Thursday, February 24, 2011

தீர்ப்பு


(Picture by cc licence, Thanks Ajay Tallam)

வர்கள்
சந்தித்துக் கொள்வதாக
ஏற்பாடாயிற்று.

வள் சார்பாக சிலர்
இவன் சார்பாக சிலர்.

பேசித் தீர்க்கவியலா
பிரச்சினை எதுவுமில்லையென
நம்பினார்கள் பேசினார்கள்.

பேச்சு தோல்வியுற்றபோது
குழந்தை யாரிடமிருப்பதென்பது
பேச்சாக மாறியது.

குழந்தையிடமே கேட்பதாக
முடிவாயிற்று.

தீர்ப்பை வழங்கும் முன்,
அழுது கொண்டிருந்த ஆயாவை
கண்ணுற்ற குழந்தை...

ழத் தொடங்கியது.


--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!






38 comments:

க ரா said...

மாம்ஸ் எங்கள மாதிரி குழந்தைகள அழ வெக்கிறதே ஒங்களுக்கு வேலையா போச்சு

dheva said...

சித்தப்பா... ஒரு மாதிரி சுத்தி வளைச்சு நேரே பிடிக்க முடியாம...மறைமுகமா ஆனா கனமான வலியை பரவவிட்டே தீருது கவிதை....!

Chitra said...

சோகமாக இருந்துச்சு.... :-(

வினோ said...

முடிக்கறதா இல்லை.. இல்லபா?

ஓலை said...

Nice Pa.Ra.

சுசி said...

பாரா..

vasu balaji said...

செவிட்டுல பொளேர்னு விழுது அறை.

Unknown said...

நல்கவிதை

காமராஜ் said...

இந்த நிழற்படத்தை விழுங்கி இன்னொரு நிழற்படத்தை கொண்டுவந்து பிழிபிழிய மாட்டுகிற கை.அசத்தல் போர்ட்ரைட்.
அதுதான் கவிதையின் வலிமை. ஒரு சிறுகதையில் சொல்லவேண்டியதை.கவிதைக்குள் அடக்க முடிகிற பாரா அதுவும் எங்க பாரா.

ராமலக்ஷ்மி said...

உருக்கவும் உலுக்கவும் செய்து விட்டன வரிகள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//பேசித் தீர்க்கவியலா
பிரச்சினை எதுவுமில்லையென
நம்பினார்கள் பேசினார்கள்//

பேச்சுக்கள்தான் பிரச்சனைகளுக்கே காரணம்.

//தீர்ப்பை வழங்கும் முன்,
அழுது கொண்டிருந்த ஆயாவை//

இன்னும் மீதமிருக்கிற அன்பும் பரிவும்
கவிதையை உயர்த்துகிறது பா.ரா.

ஈரோடு கதிர் said...

விகடனில் வாசித்தேன்...

உருக்கமான வரிகள்

Unknown said...

'தீர்ப்பு' நல்லாயிருக்கு.

சௌக்கியம் மாமா. அங்கிட்டு எப்பிடி..?

தமிழ் உதயம் said...

உண்மைகளை மாற்றி எழுத முடியவில்லை. விளைவு கவிதை. அருமையான கவிதை.

Sriakila said...

சே! குழந்தை ரொம்ப பாவம்..

rajasundararajan said...

'விசயம் ரத்த சம்பந்தத்தில் (பெற்றோர்) இல்லை; வெளிப்படும் செயற்பாட்டில் (ஆயா) இருக்கிறது' என்று கண்டுணர்ந்து வருந்தி அழுகிறது வருங்காலம் (குழந்தை).

வர்ணாசிரம தர்மத்துக்கு எதிரான கவிதையோ?

VELU.G said...

மனசு கனக்கும் நிகழ்வு

எல்லாவற்றிற்கும் தீர்வும் தீர்ப்பும் பெற்றோரிடமே இருக்கிறது. அது ஈகோவில் இருக்கக்கூடாது

அம்பிகா said...

//தீர்ப்பை வழங்கும் முன்,
அழுது கொண்டிருந்த ஆயாவை//
தீர்ப்பை மட்டுமல்ல, வழக்கையும் சேர்த்தே சொல்கின்ற வரி.

சாந்தி மாரியப்பன் said...

அசத்தறீங்க பாரா அண்ணா..

MANO நாஞ்சில் மனோ said...

மனசுக்கு கஷ்டமா இருக்குய்யா....

அன்புடன் அருணா said...

அச்சோ...

செ.சரவணக்குமார் said...

காமு அண்ணனின் கருத்தே எனதும்.

எங்கள் பாரா..

இல்லையா காமு அண்ணா...

க.பாலாசி said...

ஓங்கி நடு முதுகுல ஒண்ணு வச்சமாதிரியிருக்கு... பளிச்.. யதார்த்தமும்..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

"யாரிடம் இருக்கிறாய் ? அப்பாவிடமா? அம்மாவிடமா? மூன்றாவது ஒருவரை சொன்னது குழந்தை "ஆயாவிடம்" சின்ன சின்ன விஷயங்களை அழகாகச் சொல்லும் உங்கள் திறமைக்கு தலைவணங்குகிறேன்

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு

Sugirtha said...

பா.ரா,

வாழ்க்கை தன் வலி மிகுந்த விளையாட்டுக்களை அம்மா, அப்பா, ஆயா மட்டுமில்லாமல் குழந்தையிடமும் விளையாடிக் கொண்டேதான் இருக்கிறது...

//அழத் தொடங்கியது//

செய்ய முடிவது, அது மட்டும் தானே?! நல்ல கவிதை...

பா.ராஜாராம் said...

இரா மாப்ள, சந்தடி சாக்குல நீர் குழந்தை ஆகிறீராக்கும்?) நடத்தும்..:-) நன்றி மாப்ஸ்! (திரும்பிட்டீர் போல)

நன்றி மகன் தேவா!

நன்றி சித்ரா! //இருந்துச்சு// ஐ!..எங்க பாஷை! :-)

நன்றிடா வினோ! :-)

நன்றி சேது!

//பாரா// பார்ரா.. சுசியை!.. நன்றி பாஸ்!

நன்றி பாலாண்ணா!

நன்றி கலாநேசன்!

நன்றி காமு மக்கா! நாளைக்கு சாகலாம் காமு, சரவணா! வெந்துருவேன் :-)

சகா, ரா.லெ., நன்றி! :-)

நன்றி சுந்தர்ஜி! //பேச்சுக்கள்தான் பிரச்சனைகளுக்கே காரணம்// சூப்பர்! :-))

நன்றி கதிர்! நல்ல எடமா பார்த்து நின்னுட்டீங்களா? :-))

மாப்பூ ஆண்ட்ரூனா, நலமே! நன்றியும் ஓய்! :-)

நன்றி தமிழ் உதயம்! நல்லாருக்கீங்களா?

வாங்க ஸ்ரீஅகிலா, நன்றி!

அண்ணே..குரல் தேடுது.. நாளை அழைக்கணும். நன்றியண்ணே!

நன்றி வேலுஜி!

நன்றிடா அம்பிகா!

நன்றிடா சாரல்!

மனோ, தொடர் வருகை.. நன்றி!

நன்றி டீச்சர்!

என் காமு, சரவணா, நன்றி!

மாப்ஸ் பாலாஜி, நன்றி!

நன்றிங்க நாய்க்குட்டி மனசு! ரொம்ப நாள் ஆச்சு! நலமா?

சுகிர்தா, ரொம்ப நன்றி!

"உழவன்" "Uzhavan" said...

மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் :-)

உயிரோடை said...

சில‌ விச‌ய‌ங்க‌ள் பேசினால் தீர்வு வ‌ருவ‌தில்லை. ப்ர‌பா விச‌ய‌ங்க‌ள் போல‌ மேலும் பல‌‌

சிநேகிதன் அக்பர் said...

அருமை அண்ணே

ஹேமா said...

அண்ணா...இப்படி எத்தனை உண்மைக் கதைகள் !

பா.ராஜாராம் said...

நன்றி நவனி!

லாவண்யா, நன்றிடா!

நன்றி அக்பர்!

நன்றிடா ஹேமா!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உலுக்கி விடும் வரிகள் ராஜாராம்.நிதர்சனம்

rvelkannan said...

ஏதோ நொறுங்குகிறது ...
(புகைப்பட குழந்தைபோலவே
சில சமயம் நானும் அழ வேண்டும் போலிருக்கிறது )

VISA said...

அருமை

Unknown said...

உருக்கும் வரிகள்...அருமை

அண்ணாதுரை சிவசாமி said...

ஆனந்தவிகடனில்..ஒரேஒருமுறை..தனது கவிதை
வெளியானதை..சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறான்..
'ஆனந்தவிகடனும் நானும்'..என்ற கட்டுரையில்..
'ரன்' பட..டைரக்டர்.உன் கவிதைகள்..எத்தனை முறை
ஆனந்தவிகடனில்..நீ..எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பாய்!
போதும்டா ராஜா!எந்தத் துயரத்தையும்..அணைபோட..
ஒரு வழியைத்தான்..காண்பிக்கிறான்..இறைவன்!நன்றி
சொல்வோம்!

பா.ராஜாராம் said...

நன்றி ஜெஸ் மக்கா!

நன்றி வேல்கண்ணா!

விசா, நலமா? நன்றி மக்கா!

நந்தா ஆண்டாள்மகன், நன்றி பாஸ்!

சித்தப்பா, யே..யப்பா. எவ்வளவு நாளாச்சு, சித்தப்பா பின்னூட்டம் பார்த்து! நன்றி சித்தப்பா! :-)