Monday, November 30, 2009

புரிதல் காலம்


(Picture by CC licence, thanks Paromita)

ல்லாத்தையும் மறந்துட்டு
சந்தோசமாய் இருக்கணும்
என்ற போது புரியாமல் இருந்தது
புரியுதா என்ற போது
கண் கலங்கியது.
**
போக போறது
புறப்பட்டது எல்லாம்
சொல்லக் காணோம்.
போகும்போது சிரித்தது
புரியக் காணோம்.
**
குழந்தையோடு பேசி கொண்டே
ஜன்னல் திறந்தாள்.
போய் கொண்டிருக்கும்
பூச்சாண்டி புரிந்ததும்
மூடிக்கொண்டாள்.

43 comments:

சத்ரியன் said...

//எல்லாத்தையும் மறந்துட்டு
சந்தோசமாய் இருக்கணும்
என்ற போது புரியாமல் இருந்தது
புரியுதா என்ற போது
கண் கலங்கியது.//

மாம்ஸ்,

அழகு ...அழகு....!

Vidhoosh said...

:)
:)
:)

Ashok D said...

மொதொ
பாராவிலேயே
பாரத்தை ஏத்திட்டிங்க
சித்தப்பு

இன்றைய கவிதை said...

அருமை!

-கேயார்

பூங்குன்றன்.வே said...

கவிதை சிற்பி பா.ரா.வின் சிந்தனைகள் வரிகளில் தெரிகிறது.குறிப்பாக முதல் கவிதை செம டச்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு ராஜாராம்.

ப்ரியமுடன் வசந்த் said...

//போக போறது
புறப்பட்டது எல்லாம்
சொல்லக் காணோம்.
போகும்போது சிரித்தது
புரியக் காணோம்.//

ஐயா ராசா மகாப்பா எங்கேயோ போய்ட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மனசில இருக்கிறதை இப்பிடியே இறக்கி வையுங்கோ ராஜாராம். மறக்கவும் வேண்டாம் .கலங்கவும் வேண்டாம்.

க.பாலாசி said...

அழகான மூன்று புரிதல் காலங்கள்....கவிதையாய்.

நேசமித்ரன் said...

நல்லாயிருக்கு மக்கா

இதுவும் ஒரு தினுசுதான் . புது உடுப்பு புதுசா காட்டுறது இல்லையா
அப்பிடியும் வச்சுக்கலாம்

மண்குதிரை said...

உணர்வுகளை எழுப்புகிறது.

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா, வழக்கம்போல.

'பரிவை' சே.குமார் said...

உணர்வுகளின் உன்னத வரிகள்...
அருமை...

கலகலப்ரியா said...

நல்லாயிருக்கு பா.ரா...!

anujanya said...

நல்லா இருக்கு ராஜா. தூள் கிளப்புறீங்க.

அனுஜன்யா

அன்பேசிவம் said...

1 சோகம்
2 ஏக்கம்
3 வலி

ஆங்...
சரி,
மகாப்பாதான் சரி

vasu balaji said...

வலிக்க வலிக்க சுகித்தேன். அருமை பா ரா

அன்புடன் அருணா said...

ம்ம் புரியுது!

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

நந்தாகுமாரன் said...

அருமை அருமை அருமை

வினோத் கெளதம் said...

சூப்பர்..

அ.மு.செய்யது said...

வழக்கம் போலவே தாறுமாறு ..!!! கிளப்புங்க !!!

விஜய் said...

கவிதை ராட்சசன்
என்ற பட்டத்தை அளிக்கிறேன்

வாழ்த்துக்கள்

விஜய்

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

சுசி said...

மூணுமே சூப்ப்ப்...பர் ராஜாராம்.

செந்தில் நாதன் Senthil Nathan said...

உண்மையை சொன்னால், ரெண்டு மூணு தடவ படிச்சேன், முழுசா புரிஞ்சுக்க...ரெம்ப நல்லா இருக்கு..

//எல்லாத்தையும் மறந்துட்டு
சந்தோசமாய் இருக்கணும்
என்ற போது புரியாமல் இருந்தது
புரியுதா என்ற போது
கண் கலங்கியது.
//

உண்மையாவே கண் கலங்கியது!!

சந்தான சங்கர் said...

//எல்லாத்தையும் மறந்துட்டு
சந்தோசமாய் இருக்கணும்
என்ற போது புரியாமல் இருந்தது
புரியுதா என்ற போது
கண் கலங்கியது.//

ரொம்ப நல்லா இருக்கு
புரியுதுங்க மக்கா..

Anonymous said...

வழமை போல அண்ணாவின் டச்...மேலும் ஒரு முத்து சரம்...

ரோஸ்விக் said...

சித்தப்பா! முதல் கவிதை ரொம்ப டச்சிங்கா இருக்குது...கலக்குறீங்க போங்க...:-)

அமுதா said...

மூன்றும் அருமை

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதல் கவிதை நெகிழ்ச்சி, ரெண்டு மூணு தடவைக்கு மேல் படித்தால் அழக்கூட செய்யலாம் அனுபவக்கவிஞரே

நர்சிம் said...

மிகப் பிடித்திருந்தது.

S.A. நவாஸுதீன் said...

இப்பதான் லீவு முடிஞ்சு வந்தேன் மக்கா. மறுபடியும் லீவ் எடுத்துட்டு ஊருக்கே போக வச்சுடுவீங்க போல.

உயிரோடை said...

புரியுதா என்ற போது கலங்க‌வே செய்யுது

நேசமித்ரன் said...

சரவணக் குமார் கொடுத்திருக்கும் புது விருதுக்கு வாழ்த்துகள் மக்கா

ஆ.ஞானசேகரன் said...

அனைத்தும் அழகு

Sakthi said...

புரிந்ததும்
மூடிக்கொண்டாள்...

அருமையான இறுதி வரிகள் நண்பரே ..

கமலேஷ் said...

எல்லோருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை
உங்களை போல எல்லோராலும் எழுதி விட முடிவதில்லை..
உங்களுடைய கவிதைகள் எப்போதும் உயரத்தில் நிற்கும் சூரியன்..

அன்புடன் மலிக்கா said...

அழகிய கவிதை நடை.

தோழமையே இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.
http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

கல்யாணி சுரேஷ் said...

வலி தந்தாலும், அருமையான வரிகள்.

இரசிகை said...

!........:)

Thenammai Lakshmanan said...

பிரிவின் வலி அருமை

மகா அப்பாவா

எனக்கு நீங்க மக்காதான் கவிஞரே

ரொம்ப அருமை

புது புத்தக வெளியீட்டுக்கும் வாழ்த்துக்கள் மக்கா

வாழ்க வளர்க

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

பின்னூட்டம் வழியாக என்னை உற்சாகம் கொள்ள செய்த உங்கள் யாவருக்கும் எப்பவும் போலான அன்பும் நன்றியும்.