Friday, June 19, 2009

பன்னீர் மரம்



ல்ல மழைகாலம்..
அறுவடைக்கு ஆள் சொல்லிபோனது.
பெரிய கண்மாய் நிரம்பி தளும்பும்.
வேட்டி சட்டையை தலையில் சுற்றி
அக்கறை போனால் நிச்சயம் எனலாம்.
போகாவிட்டாலும் பங்கு வரும்.
அறுவடைக்கு போவது
பாதி என்றாலும்
மீதி என்னவோ
களத்து மேட்டு
பன்னீர் மரத்துக்குத்தான்.

ஞ்சம் போன வருஷமே
பூத்து சிரித்தது சனியன்!


6 comments:

Kannan said...

நெஞ்சோரம் உரசி செல்கிறது, மனதில் இருப்பதை வார்த்தையில் வடிக்கும் வித்தையை எங்கு கற்று கொண்டீர்?

http//azutham.blogsot.com said...

பன்னீர் மரம் போல் நாமும் இருக்கலாமே.இல்லையா?

அன்புடன் அருணா said...

//பஞ்சம் போன வருஷமே
பூத்து சிரித்தது சனியன்!//
அச்சோ....! பூங்கொத்து!

பா.ராஜாராம் said...

வருகைக்கு நன்றி ”அன்புடன் அருணா ”.

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றிடா கண்ணா...வானியங்குடியில்தான்!வேறு எங்கு போக முடியும் நாம் எல்லோரும்...

பா.ராஜாராம் said...

"பன்னீர் மரம் போல் நாமும் இருக்கலாமே"
மனசிற்கு பன்னீர் தெளிக்க ஒரு மனசு வேணும்!இந்த அப்பாமார்கள் இருக்கும் வரையில் பூத்து சிரிக்கும் எந்த பன்னீர் மரமும்!நன்றி சொல்லனுமா சித்தப்பா?...