu open seithaal...niraya kuruvinga(paravai)padam vithavithamaa irukkumaam.(appollaam yenakku net theriyaathu)
(ithai naan yenga veettil sonna oru payalum sirikka maattukkaanga..yenbathu varuththaththirkuriya seithi)
//நிராசைகளை
நான்
விழுங்குவது போல.//
பா.ரா,
சிறந்த ஒப்பீடு.!
ரொம்ப அற்புதமா வந்திருக்கு!
குருவின்னு நினைத்து எறிஞ்சா கழுகா மாறிடுதே சில நேரங்களில்...
அருமை.
நானும் குருவிகளைத் தேடிப்போகிறேன். :-) அருமை
அன்பு பாரா,
அருமையா இருந்துச்சு, மக்கா! உங்க பாஷையிலேயே!
வாழ்த்துக்கள்!
ராகவன்
@ரசிகை
பார்த்தீங்களா...கனவு என்னன்னு கேக்குறீங்க!அதுனாலதான் குருவி!
வருந்த வேண்டாம் ரசிகை..வீட்டுக்காரங்களுக்கு என்ன தெரியும்!..நீங்க சொல்லுங்க ரசிகை நான் கேக்குறேன்...என்னவோ,ஜோக் சொல்லுறேன்னு சொன்னீங்களே,ரசிகை...:-))
@சத்ரியன்
நன்றி சம்பந்தி!காதல் கவிதையெல்லாம் தூள் பறக்குது தளத்துல?பசலை..அப்படித்தான் இருக்கும்!அன்பு நிறைய மக்கா..
@ஷங்கி
நன்றியும் அன்பும் என் பெரியண்ணா!...(நன்றி,சென்ஷி ஜெகா!)
@நர்சிம்
கழுகுக்கு எறிகிறேன் கனவைன்னு கவிதையை மாத்திரவேண்டியதுதான் நர்சிம்!நன்றி நர்சிம்.
@உழவன்
தேடவேண்டாம் உழவரே..உங்க பெயரில் இருக்கு மண்வாசனை நிரம்பிய குருவிகள்!நன்றியும் அன்பும் மக்கா!
@ராகவன்
ரொம்ப நன்றி மக்கா...தன்யனானேன்.!
அழகா இருக்கு பா.ரா...
குருவியாய் இருப்பதிலும் சில சௌகரியங்கள்...உங்கள் கனவுகளைக் கவ்விக்கொள்ளலாமே ;)
-ப்ரியமுடன்
சேரல்
அன்பின் ராஜாராம்
குருவியை வைத்து ஒரு நல்ல கவிதை - வாழ்க
நல்வாழ்த்துகள்
Post a Comment