Thursday, August 20, 2009

காட்சி வழி...


(Photo by CC Licence, Thanks neoliminal)

லையில் இருந்து
தொப்பி பறித்து
தலையில் அணிந்து
"சல்யுட்" என்கிறாள்.
யிறு தவ்வ சிரிக்கிறார்
காசி ஏட்டையா.

"டையை பார்த்துக்கிறேன்
நல்ல டீயா சாப்பிட்டு வாண்ணே"
தலை கலைத்து சிரிக்கிறாள்
டீ கடை மாரி அண்ணனை.
சவு சொல்லி சிரிக்கிறார்
மாரி அண்ணனும்.

"ன்னத்தை பார்க்கிற
நானும் பொம்பளைதேன்"
வேறு முகத்தை தெறிக்கிறாள்
திரும்பி பார்க்கும் யுவதியிடம்.

நீதிமன்ற சுவற்றை
கீறி
துளிர்க்கிறது
வேம்போ
விருட்சமோ.

யந்து பயந்து
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
வெறும்
காட்சியை.

தைரியமாய்
வாழ்ந்துபார்த்துகொண்டிருக்கிறது
தீரா
வாழ்வு.

29 comments:

சூர்யா ௧ண்ணன் said...

அருமையா இருக்குங்க!

தண்டோரா ...... said...

ஒரு முன்சிபல் நீதிமன்ற வளாகத்தை சித்திரமாய் காட்டிவிட்டீர்கள்....

என்.விநாயகமுருகன் said...

நீதிமன்ற வளாகம் அருமை

Vidhoosh said...

காட்சி அருமை.
--வித்யா

சேரல் said...

காட்சி கண் முன் விரிகிறது. அதைத்தாண்டிய வெறுமை உணர்வு மனமெங்கும் பரவுகிறது.

-ப்ரியமுடன்
சேரல்

ஜெஸ்வந்தி said...

//நீதிமன்ற சுவற்றை
கீறி
துளிர்க்கிறது
வேம்போ
விருட்சமோ.//
இரண்டுமில்லை போல் இருக்கிறது நண்பரே! நாட்டு நடையில் படம் பிடித்திருக்கிறீர்கள்.
கவிதை அழகு.

Nundhaa said...

ஒளிப்படமும் கவிதையும் அருமை

நேசமித்ரன் said...

காட்சிகளுக்கு உள்ளிருக்கும் காட்சிகள் உணர்
படுகையில் . கவிதைதான் எவ்வளவு பிரும்மாண்டமாய் விரிந்து கொண்டேபோகிறது .அழகு பா.ரா

பிரியமுடன்...வசந்த் said...

படம் கவித்துவமாயிருக்கிறது.....

கவிதைகள் விருட்சமாய் நீண்டு.... இன்னும் எங்கே?

Gayathri said...

Nanba..,

Manathai oodurvia kavithai...,

Ulvanki vellipaduthiya unarvukal arumai...,

It is the best so far...

Mathi

ஜோதி said...

காட்சிகள் கண்முன்னே விரிகின்றன
நிதர்சனம் அண்ணா

ஆ.ஞானசேகரன் said...

படமும் கவிதையும் அருமை நண்பா

மாதவராஜ் said...

நல்லா இருக்கு.

இரசிகை said...

pidichchurukku........:)

மண்குதிரை said...

excellent sir

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு ராஜாராம்.

நட்புடன் ஜமால் said...

காட்சி வழி

பயத்துடனான தகிரியம்.

------------

படம் வெகு அழகு.

துபாய் ராஜா said...

கவிதை வழி காட்சிகள் கண்முன்.

படமும் அழகு.

ஹேமா said...

ராஜா அண்ணா கவிதை வாழ்வுத் தொடர்.அலசி ஆராய வெறுமைதான் அங்கே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பயந்து பயந்துபார்த்துக்கொண்டிருக்கிறேன்வெறும்காட்சியை.
தைரியமாய்வாழ்ந்துபார்த்துகொண்டிருக்கிறதுதீராவாழ்வு //

பெரிய பெரிய அனுபவங்களையெல்லாம்
சின்னக் சின்ன கவிதையா சொல்லிட்டு போயிடறீங்க.

பா.ராஜாராம் said...

பிரியங்களில் நிறைந்த என்,சூரியா கண்ணன்,தண்டோரா,விநாயகம்,வித்யா,சேரல்,ஜெஸ்,நந்தா,நேசா,வசந்த்,காயத்ரி&மதி,ஜோதி,சேகர்,மாதவன்,ரசிகை,மண்குதிரை,சுந்தரா,ஜமால்,ராஜா,சகோதரி ஹேமா,அமித்தம்மா,மற்றும் என் எல்லோருக்குமாக...ரமதான் வேலைகள் கெடுபிடி.இந்த ஒரு மாத காலம் இப்படியான பின்னூட்டமே வாய்க்கும்.இதில் என் பகுதி இழப்பே அதிகம்.பின்னூட்டம் வழியாக உங்கள் யாவரின் கைசூடு ஏந்தி கிறங்கி கிடக்கும் சந்தோசம்,நிறைவை, தற்போதைக்கு தள்ளி போடுகிறேன்.மீண்டும்,...இதில் என் பகுதி இழப்பே அதிகம்...நிறைய அன்பும் நன்றியும் நண்பர்களே.

பா.ராஜாராம் said...

பிரியங்களில் நிறைந்த என்,சூரியா கண்ணன்,
தண்டோரா,விநாயகம்,வித்யா,
சேரல்,ஜெஸ்,நந்தா,நேசா,வசந்த்,
காயத்ரி&மதி,ஜோதி,சேகர்,மாதவன்,
ரசிகை,மண்குதிரை,சுந்தரா,ஜமால்,
ராஜா,சகோதரி ஹேமா,அமித்தம்மா,
மற்றும் என் எல்லோருக்குமாக...
ரமதான் வேலைகள் கெடுபிடி.
இந்த ஒரு மாத காலம்
இப்படியான பின்னூட்டமே
வாய்க்கும்.இதில் என் பகுதி
இழப்பே அதிகம்.பின்னூட்டம்
வழியாக உங்கள் யாவரின்
கைசூடு ஏந்தி கிறங்கி கிடக்கும்
சந்தோசம்,நிறைவை,
தற்போதைக்கு தள்ளி போடுகிறேன்.
மீண்டும்,...இதில் என் பகுதி இழப்பே அதிகம்...
நிறைய அன்பும் நன்றியும் நண்பர்களே.

sakthi said...

வித்தியாசமான சிந்தனை

S.A. நவாஸுதீன் said...

கவிதையும் அதற்கான படத் தேர்வும் அருமை நண்பா

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் சக்தி,நவாஸ்...
நிறைய அன்பும் நன்றியும்.

சங்கா said...

அருமை அன்பரே

பா.ராஜாராம் said...

ஆகட்டும் சங்கா.அன்பும் நன்றியும்.

உயிரோடை said...

//நீதிமன்ற சுவற்றை
கீறி
துளிர்க்கிறது
வேம்போ
விருட்சமோ.//

இருத்தலின் ஆதார‌த்திற்கு ச‌ட்ட‌மாவ‌து ச‌த்திர‌மாவ‌து.

பா.ராஜாராம் said...

அன்பும் நன்றியும் உயிரோடை!