எனக்கு இணையாக உனக்கு
யார் பிடித்திருந்தாலும்
அவர்களுக்கு தரும் புன்னகையில்
சின்னதாய் ஒரு வலி
இருக்குமானால்
அந்த வலியில்
உயிர்க்கும்
என் காதல்
***********
எல்லா கொலுசொலிகளுக்கும்
உசும்பி விழிக்க
பாத்யதைபட்ட
செவி ஒன்று
இருக்குதானே!
***********
காற்றில் துலாவுகிறது
என் கைகள்.
தலை தடவி,
முதுகு வருடி,
பால்யத்தில்
கதை சொல்லும்
அப்பாவை வேண்டி...
***********
குழந்தைகள் தூங்கியபின்பு
விளக்கணைத்துவிட்டு
பேசிக்கொண்டிருக்கிறாள்
இவள்.
திறக்கப்படாத கோயிலின்
கதவில்,
சுவற்றில்,
விட்டத்தில்,
பட்டுக்கொள்ளாமல்
அனுமதிக்கப்பட்ட
எல்கைக்குள்
பறந்துகொண்டிருக்கிறது
வவ்வால்.
***********
குருவிக்கூடுகளையும்
கீச்சொலிகளையும்
மரம் இழைக்கிறபோதெல்லாம்
உணர்கிறான்
மனசுள்ள
தச்சன்!...
***********
16 comments:
சித்தப்பா உங்கள் கவிதைகளுக்கு எங்களின் வாழ்த்துக்கள்.தொடரட்டும் இந்த கவிதை பயணம்
sooper
கவிதைகள் நன்றாக உள்ளன.
எல்லாக்கவிதையும் அருமை! காதலைத்தவிரவும் மற்ற கவிதைகளில் உங்கள் பங்களிப்பு நன்றாய் உள்ளது. அதை தொடர்ந்து முயற்சிக்கலாமே!
ரொம்ப நன்றிடா கவிது.எனக்காக கண்ணாவும்,ரமேஷும் தான் கவிதைகளை வெளியிடுகிறார்கள்.இப்பதான் மறுமொழிகளுக்கு பதில் சொல்ல பழகி வருகிறேன்.கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது.மிக அழகிய காட்டில்!ரூபங்களையும்,அரூபங்களையும் தடவி,தடவி...நன்றி சொல்ல தாமதமாகிறது....ரொம்ப நன்றியும்,அன்பும்----சித்தப்பா
ரொம்ப நன்றி மயாதி!நல்லா எழுதுபவர்களிடமிருந்து தொடர்ந்து ஆதரவு கிடைப்பது உற்சாகமாய் இருக்கிறது.நிறைய அன்பும்!...
கும்மாச்சி,உங்கள் தளத்திற்கும் சென்று வந்தேன்.சீக்கிரம் மறுமொழி இடவேனும்.சென்னை தமிழில் கலக்குகிறீர்கள்!"உன் வீடு வந்தேன்..."மிக அற்புதமான கவிதை கும்மாச்சி!வந்ததிற்கும்,வென்றதிர்க்கும் நன்றி!வர போக இருங்கள்..
கண்டிப்பாக சென்ஷி!ரொம்ப நன்றியும் அன்பும்!
உங்கள் கவிதை மிகவும் அழகு.
//குருவிக்கூடுகளையும்
கீச்சொலிகளையும்
மரம் இழைக்கிறபோதெல்லாம்
உணர்கிறான்
மனசுள்ள தச்சன்!...//
இந்த வரிகள் எனக்கு நன்றாகப் பிடித்தது.
பட்டாம் பூச்சிகளை கைகளில் ஏந்தி திரியும் ஜெஸ்..குருவிக்கூடுகளையும் கீச்சொலிகளையும்...பிடிக்காமல் போயிருந்தால்தான் ஆச்சர்ய பட்டிருப்பேன்...நன்றி ஜெஸ்!
kadaisik kavithai... chattunnu oru valiyai undaakkeettu.. athuthaan anthak kavithaikkaana vetriyo??
yellaamum arumai:)
muthal kavithai puruyalaye.. yenakku:(
நன்றி ரசிகை..
எழுதி பார்த்தபின்
எனக்கும் வலித்தது.
வெற்றி தோல்வி கவிதையில் இல்லை
என தோன்றுகிறது.
உணர்ந்ததை உணர்த்தினால்.
கிட்டத்தட்ட போதும்தான்.
கிட்டத்தட்ட போதவில்லை பாருங்கள்
உங்கள் அனுபவத்தில் என் முதல் கவிதை...
"உனக்கு என்ன புரிகிறதோ அதுதான் கவிதை"
என்று ஒருமுறை விக்ரமாதித்யன் சொன்னார்.
இது உதாசினமில்லை,அனுபவம் என பிறகு புரிந்தது.
வேறு எதுவும் சொல்ல தோணலை.அனால் இதை
பார்வைக்கு வைக்க தோணுகிறது ரசிகை..
//எனக்கு இணையாக உனக்கு
யார் பிடித்திருந்தாலும்
அவர்களுக்கு தரும் புன்னகையில்
சின்னதாய் ஒரு வலி
இருக்குமானால்
அந்த வலியில்
உயிர்க்கும்
என் காதல்//
பிரமாதம் சார். இதைவிட அற்புதமாய் மறுக்கப்பட்ட காதலை சொல்லமுடியாது.
அப்புறம் காதல் உயிர்ச்சுதா?
எல்லா கவிதையும் நன்றாக இருக்கிறது..
//குருவிக்கூடுகளையும்
கீச்சொலிகளையும்
மரம் இழைக்கிறபோதெல்லாம்
உணர்கிறான்
மனசுள்ள
தச்சன்!...//
இது ரொம்ப நல்லாயிருக்கு :)
அருமை...அருமை.
Post a Comment