நல்லாருக்கீங்களா மக்கா எல்லோரும்?
நீர்க் காகம் போல, இங்கு முக்குளிச்சு அங்கு எழுந்து, மஹா திருமணம் முடித்து, அங்கு முக்குளிச்சு இங்கும் எழுந்தாச்சு. சும்மா 'ஞொய்ன்னு' காதடைக்கிற தனிமையும் தொடங்கியாச்சு.
இன்னதென்று அனுபவிக்க இயலாத அனுபவமாக அமைந்து விட்டது இந்தப் பயணம். புதிது புதிதாக எவ்வளவு அனுபவங்கள், மனிதர்கள் குரல்கள்! மனசு முழுக்க அமுக்கி அமுக்கி எடுத்து வந்திருக்கிறேன். நேரம் கிடைக்கிற போதெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருந்தாலே போதும். எதிர்படும் இந்த இரண்டு வருட சுமை தெரியாது போகலாம்.
சரி,..மஹா திருமணதிற்கு வருவோம்..
மொழு மொழுவென எண்ணெய் தடவிய உடலுடன், தொடையை தட்டியபடி நிற்கிற சாண்டோ சின்னப்பா தேவரின் முன்பு, தொள தொள டவுசருடன், கூட்டத்தினரால் தள்ளிவிடப்பட்ட நாகேஷ் நிற்கிற அனுபவமாக இருந்தது மஹாவின் திருமணம்.
பயில்வானான மஹாவின் திருமணத்திடமிருந்து, நாகேஷான நான், ஓடி, ஓடி, வளைந்து, நெளிந்து, தாவிக்குதித்து, தப்பியும் வந்துவிட்டேன். தற்காப்பு கலையில் மிக முக்கியமானது, கால் கிளப்பி ஓடி தப்பிப்பதுதானே!
மகளின் திருமணமென்பது எவ்வளவு சந்தோசம்,நெகிழ்வு, மிரட்சி, தேக்க நிலை, பிரச்சினை, தட்டுப்பாடு, கண்ணீர், அனுபவமின்மை, என்பதெல்லாம் அறிய நேர்ந்தன. இவ்வளவையும் எதிர்கொள்ள, கடக்க, என்னிடம் ஒரே ஒரு அஸ்த்திரமே இருந்தது. என் நண்பர்கள் என்கிற அஸ்திரம்!
ஆம்! நண்பர்கள் கூடி இழுத்த தேர்தான் மஹாவின் திருமணம்!
"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன். உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்" என்று தழு தழுக்கிற அண்ணாத்துரை சித்தப்பாவின் பாடல்கள் கேட்காத எங்கள் இல்லத்திருமணம் இருந்ததில்லை மக்கா.
"முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒண்ணாக" என்று கரைகிற/ கரைக்கிற காளியப்பன் அண்ணனின் பாடல் மிக பிரசித்தம் எங்கள் திருமணங்களில்.
ஆண்களும், பெண்களும் அணி அணியாக பிரிந்து கொண்டு 'பாட்டுக்கு பாட்டு' பாடி சிரித்த திருமணங்கள்தான் எத்தனை எத்தனை!
இவை அத்தனையும் மஹா திருமணத்தில் இல்லாமல் போயிற்று. எனக்கு விபரம் தெரிந்து, உறவுகள் சூழாத ஒரே திருமணம் நம் மஹாவின் திருமணமாகவே இருக்கும்.
ஏன்?
ஏன் என்றால் என்ன சொல்லட்டும் மக்கா? ஒன்றை இழந்து ஒன்றை பெறலாம். எல்லாவற்றையும் இழந்து ஒன்றை பெற்றால், அந்த ஒன்று என்ன என்பதுதானே முக்கியம்!
அந்த ஒன்றாக இருந்தது மஹாவின் திருமணம்!
"டேவுலேய், ராஜா பயலே..நாங்களா முக்கியம்? எங்க போய்ட்டோம் நாங்க? .. ந்தா இருக்கு மஹா வீடு. மக்கா நாளு போய் பார்த்துர மாட்டமா மஹாவை? போட்டு உழண்டுக்கிட்டு இருக்காம ஆக வேண்டியதை பாருடா" என்று 'வெளியில் இருந்து' ஆதரித்தது மொத்த குடும்பமும்.
இப்படி ஒரு பக்கமாக குடம் சாய்ந்திருந்த சூழலை ஓடி வந்து தூக்கி நேர் செய்து தந்தார்கள் நண்பர்கள். நண்பர்கள் உறவினர்களாக நின்றார்கள்! உறவினர்கள் நண்பர்களாக நின்றார்கள்!.. "ரெண்டும் ஒன்னுதாலே..க்காளி ஒழுங்கா வேலையை மட்டும் பாருலே" என்றார்கள் இருவரும்.
பிறகென்ன...
பயில்வானிடமிருந்து ஓடி தப்பித்து, தப்பித்து ஓடி வெற்றியையும், தோல்வியையும் ஒரு சேர பெற்றான் இந்த நாகேஷ் அப்பா! (இதெல்லாம் சரி.. இந்த வெற்றி தோல்வி என்றால் என்ன?)
இப்படி,..கூடவே நின்றும், இன்னும் முகம் கூட பார்க்காத உங்களில் பலர், குரல் வழியாக ஆறுதல் சொல்லியும், மின்னஞ்சல் வாயிலாகவும் மஹா திருமணத்தில் கை நனைத்த நீங்களெல்லாம் யார்? மனசையும் மனசையும் இணைக்கிற இந்த திருகானிக்கு பெயர் என்ன மக்கா?நட்பென்றால் நட்பு! உறவென்றால் உறவு! இல்லையா?
என்ன செய்யப் போகிறேன் உங்களுக்கெல்லாம்?
சரி.. இப்படி அழுதா முடிக்கிறது ஒரு பத்தியை? அதுவும் நம் மஹா திருமணம் குறித்த பத்தியை...காலத்திடம்தான் எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறதாமே? அது எல்லாவற்றையும் சரி பண்ணி விடுமாமே?
**
இந்த மஹா குட்டி என்ன பண்ணா தெரியுமா மக்கா?
திருமணம் முடிந்து மூன்று நாள் இருக்கும்."என்னடா.. என்ன பண்ற?" என அழை பேசியில் அழைத்தேன்.
"அப்பா, இன்னைக்கு எங்க வீட்ல நாந்தான் சப்பாத்தி குருமா பண்ணேன்" என்றாள்.
"ஐயையோ" என்று சிரித்த எனக்கு ஒரு கவிதை நினைவு வந்தது. பிரமிளின் இந்த கவிதை முன்பு ஒரு அனுபவமாக இருந்தது. ஒரே கவிதை இரு வேறு அனுபவத்தை தருமா என்ன?
தந்ததே!
அந்தக் கவிதை..
"சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது."
செல்லட்டும்...செல்லத்தானே வேணும்!
Friday, December 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
62 comments:
எம்புட்டு நாளாச்சு, அண்ணனைப் பாத்து? மக கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதே பதிவுகள்ல படிச்சப்ப சந்தோஷமா இருந்துச்சு. இப்ப உங்க வார்த்தைகள பாக்கும்போது மனசு இன்னும் நெறஞ்சிருக்கு.
:) welcome back :)))
அப்பா. எவ்வளவு நாளாச்சு இப்படி எழுத்து படிச்சு.அப்பாவா இருந்துடலாம். இப்படி அழகா சொல்லணுமே. :)
அண்ணாச்சி எப்படி இருக்கீக? எல்லாம் நல்லபடியாக முடிந்ததாக சரவணன் பதிவிலேயே அறியமுடிந்தது. மகிழ்ச்சி. மகிழ்ச்சிகள் தொடரட்டும்...:))
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் எழுத்துகளை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி மஹாவின் திருமண புகைப்படங்களையும் நண்பர்களின் பதிவு வாயிலாக கண்டேன் வாழ்த்துகள் கவிஞரே நல்வரவு..
வாங்க சித்தப்பா
தங்கச்சி கல்யாணத்துக்கு வர முடியல ஆன எல்லா விவரமும் தெரிஞ்சுகிட்டேன்.
நெகிழ்ச்சியா இருக்குப்பா வாசிக்கும் போது உங்க உணர்வு எனக்குள்ளும் தொத்திகிடுச்சு!
/////"சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது."////////
என்னமோ பண்ணுது சார் ..,இந்த கவிதை .......,மிக பெரிய பிரம்மாண்டத்தை அலட்சியமாக இரு வரிகளில் சொன்ன கவி மேதை யார் சார் ?
கடேசி வரைக்கும் போன்லேயே ஓடிப்போச்சு பா.ரா. ஒங்க லீவு.
ஆனாலும் நீங்க இங்க வந்துட்டீக்க இல்ல அடிக்கடி பாப்போம்.
ப்ரமீளோட கவிதையில முடியல இந்த இன்னிங்ஸ்.
மறுபடியும் துவங்கியிருக்கு.
நகுலன் ?? பிரமிள் ????????? யார் சார் ? இக்கவிதை இடம் பெற்றுள்ள புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆவல் ..,
/// ப்ரமீளோட கவிதையில முடியல இந்த இன்னிங்ஸ்./////
நன்றி சுந்தர்ஜி ....,இப்புத்தகத்தை பற்றிய மேலும் சில தகவல்கள் தந்தால் தன்யனாவேன்
மாம்ஸ் எப்படி இருக்கீங்க.. மஹா கல்யாணத்த பத்தி எல்லாரும் பத்தி பத்தியா எழுதினத பார்த்து ஒரு விதமான ஏக்கம்தான் மனசுக்குள்ள நம்மாளால அங்க இருக்க முடியலையேன்னு...
அதான் உங்க மகத் திருமணத்தை ஒட்டு மொத்த தமிழ் பதிவுலகமே கொண்டாடிச்சு இல்ல! எல்லோரையும் அணைச்சு அசத்திட்டீங்க. வாழ்த்துகள்.
பெண்ணின் மணவாழ்க்கை சிறக்கட்டும். அப்பாவும் ஆறுதலாகப் பெருமூச்சு விட்டு எங்களுடன் தொடர்ந்து உரையாடட்டும்.
மஹா நல்ல படியாகக்குடும்பம் நடத்தி உங்களை மகிழ்விப்பாள்.
மக்கா, எப்படியிருக்கீங்க...?
உங்களை சந்தித்த நினைவுகள் சந்தோஷங்களைத் தந்துகொண்டு இருக்கின்றன, இந்த எழுத்துக்கலைப் போல!
நல்வரவு
வந்திட்டீங்களா, தம்பி, வாங்க. இந்த எழுத்துலகம் இதுதான் நம்ம இடம்.
சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதி எழுதிச் செல்கிறது
என்று எழுதி எழுதிச் செல்லலாம். எல்லாம் வந்து கூடும், கவலையெ விடுங்க.
வந்திட்டீங்களா, தம்பி, வாங்க. இந்த எழுத்துலகம் இதுதான் நம்ம இடம்.
சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதி எழுதிச் செல்கிறது
என்று எழுதி எழுதிச் செல்லலாம். எல்லாம் வந்து கூடும், கவலையெ விடுங்க.
welcome back raja anna :))
:-)))))))
தூத்துகுடியில் கண்டெடுத்த முத்தை சென்னையில் தவற விட்டு விட்டேன்.
பாருங்க.. எனக்கு கூட இலக்கியம் வருது..
வாங்க பங்காளி
பத்திரிக்கை அனுப்பல
மெயில் பண்ணல
நடத்துங்க
(வந்த உடனே பங்காளி சண்டை ஆரம்பிப்போமில்ல)
விஜய்
welcome back
வாங்க வாங்க ...
வரிகள் ரொம்ப ஈரமா இருக்கேப்பா..ரொம்ப வலிக்குதா..
விடுங்க, தங்கச்சி இனிமே உங்களுக்கு சொல்லித் தருவாங்க..
கும்மி, நலமா? சந்தோசமும் நன்றியும்!
கௌரி, நன்றிடா!
நன்றி பாலாண்ணா! உங்களைத்தான் பார்க்க முடியாமல் போச்சு.
நல்லாருக்கேன் பிரதாப். நீங்க நலமா? நன்றி மக்கா!
வசந்த் தம்பு, மிக்க நன்றி! (@கவிஞரே- உதை படவா :-)
@தேவா, சரி. இப்போ என்ன? ஊருக்கு போகும் போது தங்கச்சியை போய் பார்த்துட்டு வாங்க. சரியா? நன்றி மகன்ஸ்!
வாங்க தில்லு முல்லு! நன்றியும் அன்பும்!
@சுந்தர்ஜி, எனக்கும் உங்களை சந்திக்க முடியாத குறையே. சரி!..எழுத்து காட்டாததையா, நேரில் நாம் எடுத்துவிடப் போகிறோம்? நன்றிஜி!
@ராமசாமி, யோவ்..மாப்ஸ்! நலமா? நாந்தான்யா உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன். நன்றி மாப்ள!
@ சேது, நலமா? ரொம்ப நன்றி மக்கா!
ரொம்ப நன்றி வல்லிசிம்ஹன்! நல்லாருக்கீங்களா?
மாது மக்கா! நலமா? சிரிப்பையும், பேச்சையும், கைச் சூட்டையும் பத்திரமாக கொண்டு வந்திருக்கிறேன். நன்றி மக்கா!
நன்றி நசர்! நலமா? :-) (உமக்கு மட்டும் ஒரு ஸ்மைலி போட தோணுதே. ஏன் ஓய்?)
வந்துட்டேன் அண்ணே. நலமாண்ணே? ரொம்ப நன்றிண்ணே!
நன்றிடா சக்தி! நலமா பயலே?
நன்றி ராகவ்! :-)
சூர்யா, நலமா? நன்றி மக்கா!
நிறைய விட்டுப் போச்சு பங்காளி. நீர் கேட்காமல் யார் கேக்குறதாம்? விடும்..சொத்தையாவது சரியா பிரிப்போம். :-) நலம்தானே பங்கு? நன்றியும்!
டி.வி.ஆர். சார், நல்லாருக்கீங்களா? நன்றி சார்!
கமலேஷ் குட்டி, நல்லாருக்கியா? எல்லாம் சரியாகும்டா பயலே. சரியா? நன்றி கமலேஷ்!
அப்பா அங்க போயாச்சா? அட அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கியாச்சா..அப்பா அலைபேசுகிறேன்....
தொடக்கமே அமர்களமா இருக்கு.. மஹா எப்படி இருக்கு பா ?
"சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று
பிரமிள்"வரிகளை எடுத்து பயன் படுதுனதுக்கே உங்களுக்கு முத்தம் கொடுக்கணும் மாம்ஸ்
என்ன பொருத்தம் !!!!!!!!!!!!!!!!!
//"சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது."//
பிரமிளின் இக்கவிதையை என் நண்பர் அல்லியான்ஸ் ஃபிரான்சேஸ் ஸ்ரீராம் பிரெஞ்சில் மொழிபெயர்க்க, அதன் கரு பிரெஞ்சு கவிஞர் ழாக் ப்ரெவெற்-ன் ரேஞ்சுக்கு இருப்பதாக கூறபட்டது, விஷயம் தெரிந்த பிரெஞ்சுக்காரர் ஒருவரால்.
அதன் பிரெஞ்சு மொழியாக்ம் இதோ:
"Isolée de l'ail, s'envole une plume
écrivant la vie d'un oiseau dans
les pages vides du ciel"
உங்கள் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மஹா வின் அப்பா,
மஹா ப்ரியக்காரன்,
வலையுலகை உறவாகக்கோர்த்த
எங்கள் பாரா.
எழுத்து வார்த்தை குரல் உடல்
எல்லாத்தையும் ப்ரியத்தால் வடிவமைந்த
எங்கள் தோழர் வாங்க
மற்றவை எழுத்தில்.
ராஜாராம், ஒரு கவிதை தரும் பன்முகப்பார்வையை பிரமிளின் இந்தக்கவிதை நிருபித்திருக்கிறது. தந்தைக்கும் மகளுக்குமான உறவுக்குள்ளேயும் இதை பயன்படுத்தி உணர்வது மிகச் சிறப்பானது. எல்லாம் நல்லபடியாக நடக்கும். நாங்களும் இருக்கிறோம்.
- பொன்.வாசுதேவன்
வணக்கம் தம்பி.. அப்பிடித்தான் அழைக்கணும். அவ்ளோ இளமை பாஸ் நீங்க நேரில்.
கடைசிவரை என் வீட்டுக்கே போகலை என் சித்தப்பன்...
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
வாங்க..வாங்க.. ரொம்ப சந்தோஷம் மீண்டும் இணையத்துக்குள்ள சொந்தங்களை சந்திப்பதில்... ஒவ்வொரு முறையும் ‘ஏ...மாப்ள’ ன்னு மாற்றி அழைச்சிங்களே... அந்த குரல் இன்னும் அப்படியேத்தான் சுற்றுகிறது.. அடுத்தமுறை மாமான்னு கூப்பிடலாம்னு பாத்தா அதுக்குள்ள ஊருக்குப்போயி எட்டிப்பாக்குறீங்களே...
:)
வருக வருக..
மக்காஆஆ....
//நட்பென்றால் நட்பு! உறவென்றால் உறவு! இல்லையா?//
ஆமாண்ணே :)
அப்பா பா பா பா பா பா பா பா...... உணர்வுகளை இவ்வளவு அழகா சொல்ல தமிழ் இருக்கு எங்க அப்பன் பா.ரா. இருக்காரு...!!!
எம்பூட்டு நாளா F5 அமுத்திக்கிட்டே இருப்பது...
சப்பாத்தி சுட்ட என் தங்கைக்கு முதல்ல ஒரு கவிதைப் பரிசு கொடுங்க...[நேயர் விருப்பம்]
எப்பவும் போல மகியக்கா லேட்டுதான் எதிலும். ஆனாலும் இப்படி வாசிக்க கொடுத்து வைக்கனுமே . இப்படி ஊருக்கு வந்து போன அனுபவத்தை எழுதினாலே போதும் . ஓடிவிடாதா வருடங்கள் வாழ்த்துக்கள் தம்பி
வெல்கம் பேக்.
வாங்க ராஜாராம். எப்பிடி இருக்கீங்க மக்கா?
பிரிவுத் துயர் எழுத்தில் தெரிகிறது . இப்போதெல்லாம் உலகம் மிகச் சிறிதாகிக் கொண்டிருக்கிறது. காலம் நிச்சயம் மருந்தாகும்.
:-) Maamaa..
Kannukkulleye nikkirenga ponga.. :-)
நல்வரவு
வினோப்பா, அப்பா வந்துட்டன். மஹாவும் நலம். இனி, அடிக்கடி பேசுவோம். சரியா?
பாலா மாப்ஸ், மிக்க நன்றி ஓய்! நலமா?
ரொம்ப நன்றி டோண்டு சார்! உங்கள் பகிர்விற்கும்!
காமு மக்கா, ஆம், மற்றவை இனி எழுத்தில்தான். நன்றி காமு டியர்!
ரொம்ப நன்றி வாசு! நீங்கல்லாம் இருக்கும் போது எனக்கென்ன?
சரிங்ண்ணா நர்சிம்! "சூழலை சுவராஸ்யம் ஆக்குவது எப்படி?" உங்க அடுத்த புத்தகமாமே? நன்றி நர்சிம்!
மகன்ஸ் ரோஸ்விக், நேரமின்மையும் மன அழுத்தங்களும் நிறைய. பேசுவோம். மன்னியுங்கள். நன்றி மகன்ஸ்!
நன்றி வேல்கண்ணா! :-)
ஆமாம்தான் மாப்ள! ஹி..ஹி..இப்பவும் பாலாசியா? பேசாமல் பாலாங்கிற பேரை எல்லாம் மாப்ளன்னு மாத்திட்டா என்ன? நன்றி பாலாக்களா அல்லது மாப்ளைகளா! :-)
நன்றி சென்ஷி! நலமா மக்கா?
really, mis u MANIJI! luv u 2!
ஆமாம்தானே அக்பர்! நன்றியும்!
மகன்ஸ் பெரும்படை அய்யனார், நலமா? கொடுத்துட்டா போச்சு. நன்றி மக்கா!
நாந்தான் மிஸ் பண்ணிட்டேன் மஹிக்கா. என்றாலும், எல்லாத்துக்கும் ரொம்ப நன்றிக்கா!
வித்யா, மிக்க நன்றி!
ஜெஸ் மக்கா, நலம்! நீங்க நலமா? sure..thanks makka!
சிவாஜி மாப்ஸ், ரொம்ப நன்றி! :-)
நன்றி இளம் தூயவன்! நல்லாருக்கீங்களா?
மேய்ச்சலுக்கு போய்த் திரும்பும்
மந்தையில் பிந்திப் பிந்தி வருகிறது
சினைப் பசு
பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு ஊர்போயிருக்கும் பக்கத்து வீட்டு வாசலுக்கும் கோலம் போட்டு கிடந்தது
மனசு
*******************
”இங்கிருந்துதான்
போனோம்.
அங்கு இருந்தோம்
இல்லாமல்.
பிறகு,
இங்கு கொஞ்சம் வந்தோம்
அங்கு கொஞ்சம் விட்டு.”
நினைவுக்கு வந்தது பா.ரா
”சைக்கிள் முன்னிருக்கையில்
அமர்த்திய மகளின் வெறுங்கழுத்தில்
சவரம் செய்யாத நாடி கொண்டு
கூச்சம் செய்ய இயலவில்லையெனில்
என்ன பயன் பெண்ணை பெற்று?
கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?
பேரனின் சிறுநீர்
நனைக்காத நெஞ்சுக்குழி
இருந்தென்ன மயிறு வெந்தன்ன?”
இதுவும்
சீக்கிரம் நெஞ்சுக்குழி நனையட்டும் :)
பேசுவோம் மக்கா
என்ன சித்தப்பா... வந்தாச்சா...
வருத்தங்களிடையேதான் வாழ்க்கை இனிக்கும்.
மஹா திருமணம் என்ற பெரிய சுமையை இறக்கி வந்திருக்கிறீர்கள். இது சுமையல்ல... நீங்கள் சுமந்த சுகம்.
இன்னும் எழுதுங்க... அடிக்கடி எழுதுங்க... எத்தனை நாளாச்சு.
//செல்லட்டும்...செல்லத்தானே வேணும்!//
வாழ்த்துவோம் மாமா.
:))
அட! பாரா அண்ணன் வந்தாச்சா?
மகிழ்ச்சி. மகிழ்ச்சிகள் தொடரட்டும்...:))
சார்!! உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
நேசா, எவ்வளவு காலமாச்சு.. குழைய குழைய அன்பள்ளி, மன விரிசலில் பூசும் உன் பின்னூட்டம் பார்த்து! நல்லாருக்கியா மக்கா? நன்றிடா பயலே!
குமார் மகன்ஸ், நம்ம பக்கத்து காற்றையும் உள்ளங்கையில் சேந்தி கொண்டு வந்திருக்கேன். ஊதி விடுகிறேன். ஏந்திக் கொள்ளுங்கள் நலம்தானே மகன்ஸ்? நன்றியும்!
சத்ரியன் மாப்ஸ், நலமா?மஹாவின் திருமணத்திற்கு முக்கியமான ஆள் இல்லையா? நீர் வாழ்த்தாமல்.. நன்றி மாப்ள!
மிக்க நன்றி அமித்தம்மா! :-)
வந்தாச்சுடா அம்பிகா! கண்டிப்பா! நன்றிடா!
ந்தா வந்துட்டேன் அப்துல் காதர் சார்! மிக்க நன்றியும்!
/மகளின் திருமணமென்பது எவ்வளவு சந்தோசம்,நெகிழ்வு, மிரட்சி, தேக்க நிலை, பிரச்சினை, தட்டுப்பாடு, கண்ணீர், அனுபவமின்மை, என்பதெல்லாம் அறிய நேர்ந்தன. இவ்வளவையும் எதிர்கொள்ள, கடக்க, என்னிடம் ஒரே ஒரு அஸ்த்திரமே இருந்தது. என் நண்பர்கள் என்கிற அஸ்திரம்!/
ஆஹா...என்கிறது நெகிழும் மனம்!
சத்தியமாக, படித்து முடிக்கும் போது ஒரு துளி கண்ணீர் துளிர்த்து.
நல்லா இருப்பீங்க மக்கா !
அண்ணா வந்தாச்சா.சுகம்தானே.இனி என்ன...கலக்கல்தான்.நாங்களும் இருக்கோம் உங்ககூட !
எத்தனை உள்ளங்கள் இந்த கருவேல நிழலுக்காக காத்துகொண்டிருந்தோம்
மகாவும் மாப்பிள்ளையும் மற்றும் குடும்பத்தார்கள் அனைவரும் நலமா?
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
டீச்சர், வணக்கம்! நல்லாருக்கீங்களா? நன்றி டீச்சர்!
நன்றி பாலகுமார்! நலமா?
வந்தாச்சுடா ஹேமா. நலமே. நீ நல்லாருக்கியா? நன்றிடா பயலே!
எல்லோரும் நலம் மகன்ஸ், ராஜவம்சம்! நீங்க நலமா? மிக்க நன்றியும்!
அண்ணே வாங்கண்ணே, உங்களை சந்திக்க முடியாம அந்த குறிப்பிட்ட நாள்ல வேலைப்பளு அழுத்திக்கிடந்தது, இனிமே உங்களை உங்க எழுத்துக்களில் இங்கு சந்திக்க முடிவதில் மிக்க மகிழ்ச்சி
சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று கவிதை நானும் கேள்வி பட்டுள்ளேன். ஆனால் அதனை நீங்கள் உபயோகம் செய்த இடம் வாசிக்கும் போது கண்ணில் நீர் கோர்த்தது . நானும் ஒரு பெண்ணுக்கு தகப்பன் என்கிற முறையில் அதே உணர்வுடன் பதிவு முழுதும் வாசிக்க முடிந்தது.
அலுவலக போர்ட் மீட்டிங் நேரம் என்பதால் திருமணம் வர முடியாமல் போனது. உங்களையாவது ஒரு முறை சந்தித்திருக்க வேண்டும். ம்ம் என்றாவது ஒரு நாள் சந்திக்காமலா போக போகிறோம்?
நேசமித்திரன் பின்னூட்டம் அற்புதம்.
நன்றி செந்தில்! தொகுப்பிற்கு வாழ்த்துகளும்!
கண்டிப்பா சந்திப்போம் மோகன்ஜி. எங்கே போய்விடப் போகிறோம். நன்றி ஜி!
அண்ணா நான் மஹா கிட்ட பேசின்னப்பவும் சப்பாத்தி பண்ணிட்டு இருக்கறதா தானே சொன்னா? ஒரே நாளில் போன் செய்தோமா
Post a Comment