Wednesday, August 26, 2009

நிலா போற்றுதும்
ல்லா
குழந்தைகளுக்கும்
சோறூட்டுகிறது
தனி ஆளாய்
ஒரு நிலா.

ச்சிக்கிளை
கூட்டிலுள்ள
குருவிக்குஞ்சுகளுக்கு
இன்னும்
அருகில் இருக்கிறது
இந்த
நிலா.

பாட்டி
வடை சுடுகிறாள் என
காட்ட வேண்டி
ஆள் தேடி அலையும்
அத்துவான
காட்டிலொரு
நிலா.

குழந்தைகளை நடுவில் கிடத்தி
காட்டி காட்டி கதை சொல்லும்
மொட்டை மாடி தகப்பன்களை
மனைவியறியாது நேசிக்கிறாள்
மற்றொரு நிலா.

மிக அழகு நிலா
மிக்க அழகு
பார்ப்பவர்கள்!

34 comments:

நட்புடன் ஜமால் said...

குழந்தைகளை நடுவில் கிடத்தி
காட்டி காட்டி கதை சொல்லும்
மொட்டை மாடி தகப்பன்களை
மனைவியறியாது நேசிக்கிறாள்
மற்றொரு நிலா.]]

ஹா ஹா ஹா

அருமை அருமை.

[[மொட்டை மாடி தகப்பன்]]

ரொம்ப பிடிச்சிருக்கு.

நட்புடன் ஜமால் said...

எல்லா
குழந்தைகளுக்கும்
சோறூட்டுகிறது
தனி ஆளாய்
ஒரு நிலா.]]

சமத்துவம் சொல்லும் வார்த்தைகள்.

ஜோதி said...

நிலா
"அழகா"
இருக்குண்ணா

சி.கருணாகரசு said...

நல்லா இருக்கு நிலாவும் கவிதையும் .

சந்தனமுல்லை said...

:-) நல்லாருக்கு!

தண்டோரா ...... said...

நிலாவில் சற்று
முகம் பார்த்துக்கொண்டேன்
அன்பு ராஜாராம்

மண்குதிரை said...

azhako azhaku !

sakthi said...

பாட்டிவடை சுடுகிறாள் எனகாட்ட வேண்டிஆள் தேடி அலையும்அத்துவானகாட்டிலொருநிலா.

அழகு வரிகள் ராஜா சார்

S.A. நவாஸுதீன் said...

கருவேல நிழலில் இளைப்பாறும் அழகு நிலா.

எல்லாகுழந்தைகளுக்கும்சோறூட்டுகிறதுதனி ஆளாய்ஒரு நிலா. - வித்தியாசமான பார்வை

குழந்தைகளை நடுவில் கிடத்திகாட்டி காட்டி கதை சொல்லும்மொட்டை மாடி தகப்பன்களைமனைவியறியாது நேசிக்கிறாள்மற்றொரு நிலா. - அப்படியே மனுஷனைக் கட்டிப் போட்டுட்டீங்க நண்பா

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))) வழக்கம் போலவே அருமை

துபாய் ராஜா said...

//எல்லா
குழந்தைகளுக்கும்
சோறூட்டுகிறது
தனி ஆளாய்
ஒரு நிலா.//

//மிக அழகு நிலா
மிக்கஅழகு பார்ப்பவர்கள்//

ஆரம்பமும் முடிவு அருமை.

இடையில் இருப்பவை எல்லாம் இனிமை.

வாழ்த்துக்கள்.

velkannan said...

//மிக அழகு நிலா
மிக்க அழகு//
நிலா மட்டும் அல்ல உங்கள் கவிதையும்

ஆ.ஞானசேகரன் said...

//குழந்தைகளை நடுவில் கிடத்தி
காட்டி காட்டி கதை சொல்லும்
மொட்டை மாடி தகப்பன்களை
மனைவியறியாது நேசிக்கிறாள்
மற்றொரு நிலா.//

ஆகா அருமை

நர்சிம் said...

//பாட்டி
வடை சுடுகிறாள் என
காட்ட வேண்டி
ஆள் தேடி அலையும்
அத்துவான
காட்டிலொரு
நிலா.//

மிக ரசித்தேன் என்பதையும் விட ஆயிரம் அர்த்தங்கள்...அருமை.

நேசமித்ரன் said...

//கூட்டிளிலுள்ள//
//கூட்டிலுள்ள//- is right

நேசமித்ரன் said...

என்ன ரசவாதம் இது .. நடக்கட்டும் நடக்கட்டும்
நர்சிம் சொன்ன வரிகள் ஜென் தத்துவம் போல இருக்கிறது
பா.ரா கருவேல நிழல் அமைத்துக் கொள்ளும் தகவு
அபாரம்

நேசமித்ரன் said...

My best wishes for receiving award from veetupura.blogspot.com - Sakthi

அ.மு.செய்யது said...

எத்தனை வகை நிலாக்கள் !! அத்தனையும் கொள்ளை அழகு.

கலக்குறீங்க ராஜாராம்.இயற்கையோடு நெருக்கமானவர்களால் மட்டுமே இப்படி எழுத முடியும் !

Kannan said...

மிக அழகு நிலா
மிக்க அழகு
பார்ப்பவர்கள்!

இந்த வரிகள் அவளைவிட அழகு..!!

uthira said...

ஆஹா எத்தனை வகை நிலாக்கள். அதைவிட அழகு, கவியமுதூட்டும் இந்த அன்பு நிலா, வாசிக்கும் அனைத்து மனங்களையும் வருடிச் செல்லும் அழகு நிலா. வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி said...

நிலா அழகு என்று மட்டும் தான் இத்தனை நாள் நினைத்திருந்தேன். அதற்குப் பின்னால் இத்தனை விடயம் இருக்கென்று இப்போதான் புரிந்தது நண்பரே. ஹா ஹா ஹா

யாத்ரா said...

மிக அழகு.

சேரல் said...

மிக ரசித்தேன் பா.ரா.

-ப்ரியமுடன்
சேரல்

இரசிகை said...

yethai sollurathu..yethai vidurathu....

aththanaiyum azhagu nilavaip pola..:)

"vazhththukkal nila..
rajapaarvaiyil nee innum kulirkiraai..."

ithu yeppadi irukku!!

ஹேமா said...

ராஜா அண்ணா நிலவைப் பற்றிச் சொல்லச் சொல்ல நிறையவே சொல்லலாம்.நீங்க சொன்னது குறைவுதான்.ஆனாலும் அழகு நிலா.எனக்கும் பிடிச்ச நிலா.நிலாச் சோறு அம்மா கையால் சாப்பிட்ட ஞாபகமும்,அப்பா தேவாரம் சொல்லித் தந்த ஞாபகமும் வருது அண்ணா.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்..
ஜமால்..
ஜோதி..
கருணா..(நல்வரவு கருணா)
சந்தன முல்லை..
தண்டோரா..
மண்குதிரை..
சக்தி..
நவாஸ்...
அமித்து அம்மா..
ராஜா..
வேல்கன்னா..
சேகர்..
நர்சிம்...
நேசா..(நன்றிடா நண்பா..மாத்தியாச்சு.வாழ்த்துக்கும், வாழ்த்து நேசா..)
செய்யது..
கண்ணா..
உதிரா..(!!!)
ஜெஸ்..
யாத்ரா..
சேரல்..
ரசிகை..
ஹேமா..

நிறைய அன்பும் நன்றியும் நண்பர்களே..

kathirvelmuniyammal said...

"நிலா நிலா ஓடி வா!
நில்லாமல் ஓடி வா!
மலை மேலே ஏறி வா!
மல்லிகைப் பூ கொண்டு வா!"
சின்ன வயசில் அம்மா பாடிக்
கேட்டு இன்னும் மறக்க
முடியாத நிலா!
பா.ரா.பாடிய இந்த நிலாவையும்
மீதி இருக்கும் நாட்களில்
இனி மறக்கத்தான் முடியுமா?

என்.விநாயகமுருகன் said...

எல்லா
குழந்தைகளுக்கும்
சோறூட்டுகிறது
தனி ஆளாய்
ஒரு நிலா


அருமை அருமை

ரௌத்ரன் said...
This comment has been removed by the author.
பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்...
திரு.கதிர்வேல்..
விநாயகம்..
ரௌத்ரன்..
மிகுந்த அன்பும் நன்றியும்.

உயிரோடை said...

//பாட்டிவடை சுடுகிறாள் எனகாட்ட வேண்டிஆள் தேடி அலையும்அத்துவானகாட்டிலொருநிலா.//

ச‌மூக‌ சீர‌ழிவா? ச‌ம‌த்துவ‌மா?

//மொட்டை மாடி தகப்பன்களைமனைவியறியாது நேசிக்கிறாள்மற்றொரு நிலா//

நிராக‌ரிப்பா? நிறைந்த‌ நேச‌மா?

சிந்திக்க‌ வைக்கும் வ‌ரிக‌ள்.

பா.ராஜாராம் said...

கவிதையில் இவ்வளவு சிந்திக்கவில்லை உயிரோடை.
உங்கள் கேள்வி வந்த பிறகு சிந்திக்கிறேன்.எவ்வளோவோ
பதில் தெரியாத அழகான கேள்விகள்!
நன்றி உயிரோடை!(இந்த பெயர் அற்புதம்!)

ஷ‌ஃபிக்ஸ் said...

//எல்லா
குழந்தைகளுக்கும்
சோறூட்டுகிறது
தனி ஆளாய்
ஒரு நிலா.//

நாமும் தான் நிலாவை தினமும் பார்க்கின்றோம், கவிஞர் பார்வைக்கு வித்யாசமா தோண்றியிருக்கு. அருமை நண்பரே.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் ஷ‌ஃபிக்ஸ்
மிகுந்த அன்பும் நன்றியும்.