ஊர் வேறு மாதிரியாக இருந்தது.
பருகி துய்த்த வெயில்
பார்வைக்கு கிடைக்கவில்லை.
பழகிய தெருக்கள்
புறந்தள்ளியது.
செங்கொன்றை மரங்களில்
இலை கூட இல்லை.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இலங்தம்பழம் விக்கிற எவரையும்.
முள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...
ஊர் வேறு மாதிரியாக இருந்தது.
பருகி துய்த்த வெயில்
பார்வைக்கு கிடைக்கவில்லை.
பழகிய தெருக்கள்
புறந்தள்ளியது.
செங்கொன்றை மரங்களில்
இலை கூட இல்லை.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இலங்தம்பழம் விக்கிற எவரையும்.
14 comments:
மிதியடிகள் போன்று மதிக்கப்படுகிறார்கள் முன்பு அப்பாக்களாய்
இருந்த தாத்தாக்கள் "நீயும் ஒரு நாள் தாத்தாவா ஆவீல்ல..........
என்று சாபமிட்டு முனங்குவது கேட்கப்படாமலே.
அருமையான வரிகள்!
படிச்சப்புறம் கொஞ்ச நேரம் ஒன்னுமே தோணலைங்க//
ILA, Veera தங்கள் வருகைக்கு நன்றி
>>> கண்ணீருடன் சிரிக்கிறார்கள்
காதலிகள் <<<
avargal mattuma :-(
superungooo !!!
நன்றிகள் ...யாதிரீகன்!
//முதுகிற்கு பின்புறம் மறைகிற
குழந்தைகளை முன்னிழுத்து
"சித்தப்பாடா" என்று
கண்ணீருடன் சிரிக்கிறார்கள்
காதலிகள்.//
ம்ம்ம்.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. கலங்கிவிட்டேன்..
@சிநேகிதன்.. said...
/ம்ம்ம்.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. கலங்கிவிட்டேன்.../
நானும்..
உங்கள் தளத்திற்கு போய் உங்கள்
புகைப்படங்கள் வாசித்தேன்,சிநேகிதன்.
அற்புதம்,வரவிற்கு அன்பும்!
அன்புமிக்க அமிர்தம் அவர்களுக்கு,
அன்பும் நன்றியும்..
நல்ல வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல நினைத்துத் தேடினேன். இதுதான் கிடைத்தது,
//ஊர் வேறு மாதிரியாக இருந்தது.
பருகி துய்த்த வெயில்
பார்வைக்கு கிடைக்கவில்லை.
பழகிய தெருக்கள்
புறந்தள்ளியது.
செங்கொன்றை மரங்களில்
இலை கூட இல்லை.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இலங்தம்பழம் விக்கிற எவரையும்.
வாசல் கோலத்தை நசுக்கி செல்கிறது
சிந்தாமணி சிற்றுந்து.
வெறும் காட்டாமனுக்கு செடியிலிருந்து
கூவியழைக்கிறது
அரசிலோ வேம்பிலோ
இருந்தழைக்கும் குயில்.
மிதியடிகள் போன்று மதிக்கப்படுகிறார்கள்
முன்பு அப்பாவாய் இருந்த
தாத்தாக்கள்.
முதுகிற்கு பின்புறம் மறைகிற
குழந்தைகளை முன்னிழுத்து
"சித்தப்பாடா" என்று
கண்ணீருடன் சிரிக்கிறார்கள்
காதலிகள்.
அவ்வளவையும் காரணமாக்கி
சாராயத்தில் குளிக்கிறோம்
சவுதியிலிருந்து திரும்பும்
நாங்கள்.
//
-ப்ரியமுடன்
சேரல்
வலி தந்த வரிகள்.
//அவ்வளவையும் காரணமாக்கி
சாராயத்தில் குளிக்கிறோம்
சவுதியிலிருந்து திரும்பும்
நாங்கள்.//
வலியை மறக்க வழி.
சேரல் என்ன சொல்லட்டும்....
பல தருணம் நன்றி என்கிற ஒற்றை வார்த்தை பற்றாமல்தான் வருகிறது.இப்படியான தருணங்களில் சும்மா இருந்து விட தோணும்.கண்ணிரைவுகளுடன்...
ungal kavithaikalai paditha pin en kangalil erunthu kasikirathu eeram
Post a Comment