(picture by cc licence, thanks RubensLP)
அச்சசல் அண்ணன்
மாதிரி இருந்ததால்
மறைத்துக்கொள்கிறேன்
புகையும் சிகரெட்டை
கைகளுக்குள்.
அவரும் புன்னகைத்து
கடந்து போகிறார்.
அண்ணனா
அண்ணன் மாதிரியா
என்கிற
கேள்வி மறைந்து
புன்னகையா
புன்னகை மாதிரியா
என்கிற கேள்வியில்
புகைந்து கொண்டிருந்தேன்.
சிகரெட் மாதிரி.
45 comments:
கவிதை அருமை இராஜாராம்.
- பொன்.வாசுதேவன்
படம் எங்க புடிக்கறீங்க தல..கவிதையோடு அதுவும் அருமை
கைகளுக்குள்
மறைத்த சிகரெட்
கசிந்ததுபோல்,
அகப்பட்ட
பார்வையில் அசடு
வழிந்தது..
அருமை பா.ரா
நீங்கள் விடும் புகை மனசில் நிறைந்து தலை சுற்ற வைக்கிறது.அப்புறம் எனக்கும் புகைக்க ஆசை வருகிறது.உங்களைப்போல் அழகழகான வளையங்கள் விடவும்தான் ஆசை.
இயல்பா இருக்கு பா ரா ...
வாழ்த்துகள்
அண்ணனும் புகை பிடித்து விட்டு இருப்பார் என்று நினைக்கிறன் ................கவிதை பல வாறு யோசிக்க சொல்கிறது அருமைA
வாய் நழுவி போகும் புகை
சொல்லி செல்லும் கவிதை.
(ஐயா, கவிதை சூப்பருங்கைய்யா, நிறைய அன்பு மக்கா)
கவிதை நல்ல இருக்கு பா. ரா.
உங்களின் சொந்த அனுபவம் என்றால்
புகை பிடிப்பதை குறைத்து கொள்ளவும்
(முடிந்தால் நிறுத்திவிடுங்கள்)
யதார்த்தமான கவிதை. புகைத்தல் அருமை.
பிரபாகர்.
///அண்ணனா
அண்ணன் மாதிரியா
என்கிற
கேள்வி மறைந்து
புன்னகையா
புன்னகை மாதிரியா
என்கிற கேள்வியில்
புகைந்து கொண்டிருந்தேன்.
சிகரெட் மாதிர//
நச்!!!!
:-) நல்லாருக்கு! நேத்துக்கூட நான் ஒரு அம்மணியை பார்த்து சிரிக்கலாமா வேணாமான்னு யோசிச்சு 'சிரிச்ச மாதிரி' செஞ்சது நினைவுக்கு வருது....ஆனா என் கையிலே சிகரெட் இல்லை!
அன்பு பாரா,
என்ன கங்கனம் கட்டி கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள், தினம் ஒரு திருக்குறள்னு பாப்பையா போல, தினம் ஒரு தெருக்குரல், பாரா உங்கள் கவிதைகள். உலகத்தையே, உறவுகளையே, மனிதர்களையே (உறவுகளும் மனிதர்களும் வெவ்வேறா என்ன?) ஒரு பெரும் வாசகசாலையாய், பாடசாலையாய் மாற்றி, குளிர் வேப்ப மர நிழலாய் படர்த்துகிறது உங்கள் கவிதைப்பாடங்கள். வாத்யாரே! கற்றுக்கொடுமையா! கையில் ஏதும் இல்லாமல், கிழிந்த டவுசரில் வித்வத்திற்கு ஏங்கி நிற்கும் ஒரு ஏழை மாணவன் ராகவன்!
அழகின் உயர்வு நவிற்சியாய் தெறிக்கிறது உங்கள் கவிதைகள். உங்களின் பழைய கவிதைகளை படித்து, அடித்து ஆற்றுப்படுகை கூழாங்கல்லாய் தினமும் மெருகேறுகிறது என் கவிதைகளும். பாவில் உட்புகுந்த வேறு வர்ணக்கலவை நூலாய் பாடாய் படுத்துகிறது உங்கள் கட்டுமாணங்களில் நெசவு ஒரு புதிய அழகுடன்.
என்ன சொல்வது, உறவுகள் உய்ய வந்த பெருமாளே, உனக்கு லட்சார்ச்சனை தினமும்.
அன்புடன்
ராகவன்
கவிதை நல்லாயிருக்கு ராஜாராம்.
மிகப் பிடித்திருந்தது சார்.
புன்னகைக்க வைத்தது உங்கள் கவிதை...!!! அட !!
அந்த புன்னகையின் அர்த்தங்களை நினைத்து ரசித்து சிரித்தேன் அண்ணா!!
intha kavithaiyum nallaayirukku....
rajaram sir..!!
unkalin pinnoottam yenakku kidaiththathu.
naan athan padi nadakkuren...
pinnoottaththileye pathil solluren.
ok thaane...:)
//velkannan said...
கவிதை நல்ல இருக்கு பா. ரா.
உங்களின் சொந்த அனுபவம் என்றால்
புகை பிடிப்பதை குறைத்து கொள்ளவும்
(முடிந்தால் நிறுத்திவிடுங்கள்)//
அதேதான் நான் சொல்ல வந்தேன் மக்கா. உங்கள் கவிதைகளுக்குள் நீங்கள் இருப்பதை நான் உணர்கிறேன்.
மெலிதாய் வருடும் கவிதை
அய்யோ! என்ன மக்கா இதெல்லாம். பேசாம ஜித்தாஹ்ல வந்து என்கூட இருங்கய்யா. நான் பார்த்துக்கிறேன்.
உள்மன உணர்வுகளை சாதாரண வரிகளில் சிகரெட் சாம்பலைத் தட்டுற மாதிரி அசால்ட்டா தட்டிவிட்டுட்டு போறீங்க.
அண்ணா வர வர அருமையா இயல்பா எழுதுறீங்க.
புகைக்குள்ளும்
புன்னகை கண்டார் பா.ரா.
புன்னகை புகை
அழகு
விஜய்
இயல்பான கவிதை. மிக அருமை பா.ரா அண்ணா..
எங்கயிருந்துய்யா புடிக்கிறீங்க.. அருமை :-)
ரொம்ப ரொம்ப புடிச்சிருந்தது இந்தக் கவிதை :)
யம்மாடி . . .
சின்னச் சின்ன வார்த்தைகளில்
பெரிய பெரிய எண்ணங்களை
வரவழைத்துவிட்டீர்கள்!
அருமை!! அருமை!!
இங்கே (www.amirdhavarshini.blogspot.com) உங்களுக்கு ஒரு அழைப்பு.
கவிதை அருமையாய் இருக்கிறது சார்.
//புன்னகையா
புன்னகை மாதிரியா//
இது புரிவதே இல்லை பெரும்பாலும்:))! அருமைங்க!
செய்யும் தவறை மறைக்கும் பயத்தையும், 'அண்ணனா, அண்ணன் மாதிரியா, புன்னகையா, புன்னகை மாதிரியா' என்று குழம்பித் தவிக்கும் தவிப்பையும் யதார்த்த வரிகளில் தருவித்திருப்பது மிகவும் அருமை.
அண்ணே எளிய சிறப்பான அர்த்தம் பொதிந்த கவிதை...
சிறப்பான கவிதை...
படிக்கத்தந்தமைக்கு மிக்க நன்றி..
புகைத்தலை நியாயப்படுமாறு தொனிப்பதை தவிர்த்திருக்கலாமோ.. :)
http://kaaranam1000.blogspot.com
அருமை இராஜாராம்
நிறய்யத்தாமதமக வந்துவிட்டேன். என்னசொன்னாலும் கூறியது கூறல் ஆகிவிடும். அதனாலென்ன ஆயிரம் தரம் பகிர்ந்து கொள்ளலாம் அன்பு சலிக்காது.
பாரா அந்த சிகரெட் புகை உட்கார்ந்து வியாக்யானப்படுகிறதே அன்பினாலன்றோ. இறுகப்பற்றிக்கொள்ளத்தோன்றுகிறது கொடுங்கள் கையை.
தவற விட்ட கணத்தை நினைவில் வைத்திருக்கும் குழந்தைகளின் வார்த்தைகள் வாய்த்திருக்கிறது பா.ரா
அயிரை மீன்கள் பாதங்களை முத்தமிட்டு பித்த விரிவுகளில் அழுக்குத்தின்னும் சுகத்தோடு மாட்டின் பிட்டிசாணம் தேய்த்து கிடக்கும் ஆற்றங்கரையில் சும்மாடு பாரத்திற்கு முட்டுக் கொடுத்த கைகளை இறக்கி மாராப்பு சரி செய்தபடி ரயிலு எங்க போகுது மைனரே....! என்று கேட்கும் குரலுக்கு மறையும் கணேஷ் பீடி நினைவுக்கு வந்து நிற்கிறது .அன்பு நிறைய மக்கா
இந்த பின்னூட்டத்தின் எண்ணிக்கைக்கும் மேற்கண்ட வரிகளுக்கும் தொடர்பில்லை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் பா.ரா
;)
@அகநாழிகை
நன்றி வாசு!
@தண்டோரா
நம்ம ரமேஷ்,கண்ணன் வேலைதான்!நன்றி மக்கா!
@சங்கர்
ஆமாம் சங்கர்.நன்றி மக்கா!
@வேல்ஜி
தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போகட்டும் வேல்ஜி!இந்த கருமாந்திரம் என்னோட போகட்டும்.நன்றி மக்கா!
@ராஜன்
ரொம்ப நன்றி ராஜன்!
@வெண்ணிற இரவுகள்
இல்லை மக்கா.இந்த அனுபவம் காளியப்பன் அண்ணனை போல் ஒருவரிடம் கிடைக்க பெற்றேன்.அண்ணன் புகைப்பதில்லை.அண்ணனாய் இருக்க அத்தனை தகுதியும் உள்ளவர்.தம்பிக்குத்தான் அண்ணனாகும் தகுதி நிறைய மிஸ்சிங்!நன்றி மக்கா!
@அசோக்
நன்றி அசோகா!கவிதை!!! :-)
@வேல்கண்ணன்
அனுபவம்தான் கண்ணா.முயற்சிக்கிறேன்.அன்புக்கு நன்றி என் சகோதரா!
@பிரபாகர்
கவிதை அருமை என எடுத்து கொள்கிறேன்.புகைத்தல் பாடாவதி தேவை.,ப்ரபா.நன்றி மக்கா!
@தமிழ் நாடன்
நன்றி மக்கா!
@சந்தனமுல்லை
//ஆனால் என் கையில் சிகரெட் இல்லை..//:-))
பப்புட்ட சொல்லி தாரேன்.நன்றி மக்கா!
@ராகவன்
உண்மையில் உங்கள் அன்பு தாங்க இயலாததாய் இருக்கு ராகவன்.குரலில் கசியும் பிரியத்தை அப்படியே எழுத்திலும் தருகிறீர்கள்.தவமாய் தவமிருந்து கிடைக்கிறது,சில நட்பு! நன்றி ஆண்டவா...நன்றி ராகவன்!
சரி தலைப்பு ஏன் இப்படி?
மரியாதைக்கு மறைப்பும்
மறைப்புக்கு புன்னகையும்...
என்னவோ போங்க.
பெரிய கொடுமைதான் இது ராஜாராம். சிகரெட்டை விட்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு கவிதை தாங்கள் எழுதி இருக்கக் கூடாதுதான்.
இப்படி எத்தனை நினைவுகள் சிகரெட் புகைக்குள் இருக்கின்றன!
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.
:-) nice
@சுந்தர்
நன்றி சுந்தரா!
@நர்சிம்
நன்றி நர்சிம்!
@செய்யது
நன்றி செய்யது!
@சபிக்ஸ்
ஆகட்டும் சபிக்ஸ்.நன்றி மக்கா!
@ரசிகை
நல்லது ரசிகை.செய்ங்க!நன்றி ரசிகை!
@ஜெஸ்
ஆகட்டும் மக்கா...முயற்சிக்கிறேன்.அக்கறை நிறைந்த அன்புக்கு நெகிழ்வான நன்றி,ஜெஸ்,வேல்கண்ணா!
@கதிர்
நன்றி கதிர்!
@நவாஸ்
மொட்டை மாடியில்,தலை உரசி போகும் விமானம் பார்த்தபடி நாம் புகைவண்டி விடலாம்தான் நவாஸ்!..சந்தோசமா,நெகிழ்வாய் இருக்கு நவாஸ்.ஏற்கனவே நீங்கள் தாங்கி கொண்டிருக்கிற அன்பு சுமை போதாதா?நான் வேறா..உங்கள் மனசறிவேன் நவாஸ்.அங்குதான் நான் எப்பவும் இருக்கேன்.நன்றி மக்கா...கண்கள் பணித்தது.
@ஹேமா
நன்றிடா ஹேமா!
@விஜய்
நன்றி விஜய்!குழந்தை நலமா?
@சரவணா
நன்றி சரவணா!
@உழவன்
ரொம்ப நன்றி உழவரே.மகிழ்ச்சி!
@அமித்தம்மா
அப்பாடி!.. நன்றி அமித்தம்மா.சீக்கிரம் எழுதுறேன்...
@செல்வகுமார்
நல்வரவு செல்வா.மிக்க நன்றி!
@எவனோ ஒருவன்
ரொம்ப நன்றி தோழா!
@ராமலக்ஷ்மி
உங்களுக்குமா?...:-)
நன்றிங்க ராமலக்ஷ்மி!
@உதிரா
நன்றியும் அன்பும் கவிதும்மா!
@வசந்த்
இந்த "எளிய" உங்களுக்காகத்தான் வசந்த்!..நன்றி வசந்த்!
@காரணம் ஆயிரம்
நல்வரவு மக்கா!கண்டிப்பாக நியாயம் இல்லை...ஆனால் அப்படி தொனிக்கிறதா,கவிதையில் என புரியலை,தொனித்தால் மன்னியுங்கள்,மக்களே!உணர்த்துதலுக்கு மிக்க நன்றி நண்பா!
@விநாயகம்
நன்றி விநாயகம்!
@காமராஜ்
வருகிறீர்களே..இது போதும் காமராஜ்!எப்பவோ பற்றிக்கொண்டேன் உங்கள் கைகளை காமராஜ்.நன்றியும் அன்பும் மக்கா!
@நேசன்
//அயிரை மீன்கள் பாதங்களை முத்தமிட்டு பித்த விரிவுகளில் அழுக்குத்தின்னும் சுகத்தோடு மாட்டின் பிட்டிசாணம் தேய்த்து கிடக்கும் ஆற்றங்கரையில் சும்மாடு பாரத்திற்கு முட்டுக் கொடுத்த கைகளை இறக்கி மாராப்பு சரி செய்தபடி ரயிலு எங்க போகுது மைனரே....!//
இதுதான் நீ நேசா!...நன்றிடா மக்கா!
@உயிரோடை
"இது ஒரு காரியம்,இதுக்கு ஒரு கவிதை,இதுக்கு ஒரு தலைப்பு"...என்பாதாக சிரித்துகொள்கிறேன் லாவண்யா உங்களின்,இந்த "என்னவோ போங்க"ளில்!அருமையான என்னவோ போங்கள்!..நன்றி சகா!
@மாதவன்
கரை ஒதுங்கிட்டீங்களா?...வாழ்த்துக்கள் தோழா!..(பேச்சு கா!)திரும்பி பார்க்க வேணாம் மாதவன்.."காட்டில்"இருந்து திரும்பும் போது.நன்றி மாதவன்!
@சந்துரு
நல்வரவு சந்துரு.நன்றி மக்கா!
@மண்குதிரை
நன்றி மண்குதிரை!
இங்கே நிறைய பேர் தங்களது கருத்துக்களை புகையாய் பரவவிட்டுள்ளனர், அதனால் எனது பின்னூட்டும் சிகரெட் அடியில் இருக்கும் பஞ்சாக இருக்கட்டும்.
//அண்ணனா
அண்ணன் மாதிரியா
என்கிற
கேள்வி மறைந்து
புன்னகையா
புன்னகை மாதிரியா
என்கிற கேள்வியில்
புகைந்து கொண்டிருந்தேன்.//
அருமை!!
///அச்சசல் அண்ணன்
மாதிரி இருந்ததால்
மறைத்துக்கொள்கிறேன்
புகையும் சிகரெட்டை
கைகளுக்குள்.//
பா.ரா,
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் "பேய்"-.ன்ற மாதிரி.
ம்ம்ம்ம்.....கொஞ்சம் ரசிச்சேன்.
@பாலாஜி
ஆஹா...இருக்கட்டுமே!நன்றி பாலாஜி!
@இன்றைய கவிதை
நன்றி jk,சந்தர்,ப்ரபா,கேயார்!
@சத்ரியன்
மிக்க நன்றி மாப்ள!
Post a Comment