சின்னவனே என்றழைக்கிற பாட்டி
என்னை வடுவா என்பாள்.
தண்ணி தர
மாத்திரை எடுக்க
கால் அமுக்க
கதை சொல்ல
எல்லாத்துக்குமே
சின்னவனேதான்.
தாத்தாவின் கதை சொல்லிக் கொண்டிருந்த
நாளொன்றில் பாட்டியிடம் கேட்டான்
தம்பியும்,
"தாத்தா ஓடிப் போயிட்டாரா பாட்டி?"
பிறகெப்போதும்
கதை சொல்லி பார்க்கலை பாட்டியை.
தம்பியைக் கூட
சின்ன வடுவா என்றழைத்தாள்.
51 comments:
Nice one Pa. Raa.
குழந்தைகளுக்கு என்ன தெரிகிறது?
நல்ல கவிதை .
சின்ன வடுவா வாயிலும் சின்னவனே மனசிலும் இருக்கும் .
தாத்தா மேல் கோபம் வருகிறது
ஊர் நினைவை கிளறுகிறது பா.ரா
உங்க ஆச்சிக்கு வடுவா. எங்காச்சிக்கு படுவா.
:) பாட்டி ஞாபகம்..
nice kavithai paa.raa.
enga oru pattikalai manathil iruthivittau.
அன்பு பாரா,
தாயம்மாக் கிழவி என்னையும் வடுவா என்று கூப்பிடுவாள்... அவளுக்கு “பா” வே வராது என்று நினைக்கிறேன்...
பாஸ்கரை, வாஸு என்று தான் அழைப்பாள். நிறைய கிளறி விடுகிறது... இந்த கவிதை.
நல்லாயிருக்கு பாரா...
அன்புடன்
ராகவன்
அய்யோ! பா.ரா!! சொல்லாம சொன்ன வலிய எங்க போய் தீர்க்க
:)
ரொம்ப கனமா இருக்குதுங்க உங்க கவிதைகள்..
//தாத்தா பெயர் கொண்ட தம்பியை
சின்னவனே என்றழைக்கிற பாட்டி
என்னை வடுவா என்பாள்//
Nice....Vaazthukkal sir!
நல்லாயிருக்கு அண்ணே.
நல்லாயிருக்கு
நல்லாருக்கு பாரா சேர்
நானும் சின்னவன்தான்
அடடா!அருமை!
அருமை. எங்கள் ஊர்பக்கம் படுவாதான். பெயர் வைத்தவர் மேல் மட்டும் தனிப்பிரியம் காட்டுவது உண்டு பல குடும்பங்களில்.
பொருத்தமான படம்.
ம்ம்... அடிச்சுத்தூத்துங்க !!!
எங்க பாட்டியை நினைவுபடுத்துகிறது உங்கள் வரிகள்....
:)
yenna solla.....
m...
.
.
.
.
.
.
.
.
.
.
nallaayirukkungirathai nallaayirukkunuthaane solla mudiyum rajaram sir.....:)
நீண்ட நாட்களாயிற்று சகா, மண்வாசனையுடனான கவிதை பார்த்து(படித்து)
அற்புதம்ப்பூ.
தாத்தாவிடம் இல்லாத சில மகாமித்யங்களையும் சொல்லுவா எங்க கெழவி.
பாண்டாஸி.நொரநாட்டியக் கேள்வி கேட்டா கத கெடயாதுன்னு பயமுறுத்துவா.
மனம் கனத்து விட்டது இதைப் படித்தவுடன்!!!
நல்லா இருக்குதுங்க:-)
பிறகெப்போதும் கதை சொல்லி பார்க்கலை பாட்டியை.
பாவம் பாட்டி..
யப்பத்தா....
பா.ரா.
கவிதை வழியாக கதை சொல்லி அதையும் நெஞ்சை கீற வைக்கிறீர் வாரா...
எதாவது சொன்னேன்னு நினைச்சுக்க ராசா..
//சின்னவனே என்றழைக்ற பாட்டி
என்னை வடுவா என்பாள்//
தம்பிக்கு முன்னே பாட்டியிடம் அதே கேள்விய நீர் கேட்டு வச்சீரோ! :)
சின்னதாக இருந்தாலும் இடுகை
நினைவலைகளை உருவாக்குகிறது
பா.ரா ரொம்ப ஆழமான கருத்துள்ள ஒரு விடயத்தை சும்மா போற போக்குல ஆணிதரமா அடிச்சிட்டு போயிருக்கீங்க. வாழ்த்துக்கள்...
//தாத்தாவின் கதை சொல்லிக் கொண்டிருந்த நாளொன்றில் பாட்டியிடம் கேட்டான் தம்பியும் கூட, "தாத்தா ஓடிப் போயிட்டாரா பாட்டி?"//
'தம்பியும் கூட' என்பது முன்பு நீங்களும் கேட்டீர்கள் என்பதை உணர்த்துவதால் அவசியம்தான், ஆனால் ஹிந்தி டயலாக்கை தமிழில் பெயர்த்தது போல ஒரு இடவாகில் அது நிற்கிறதே!
கிராமத்து மணம் வீசும் ...கவிதை
super. அருமை! பாட்டி ஞாபகம்!
@ராஜசுந்தர்ராஜன்
// 'தம்பியும் கூட' என்பது முன்பு நீங்களும் கேட்டீர்கள் என்பதை உணர்த்துவதால் அவசியம்தான், ஆனால் ஹிந்தி டயலாக்கை தமிழில் பெயர்த்தது போல ஒரு இடவாகில் அது நிற்கிறதே!//
வாஸ்தவம்ண்ணே.'தம்பியும்' என்பதோடு நிறுத்தி இருக்கலாமோ?
உங்கள் பதில் பார்த்து மாத்திரலாம்ண்ணே.
நேற்று இரவில் படித்து விட்டேன் பா.ரா.
வார்த்தைகள் எவ்வளவு அர்த்தமுள்லவையாய் இருக்கின்றன வாழ்க்கையிலும், உங்கள் கவிதையிலும்.
பாட்டியின் பெருமூச்சை கேட்க முடிகிறது.
கவிதையுடன் ஒன்றி விட்ட படமும். அருமை.
:) super boss
ரொம்ப நல்லா இருக்கு ராஜாராம்.
ஆச்சியின் வாழ்க்கையையே வார்த்தைகளுக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள்.
அழுத்தமான கவிதை.
ok....
vaduvaa...sir!
(yennai paattinu sollaatheenga RAJARAM SIR)
NOTE:ithu neenga yen thalaththil potta commentukku pathil..!
எங்கள் பக்கத்தில் ஆச்சி, அப்பம்மா, அம்மம்மா என்றுதான் பாட்டிகள் அழைக்கப்படுவார்கள்.
உங்கள் பதிவு அவர்களையெல்லாம் திடீரென எம் கண்முன் அள்ளி வந்தது.
நல்லா இருக்கு மக்கா
விஜய்
ஒவ்வொரு வரியையும் திரும்பத் திரும்ப ரசிச்சுப் படிக்கிறேன். அருமை :-)
அருமையான படைப்பு பா.ரா அண்ணா!
அண்ணே இந்த வார வலைச்சரத்தில் எழுதுகிறேன். வருக ஆதரவு தருக.
மாறுபட்டகோணத்தில் உங்களின் சிந்தனை . மிகவும் அருமை . வாழ்த்துக்கள் !
very....very nice
என்ன ஒரு அழகு பாட்டியின் மனசு அந்த சோகச் சித்திரத்திலும்!
அற்புதமான கவிதை பா.ரா.
உங்களுக்கு ஒரு கை தட்டல்
ஜோரா
மண்டுகள் துப்பும் மொழி -123,
ஜீபூம்பா,
ஆனந்த விகடனில் வந்த கவிதைகள்,
எல்லாமே கலக்கல்....
//நீங்கள் வாசிக்கவென பத்திரபடுத்தியது
► 2010 (32)
► 2009 (88)
//
வாசிக்கத்தொடங்கிவிட்டேன்..
வாழ்த்துக்கள்..
'கூட' என்பதை வெட்டவேண்டும் என்கிற தெளிவே முதலில் எனக்குள் நிகழவில்லை. பொதுவாக, தமிழ் வாக்கியங்கள் வினைச்சொல்லில் முடிய வேண்டும் என்பது இலக்கணம். ஆனால் கவிதை மொழிதான் அதைக் கண்டு கொள்வதில்லையே.
முதலில் வாசித்தபோது 'தம்பியும் கூட' வாக்கிய முடிபாக வந்தது குழப்பியதாகப் பட்டது. '//தாத்தாவின் கதை சொல்லிக் கொண்டிருந்த நாளொன்றில் தம்பியும் கூடப் பாட்டியிடம் கேட்டான்// என்றிருந்தால்...' என்று யோசித்தேன். ஆனால் எதுவும் உங்களிடம் இருந்தே வந்தால்தான் சரியாக இருக்கும் என்பதால் குறிப்புணர்த்தி விட்டுவிட்டேன்.
'கூட' என்பதைத் தெலுங்கில் தனித்தே பயன் படுத்துகிறார்கள் (அல்லவா?). தமிழில் 'உம்' 'கூட' இரண்டையும் அடுக்கி மொழிகிற வழக்கம் வந்துவிட்டது. 'கூட' வேண்டாம் என்று நீங்கள் கண்ட முடிபே துல்லியம். பாருங்கள், ஈன்றவருக்குத் தெரியும், பிள்ளைக்கு என்ன நிறத்தில் என்ன கச்சை எப்படிக் கட்டவேண்டும் என்று.
என் மனதில் எழுந்த வாக்கிய அமைப்பை வாசகர்/ தொடக்க எழுத்தாளர் ரசனைக்காக மட்டுமே இங்கே வெளிப்படுத்தி இருக்கிறேன். அதல்லாமல் அதற்கு ஒரு முக்கியமும் இல்லை.
நன்றி செ.ஜெ!
நன்றி பத்மா!
நன்றி ஆடுமாடு!
நன்றி ப்ரியா!
நன்றி மகனே!
நன்றி சே.கு!
நன்றி ராகவன்!
நன்றி பாலா சார்!
நன்றி சிவாஜி மாப்ஸ்!
நன்றி எஸ்.கே.எம்.எஸ்.கே!
நன்றி தேவா!
நன்றி அக்பர்!
நன்றி டி.வி.ஆர்.சார்!
நன்றி ரமேஷ்! :-)
நன்றி அருணா டீச்சர்!
நன்றி ராமலக்ஷ்மி!
நன்றி நேசா! :-)
நன்றி சங்கவி!
நன்றி கைசிரஇ! :-)
நன்றி பாற்கடல் சக்தி! நல்வரவு சகா!
நன்றி காமு மக்கா! :-)
நன்றி ஆ.ஆர்.ராமமூர்த்தி!
நன்றி ராஜி (எ) இயற்கை! :-)
நன்றி ரிஷபன்! :-)
நன்றி வசந்த்! @யப்பத்தா :-))
நினைச்சுக்கிட்டேன் மணிஜி! நன்றி மக்கா! :-)
நல்வரவு சுல்தான்.நன்றியும்!
நன்றி காவிரி!
நன்றி ராஜசுந்தரராஜன் அண்ணே!உங்கள் குரல் கேட்டுக் கொண்டதில் அவ்வளவு சந்தோசம்ண்ணே.அண்ணே,ஒரு விருப்பம் அல்லது வேண்டுதல் என்று கூட எடுக்கலாம்.வலை பூவிலும் நீங்கள் எழுத தொடங்கணும் அண்ணே...எங்களை மாதிரி வெளியில் இருக்கிற ஆட்களுக்காகவாவது வலையில் எழுதணும் அண்ணே.செய்வீங்களா?..
நன்றி நிலாமதி!
நன்றி ஜெஸ்!
நன்றி மாது!சந்தோசம் மக்கா..
நன்றி சித்ரா!
நன்றி ரோமியோ!
நன்றி சுந்தரா! அப்பாடி.. :-)
நல்லாருக்கீங்களா அம்பிகா?நன்றி மக்கா!
ஹா..ஹா..ஆத்மா சாந்தியா? நல்லாருங்க.. :-)
நல்வரவு dr.எம்.கே.முருகானந்தன் சார்!மிக்க நன்றி!
சந்தோசம்.மிக்க நன்றி விஜய் மக்கா!
ரொம்ப நன்றி கே.வி.ஆர்!
மிக்க நன்றி கவிதன்!
நன்றி ப.து.சங்கர்!
நன்றி வேல்கண்ணா!
நன்றி ஜனா!
நல்வரவும் நன்றியும், ஆயிரத்தில் ஒருவரான மணி! :-)
நல்வரவும் நன்றியும் மாரி-முத்து!
நன்றி ராஜசுந்தரராஜன் அண்ணே.மாத்தியாச்சு.(அலைச்சல்.மின் மடல் அனுப்ப தாமதம்..)
Post a Comment