(ஆனந்தவிகடனில் பிரசுரமான எனது படைப்பு)
முன்பொரு சமயம்
சரசு அத்தை கண் பொத்துவாள்
எல்லோரும் ஒளிந்துகொள்வோம்
இவள் உட்பட...
" பிச்சிபூவே பிச்சிபூவே மெல்ல வந்து கிள்ளி போ"
பிச்சிபூவும் கிள்ளாமல் கிள்ளிப்போகும் !
அது என்ன வகை என்று
அறியாது கழியும் காலாண்டு விடுமுறை.
குளியலறை, சமையலறை, சாமியறை,
மாடிப்படி தாழ்வாரம், என
எவ்வளவோ இருக்கிறது
இவளை சுவாசித்தபடி ஒளிந்த இடங்கள்!
அது என்ன வகை என்று
அறிந்தே கழியும் அரையாண்டு விடுமுறை.
முழு ஆண்டு விடுமுறை
அறுபது நாட்கள்
அத்தையின் வீடே
ஆடித்தான் அடங்கும்
பிறகுக்கு பிறகு
ஒரு பிறகு வந்தது...
அதில்...
அப்பாவும் மாமாவும் முறுக்கி கொண்டார்கள்.
அம்மாவும் அத்தையும் பேசுவதே இல்லை
எங்காவது, எப்பொழுதாவது
அத்தையை காண்கையில்,
சேலைத்தலைப்பை இழுத்துபோர்த்தியபடி
"வாங்க தம்பி" என்கிறாள்
சரசு அத்தை.
என்று நான் அத்தைக்கு
தம்பியானேனோ
அன்று தொலைந்தது
எல்லாம்!
12 comments:
inkeyum unthath thodukai undu
தெரிந்தே தொலைத்ததை தேடுவதில்
அர்த்தமில்லை
nandri chitthappaa..avathaani
இது(வும்) நல்லா இருக்கு ராஜாராம்.
உன் வரவிற்கு பிறகு நிறைய
புது நண்பர்கள் கிடத்திருக்கிறார்கள்டா,சுந்தரா,
எல்லோருக்கும் பதில் எழுத சந்தோஷ திணறல்!
நீ நல்லாருக்கு என்று சொன்னால்,கவிதை
அபாய கட்டத்தை தாண்டிவிட்டது என கொள்ளலாம்.
நம் மகா,ஞாபகங்கள் கவிதைக்கு,மறுமொழி இட்டிருக்கிறாள்,
நம் காவ்யாவும் வருவாள்,கவலை படேண்டா சுந்தரா..
நன்றி சொல்லனுமா உனக்கு..
உங்கள் பின்னூட்டங்களில் தெறிக்கும் நெகிழ்வு சில சமயம் கவிதைய விட நன்றாக இருக்கிறது
உங்களுக்கு என் அன்பு
வாழ்வின் உன்னத தருணங்களை மீட்டெடுக்க
துணை செய்யும் சொற்களுக்கு நன்றி எப்படி சொல்வது
பா.ரா
மிக மதிக்கும் ஜ்யோவ் , அய்யனார் எனப் பெரும் கலைஞர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து போவது நெகிழ்த்துகிறது
அன்புமிக்க அய்யனார்...சுந்தராவின் மூல மாகவே நீங்கள் அறிய கிடைத்தீர்கள்.பிறகு நீங்களாகவே வேறு வேறு தளங்களுக்கு என்னை இழுத்து சென்று கொண்டிருகிறீர்கள்...மனசை குலுக்கி உணர்த்தியது உங்களின் "சாமியார் செத்துபோனார்"உங்களின் வரவும்,அன்பும் நண்பன் நேசமித்ரன் சொன்னது போல் அவ்வளவு கௌரவமாக உணர்கிறேன்...
ஆமாம்தான் நேசா...அவ்வளவு பெரிய கலைஞர்கள் நம் மனிதர்கள் எனும் உணரும் தருணம்...பூரணமாகிறது!..கூடவே வந்து கொண்டாடும் உன் அன்பு இன்னும் சிலிர்க்கிறதுடா நண்பா...இங்கிவனை யான் பெறவே...
உறவுகளுக்கு இடையேயான நுண்மையான விஷயங்களைத் தேடித் தேடி எழுதி இருக்கிறீர்கள். அருமை அருமை!
-ப்ரியமுடன்
சேரல்
நுண்ணிய உணர்வுகள் தோறும் கை இணைக்கிற உங்கள் அன்பு மற்றுமொரு பந்தம் சேரல்.அன்பும் நன்றியும்!
அருமையாக வந்திருக்கிறது!
வாழ்த்துக்கள்!
Post a Comment