பேருந்தின் ஜன்னல் இருக்கை
எனக்கு.
எப்பவும்போல்
ரயில்வே கேட் பூட்டி.
வந்தணைகிற
லாரியில்
நின்று கொண்டிருக்கிறாள்..
வெட்கத்தை
மூக்குத்தியில் ஒளித்த
புதுமணப்
பெண்ணொருத்தி.
பிடித்துப்போய்
மகாலக்ஷ்மி
என பெயரிடுகிறேன்.
மகள் அழைக்காத
அப்பாவை
அப்பாவை
பாவமென
ரயில் கூவி நிரப்புகிறது
ரயில் கூவி நிரப்புகிறது
ப்பாஆஆஆ...
பப்.
ப்பாஆஆஆ ...
பப்.
ப்பாஆஆஆ ...
38 comments:
இக்கவிதை வடிவமைப்பிற்கு உதவிய நண்பர்,ஆசிரியர். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு மிகுந்த நன்றியும் அன்பும்.
சாதாரண நிகழ்வை என்னமாய் கவிதையாக்கியிருக்கிறீர்கள்? அருமை.
பிரபாகர்.
கவிதை அழகு....
அழகான கவிதை!
பேருந்தின் ஜன்னலோரங்கள் எப்போதும் சுவாரசியமானவை. முகத்தில் அறையும் காற்றும், கண் முன்னால் விரையும் காட்சிகளும் ஒவ்வொரு பயணத்தின் போதும் நான் தவற விடுவதில்லை.
ரசித்து மகிழ்ந்தேன்!
ரொம்ப நல்லா இருக்குங்க பா ரா .....
அன்புடன் -
ராஜன்
பிடித்துப்போய்
மகாலக்ஷ்மி
என பெயரிடுகிறேன்.
மகள் அழைக்காத
அப்பாவை
பாவமென
ரயில் கூவி நிரப்புகிறது
ப்பாஆஆஆ...
பப்.
ப்பாஆஆஆ ...
மூடிய கேட்டிலும்
திறந்தது
பாசம்...
மிக அருமை
பா.ரா
ஒரு பாடல்
எழுதியிருக்கின்றேன்
வந்து பாடிட்டு இல்ல
சாடிட்டு போங்க..
கலங்க வைத்த கலக்கல் கவிதை!
அன்பு பாரா,
மகளின் பிறந்த நாளுக்காய்
பரிசாய்
இரண்டு மரக்கன்றுகளை
கொடுக்கிறேன்
பாலிதீன் பைகளில்
கன்றாய் அடங்கியிருக்கும்
ஒரு வீர்ய விருட்சம்
குறியீடாய் நிமிர்கிறது
எதற்கு
இதக்குடுத்த!
இத நா எங்க
நட்டு வளப்பேன்
கேள்வியில்
ஒடுங்குகிறது
பரிதாபமாய்
அதன் வேர்கள்
வாசலைக்காட்டுகிறேன்
சாலையின் ஓரத்தில் நடு
நீர் வார், காபந்து செய்
வருங்காலத்திற்காய்
நிழற்குடை
கனிதரா மரங்களும்
உயிர் தரும்
உன் அப்பாவைப் போல
கைபிடித்து அழும்
மகளை புரியுதா எனக்கு?
உங்கள் கவிதை படித்ததும் எனக்கு அழுகை வருகிறது பாரா.
அன்புடன்
ராகவன்
:0 சூப்பர்ங்க. பேருந்துப் பயணம் எனக்கு எப்போதும் பிடித்தமானது. எத்தனை வாழ்க்கை அதற்குள்.
:) ரொம்ப பிடித்ததுங்க.
-வித்யா
nice ..........
ரசித்தேன்..தேன்.
ரயில் சென்று மறைந்த கணத்தில்
எதேச்சையாக எனைப்பார்க்கிறாள்
வெட்கம் சடுதியில் மாறி
கண்கள் கலங்குகின்றன
புரிந்துவிட்டது
விட்டுபிரிந்த தகப்பனின் நியாபகத்தை
என் கோலம் கிளறியிருக்கும்
காட்சியேன் மங்குகிறது
என் கண்களும்....
கவிதை அழகோ அழகு!
//வெட்கத்தை
மூக்குத்தியில் ஒளித்த
புதுமணப்
பெண்ணொருத்தி.//
வெட்கத்தைச் சொல்லும் வரிகள் அழகு.
//மகள் அழைக்காத
அப்பாவை
பாவமென
ரயில் கூவி நிரப்புகிறது
ப்பாஆஆஆ...
பப்.ப்பாஆஆஆ ...//
ஆழப்பதியும் சிந்தனை. கவிதை நன்று.
//மகள் அழைக்காத
அப்பாவை
பாவமென
ரயில் கூவி நிரப்புகிறது
ப்பாஆஆஆ...
பப்.
ப்பாஆஆஆ ...//
மக்கா! இப்படி கலங்கடிக்கிறீங்களே.
புது புது வார்த்தைகள் தேவைப்படுகிறது பா.ரா ஒவ்வொருதடவையும் உங்களை பாராட்ட
வாழ்த்துக்கள்
விஜய்
A..P..P..A.....:)
பா.ரா,
அப்பாவாய் வருத்தம் தான்.
என்னால் இந்தக் கவிதையை முழுமையாக உணர முடிகிறது. எப்படி என்று எனக்கும் தெரியவில்லை. நன்றி பா.ரா.
-ப்ரியமுடன்
சேரல்
அன்பான பாரா. இதென்ன கொடுமை
கவிதை கொடுத்த அதிர்வில் மீள
பின்னூட்டங்களுக்குப்போனேன்
அங்கிருந்தும் அதிர வைக்கிறது
பரா வின் பின்னூட்டக்கவிதை
கவிதைக்கு வணக்கம்..
அதுசொல்லும் பாரா வுக்கு ஆறுதல்...
நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாவே நடக்கும்.
நெற்றியில் தீ எரியும் தியானத்தில்
கொற்றவை போலொரு பெண் வந்து
பற்பல கதைகள் சொன்னாள்
உச்சியில் மேக குடை சூழ
பிச்சிபூ கமழ தெரிவது எந்த திருக்கல்யாணமென்றேன்
அச்சில் பார்த்தாலும் வீரம் பொங்குவோன் ஆண்ட
அச்சிவகங்கைக்காரிக்கும் நித்தியப்புன்னகை துலங்க
விச்சயன் போலொரு விசைப் பலகை வித்தகனுக்கும்
நிச்சயம் என்றாள் தோழா !வெப்பு சூழ் பாலை நடுவே
இச்சிறு மதி படும் பாடு தீரும் !நற்றவம் அன்பு செய்தல்
அச்சமயம் வரமாய் நிகழும்
அச்சமறு ! கவிதை நெய்க !
என்ன சொல்ல பா.ரா..வார்த்தைகளற்றுத் தான் போயிருக்கிறேன்.
அழகான கவிதை. கையில் பிடித்திருப்பது பேனாவா அல்லது வார்த்தைஜாலம் புரியும் மந்திரக்கோலா! வாழ்த்துக்கள்.
மகா ஞாபகம்
hereafter, train and this kavithai are inseparable.
if i can i would present you a train!
அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன்!
கவிதையும், பின்னூட்டமும் படித்தபின்...
வாழ்க வளமுடன்!
(எல்லாம் ஒரு சுயநலம்தான்! நல்ல நல்ல கவிதைகள் கிடைக்குமே!)
வயதொத்த பெண்ணை
பார்க்கும் தந்தையின் வலி பிரிகிறது
பா.ரா அண்ணே !
முன்பே சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன் .
//இக்கவிதை வடிவமைப்பிற்கு உதவிய நண்பர்,ஆசிரியர். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு மிகுந்த நன்றியும் அன்பும்//
உங்களின் சார்பாக எங்களது நன்றியும் அன்பும் வாசுவிற்கு.
அதே சமயத்தில் இதே வெளி சொல்லும் மனநிலை எல்லாருக்கும்
இருக்காது பா.ரா. உங்களின் உயர்ந்த மனதிற்கு வாழ்த்துகளும் நிறைய நிறைய அன்பும்
உண்மையில் அருமையாக இருந்தது....ரசித்தேன்.....
//ப்பாஆஆஆ...
பப்.
ப்பாஆஆஆ ...//
அழகு.....
நல்லாருக்கு
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு மக்கா!
நல்லா இருக்கு அண்ணா!!
ப்ரியங்கள் நிறைந்த என்..
வாசு,
ப்ரபா,
லாவண்யா,
வீரா,
ராஜன்,
சங்கர்,
அமித்தம்மா,
ராகவன்(கண்கள் நிறைந்த பின்-கவிதை ராகவன்!)
வித்யா,(வந்தாச்சா..நல்ல இருக்கீங்களா வித்யா?)
மண்குதிரை,
நர்சிம்,
அசோக்,(நீங்களுமா?)
தமிழ் நாடன்,
பாலாஜி,
நவாஸ் மக்கா,
விஜய்,
ரசிகை(நாலே அட்சரம்,வலிமை!)
மாப்ள சத்ரியன்,
சேரல்,(நீங்கள் உணராமல் வேறு யார் உணர்வது?)
காமராஜ் (எ) என் காமு,
நேசா(அழுதுட்டேன் என சொல்ல நான் கூசுவதில்லை நேசா,ராகவன்)
செய்யது,
உதிரா,
மணிஜி(உடல் நலம் முதலில்,..)
வேல்ஜி(நன்றி..கிடைக்க பெற்றேன் மந்திரிஜி!.(ரயில் வே! :-))
வேல்கண்ணா(சக பயணிக்கு உதவும் அவரின் மனசுக்கு...நான் ஒண்ணுமில்லை கண்ணா!)
புலவரே,
சேகர்,
விக்னேஷ்வரி,
சுந்தரா,
சபிக்ஸ்,
மீண்டும்,ரியாத்,ஜெத்தா,பயண ஆயத்தம்.தனி,தனியாக கை பற்ற முடியாத தவிப்பு..மிக்க நெகிழ்வும்,நன்றியும் நண்பர்களுக்கு!
அருமை.
இதைப் படிக்கிற யாருக்குள்ளும் ஒரு கவிதை அரும்பும். ராகவன் எடுத்து வாசித்துவிட்டார். நானும் வெளியே எடுத்தேன். பூவாசம் மட்டுமே வந்தது.
பாலையிலும் பூக்கிற ரோஜா மாதிரி உங்க அன்பு வியாபிச்சிருக்கிற கவிதை இது! நிகழ்களின் அசதிகளையும் களைந்துவிட்டு மூக்குத்திப் பெண்ணுக்கு சடாரென அப்பாவாக மாறிவிடக் கூடிய மனசு வேறு யாருக்குண்டு? ரயில் மாதிரி நானும் இங்கு..!
நல்லா இருக்குங்க...
Post a Comment