(picture by CC licence, thanks Wrote )
அப்பா அம்மா
நடுவில் படுத்தே
கதை கேட்க்கிறான்.
இவனுக்கு பிடிக்காத
மந்திரவாதி கதை.
ஏழு ஏழுகடல்,ஏழுமலை தாண்டி
கிளிக்குஞ்சில் உயிர் இருக்கும் மந்திரவாதி
பனைமரத்தளவு கை கொண்டு
இளவரசியை அபகரிக்கிறான்.
பசிக்கு இவனைப் போன்ற
குழந்தைகளை உண்கிறான்.
அப்பா மாதிரி நல்லவர்களை
துவம்சம் செய்கிறான்.
இவ்வளவையும் கூட
பொறுக்கலாம்
விடியும்போது இவனறியாது
நகர்த்தியும்வேறு தொலைக்கிறான்.
அம்மா இடத்தில் இவனையும்
இவன் இடத்தில் அம்மாவையும்.
குறிப்பு : (இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).
78 comments:
டிபிக்கல் பா.ரா..வாழ்த்துக்கள்
புரியுதுங்கோ :)
இது வழக்கமா நடக்கறது தானே !!!
அருமை..பரிசு கிடைக்க வாழ்த்துக்கள் ஐயா.
அருமை ராஜாராம் ... ஆனால் எனக்கு மந்திரவாதிக் கதைகள் மிகப்பிடிக்கும் உங்களுக்குத் தான் பிடிக்காது போல :) ... வெற்றி பெற வாழ்த்துகள்
நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள் பாரா சார்...
சபாஷ். சரியான போட்டி.
அருமையான கவிதைங்க. வழக்கமான நிகழ்வுகளைக் கூட இரசனைக் கவிதையாக்குவது உங்களுக்கு கைகூடியுள்ளது.
அருமைங்க.
கவுத்துப் புட்டீங்களே பங்காளி!! :))
பா.ராண்னே, கவிதை மிகவும் இயல்பு தெறித்த அழகு !
மந்திரவாதிக் கதைகள்னாலே நமக்கு கொஞ்சம் பயம் ... ஹி ஹி
நானும் எழுதலாம்னு நினைச்சிருந்தேன் ... ஹ்ம்ம் இனிமே யோசிக்கத்தான் வேணும் போல ...
வெற்றிபெற வாழ்த்துக்கள் மக்கா!
அண்ணா வாழ்த்துக்கள்.எப்பவும்போல இயல்பா இருக்கு வரிகள்.
நானும் போட்டில கலந்துக்கலாம்னு பாத்தா இந்த அடி அடிக்கிறீங்க
யோசிக்க வேண்டியதுதான்
விஜய்
அருமையான கவிதை, பரிசு பெற வாழ்த்துக்கள் அண்ணா.
நல்ல கவிதை பரிசு பெற வாழ்த்துக்கள்...
உங்களால் மட்டும்தான் மக்கா இப்பிடி எழுத முடியும்
என்ன ஒரு நளினம் என்ன ஒரு நாசூக்கு
மந்திரவாதி கதையையும் இடம் மாற்றுவதையும் புனைந்து ....
அட பெரிய ஆளுங்க யாரும் கமெண்டு போடக் காணோமே ??
அப்போ கமெண்டு போடாதவங்க எல்லாம்தான் ஜட்ஜா ?
ஹாஹா.. கலக்கல்.. வாழ்த்துக்கள் தலைவா :-)
wow!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
போட்டியில் கலந்துகொள்ள தகுதியான கவிஞ(ன்)ர்
வாழ்துக்கள்
(சீக்கிரம் தூங்கவேண்டும் (இடம் மாற்றவேண்டும்) என்பதர்க்காகவே பிடிக்காத கதை)
ஒன்னு இங்க இருக்கு
மீதி பத்தொன்பது எங்க?
அருமை அருமை வாழ்த்துக்கள் பா.ரா
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பா.ரா.
ரொம்ப நல்லா இருக்குங்க. ரசித்தேன். பரிசு பெற வாழ்த்துக்கள் :)
நல்லா இருக்குங்க...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
இரண்டாம் முறை படிக்கும்போது தான் முழுமையாக புரிந்துகொண்டேன். மிக அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அருமை அருமை.. நீங்கள் கவிதை சொல்லும் விதமே அழகாய் இருக்கிறது! இது அநேக நடுத்தர குடும்பங்களில் நடந்த நடக்கின்ற விஷயமே.! உங்கள் கவிதை வெற்றி பெற என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
நட்பு
http://manathilpattavai.blogspot.com
வாழ்த்துக்கள் பா.ரா..
முதலில் என் வாழ்த்துகள்..... கவிதை நல்லா வந்துள்ளது நண்பரே
கவிதை நல்லா இருக்கு அண்ணா :)
வெற்றி பெற வாழ்த்துகள்
சில நகர்த்தல்களை
உணர்த்துவதே
பா.ராவின்
தனித்துவம்...
வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கா..
பாரா பாரா-வா எழுதி....பக்கத்துல படுத்திருந்த பையன ஒரு பக்கமா போட்டுட்டேகளே சித்தப்பு...:-)
அருமையா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லா இருக்குண்ணா. வெற்றி பெற வாழ்த்துகள்.
ரொம்ப சாதாரணமா எழுதி அதிகமா மலைக்க வைக்கறீங்க.. வாழ்த்துக்கள் சித்தப்ஸ்
மகாப்பா, இந்த இடையில படுத்து கதைகேக்குறது நல்லா இருக்கே......:-)
மகாப்பா, இந்த இடையில படுத்து கதைகேக்குறது நல்லா இருக்கே......:-)
அற்புதம்.. மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துகள்
மிகவும் நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்.
கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது, வாழ்த்துகள், உங்கள் புத்தக வெளியீட்டிற்கும், ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு ணா.
ஜீபூம்பா.... நல்ல தலைப்பு...
கவிதை அருமை...
யதார்த்தம்....
வெற்றி பெற வாழ்த்துக்கள் ராஜாராம்.
சரி பொற்காசுகள் எனக்கில்லே!!!!பூங்கொத்து!
//விடியும்போது இவனறியாது
நகர்த்தியும்வேறு தொலைக்கிறான்.
அம்மா இடத்தில் இவனையும்
இவன் இடத்தில் அம்மாவையும்.//
அருமை.வாழ்த்துகள்.
கலக்குங்க...!
அருமை!!பரிசு கிடைக்க வாழ்த்துக்கள் !!
Super!!!!
http://nesamithran.blogspot.com/2009/12/blog-post_03.html
பா.ரா. கலக்கல்ஸ்!
எல்லோரும் சேர்ந்து ஒரு 'ஓ' போடுங்கப்பா!
-கேயார்
இது கவிதை இது தான் கவிதை
கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
புத்தக வடிவமைப்பை வாசு வலையில் பார்த்து புல்லரித்தது பா.ரா
பெருமையாக உணர்கிறேன்..நம்ம பா.ரா...இதைவிட எங்களுக்கு வேறு
என்ன சந்தோஷம் இருக்க முடியும்.
சூப்பர் பாஸ்.... எப்படித்தான் யோசிக்கிறிங்களோ.... Avvvv...
superb.....
:)
//அம்மா இடத்தில் இவனையும்
இவன் இடத்தில் அம்மாவையும்.//
யார் அந்த மந்திரவாதி மகா அப்பாவா மக்கா
//இவ்வளவையும் கூட
பொறுக்கலாம்
விடியும்போது இவனறியாது
நகர்த்தியும்வேறு தொலைக்கிறான்.
அம்மா இடத்தில் இவனையும்
இவன் இடத்தில் அம்மாவையும்...////
பா.ரா,
இரவு அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே.
வாழ்க்கைக் கவிதை.
வாவ்... சூப்பர் கவிதை.... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
nala iruku. adi polichirukinga valthukal
//அம்மா இடத்தில் இவனையும்
இவன் இடத்தில் அம்மாவையும்.//
அருமை பா ரா
நல்லா இருக்கு மக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
அருமை:))! நல்வாழ்த்துக்கள் பா ரா!
கவிதை அருமை பாரா சார்!
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
அருமை
வாவ்!
கவிதை அருமை...
வெற்றி பெற வாழ்த்துகள்!!!
வாழ்த்துக்கள் எதற்கு. இந்தக் கவிதை வெற்றி பெறாமலா போயிடும்? தலைப்பு சூப்பர். ரசித்தேன்.
”இடை”யிலே படுத்து கதை கேட்பது எனக்கு கூட பிடித்த விஷயம்தான் ஆனால் அடுத்த நாள் காலையில் அதே இடத்தில்தான் இருப்பேன்.
கேபிள் சங்கர்
super.. man..!
நடுத்தர வர்க்க தாம்பத்தியத்தின் நாசூக்கான பிரதிபலிப்பு உங்கள் கவிதையில் தெரிகிறது. மிகவும் பிடித்திருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள் !
கவிதை அருமை பா.ரா சார்!
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
அருமை நண்பா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வெற்றி பெற வாழ்த்துகள்
வெற்றி பெற வாழ்த்துகள்!
மிகவும் அழகான ஆழமான கவிதை. மிகவும் பிடித்தது
அன்பு பா.ரா....
அழகாயிருக்கிறது கவிதை...
வாழ்த்துகள்
-ப்ரியமுடன்
சேரல்
பிரமாதமான கவிதை.
முதலில் எனக்குப் புரியவில்லை. எந்த அளவில் கவிதையை எடுத்துக் கொள்வது என எனக்கு விளங்கவில்லை.
பின்னூட்டம் படித்துக் கொண்டு வரும்போது, முக்கியமாக அரவிந்தன் அவர்களின் பின்னூட்டம், கவிதையின் எதார்த்தம் மனதைத் தொட்டுவிட்டது.
மிகவும் அருமையாக இருக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே.
புரியும் வயது வரும் போது பாவம் பெற்றோர்.
யதார்த்தம்.
வாழ்த்துக்கள்
பத்மா.
நச்சுனு சொல்ல தமிழால தான் முடியும்....
தமிழ் உங்களுக்கு கை வந்த கலையாய் உள்ளது..
வாழ்த்துகள்....
மேலே சொன்ன அனைத்தும்....
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!
அன்புடன்
உழவன்
வாழ்த்துகள் பா.ரா டியர் :)
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் பா.ரா!
-ப்ரியமுடன்
சேரல்
மகாப்பா........
சந்தோசமா இருக்கு......
:)
கவிதை வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே :-)
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!
வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
Post a Comment