(picture by C license, Thanks NOMAD)
கோட்டை பெத்தார்
அப்பத்தா
வாசலிலேயே
கடை வைத்திருப்பாள்.
தண்டட்டி, கடுக்கண்.
பயல்கள் சீமையில்
என்பாள்.
கம்பி கிராதி.
கிராதிக்குள்ள பாட்டில்
நாலு.
தொங்குற
பிளாஸ்டிக் பை.
மார்பு
திறந்து கிடக்கும்.
வீசிக்கொண்டிருப்பாள்
பொழுதன்னைக்கும்.
உள்ளதிலேயே
பெரிய வீடு.
அப்பத்தா செத்த போது
எடுத்துப்போட்டோம். .
சும்மா
எடுத்துப்போட்டோம்.
34 comments:
நல்ல கவிதை ராஜாராம்.
கடைசி வரிகளின் ஆழத்திற்கு,மற்ற வரிகள் சிறிது நியாயம் சேர்த்திருந்தால் இன்னும்
அழுத்தமாக வந்திருக்கும்.
எனக்கு, நான் பார்த்த காரைக்குடி வீடுகள், ஞாபகத்திற்கு வருகிறது.
எனக்கும் கூட இன்னும் முழுமைப் படுத்தியிருக்கலாமோன்னுதான் இருக்கு....
சும்மா சூப்பர் கவிதை எழுதீப்போட்டிங்க
’சும்மா’ என்னும் வார்த்தை எவ்வளவு கனமாக இருக்கிறது. அப்பத்தாவின் சுருக்கம் விழுந்த மேனியின் ஸ்பரிசம் கிடைக்கிறது..... ராஜாராம்...!
யப்பத்தா....
கடைசி வரிகள் சொல்லாத்தைச் சொல்கிறது ராஜாராம்! நல்ல கவிதை!!
கடைசி வரி பேசுது மாம்ஸ்
தேவைக்காகத்தான் எவையும், யாரும். அப்புறமெல்லாம் சும்மாதான்!, நன்று நண்பரே!
கடைசி வரிகளை
கனக்க வைக்கும்
உங்கள்
இணக்கம்
புதிது..
வணக்கம்.
எல்லா பெரிய வீடுகளிலும் இதுதான் கதை அண்ணாச்சி..... :((
அப்பத்தா செத்த போதுஎடுத்துப்போட்டோம். .
சும்மாஎடுத்துப்போட்டோம்
**************************
பேசிகிட்டுருக்கும்போதே பொசுக்குன்னு சம்மட்டியால அடிச்சமாதிரி படார்னு சொல்லிட்டு போயிடுறீங்க ராஜா.
சீமைக்கு போனதால்..'பெரியசாவு' என்று கொண்டாட்டமாக எடுத்துப்போடும் வழக்கமெல்லாம் போயேபோச்சு..சீமைக்காரன் போல சம்பாதிக்க மட்டுமில்ல,அவன மாதிரி வாழவும்ல கத்துக்கிட்டோம்!
:(:((
நம்ம பக்கம் வரதில்லை போல
//சும்மா
எடுத்துப்போட்டோம்.//
அம்புட்டுத்தான்னு சொல்லிட்டீங்க!! உண்மையென்றாலும், மனம் ஏற்றுக் கொள்ள அவகாசம் வேண்டுமே!!
சாதாரண வரிகளை போட்டு சும்மா அதுரவைக்கிறீங்க.
வாழ்வின் இறுதியில் பலரும் வெறுமையில்.....வறுமையை விட இது கொடியது.
வாழ்த்துக்கள் பா.ரா.
அன்புடன்
ஆரூரன்
அண்ணா சும்மா என்று சொல்லிவிட்டு மனம் நெகிழ்வாய் அப்பத்தா.
நெஞ்சை பிழியும் உண்மைகள்
வாழ்த்துக்கள்.
அந்த 'சும்மா' வில் ஏராள விஷயங்கள் இருக்கு அண்ணா.
உணர்வுப்பூர்வமான கவிதைகள் உங்களுடையது. இப்போது தான் உங்கள் தளத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாழ்த்துகள்
அந்த 'சும்மா' வை ரொம்ப அழுத்தமாக எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்.
கற்பனை பண்ணக் கூடியதாகவிருக்கிறது.
'சும்மா எடுத்துப்போட்ட' எத்தனையோ அப்பத்தாக்கள் நினைவுக்கு வருகிறார்கள். 'சும்மா' எனும் வார்த்தை சொல்லில் அடங்காத துயரத்தை போகிறபோக்கில் சொல்லிச்செல்கிறது.
உணர்வை தொட்ட கவிதை உங்களுக்கே உரிய உண்மையான பாணியில்...எனக்கும் எங்க பாட்டி நினைப்பு வந்திடுச்சி,,, அம்மா தராத அன்பை தந்தவங்க....
"சும்மா தூக்கிப் போட்டோம்" எனும் வரி மனதிற்கு வருத்தமாக இருந்தது. "மீனாச்சி,மீனாச்சி", என அரற்றும் அப்பத்தாவின் உருவம் கண்முன் நிழலாடியது.
யாத்தீ ..! கக்கடைசியில குண்டு இல்ல வக்கிராய்ங்க
நடத்துங்க பா.ரா நடத்துங்க
@செய்யது
வாஸ்த்தவம்தான் செய்யது நானும் உணர்கிறேன்.இது எனக்கு உதவியாக இருக்கும்.மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா.
@காமராஜ்
நன்றி காமராஜ்.அன்பு நிறைய.
@அன்புடன் அருணா
ஆகட்டும் அருணா.நன்றியும் அன்பும்.
@நந்தா
கவிதைக்கான பாஷை அழகாய் இருக்கு நந்தா.நன்றியும் அன்பும் மக்கா.
@மாதவராஜ்
தொட்டு தூக்கி நிறுத்துகிறீர்கள் மாதவன்,கவிதையை என்னையை!.. நன்றியும் அன்பும் மக்கா.
@ப்ரியமுடன்...வசந்த்
நீங்கள் நானெல்லாம் இருந்து,அப்பத்தவை அடக்கம் செய்த நிறைவு வசந்த்,இந்த ஒற்றை வார்த்தை.அழகு வசந்த்!
@சந்தன முல்லை
ஆகட்டும் முல்லை.அன்பு நிறைய.
@பாலா
நன்றி மாப்ள.அன்பும் கூட!
@சங்கா
வாஸ்த்தவம்தான் சங்கா.வலிக்கத்தான் செய்கிறது.அன்பு நிறைய சங்கா!
@சந்தான சங்கர்
வணக்கமும் நன்றியும் சங்கர்.
துபாய் ராஜா
வீடு பெரிசு மனசு சிறுசு ராஜா.மாறி இருந்தால் நல்லா இருக்கும்.நன்றியும் அன்பும் ராஜா.
s.a.நாவாசுதீன்
நன்றி நவாஸ்.சந்தோஷமும் அன்பும் மக்கா.
@வேல்ஜி
வலி நிரம்பிய ஆதங்கம் வேல்ஜி.நன்றியும் அன்பும் நண்பரே.
@தண்டோரா
குரல் தேடி அடைந்ததில் ரொம்ப சந்தோசம் மணிஜி.நன்றியும் அன்பும் மக்கா.
@சபிக்ஸ்
ஏற்க்க மறுக்கிறது சபிக்ஸ் சில யதார்த்தங்கள்.நன்றியும் அன்பும் சபிக்ஸ்.
@ d.r.அசோக்
நன்றி அசோக்!அன்பு நிறைய மக்கா.
@ஆரூரன் விசுவநாதன்
வாஸ்த்தவம் விஸ்வா.அன்பும் நன்றியும் மக்கா.
@ஹேமா
சும்மாவே இருக்க மாட்டேங்குது இந்த சும்மா!இல்லையாடா?நன்றியும் அன்பும் சகோ.
@கவிதை(கள்)
நன்றி விஜய்.வாழ்த்துக்களும்!
@கல்யாணி சுரேஷ்
ஆகட்டும்டா கல்யாணி.அன்பும் நன்றியும்.
@ச.பிரேம் குமார்
நல்லது பிரேம்.உங்களை காட்டி தந்ததிற்கும் அன்பு நிறைய.கல்கி கவிதைக்கு வாழ்த்துக்கள்!நன்றி பிரேம்.
@ஜெஸ்வந்தி
ஆகட்டும் மக்கா.அன்பும் நன்றியும்!
@செ.சரவணக்குமார்
நன்றி சரவணா.எப்போ சந்திக்கலாம்?அன்பும் கூட மக்கா.
@தமிழரசி
நூறாவது பதிவிற்கான வாழ்த்துக்கள் தமிழ்!ஒரு,"பத்துநூறு", நூறு அடிங்க!..நன்றியும் அன்பும் தமிழ்.
@உதிரா
உன் பின்னூட்டங்களில் எல்லாம்,யாராவது ஒரு மனிதத்தை உள் நுழைத்துவிடுகிறாய்,உதிரா.உன் சித்தப்பனை போலவே.அன்புடா குட்டி!
@நேசமித்ரன்
வந்தாச்சா நீ?உடல் நலம் தேரியாச்சா?சந்தோசம் நேசா!அன்பு நிறைய!
vaarip podureenga!!!
yen appaththa ninaivu vanthuttu...
phone seithu pesanum:))
சும்மா எடுத்துப்போட்டோம் //
மீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு ம்ஹூம் நடத்துங்க.
கவிதை நல்லா இருக்குங்க பா.ரா.
மன்னிச்சுக்கோங்க பா.ரா.. என்னால இந்தக் கவிதையின் உள் அர்த்தத்தை புரிஞ்சுக்கு முடியல.
இது நேரடியான கவிதைதான் உழவரே.உள்ளர்த்தம் ஒன்னும் இல்லை.எப்படியோ வந்ததிற்கு மிகுந்த அன்பும் நன்றியும்.
சாதாரண வார்த்தைகளில் கனக்க வைத்து விட்டீர்கள்...
Post a Comment