Tuesday, August 11, 2009

ஊடகம்


( Thanks :: photo by Dr. Prasad Dasappa, Canada)

னவிலாவது வருகிறேனா
கணினி வாங்கிய பிறகு
கசிந்துருகி கேட்கிறது
கடிதம்.

"நீ இல்லாமல் போய்ட்டியே
அப்படி ஒரு மழைடா"
மூவாயிரம் மைலை
நனைக்கிறது
மொபைல்.

ட்டச்சு மொட்டில்
தவிக்கிறது விரல்.
திரையில் அவள்.

41 comments:

மேவி... said...

kadasi varigal than top boss

மண்குதிரை said...

unarnthirukkireen

na.jothi said...

அருமை அண்ணா

சென்ஷி said...

//"நீ இல்லாமல் போய்ட்டியே அப்படி ஒரு மழைடா" மூவாயிரம் மைலை நனைக்கிறது மொபைல்.//

இந்த அவஸ்தையை நிறைய்ய அனுபவிச்சுருக்கேன் :-(

ப்ரியமுடன் வசந்த் said...

வலிக்காமல் வலிக்குமோ திருமணத்திற்க்கு பிறகு.....

யோசனையுடன்....வசந்த்

அமிர்தவர்ஷினி அம்மா said...

//"நீ இல்லாமல் போய்ட்டியே அப்படி ஒரு மழைடா" மூவாயிரம் மைலை நனைக்கிறது மொபைல்.//


அழகு கவிதை

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி இந்தப் பின்னூட்டப்பெட்டியை தந்தமைக்கு :)

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக இருக்கு

Raju said...

கடிதத்தைப் பற்றியது நல்லாருக்கு பாஸ்.

Unknown said...

நல்லா இருக்கு.கடைசி வரிகளுக்குப் பதிலாக இதைச் சேர்த்தால் நன்றாக இருக்குமோ?

தவிக்கும் விரல்கள்
மெளசை மெல்ல
அணைத்தப்படி

S.A. நவாஸுதீன் said...

"நீ இல்லாமல் போய்ட்டியே அப்படி ஒரு மழைடா" மூவாயிரம் மைலை நனைக்கிறது மொபைல்.

கலக்கிடீங்க நண்பா.

S.A. நவாஸுதீன் said...

தட்டச்சு மொட்டில் தவிக்கிறது விரல். திரையில் அவள்.

நல்லா இருக்கு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு ராஜாராம்!

அமுதா said...

அருமை

RaGhaV said...

அட்டகாசம்.. :-)

நட்புடன் ஜமால் said...

மூவாயிரம் மைலை நனைக்கிறது மொபைல்.]]


ஒன்னாங் கிளாஸானும்.

நட்புடன் ஜமால் said...

செவ்விதழ் மூடு
செவி மடல்களையும் மூடு

உன் பிஞ்சு விரல் பிரித்து
விசைப்பலகையில் சற்றே
நாட்டியமாடு.

நட்புடன் ஜமால் said...

video chatting
----- --------


மெல்ல திறந்தது ஜன்னல்

சட்டென சிரித்தது மின்னல்

பா.ராஜாராம் said...

வணக்கம் dr.பிரசாத்தாசப்பா,புகைப்படம் அவ்வளவு அழகு.அன்பும் நன்றியும் ஐயா.

நேசமித்ரன் said...

//தட்டச்சு மொட்டு //
அருமை நண்பரே
கேட்கிறது தானா இல்லை //கசிந்துருகி கேட்க்கிறது // va?

ஒரு பழையகவிதை நினைவுக்கு வருகிறது

http://nesamithran.blogspot.com/2009/04/blog-post_06.html

இரசிகை said...

athanaiyum arumai.......unmai!!

thodarungal.......

pallik koodam kavithaiyai yen nanban moolam anuppukiren:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

பா.ராஜாராம் said...

டம்பி பீவீ
==========
வணக்கம் பாஸ்.அறிமுகம் செய்து தந்ததில் நன்றி நண்பா.உங்கள் தளத்தில் நீங்கள் சொன்னது போல் வால் பையனின்"வெளியேறிய கவிதைகள்" வாசித்து வந்தேன்.உங்களின் அன்பான குடும்பம் மட்டும் வாசித்து வந்திருக்கிறேன்.வருவேனும்.நன்றி மக்கா.

மண்குதிரை
============
ஆகட்டும் மக்கா.அன்பு நிறைய.

ஜோதி
=======
நன்றி ஜோதி சகானா,என் சகோதரா.அன்பும்.

பா.ராஜாராம் said...

சென்ஷி
=======
வணக்கம் சென்ஷி."வேட்டையாடு விளையாடு"மிரட்டல் தலைவரே!அன்பும் நன்றியும்.(இந்த "தலைவரே"நேசன் தளத்தில் இருந்து திருடினேன்.கேட்டால் தந்திருப்பான்.திருட்டு சந்தோசம் தருகிறதுதான்.சொல்லாதீர்கள் நேசனிடம்.உதைப்பான்.)

பிரியமுடன்.......வசந்த்
=====================
வலிக்கவே வலிக்கும்.ஆனால் யோசிக்காதீர்கள்.(யாம் பெற்ற இன்பம்...ஹி..ஹி..)நன்றியும் அன்பும் வசந்த்.

அமிர்தவர்ஷிணி அம்மா
=======================
ஆகட்டும் அமித்து அம்மா.வேலைகளில் வீடு வர இயலவில்லை.வர்றேன் சீக்கிரம்.அன்பும் நன்றியும்.

துபாய் ராஜா said...

//தட்டச்சு மொட்டில் தவிக்கிறது விரல். திரையில் அவள்.//

ஆம்.ஊடகங்கள் வளர்ச்சியடைந்தாலும் உள்ளங்கள் அதே தவிப்போடுதான் இருக்கின்றன.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

simply superb :)

-priyamudan
sEral

Nathanjagk said...

நான் கடைசியாக கடிதம் எழுதி எவ்வளவு நாட்... இல்லை வருஷங்களாச்சு என்று ​யோசிக்க ​வைத்து விட்டது! இரண்டாவதில் மழைத்திருக்கும் விபரம் - மண்வாசனை!!

பா.ராஜாராம் said...

ஆ.ஞானசேகர்
===============
ஆகட்டும் சேகர்.தொடர் வருகை மிகுந்த உற்சாகம்..அன்பும் நன்றியும்.

டக்ளஸ்
=========
வணக்கம் தலைவா...உங்கள் நகைசுவையின் நல்ல ரசிகன் நான்.உற்சாகமாய் இருக்கிறது(சற்று வயிற்று கலக்கம் கூட!)மிகுந்த அன்பும் நன்றியும் பாஸ்.நீங்கள் இங்கு முதல்ல நான் நிறைய வந்திருக்கேன்.

கே.ரவிஷங்கர்
==============
வணக்கம் ரவிஜி.இதுவும் நல்லா இருக்கு!நிறைய அன்பும் நன்றியும் நண்பரே..

S.A.நவாஷுதீன்
===============
ரொம்ப நன்றி நவாஸ்.மிகுந்த அன்பும்.

ஜ்யோவ்ராம் சுந்தர்
===================
நன்றி சுந்தரா.இங்கேயும் ஒருமுறை..."உரைநடை சிறுகதை போட்டி"முயற்ச்சிக்கும் வெற்றிக்கும் அன்பு நிறைய மக்கா...நண்பர் சிவராமனுக்கும் தெரியப்படுத்து.

நந்தா
========
ஆகட்டும் நந்தா ரொம்ப சந்தோசம்.நன்றியும் மக்கா.

அமுதா
=======
வாங்க அமுதா.முதல் வருகை சந்தோஷமும் நிறைவும்.உங்கள் "மண் வாசனை"நல்லா வந்திருக்கு.அன்பும் நன்றியும் அமுதா.

ஹேமா said...

உண்மைதான்.கடிதங்கள் கண்டு எத்தனை காலம்.பழைய அப்பாவின் கடிதங்கள் சேர்த்து வைத்திருக்கிறேன்.
அவசர உலகில் நாங்களும் அவசரமாகவே ஓடினபடி.போன வருடத்தில் அப்பாவிடம் கடிதம் ஒன்று கேட்டு எழுதி வாங்கினேன்.
விஞ்ஞான உலகத்துள் பாசபந்தங்களை இழக்கிறோமா என்கிற பயம்.எவ்வளவு நேரம்தான் தொலைபேசியில் பேசினாலும் அழியாத எழுத்துக்களோடு ஒரு துண்டுக் கடிதம் தரும் சுகமே அலாதிதான்.

அ.மு.செய்யது said...

//"நீ இல்லாமல் போய்ட்டியே
அப்படி ஒரு மழைடா"
மூவாயிரம் மைலை
நனைக்கிறது
மொபைல்.


தட்டச்சு மொட்டில்
தவிக்கிறது விரல்.
திரையில் அவள்.//

இந்த‌ இர‌ண்டு ப‌த்திக‌ளையும் திரும்ப‌ திரும்ப‌ வாசிக்கிறேன்.அத்த‌னை அழ‌கு !!!!

என்ன‌மோ போங்க‌ ராஜாராம்..ஈர்த்து விட்டீர்க‌ள்.

ஊர்சுற்றி said...

அருமையான வரிகள்.

இத்தனை சுருக்கமாக உருக்கமாக எழுதப்பட்டது. மிகவும் அருமை. :)

யாத்ரா said...

அருமையான கவிதை, மிகவும் பிடித்திருக்கிறது.

Veera said...

அருமையான கவிதைகள்! :)

//"நீ இல்லாமல் போய்ட்டியே அப்படி ஒரு மழைடா" மூவாயிரம் மைலை நனைக்கிறது மொபைல்.//

கிட்டத்தட்ட இதே கருத்தில் நான் எழுதிய ஒன்று உங்களின் பார்வைக்கு - http://veerasundar.blogspot.com/2009/05/blog-post_8108.html

பா.ராஜாராம் said...

raghavendran d
=============
வணக்கம் ராகவன்.ரொம்ப நன்றியும் அன்பும் மக்கா.

நட்புடன் ஜமால்
===============
நல்லா இருக்கீங்களா ஜமால்.நிறையும் பிரியங்களை கொண்டு தழுவ விரும்பும் என் ஜமால்! மிகுந்த நன்றியும் அன்பும் தோழா..
உங்கள் பார்வையும்,பதிந்த இருவரிகளும் அழகு!

நேசமித்ரன்
===========
நண்பா...நன்றியும் அன்பும் நேசா.தெரியலை நேசா,எது சரின்னு.எது சரின்னு சொல்லு மாத்திரலாம்.அட்சர பிழைகளில் இதுதான் சரி என குறிப்பிடு நேசா.இதுவா அதுவாவில்...இன்னும் குழும்புவான் உன் ராஜா.குறிப்பிடு நேசா.

நேசமித்ரன் said...

பின்னூட்டம் பார்த்து மாற்றி விட்டார் நமது நண்பர்
எனவே கலக்கமறுத்துக் கிடப்பீராக
:)

பா.ராஜாராம் said...

ரசிகை
=======
ரொம்ப சந்தோசம் ரசிகை.கவிதை கிடைத்தது.பதிவும் பண்ணியாச்சு.அன்பு நிறைய ரசிகை.

t.v.radhakrishnan
==============
ஆகட்டும் ராதா.நிறைய அன்பும் நன்றியும்.

துபாய் ராஜா
===========
வணக்கம் ராஜா.உங்கள் தொடர் வருகையும் ஊக்கிவிப்பும் உற்சாகம் தருகிறது.நன்றியும் அன்பும் மக்கா.

பா.ராஜாராம் said...

சேரல்
======
வணக்கம் சேரல்.தொடர் வருகை உற்சாகம் தருகிறது.அன்பும் நன்றியும் நண்பரே.

jeganaatha
=========
வரணும் ஜெகா..".தலைமுறையாய் தொடரும் கனவு" பார்த்து அசந்துட்டேன்.முழுக்க வேறு ஜெகன் அதில்...அவ்வளவு அருமையாய் வந்துருக்கு ஜெகா..மற்றபடி,நன்றியும் அன்பும் ஜெகன்.

ஹேமா
========
ஹேமா,நல்லா இருக்கீங்களா...ரொம்ப நெகிழ்வான பின்னூட்டம் தோழி இது.நானும் ஒரு அப்பா பிள்ளையே."போன வருடத்தில் அப்பாவிடம் கடிதம் ஒன்று "கேட்டு" எழுதி வாங்கினேன்" பார்த்ததும் சற்று நேரம் என் அசைவை நிறுத்தியது.இந்த 31 வந்தால் ஒருவருஷம் ஆகுது ஹேமா--அப்பாவிடமிருந்து இனி கடிதம் வராது என்று நான் உணர்ந்து.எப்ப எதிர் பார்த்தாலும் "கூப்பிட்டியா"என்று கடிதத்தில் வருவார் அப்பா!கடிதமென்றால் கடிதமாக இருக்காது,முகத்தையும் குரலையும் வைத்திருப்பார் அதில்.தடவி,தடவி,தடவி,தடவி,அப்பாவை எடுத்துகொள்வேன்.இப்பவும் எடுத்துகொண்டிருக்கிறேன்...பத்ரம் ஹேமா அப்பா...நெகிழ்வான தருணம்.அன்பும் நன்றியும் ஹேமா.

ஹேமா said...

உங்கள் பின்னூட்டம் இன்னும் அப்பாவின் நினைவைத் தூண்டி அழ வைத்துவிட்டது.

பா.ராஜாராம் said...

அ.மு.செய்யது.
==============
ரொம்ப நாள் ஆச்சு செய்யது"பாஸ் வேர்டு தேவதைகள்" லில். தளத்தில் பார்த்தது,எழுதுபவனை உற்சாக படுத்துகிறீர்கள்...எழுதுங்கள் மக்கா.நிறைய அன்பும் நன்றியும்,

ஊர்சுற்றி
========
வரணும் ஊர்சுற்றி.முதல் வருகை அவ்வளவு நிறைவும் சந்தோஷமும்.வீடு வரணும் ஊர்சுற்றி.வருகிறேன்.அன்பும் நன்றியும் நண்பரே.

யாத்ரா
======
மிகுந்த அன்பும் நன்றியும் தம்பு.

வீரா
====
வந்திருந்தேன் வீரா...ஒரே மாதிரியான என்ன அலைகள்.தொடர் வருகை(முதல் முதலில் இருந்து என கொள்ளலாம் தான்)உற்சாகம்!!!.பால்ய சிநேகிதன் என் வலை உலகத்தில் என்று கொள்ளும் அன்யோன்யம் உங்கள் பின்னூட்டம் எதுவும்.பழைய அன்பும் பழைய நன்றியும் மக்கா.இன்னும் கோ.வி.கண்ணன் சாரையும்.யாத்ரிகனையும்,மயாதியையும் பார்க்க கிடைக்கணும்.கிடைப்பார்கள்,எங்கே போய் விட போகிறது எல்லாம்....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

This is superb my friend.

பா.ராஜாராம் said...

வணக்கம் ஜெஸ்...வேலையோ?...பார்க்க இயலவில்லை.வீட்டில் அனைவரும் நலம்தானே..மிகுந்த நன்றியும் அன்பும் மக்கா.