இது நம்ம வசந்த் product! நவாஸ் மெயின் டீலர்!போட்டு தாக்கிட்டாரு நம்மளை. நீங்க ரெண்டு பேரும் கியாரண்டின்னா... கேட்டுரலாம் பத்து வரத்தை!
வரம் ஒன்று:
அமுதா கொட்டகைக்கும் கிராமத்துக்கும் 3கி.மீ...குறுக்கு வழியாய் அப்பா அழைத்து போனார். பாதி தூரத்தில் நடக்க முடியலைன்னு அப்பா தோளில் தூக்கிகொண்டார். மார்பில் இல்லை. தோளில்! தலை மறைக்கும்ன்னு மணல் குவித்து அமர்த்தினார். துவாரத்தில் இருந்து பீச்சும் ஒளியை திரும்பி, திரும் பி பார்த்தபடி பார்த்த அந்த முதல் திரைப்பட நாளை திருப்பி தர சொல்லுங்க வசந்த்!
வரம் ரெண்டு:
ராமேசுவரத்தில், தாத்தா ஒருவரின் ஷஷ்ட்டியப்த்த பூர்த்தி. பசிக் குதுன்னு அம்மாவிடம் அழுதேன். அந்த அறையில் போயி, அர்ச்சனைக்குன்னு வைத்திருந்த தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை அம்மா எடுத்தாள். யாரோ வர, அம்மா மீண்டும் அந்த தட்டிலேயே போட்டாள். பிள்ளை பசிக்கு அம்மா திருடக்கூட செய்வாள் என்றுணர்ந் த அந்த நாளை திருப்பி தர சொல்லுங்கள் நவாஸ்.
வரம் மூன்று:
கிணற்றடி முற்றத்தில், வானம் பார்த்தபடி முனியம்மாள் அக்காவை கட்டிக்கொண்டு, கதை கேட்ட கதைகளில் ஒரு கதையை உங்கள் தேவதையை சொல்ல சொல்லுங்கள் வசந்த்.
வரம் நான்கு:
வெங்கடேஸ்வர ஐயர் வீட்டில் இருந்து மாங்காய் திருடி, ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு செல்வராஜுடன் தின்ற எவ்வளவோ நாட்க்களில் ஒரு நாளை தேவதையிடமிருந்து வாங்கி கொடுங்க நவாஸ்.
வரம் ஐந்து:
அஞ்சாவது படிக்கிறேன் அப்போ... ராஜ்மோகனுடன் செட்டி ஊரணி கரை வழியாக பள்ளி செல்லும் போது இரண்டு ஆடுகள் விளையாடிக்கொண்டி ருந்தது. அம்மா அப்பா விளையாட்டு!.. அன்று அவன் சொல்லித்தான் தெரியும். முதல் நாள் வரையில் தாலி கட்டினால் போதும், குழந்தை பிறந்திரும் என்று நம்பிக்கொண்டிருந்த அந்த அப்பாவி சிறுவனை திருப்பி தர சொல்லுங்கள் வசந்த்!
வரம் ஆறு:
"ரொம்ப பாக்காதீங்க மாமா.. அப்புறம் சலிச்சு போயிரும்" என்று சிரித்தபடி சொல்லி போனாள் அவள். அந்த முதல் காதலின் முதல் நாளை திருப்பி தர முடியுமா இல்லையான்னு கேளுங்க நவாஸ்.
வரம் ஏழு:
மடியில் மகளை கிடத்தி, "நட்சத்த்திரம்படி அகிலாண்டமுன்னு எழுது ங்கோ" என்று கேட்டுக்கொண்ட புரோகிதரின் முன் னில் இருந்த நெல்லில், கண் நிறைந்து அவள் பெயரை எழுதிய அந்த நாளை திருப்பி தராட்டி நியாயம் இல்லை வசந்த்.
வரம் எட்டு:
"ஏங்க,.. சுந்தர் வந்துட்டு போச்சு" என்று லதா சொல்கிற போதெல்லாம்,"ஐயோ" என்பேன். (இருபது வருடத்திற்கு முந்தைய ஜோக்கா சொல்வான், அதுனால..) எனக்கு நிறை ய நண்பர்கள். அவனுக்கு நான் மட்டும். சென்னையில் அவனுக்கு வேலை. எப்போ ஊர் வந்தாலும், பெட் டியை வீடு வைத்த கையோடு வீடு வருவான். ஒரு நாள் தூங்கி எழுந்த போது என் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்தான். "இவன் எப்ப புள்ளை வந்தான்" என்று இவளை கேட்டேன். "அப்பதையே வந்திருச்சு ,.. எழுப்ப வேணாமுன்னு சொல்லிட் டு படுத்துச்சு, தூங்கிருச்சு போல" என்று சொன்னாள் லதா. ஹிருதயத்தில் ஓட்டை என்று ஒரு நாள் இறந்து போனான்.
"ஏங்க..சுந்தர் வந்துட்டு போச்சுன்னு" ஒரு தடவை லதாவை சொல்ல சொல்லுங்க நவாஸ். என்ன நவாஸ் நீங்க..
வரம் ஒன்பது:
ஆனந்த விகடனில் கவிதை பிரசுரமானதிற்கு முன்னூறு ரூபாய் மணியாடர் வந்தது. "சேலைக்கா ரர்ட்ட பழைய பாக்கியை கொடுத்து ட்டு ஒரு சேலை எடுத்துக்கட்டா" என்று கேட்டாள் லதா, "எப்ப பாரு என்னதான் அப்படி எழதி கிழிக்கிரீர்களோ" என எப்பவும் கேட்க்கிற லதா! அந்த நாள் அவசியம் வேணும் வசந்த்!
வரம் பத்து:
சவுதி வந்த பிறகு, "சசி சைக்கிள் ஓட்டுறான்க" என்று லதா தொலை பேசியில் அழைத்தாள் ஒரு நாள்."யார்புள்ளை பழகி கொடுத்தது" என்று கேட்டதற்கு, "நான்தான் ராஜாஸ்கூ ல் க்ரவுண்டுக்கு கூட்டிட்டு போயி பழகி கொடுத்தேன்" என்றாள். கண் கலங்கி விட்டது. பிள்ளைக்கு சைக்கிள் பழகி தர்றது எல்லாம் நம்ம டூட்டி நவாஸ். அது இப்பதான் சமீபமா. ஒரு பட்டனை தட்டினா ரீவைண்ட் ஆயிரும். கேட்டு பாருங்க நவாஸ். போயிட்டு வந்திர்றேன்..
என்ன பேசமாட்டைங்கிறீங்க ரெண்டு பேரும்?
வசந்து கொசந்து!
நவாசு கொவாசு!
க. பாலாஜி, ஆருரன் விசுவநாதன், தமிழ் நாடன், சந்தான சங்கர் இவர்கள் வீடுநோக்கி அனுப்புகிறேன் இந்த தேவதையை.
நன்றியும் அன்பும் மக்கா!
அன்புடன்,
பாரா
30 comments:
மாம்ஸ் சான்சே இல்ல
"விழியோரம் பனிக்காதது மட்டுமே மிச்சம்"
உருக்கிடுச்சு மாமா
தேவதை என்ன கடவுளே வந்தாலும் திருப்பிதரமுடியாதவை
கேட்ட வரங்கள் அனைத்தையும் அந்த தேவதை மனமிரங்கி கொடுத்தால் நல்ல கொடுப்பினைதான். முனியம்மாச்சி எனும் அன்புதெய்வம் நமக்கு வாய்க்கக் கிடைத்தது நாம் செய்த முற்பிறவி பலன்தான். புகையிலை வாசத்துடன் 'வாடி என் தங்கமே' என்று வாஞ்சையுடன் கட்டிக்கொள்ளும் அன்பு முனியம்மாச்சி. அந்தப் பரிசுத்தமான அன்புதெய்வம் மீண்டும் நமக்கு கிடைக்க வேண்டும் என்று அந்த தேவதையிடம் வரம் கேட்கிறேன்.
அன்பு முனியம்மாச்சி நமக்கெல்லாம் காட்டிய அந்த தன்னலமற்ற அந்த அன்பிற்கு சமர்ப்பணமாய், நீங்கள் 'காலத்தின் வாசனை' போல் ஒரு படைப்பைத் தர வேண்டும். இது எனது தாழ்வான கோரிக்கை.
நினைத்தபடிதான் இருக்கேன் உதிரா.அவசியம் செய்யணும்.செய்யலாம்.ஆமாம்,நீ என்ன இப்படி வேஷம் மாறி,மாறி?..
//கிணற்றடி முற்றத்தில், வானம் பார்த்தபடி முனியம்மாள் அக்காவை கட்டிக்கொண்டு, கதை கேட்ட கதைகளில் ஒரு கதையை உங்கள் தேவதையை சொல்ல சொல்லுங்கள் வசந்த்.//
மலரும் நினைவுகள் சுகமானவையே...உங்களது பதிவிலும் அது நிழலாடுகிறது...
என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழத்தமைக்கு மிக்க நன்றி அன்பரே....
உன்னைய எப்பவும் ஒரு கெட்ட வார்த்தையில் திட்டுவேனே, அதுபோல இப்ப திட்டனும் போல இருக்கு, நெஞ்ச தொட்டுட்ட மக்கா.
@கண்ணன்
மெயிலில் எழுது.சொன்னா உனக்கு சந்தோசம்.கேட்டா எனக்கும் சந்தோசம்.
கவிதைதான் எழுத வரலை. பெயரையாவது மாற்றி மாற்றி பின்னூட்டம் எழுதுவோம் என்றிருந்தேன். அதையும் 'தானாடாவிட்டாலும் தசை ஆடி' காட்டிக் கொடுத்து விடுகிறது. இனி என்ன பெயரில் வருவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆண்டவா, கண்டுபிடிக்க முடியாத பெயராக அமையனும்.
நல்லாயிருக்கு,
கேட்கிறது சுகம்
கிடைத்தால் சந்தோசம்
அதுதானே கஸ்ரம்
தேவதையே!
நினைத்த வரம்
கேட்கவில்லை
கிடைத்த வரத்தை
நினைத்து கேட்கிறேன்...
சரிதானா நண்பரே?
இதை நான் எதிர்பார்க்கவில்லை.
வலைப்பதிவில் நான் கத்துக்குட்டி
சன்னல் திறக்குமா என்றவனுக்கு
வாசலை திறந்து விட்டாய்..
உங்கள் வாசம் என் சகவாசம்.
வரம் கிடைத்துவிட்டது...
வணக்கம்...
அல்-கோபரில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? நானும் அங்குதான் இருக்கிறேன்.
சந்திக்கலாமா?
கண்டிப்பா சரவணா..நான் அக்ரபியா.நீங்கள் எங்கு?என் மின் முகவரி,rajaram.b.krishnan@gmail.com க்கு உங்கள் அலை என்னை தெரிய படுத்துங்கள்.
வரம் கொடுக்கிற வேலையெல்லாம் நீயே பார்த்துக்கன்னு தேவதை உங்களுடன் தங்கி விடும் பா.ரா.
நினைவுகளை மீட்டுத் தரச் சொல்லி கேட்ட ஒவ்வொரு வரமும் உயிருள்ள உணர்வுகள்.....
இவைகளை விடவா சொத்து என தோன்றுகிறது......
//வசந்து கொசந்து!//
ha ha haa......
ராஜாராம், தேவதை உங்களிடம் இப்போ வரவில்லை. சின்ன வயதிலேயே வந்து நிறைய வரம் நீங்கள் கேட்காமலே கொடுத்திட்டாள் .என்று தெரிகிறது.
இனியும் கேட்காததெல்லாம் கொடுப்பாள். பாருங்கோ.
தொடருக்கு அழைத்த நண்பர்களை மட்டுமல்ல, தேவதையையும் திணறடிக்கும் வரங்கள்! பொக்கிஷமாய் இருந்த நினைவுகளைப் பகிர்ந்ததில் மனம் சற்றேனும் பெற்றிருக்கும் ஆறுதல் என நம்புகிறேன்.
அந்த ஒன்பதாவது வரம் திரும்பத் திரும்ப நடக்க வாழ்த்துக்கள்:)!
மற்றதில் பலதும் தேவதையின் கையிலும் இல்லாததால்:)!
மலரும் நினைவுகள் மறக்கத நெஞ்சத்தில் அசத்திட்டீங்க
என்ன பின்னூட்டமிடுவதென்று தெரியாமல் விக்கித்து நிற்கிறேன்
தயவு செய்து தேவதையே வரம் கொடுத்து விடு :)
//பிள்ளை பசிக்கு அம்மா திருடக்கூட செய்வாள்//
இது மாதிரி அம்மா கிடைக்கிறது நிஜமாவே வரம்தான் அண்ணா.
//அந்த முதல் காதலின் முதல் நாளை திருப்பி தர முடியுமா இல்லையான்னு கேளுங்க நவாஸ்.//
அண்ணி இந்த பதிவை படிச்சாங்களா இல்லையா? படிச்சிருந்தா என்ன reaction - னு எனக்கு மட்டும் சொல்லுங்க அண்ணா.
//"ஏங்க..சுந்தர் வந்துட்டு போச்சுன்னு" ஒரு தடவை லதாவை சொல்ல சொல்லுங்க//
நிஜமாவே கண்ணு கலங்கிடுச்சுண்ணா.
ம்ம்ம்ம்...என்ன சொல்ல, உணர்வுப்பூர்வமா இருக்கு அண்ணே!!
இப்போதானே தெரியுது உங்களின் மொழிகள் கேட்க்க தேவதை வரம் வாங்கிகிட்டு வந்திருக்குன்னு.
நெஞ்சுருக வச்சிடீங்க நண்பா! நெகிழ்ந்தேன்
என்ன பேசமாட்டைங்கிறீங்க ரெண்டு பேரும்?
வசந்து கொசந்து!நவாசு கொவாசு!
ஹா ஹா ஹா. பா.ரா கொரா
கண்கள் பனித்து மனதை உருக்கியது பதிவு....பூங்கொத்து!
உங்கள் காலத்தின் வாசனைகள் ஒரு தொடர்தான். அருமை, அற்புதம்னு சொல்லிக்கிட்டேயிருக்க வேண்டியதுதான்
ப்ரியங்கள் நிறைந்த என்..
பாலா,
உதிரா,
பாலாஜி,
கண்ணா,
தியா,
சங்கர்,
சரவணா,
வேல்ஜி,
தமிழரசி,
வசந்த்,
ஜெஸ்,
ராமலக்ஷ்மி,(நல்வரவு ராமலக்ஷ்மி)
மலிக்கா,
அமித்தம்மா,
கல்யாணி,
சபிக்ஸ்,
நவாஸ்,(வாய்ப்புக்கு நன்றி நவாஸ்)
அருணா,
சங்கா,
எப்பவும் போல் எல்லோருக்கும் நிறைய அன்பும் நன்றியும் மக்கா!
நீங்க அற்புதமா கலக்கிட்டீங்க! ஏதோ ஒப்பேத்திக்கிட்டிருக்கிற நம்பள இப்படி மாட்டி விட்டுட்டீங்களே! நானும் முயற்சி செய்கிறேன்!
kan kalangeeduchu!!!!
m.. antha devathai thotrup ponaal!!!
thevathai.. 10 malarntha ninaivukalai varamaaka petru sentraal:)
மாம்ஸ் ரொம்ப லேட்டா படிக்கறேன் இந்த பதிவ. படிச்சு முடிக்கறச்ச என்னய அறியாம கண்ணுல தண்ணி கோத்து நிக்குது.
Post a Comment