Thursday, March 25, 2010

மண்டுகள் துப்பும் மொழி - 2


(Picture by cc license Thanks Miss_rogue)

முதல் எழுத்து, கடைசி எழுத்தில்
சினிமா பெயர் கண்டுபிடித்து
விளையாடிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகள்.

முதல் எழுத்து ம, கடைசி எழுத்து மி
கண்டு பிடிங்க பார்க்கலாமென
குழந்தையானேன் நானும்.

"சினிமா பெயர் ஒன்னும்
சொல்லலை ஒங்கப்பா" வென
முறைத்துப் போனாள்
கை வேலையாக வந்த மனைவி.

"காலக்ஷ்மி"
கூவினார்கள் குழந்தைகள்.

"ப்பு" என்றேன், பாதி தப்பிக்க.

"னைவி மண்டு லேது சாமி.
தெலுங்குப் படம்." என்றேன்
மீதி தப்பிக்க.

40 comments:

நசரேயன் said...

அவுனா !!

Radhakrishnan said...

ஹா ஹா! எப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க.

vasu balaji said...

ச்சாலா பாகுந்தி பா.ரா.காரு:))

vasu balaji said...

/ நசரேயன் said...

அவுனா !!/

வில்லன் இங்கல்லாம் வரமாட்டாருன்னு தகிரியம் இல்ல:))

மணிஜி said...

கொஞ்சம் உப்பு கம்மியா?

பத்மா said...

மண்டு மாரி ஆனா மண்டு இல்ல .

இராகவன் நைஜிரியா said...

ஆஹா...

Chitra said...

One of the secrets of being happily married.......

ஸ்ரீராம். said...

"மண்டகப்படி இல்லையாம் மாமி.."

விநாயக முருகன் said...

அவுனா மண்டு லேதா பா.ரா.காரு?

rajasundararajan said...

'மண்டுகள் துப்பும் மொழி'ச் சேர்க்கை; மொழி - 1 அச்சு அச்சு ஓ! அருமை!

மொழி - 2 குடும்பக் காட்சி... சொல்லத் தெரியலை.

நேசமித்ரன் said...

Picture by cc license Thanks Miss_rogue)

:)

//கொஞ்சம் உப்பு கம்மியா?//

:)

குழந்தையாணேன் ?

தருணங்களை மீட்டெடுப்பதுதான்
பா.ரா கவிதை

இது(வும்) ?

:)

Unknown said...

சூப்பரு

சைவகொத்துப்பரோட்டா said...

நகைச்சுவை கவிதை நல்லா இருக்கு.

taaru said...

ஹா ஹா ஹா ஹாவென்றேன்...!!!![^~]

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹா ஹா!

இரசிகை said...

//
நேசமித்ரன் said...
Picture by cc license Thanks Miss_rogue)

:)

//கொஞ்சம் உப்பு கம்மியா?//

:)

குழந்தையாணேன் ?

தருணங்களை மீட்டெடுப்பதுதான்
பா.ரா கவிதை

இது(வும்) ?

:)
//

athey athey mithran sir...:)

காமராஜ் said...

முதல் முதலாய் உன் கவிதையை என் மனைவியிடம் படித்துக் காண்பித்தேன் பாரா...,ரெண்டு பேர் கண்ணிலும் நீர்கோர்க்க,இதோ வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறோம்.

vidivelli said...

அசத்திட்டீங்களே....
என்ன கற்பனை!!!!!!!!

மோனி said...

..//முதல் முதலாய்
உன் கவிதையை என் மனைவியிடம் படித்துக் காண்பித்தேன் பாரா...,
ரெண்டு பேர் கண்ணிலும் நீர்கோர்க்க,
இதோ வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறோம்//..

துண்டு எடுத்துட்டு போங்க மக்கா...
நான் பெட்ஷீட்டே எடுத்துட்டு வந்திருக்கேன்..
அவ்வளவு அழுகை..

Ashok D said...

எட்டங்கிளாஸ் வரைக்கும் இந்த கேம் விளையாடியிருக்கோம்... கொடுமை..சித்தப்ஸ் இன்னைக்கி பசங்க என்னென்ன விளையாட்டெல்லாம் விளையாடுதுங்க...

சரி..’சி’ல ஆரம்பிச்சு ’வா’ல முடியும் என்ன படம்ன்னு சொல்லுங்க பாக்கலாம்.
.
.
.
.
.
.
க்ளு... நடுவுல எழுத்துகளே கிடையாது.

க.பாலாசி said...

சின்ன வயசுல இந்தவிளையாட்ட விளையாடின ஞாபகம் வந்துபோகுதுங்க...

சூப்பர்ப்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம்ம்ம்ம்ம்ம்ம் :)

rvelkannan said...

மக்கா... அப்படியும் தப்பிச்சு இருக்க மாட்டிங்க தானே ....

"உழவன்" "Uzhavan" said...

எப்படிங்கண்ணா இப்படியெல்லாம் :-)

Ashok D said...

இன்னைக்கி ஒரு ஆச்சரியம்.

என் Centreக்கு வந்த கஸ்டமர் உங்க புக் மேலய இருந்தது.. இதுவரைக்கும் மூணு வாட்டி வந்திருக்கிறார்.. 2 தடவை உங்க புக் எடுத்து பார்த்தார். விலைக்கு கிடைக்குமான்னு கேட்டார். அப்புறம் 40 ரூ கொடுத்து வாங்கிட்டு போனார்.

ரொம்ப சந்தோஷப்படாதிங்க.. அவருக்கு வைரமுத்துன்னா உசுராம்.. நீங்க எழுதிவீங்களான்னு கேட்டார்.. ’ஏதோ’ என்றேன்.

கவலைப்படாதிங்க என்கிட்ட இன்னொரு புக் இருக்கு சித்தப்ஸ் :)

மாதேவி said...

சின்ன வயது ஞாபகம் வந்தது.

'பரிவை' சே.குமார் said...

ம்ம்ம்... பா.ரா.
சொல்லமுடியாத உங்கள் மனம் புரிகிறது. இந்த விளையாட்டு எல்லார் மனதிலும் உண்டு. கவிதை அருமை.

எதார்த்தங்களை கவிதையாக்கும் உங்கள் திறமை இதில் பளிச்சிடுகிறது. வாழ்த்துக்கள்:

பிரேமா மகள் said...

அப்ப.. எது சரின்னு நீங்களே சொல்லுங்க.. பார்ப்போம்..

Romeoboy said...

போங்காட்டம் ஆட கூடாது ..

நட்புடன் ஜமால் said...

மக்கா இம்பூட்டு எளிமை படுத்த எங்க படிச்சீங்க மக்கா!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தாமதமாய் வந்து இப்போ தான் இந்தக் கவிதை படித்தேன்.
என்னத்தைச் சொல்ல? உண்மையில் அப்படி ஒரு படம் வந்ததா? என்ன?
என்னமோ உங்கள் மனைவி ரொம்பப் பாவம் என்று எனக்கு தோன்றுகிறது.
நானாக இருந்தால் முறைப்புடன் மட்டும் போயிருக்க மாட்டேன்

மறத்தமிழன் said...

பாரா,

எளிமையா அதே சமயம் சிறப்பான ஒன்று..

நன்று...

சிவாஜி சங்கர் said...

:) maamms... :)

விஜய் said...

நல்லா இருக்கு மக்கா

விஜய்

பா.ராஜாராம் said...

நன்றி நசரேயன்! :-)

நன்றி ராதா!

நன்றி பாலா சார்!

நன்றி மணிஜி! (சா.ராமா)

நன்றி பத்மா!(ஆம்.லேது சொல்லியாச்சு. :-))

நன்றி ராகவன் அண்ணாச்சி!

நன்றி சித்ரா! அப்படின்றீங்க? :-)

நன்றி ஸ்ரீராம்! :-))

நன்றி விநாயகம்(எ)குசும்பா :-)

ரொம்ப நன்றி ராஜசுந்தராஜ்ண்ணே!

நன்றி நேசா! :-)

நன்றி முகிலா!

நன்றி எஸ்.கே.பி!

நன்றி பெ.ப.அய்யானார்!

நன்றி டி.வி.ஆர்.சார்!

நன்றி ரசிகை!(ஈயடிச்சான் காப்பி) :-)

நன்றி காமு!(வேலைக்கு போகும் போது சிரிச்சுக்கிட்டு போங்க மக்காஸ்!)

நன்றி விடிவெள்ளி!

நன்றி மோனி!

நன்றி மகன்ஸ்! // சரி..’சி’ல ஆரம்பிச்சு ’வா’ல முடியும் என்ன படம்ன்னு சொல்லுங்க பாக்கலாம்./
சிம்புவா! மகனே..யார்ட்ட..நாங்கல்லாம் க்ளுவுலேயே பிறந்து க்ளுவுலேயே வளர்ந்தவங்க.இம்புவுக்கும்,புவுக்கும் அப்புறமும் இப்புறமும் இருக்கிற எழுத்துதான் கொஞ்சம் குழப்புது..ஆன்சரில் ஆச்சர்ய குறிக்கு பதில் கேள்வி குறி போட விருப்பம்.டி.ஆர்.தாத்தா திட்டும்.:-)

நன்றி பாலாஜி!

நன்றி அமித்தம்மா!(ம்ம்ம்..மகா சொல்லிட்டாளாக்கும்?:-))

நன்றி வேல்ஸ்! ஆம். :-)

நன்றி உழவரே! :-) தானா வருது...

மகன்ஸ்,பார்த்து...புத்தகம் வாங்கியவர் எனக்கு கடன் கொடுத்தவராய் இருக்க போகிறார்!முன் அட்டையை பார்த்து வாங்கினாரா?பின் அட்டையை பார்த்து வாங்கினாரா? முகவரி கேட்டால் பிர்ர்ரர்ர்ர்ர் என்று உதட்டை பிதுக்கவும்.//கவலைப்படாதிங்க என்கிட்ட இன்னொரு புக் இருக்கு சித்தப்ஸ் :)//அப்ப,எனக்கு இன்னொரு கடன் காரர் இருக்கிறார்!.. நன்றி மகனே! :-))

நன்றி மாதேவி!

மிக்க நன்றி குமார்!

ராகவன் said...

அன்பு பாரா,

எல்லோரும் வந்து போன பிறகு வருவதற்கு காரணங்கள் அதிகம் இருக்கு.

மண்டுகள் துப்பும் மொழி ஒன்று நன்றாகயிருந்தது உங்கள் நடையில்...

மண்டுகள் துப்பும் மொழி - 2, சுமாராக இருந்தது, அதற்கு காரணம், அதன் கரு பாரா... இது ரெப்படீசன் மாதிரி இருக்கு... வேறு குடுவையில் ஊற்றி வைத்த அதே கள்... திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை சொல்வது ஏன் பாரா... உங்களின் பார்வையில் ஏன் ஏனைய விஷயங்கள் படவில்லை என்று எனக்கு தெரியவில்லை...

உங்கள் எழுத்தும் வீச்சும் புதுசு பாரா... ஆனா திரும்ப திரும்ப ஒன்றே பேசுவது போல இருக்கிறது இது என்னோட பார்வை பாரா...
சுலபமாய் எழுத வருகிறது உங்களுக்கு... நிறைய வகைவகையா எழுதனும் நீங்க!

அன்புடன்
ராகவன்

பா.ராஜாராம் said...

நன்றிங்க பிரேமா மகள்! :-)

நன்றி ரோமியோ! :-)

நன்றி ஜமால் மக்கா!

நன்றிங்க இயற்கை!

நன்றி ஜெஸ் (எ) ரௌடி! :-)

நன்றி மறத்தமிழன்!

நன்றி சிவாஜி மாப்ஸ்!

நன்றி விஜய் மக்கா!

ஆகட்டும் ராகவன்.முயசிக்கிறேன்.(சட்டியில் இருந்தாவுல..ஆப்பையில் வரும் என்று உங்கள் மகள் முனங்குகிறாள்! :-).அக்கறையான அன்பிற்கு நன்றி மக்கா!

இரசிகை said...

//நன்றி ரசிகை!(ஈயடிச்சான் காப்பி)

:-)//


:)

xam hal-lil laam seiya thyriyam irukkaathu ingaiyaavathu senju palakalaamennuthaan..

athuvum yaarai kaappi adichom nu paatheengala..,athileye yenga puththisaaliththanam puriyalaiyaa??


raja ram sirrrrrrrrrrrrrrrrrrr:)

கவிதன் said...

சுவாரஸ்யமான படைப்பு அண்ணா! புன்னகையை வரவழைக்கிறது!!! வாழ்த்துக்கள்!