Monday, August 17, 2009

அனுபவ நீதிக்கதை (தொடர்ச்சி..)

"ஸ்" என அவள் எழுந்து எங்கள் மூவரின் கை பற்றி குலுக்கினாள். என முன்பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.. அதில் ஒரு சின்ன கண்ணாமூச்சி இருக்கிறது. முன்பதிவிற்கு வந்த நீங்கள் பின் பதிவிற்கும் வருகிறீர்களா, அப்படி வரும் பட்சத்தில் என் ட்விஸ்ட் உணர்கிறீர்களா எனபதுதான் அது. அந்த ட்விஸ்ட்டில் இருந்தே தொடங்கலாம்.

மூன்றாவதாக என்னிடம் நீட்டிய அம்மணியின் கையை தவிர்த்து நான் கை கூப்பினேன். என் இலக்கு வேறு எதுவும் இல்லை. மற்ற இருவரில் இருந்து என்னை தனித்து காட்ட கைவசம் வேறு இருப்பு இல்லாததுதான்.

ம்பது வயதை நெருங்கும் அந்த அம்மணி பேன்ட் சட்டை அணிந்து, கிராப்பு வெட்டிய கே.ஆர்.விஜயா போல இருந்தாள். மேலும், ஒரு திரைப்படத்தில், கே.ஆர்.விஜயா தன் தோழிகளில் இருந்து தன்னை தனித்து காட்ட ஜெயசங்கரின் நீட்டிய கரத்தை உதாசினம் செய்து கரம் கூப்பியதும் கூட காரணமாய் இருக்கலாம். என் நினைவிற்கும் எனக்கும் எப்பவும் நேரடி தொடர்பு உண்டு. எதிர்பார்த்தது போலவே அம்மணி என்னை தனித்து பார்வை இட்டது திருப்பதியாக இருந்தது.


(photo by CC licence Thanks #)

பொடியன்கள் இருவரும் "அட பதரே" என்பது போல பார்த்தார்கள். யார் எப்படி பார்த்தால் என்ன நமக்கு இலக்கு -வெற்றி!.. இல்லையா?சிரித்தபடியே அம்மணி, மூவரிடமும் கேள்விகளை தொடங்கினாள். கேள்வி மூன்று பேருக்கானதாக இருந்தாலும், பதில் என்னவோ இரண்டு பேருக்கானதாகவே இருந்தது. நான் விலை உயர்ந்த மரத்தினால் கடையப்பட்ட சிற்பம் மாதிரியான ஒரு புன்னகையை அணிந்து, அவ்வபோது நண்பர்களின் பதில்களை ஆமோதிப்பது மாதிரியான தலையாட்டலுடன் இருந்தேன்.

லையாட்டல், ஐந்து நட்சத்திர ஹோட்டலில், கனவான்களை வரவேற்க கதவுதிறப்பவரின் தலையாட்டலை விட சற்று தாழவும், பிரேதத்தை விட சற்று மேலானதாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். புத்திசாலித்தன போட்டி உண்மையில் எனக்கும் அந்த அம்மணிக்கும் இடையில் தான் என்று உணர்வதை நம்பாமல் இருக்க விரும்பினேன். விருப்பு வேறு யதார்த்தம் வேறுதானே எப்பவும்.

பொடியன்களிடமிருந்து கேள்விகள் குறைந்து என்னை நேராக பார்க்க தொடங்கினாள் அம்மணி. வயிற்றில் உருளும், "ஈம்முச்சை ... எலும்புச்சை... டண்டாங்கி டாமுச்சை" யை காட்டிகொள்ளாமல் அண்ணலும் நோக்கினேன். ஒரு மாதிரியான அனுமானத்திற்கு வந்தது போல, சாய்வு நாற்காலியில் மேலும் சாய்ந்து அமர்ந்தாள். அந்த சாய்வு உண்மையில் எனக்கு அறவே பிடிக்க காணோம். உங்களுக்கும் அது பிடிக்க வேணாம். இரண்டில் ஒன்றுதான் சாத்தியம் உங்களுக்கு. ஒன்று என்னை பிடிக்க வேணும் அல்லது அம்மணியின் அந்த சாய்வை பிடிக்க வேணும். நீங்கள் என் பக்கமாக இருப்பதால் மேற்கொண்டு பேசலாம்தான் நான்.

"ங்க பேர் என்ன சொன்னீங்க" என்றாள் நேரிடையாக என்னை பார்த்து. முதுகில் விழும் குத்தை விட மார்பில் விழும் குத்து நிலை தடுமாற செய்யும்தானே நீங்களாய் இருந்தாலும் நானாய் இருந்தாலும். படு போரில் ஒப்பாரி ஏது என்பதாலும் abcd க்கும் முந்தி பிறந்த ஆங்கிலம் இது என்பதாலும்.. என் பெயர் சொன்னேன்.

"ந்த ஹோட்டலில் வேலையில் இருந்தீர்கள்" என்றாள்.

" ஸ்" என்றேன்.

"சாரி" என்று நாற்காலியில் இருந்து எழுந்து அவளின் காதை என் வாயின் அருகாமையில் கொண்டு வந்தாள். வலது கையை வேறு ஒலி சிதராதபடிக்கு அணை கட்டி நின்றாள். (நல்ல நறுமணம்... கேட்டீர்களா..)

வ்வளவு அருகாமையில் காதை பார்த்தால்,நான் எப்பவும், "குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...." என கத்த விரும்புவேன். விருப்பத்தை நிறைவேற்ற முடியாத வாழ்வு நெருக்கடியை என்ன சொல்ல.. நடப்பு என்னை உசுப்ப, விடாபிடயாக..

"ஸ்" என்றேன் மீண்டும்.

ந்த விடாபிடி "எஸ்"ல் சில பல தேடல்கள் இருந்தது. ஆங்கிலம் புரிவதில் குளறுபடி இல்லை எனக்கு. மறுமொழிதான் சற்று சிக்கும். மறுமொழி போலவே எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட்டில் இருந்த புகழ் அண்ணனின் ஹோட்டல் பெயர் அவசரத்தில் மல்லாந்து சிக்கிகொண்டது. ஒரு நேர்முக தேர்வில் கேள்விக்கு பதில் தெரியாவிட்டாலும், கேள்வியை நாம் எப்படி அணுகுகிறோம், கேள்வியில் இருந்து எப்படி நாம் விடுபடுகிறோம் என்பதை கேள்வியாளர்கள் பார்ப்பார்கள் என்பதை முன்பே நான் கேள்விபட்டிருந்தேன். புகழ் அண்ணன் அனுப்பி தந்த லெட்டர் பேட் தாள் அறையில் இருந்ததை தைரியமாக உணர்ந்தேன். அதே நேரம் என் வாயில் இருந்து வருகிற பதில்தான் இனி முதன்மையானது என்பதையும் நான் உணராமல் இல்லை. ஞாபக சீக்கு கொண்ட கோழியை மிரட்டும் தொணியில்,

"ங்களைதான் கேட்கிறேன், எந்த ஹோட்டலில் வேலையில் இருந்தீர்கள்"

னி தாமதிப்பது உதவாது என்று உணர்ந்த நான்..

"ருப்பையா புரட்டா கடை, காந்தி வீதி" என்றேன் கூடுமானவரையில் ஆங்கிலத்தில்.

"வாட்?" என்றாள் மீண்டும் நெருக்கம் கூட்டி...

றுதிபட கூறினால் அறுதிபடுமோ என சந்தேகித்த நான் மீண்டும்,..

"ஸ்" என்றேன்.

ந்த தள்ளுமுல்லை உணர்ந்த கபிலன் என்கிற பொடியன், நல்ல சூட்டிகை என்பதாலும் அவன் வாழ்வும் என்னுடன் பிணைக்க பட்டிருப்பதாலும், எனக்கு எடுத்து கொடுக்கும் முகாந்திரமாக ஹோட்டல் பெயர் சொன்னான்..

ம்மணி, அன்றைய பொழுது அவ்வளவு ரம்மியம் என்பதுபோல் ஒரு பெருமூச்சை விட்டாள். பிறகு யாரையோ பெயர் சொல்லி அழைத்தாள் வந்த சப்பை மூக்கு காரனிடம், ஒரு மெனு வாசித்தாள். ஆகட்டும் என்பதாக அவன் மறைந்தான்.

வள் கூறியதில் "பிளேட்" என்பது மட்டும் விளங்கியது. முகம் பார்த்து படிப்பதில் வல்லவன் என்கிற நம்பிக்கை என்னிடம் இருந்ததால் பொடியன்களின் முகம் பார்த்து மொழி உணர முற்பட்டேன்.

"விடிந்தால் தூக்கு" என்கிற முகச்சாயலில் இருந்தார்கள் இருவரும். மதுரை பேருந்தும் "கை கொட்டி சிரிப்பார்கள் " பாட்டும் தேவை இல்லாமல் வந்து போய் கொண்டிருந்தது.

ப்பை மூக்கு காரன் வந்தான். வெளுத்த உருப்படி கொண்டுவருகிற மூர்த்தி, "முண்டா பனியன் சிறியது ஒன்று, பெரியது ஒன்று, கைவச்ச பனியன் சிறியது ஒன்று பெரியது ஒன்று" என்று டிக் அடிக்க வசதியாக வாசிப்பது போல்...

"பீங்கான் தட்டு ஒன்று, கரண்டி பெரியது ஒன்று சிறியது ஒன்று, கத்தி பெரியது ஒன்று சிறியது ஒன்று, முள் கரண்டி பெரியது ஒன்று சிறியது ஒன்று" என்று வாசித்து மேசையில் வைத்தான். வைத்துவிட்டு போயிருந்தால் கூட அவனை எனக்கு பிடித்திருக்கும். அம்மணியின் பின்புறமாக நின்று கொண்டான். காசு வைத்து சீட்டு விளையாட துப்பில்லாதவர்கள், விளையாடுபவர்களின் பின்புறமாக நின்றுகொண்டு தன் அரிப்பை போக்கி கொள்கிற மனிதர்கள் எல்லா தேசத்திலும் உண்டு போல. நேர்மை அற்றவன்..

ற்கனவே பொடியன்கள் படம் வரைந்து பாகம் குறித்து தந்திருந்ததாலும்.. அவர்கள் தராத தைரியம் என்னிடமிருந்ததாலும்... ஏற்கனவே மொழி பிரச்சினையில் தோல்வியை தழுவிய அவமானத்தினாலும்,.. ஒரு பிரச்சினையை விரைவில் முடிவிற்கு கொண்டுவர வேணும் என்கிற நியாயத்தாலும்,.. முட்டிக்கொண்டு நிற்கிற முதல் இயற்கை உபாதையாலும்.. பர பரவெ
வை ராஜா வை விளையாட்டிற்கு தயாரானேன்.

தேர்ந்த கலைஞனை போல் தட்டை வைத்து மற்ற கருவிகளையும் தோராயமாய் அதனதன்(!!!) இடத்தில் வைத்தேன்.

நிமிர்ந்து அம்மணியை பார்த்தேன்.

"ப்படிதான் உங்கள் ஹோட்டலில் வைப்பார்களா?" என்றாள் மைனா மாதிரியான அடிக்கண் பார்வையில்.

ப்படிகூட வைப்பார்களே என்பது போல் தட்டில் வலப்புறம் இருந்த கரண்டியை இடப்புறமும், இடப்புறம் இருந்த கத்தியை வடப்புறமும் மாற்றினேன்.

"ஹோ" என்றாள் சற்று சாந்தமாகி.


(photo by CC licence Thanks #)

"ஹோ" சொல்கிறபோதெல்லாம் கேள்விக்கு மறு பதில் உள்ளது என்பதை விவேகானந்தா பள்ளி, சிவகாமி டீச்சரிடம் நான் பயின்றிருப்பதால் தட்டை மட்டும் நகர்த்துவதை தவிர்த்து மற்ற சகல சாமான்களையும் வடபுறம், தென்புறம், வட மேற்கு, தென் கிழக்கு, என மாற்றி கொண்டே இருந்தேன். என் அனுமானத்தில் நான் சரியாக காய் நகர்த்தி கொண்டுதான் இருந்தேன். "செக் மேட்" மட்டும் வரவே காணோம். முற்று புள்ளி அவளிடம் இருந்ததால் முயற்ச்சியை மட்டும் நான் கைவிடவே இல்லை. போலவே, நல் மரத்தில் செய்யப்பட என் புன்னகையையும். விளையாட்டு புளித்திருக்கும் போல... மீண்டும் கேள்விகளை தொடங்கினாள்.

"ந்த ஏஜன்சி உங்களை அனுப்பியது" என்றாள் மற்ற இருவரையும் பார்த்து. பொடியன்கள் இருவரும் புகைபடமாக மாறி இருந்தார்கள் வெகு நேரம் முன்பாகவே... நானே பதில் சொன்னேன்.
"அனிதா & மிஸ்ஸஸ் கோவாபரேட்டிவ் ஏஜன்சி அட் அண்டார்டிக் ஓசன்" என்றேன் (அனிதா மற்றும் மனைவியின் கூட்டு முயற்ச்சியை அண்டார்டிகா பெருங்கடலில் அமிழ்த்துங்கள் என்பதற்கு வேறு ஆங்கிலம் இல்லை தானே) வயிறு எரிந்தது எனக்கு...

"ண்மையை சொல்லி விடுங்கள். இது சவூதி மன்னரின் மகனுடைய அரண்மனை என அறிவீர்களா?... உண்மையை சொல்லி விட்டால் தண்டனை ஒன்றும் இருக்காது. இந்த அலங்கோலத்தை அமீரா (பிரின்சஸ்) பார்த்தால் கண்டிப்பாக சிறை செல்ல நேரிடும். பிறகுதான் ஊர் போவீர்கள்" என்று அம்மணி சொன்ன அந்த தருனமோ, சிறை தந்த பயமோ என் சக்தி திரள தொடங்கியது. எப்பவும் எனை கை விடாத "உண்மை" என்கிற சக்தி! நான் பேச தொடங்கினேன்...

".. டெல்.. ட்ரூ..." தந்தி பாஷை போதும்தானே சாவு உணர்த்த.

"கே" என்றாள்.

ன் மொழியை வாசிக்க இயல்கிறது என்பதை உணர்ந்ததும் சரசர வென பேச்சு வர தொடங்கியது. சகலமும் சொன்னேன். இந்த சதியில் இவர்கள் இருவருக்கும் பங்கில்லை. இவர்களின் தகுதியை நீங்கள் பரிசோதித்து அறியலாம். நீங்கள் என்னிடம் இருந்து தொடங்கியது இவர்களின் துரதிர்ஷ்ட்டம் கூட" என்று தட்டு தடுமாறி சொல்லி முடித்தேன்.

ற்று நேரம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அம்மணி" எவ்வளவு பெரிய தவறு செய்திருகிறீர்கள் தெரியுமா?" என்றாள் என்னை பார்த்து.

ங்கிருந்துதான் இந்த நீதி கதை தொடங்குகிறது.

"தெரியும். ஆனால் நான் கடவுளின் மேல் அதீத நம்பிக்கை கொண்டவன். நான் எங்கு போனாலும் எனக்கு வழி ஏற்படுத்தி தருவார் என் கடவுள்" என்றேன்.

"ன் கடவுள் இங்கு எங்கிருக்கிறார்" என்றாள்.

"தோ" என அம்மணியை காட்டினேன்.

காட்டும் போதே என் கரத்தையும் நீட்டினேன். முன்பு தவிர்த்த அதே கரத்தை.


(photo by CC licence Thanks #)

ற்று நேரம் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அம்மணி.. சட்டென சிரிக்க தொடங்கினாள். அவள் சிரிப்பில் அவளின் புத்திசாலிதனங்கள் கரைவதை கண் கூடாக கண்டேன் (முக ஒப்பனை களிம்பு மட்டும் அங்கேயேதான் இருந்தது) இடம்.. வலம்.. குனிந்து.. நிமிர்ந்து என வெகு நேரம் வரையில் சிரித்தவள் நிதானம் பெற்ற போது, செய்வதறியாது நீண்டிருந்த என் கரம் பற்றி இருந்தாள்.
ஆச்சு.. இதோ ஏழு வருடம் முடிந்து விட்டது.

நீதி
===
ரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தை கொல்லும்.
வென்ற வார்த்தை நீதிக்கதை இது.
கொன்ற வார்த்தை நீதிக்கதை...மற்றொரு நீதிக்கதையில்.

அன்பும் நன்றியும்...
பாரா

39 comments:

na.jothi said...

சுருக்கமாக முடிக்கனும் முடிச்சிட்டிங்களா

என் மொழியை வாசிக்க இயல்கிறது என்பதை உணர்ந்ததும் சரசர வென பேச்சு வர தொடங்கியது.

எல்லாருக்கும் இருக்குமா என்று தெரியவில்லை
ஆரம்ப தயக்கம் என்னிடமும் உண்டு

"இதோ" என அம்மணியை காட்டினேன்.
காட்டும் போதே என் கரத்தையும் நீட்டினேன். முன்பு தவிர்த்த அதே கரத்தை.

பக்கா வான end card கதைக்கு
welcome card புதிய இடத்திற்கு

sakthi said...

"உங்க பேர் என்ன சொன்னீங்க" என்றாள் நேரிடையாக என்னை பார்த்து. முதுகில் விழும் குத்தை விட மார்பில் விழும் குத்து நிலை தடுமாற செய்யும்தானே நீங்களாய் இருந்தாலும் நானாய் இருந்தாலும்.

ஆம் ராஜா சார் கண்டிப்பாக

sakthi said...

"கருப்பையா புரட்டா கடை, காந்தி வீதி" என்றேன் கூடுமானவரையில் ஆங்கிலத்தில்.


ஹ ஹ ஹ

Unknown said...

முற்று புள்ளி அவளிடம் இருந்ததால் முயற்ச்சியை மட்டும் நான் கைவிடவே இல்லை. - Simply Superb writing!!!

sakthi said...

அவள் சிரிப்பில் அவளின் புத்திசாலிதனங்கள் கரைவதை கண் கூடாக கண்டேன் (முக ஒப்பனை களிம்பு மட்டும் அங்கேயேதான் இருந்தது) இடம்.. வலம்.. குனிந்து.. நிமிர்ந்து என வெகு நேரம் வரையில் சிரித்தவள் நிதானம் பெற்ற போது, செய்வதறியாது நீண்டிருந்த என் கரம் பற்றி இருந்தாள்.ஆச்சு.. இதோ ஏழு வருடம் முடிந்து விட்டது.

அப்படியா சேதி

sakthi said...

நீளம் சற்று குறைவாய் இருந்திருப்பின் இன்னும் சுவையாய் இருந்திருக்க கூடும் என்பது என் எண்ணம் தவறாய் எடுத்துக்கொள்ள வேண்டாம் ராஜா சார்

துபாய் ராஜா said...

வென்ற வார்த்தை நீதிக்கதை அருமை.

வாழ்க்கையின் ஒரு இக்கட்டான சூழ்நிலையை நகைச்சுவையாக விவரித்திருந்தாலும், அந்த நேரத்தில் உங்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை உணர முடிகிறது.

படங்களும் நல்ல தேர்வு.

கொன்ற வார்த்தை நீதிக்கதையையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல இருக்கு உங்களின் நீதியின் நிஜம்

நட்புடன் ஜமால் said...

ஓஹோ" சொல்கிறபோதெல்லாம் கேள்விக்கு மறு பதில் உள்ளது என்பதை விவேகானந்தா பள்ளி, சிவகாமி டீச்சரிடம் நான் பயின்றிருப்பதால்]]


ஓஹோ!

நட்புடன் ஜமால் said...

ட்விஸ்ட் - சுபம்.

---

ஒரு வார்த்தை வெல்லும்ஒரு வார்த்தை கொல்லும்.வென்ற வார்த்தை நீதிக்கதை இது.கொன்ற வார்த்தை நீதிக்கதை...மற்றொரு நீதிக்கதையில்.

சரிதான் - ஓஹ்! மறுக்காவும் உண்டா

சரி சரி வெயிட்டிங்ஸ்

மண்குதிரை said...

romba nallarukkungka sir angkatha nadai

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கதையும், நடையும் ஜோராக இருக்கிறது. நிறுத்தி, சிறிது சிரித்து தொடரவேண்டிய இடங்கள் பல பல. கலக்கல் தான் போங்கோ.!

S.A. நவாஸுதீன் said...

தலையாட்டல், ஐந்து நட்சத்திர ஹோட்டலில், கனவான்களை வரவேற்க கதவுதிரைப்பவரின் தலையாட்டலை விட சற்று தாழவும், பிரேதத்தை விட சற்று மேலானதாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன்.

வயிற்றில் உருளும், "ஈம்முச்சை ... எலும்புச்சை... டண்டாங்கி டாமுச்சை" யை காட்டிகொள்ளாமல் அண்ணலும் நோக்கினேன்.

முதுகில் விழும் குத்தை விட மார்பில் விழும் குத்து நிலை தடுமாற செய்யும்தானே

இவ்வளவு அருகாமையில் காதை பார்த்தால்,நான் எப்பவும், "குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...." என கத்த விரும்புவேன்.

"விடிந்தால் தூக்கு" என்கிற முகச்சாயலில் இருந்தார்கள் இருவரும். மதுரை பேருந்தும் "கை கொட்டி சிரிப்பார்கள் " பாட்டும் தேவை இல்லாமல் வந்து போய் கொண்டிருந்தது.
**********************************
நண்பா!!! முடியல நண்பா. ஆபீஸ்ல சத்தம் போட்டு சிரிக்க முடியலை. கொஞ்சம் இடைவெளி விட மாட்டீங்களா? இப்படியா தொடர்ந்து சிக்ஸர் அடிக்கிறது. நல்ல வேலை தனி அரை என்பதால் தப்பிச்சேன். கலக்கலா எழுதி இருக்கீங்க

S.A. நவாஸுதீன் said...

"எந்த ஏஜன்சி உங்களை அனுப்பியது" என்றாள் மற்ற இருவரையும் பார்த்து. பொடியன்கள் இருவரும் புகைபடமாக மாறி இருந்தார்கள் வெகு நேரம் முன்பாகவே...

"அனிதா & மிஸ்ஸஸ் கோவாபரேட்டிவ் ஏஜன்சி அட் அண்டார்டிக் ஓசன்" என்றேன் (அனிதா மற்றும் மனைவியின் கூட்டு முயற்ச்சியை அண்டார்டிகா பெருங்கடலில் அமிழ்த்துங்கள் என்பதற்கு வேறு ஆங்கிலம் இல்லை தானே)
********************************
அருமை நண்பா. நகைச்சுவை சும்மா சரளமா வருது உங்களுக்கு.

S.A. நவாஸுதீன் said...

நீதி===ஒரு வார்த்தை வெல்லும்ஒரு வார்த்தை கொல்லும்.வென்ற வார்த்தை நீதிக்கதை இது.

அழகா முடிச்சிட்டீங்க

*********************
கொன்ற வார்த்தை நீதிக்கதை...மற்றொரு நீதிக்கதையில்.

சீக்கிரம் எழுதுங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனிதா & மிஸ்ஸஸ் கோவாபரேட்டிவ் ஏஜன்சி அட் அண்டார்டிக் ஓசன்" என்றேன் (அனிதா மற்றும் மனைவியின் கூட்டு முயற்ச்சியை அண்டார்டிகா பெருங்கடலில் அமிழ்த்துங்கள் என்பதற்கு வேறு ஆங்கிலம் இல்லை தானே) //

நிறைய இடங்களில் சிரித்து வைத்தாலும் இந்தக் குறிப்பிட்ட இடம் சிரிச்சு சிரிச்சு முடியல.

மனதுக்கு மிகவும் வருத்தமான நிகழ்வை கூட இவ்வளவு நகைச்சுவையாக சொல்லியிருக்கீங்க.
மிகவும் நெகிழ்ச்சி.

கடைசியில் சொல்லப்பட்ட நீதி அபாரம்.

//கொன்ற வார்த்தை நீதிக்கதை...மற்றொரு நீதிக்கதையில்.//

சீக்கிரம் இட வேண்டுகின்றேன்.

ஹேமா said...

நீதி
===
ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தை கொல்லும்.
வென்ற வார்த்தை நீதிக்கதை இது.
கொன்ற வார்த்தை நீதிக்கதை...மற்றொரு நீதிக்கதையில்.


ராஜா,கதையைத் தாண்டி உங்கள் நீதிவார்த்தை மனதில் நின்றுகொண்டது.

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

Anonymous said...

”அனிதா & மிஸ்ஸஸ் கோவாபரேட்டிவ் ஏஜன்சி”

நான் மிகவும் ரசித்தது, :) :)

பா.ராஜாராம் said...

ஜோதி
======
ஆகட்டும் ஜோதி...ரொம்ப சந்தோஷமும் நன்றியும்.தொடர்ச்சியான உங்கள் ஊக்கம் மிகுந்த உற்சாகம் எனக்கு.பேசுவோம்..

சக்தி
=====
மிகுந்த நன்றி சக்தி.உங்கள் சிலாகிப்பும் அக்கறையும் நெகிழ்வாக இருந்தது.இனி குறைச்சிட்டா போகுது.இது மாதிரியான விஷயங்கள் நம் மக்களாள்தானே சொல்ல இயலும்.உங்கள் இந்த அன்பு உதவிதான் சக்தி.கோபமில்லை.அன்பும் நிறைய சக்தி.மேலும்,உங்களின் "ஜென்"அழகான formate.

துபாய் ராஜா
============
வணக்கம் ராஜா.நிறைய அன்பும் நன்றியும் மக்கா.கொன்ற வார்த்தை நீதி கதை சற்று தாமத படலாம். இன்னும் தொடங்கவில்லை.ரமதான் வேலைகள் தொடங்கியாச்சு.ஆனால் அவசியம் வரும்.ரொம்ப நன்றி மக்கா.

நேசமித்ரன் said...

இப்போது நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கலாம்
பறவை வேடங்களில்
மரத்தின் பாடல்களை

-செல்வநாயகி

பா.ராஜாராம் said...

ஆ.ஞானசேகரன்
================
நன்றியும் அன்பும் சேகர்.தொடர் வரவு மிகுந்த சந்தோசம்.

நட்புடன் ஜமால்
================
திட்டிக்கிட்டே வந்து படிச்சுட்டு "வெயிட்டிங்" கார்டும் போட்டுட்டு போய்றீங்க ஜமால் நீங்க.இதுதான் ஜமால் என்பது மாதிரி.இந்த அன்பு பிரவாகம் ஜமால்.இதுதான் வேணும்.இப்போதைக்கு அடுத்த நீதீ கதை இல்லை.dont worry மக்கா..எப்பவும் போலான அன்பும் நன்றியும்.

மண்குதிரை
============
ஆகட்டும் நண்பா.ரொம்ப சந்தோசம்.உங்களின் கவிதை அடிமை படுத்திகொண்டிருக்கிறது என்னை மண்குதிரை.நான்,பாருங்கள் மனசுக்குபிடித்ததும் நண்பா என்றுவிட்டேன்.நீங்கள் இன்னும் சாரை விடமாட்டேங்கிறீர்கள்.மனசுக்கு பிடித்தவர்களுடன் இழையனும் மண்குதிரை எனக்கு.வற்புறுத்தலில் வேகாது.நிகழட்டும்.நன்றியும் அன்பும்.

பா.ராஜாராம் said...

ஜெஸ்வந்தி
============
சந்தோசமாக இருந்தீர்களா,அது போதும் தோழி..ஒரு கல்யாண கூட்ட விடுதலை மாதிரி.மிகுந்த நன்றியும் அன்பும் ஜெஸ்.

S.A.நவாசுதீன்
=============
வாசித்து நிறைவதற்கு முன்பாகவே,அலை பேசியில் இங்கு பதிவு செய்ததின் மடங்குகளுக்கு அதிகமான பதிவுகளை அறிய தந்த என் நண்பா,இதை விடவா,எழுதுபவனுக்கு வேறு சந்தோசம் வாய்த்து விட போகிறது.அப்படியே இருக்கும்,பேச்சும்,பேச்சின் ஊடாக மென்று துப்பிய சந்தோஷமும்...எழுதுபவனால் ஏந்த முடியயும் என்றென்றைக்கும் பார்க்க முடியாத... உணரக்கூடிய சந்தோசங்களை...,அதன் கண்ணீரை.அதன் அப்பட்டமான துடிப்பை... மேற்க்கொண்டு பேச இயலாது போய் விடுகிறது அறைந்து நிமிர்த்தும் குரலும் குரலின் இடையாக கசிந்த உங்களின் பிரியமும்..நீங்களும் இதை உணரும் போது எழுதுங்கள் நவாஸ் எனக்கு.திருப்பி தர இப்போதைக்கு இதுதான் இருக்கு மக்கா.நன்றியும் அதே அன்பும்.

S.A. நவாஸுதீன் said...

நண்பா. உங்களின் அன்பும், நட்பும் கிடைத்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டு. உங்களுடன் அலைபேசியில் பேசும்போது எனக்கு கிடைக்கும் சந்தோசம் உங்களுக்கும் உண்டு என்பது உங்களின் குரலைக் கேட்கும்போதே உணர முடிகிறது. நேரில் சந்திக்கும் தருணம் விரைவில் வரட்டும்

ரௌத்ரன் said...

ரொம்ப அழகான அனுபவ விவரணை...தொடரட்டும் அதகளம் :)

இரசிகை said...

"protta kadai gandhi veethi"...:))
ippadi niraya..

sirichchu mudiyala..........

ennai suththi irukkiravangalukkellaam yennaala pathil solla mudiyala..

neethi azhagu..
aduththa pathivirkum vegama varuven!!

ippadikku namuttu sirippu
rasihai..

பா.ராஜாராம் said...

அமிர்தவர்ஷிணி அம்மா
========================
ஆகட்டும் அமித்தம்மா.ரொம்ப சந்தோஷமும் கூட..அமித்து குட்டிஸ் நல்லா இருக்காங்கதானே...எப்பவும் போலான நன்றியும் அன்பும் அமித்தம்மா.

ஹேமா
=======
வணக்கம் நீதி தேவதை!..ஆகட்டும்...சந்தோஷமும் அன்பும் நன்றியும் ஹேமா.

amirtham
========
ஆகா...அமிர்தம்,உங்கள் குரல் கேட்க்க அவ்வளவு தேவையாக இருக்கிறது.நீங்கள் பின்னூட்டத்திலும் ஸ்மைலியிலும் தப்பித்து போய் கொண்டே இருக்கிறீர்கள்..வேலை பளுவோ?எப்பவும் போலான அன்பும் நன்றியும் மக்கா..

மாதவராஜ் said...

ரசித்தேன்.

பா.ராஜாராம் said...

நேசமித்ரன்
============
அன்புமிக்க நேசா,நீயும் கேட்டுக்கொண்டுதான் இருக்கியா...பறவை வேடத்தையும்,மரத்தின் பாடல்களையும்!(நன்றி,செல்வநாயகி!)சகோதரி,நேயா,அம்மா,அப்பா,யாவரும் நலம்தானே மக்கா...வெளிச்சம் கூடி இருக்கும் வீட்டில்.இல்லையா?போகிற இடங்களில் எல்லாம் நண்பர்களுக்கு பதில் சொல்லி கொண்டே போன உன் பயண பதில்(துபாய் விமான நிலையம்..)ஆக வாஞ்சைடா நேசா...கை குறைந்தது போல் இருக்கு நேசா...சந்தோசமாய் ரெக்கை அடிச்சு வா,பேசுவோம்.நன்றியும் அன்பும் மக்கா..

பா.ராஜாராம் said...

S.A.நவாஷுதீன்
================
ஆகட்டும் மக்கா...எங்கே போய் விட போகிறது எல்லாம்.ஆனந்த விகடனில் உங்கள் "ஸ்பரிசம்" பிரசுரமானதில் வாழ்த்துக்கள் நவாஸ்.நிறைய அன்பும் நன்றியும்.

ரௌத்ரன்
=========
ஆகட்டும் ராஜேஷ்..தீரா பிரியங்களும் நன்றியும்.

ரசிகை
=======
ரொம்ப சந்தோசம் ரசிகை.உங்கள் எழுத்தின் பரிணாமம் நல்ல உயரம் இப்போ.உங்களின் "உனது பெயர்" ரொம்ப நல்லா வந்திருக்கு.நன்றியும் அன்பும் ரசிகை.

பா.ராஜாராம் said...

மாதவராஜ்
============
வணக்கம் மாதவராஜ்.முதல் வருகையில் நிறைய சந்தோஷமும் நிறைவும் எனக்கு.நன்றியும் கூட நண்பரே.

Nathanjagk said...

வாய்விட்டு சிரிச்சு படித்து மகிழ்ந்தேன்! நீங்கள் இண்டர்வியூவில் இருக்கும் காட்சி மனதில் படமாக ஓடுகிறது. Catering ​கொஞ்சம் அசாதாரணமான வேலைதான். முஸ்தீபுகளில் அதிகம் கவனம் கொண்ட, grammer வழிந்தோடும் வேலை. இந்த அனுபவம் ஒரு காமெடி பீஸா ஏதாவது ஒரு படத்தில் வந்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஒவ்வொரு வரியிலும் இழைந்தோடும் நகைச்சுவை!!​அன்பும் வாழ்த்துக்களும்!

Nathanjagk said...

//"உன் கடவுள் இங்கு எங்கிருக்கிறார்" என்றாள்.

"இதோ" என அம்மணியை காட்டினேன்.

காட்டும் போதே என் கரத்தையும் நீட்டினேன். முன்பு தவிர்த்த அதே கரத்தை.//
இந்த இயல்பு என்னை வசீகரிக்கிறது. தவிர்க்க இயலா நிழல் போலதான் உள்ளுறை நற்பண்பு!

Nathanjagk said...

//நான் சரியாக காய் நகர்த்தி கொண்டுதான் இருந்தேன். "செக் மேட்" மட்டும் வரவே காணோம்// இதுமாதிரி இடுகை முழுதும் காணலாம். இருந்தும் இந்த விவரணையை என்னால் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை! அற்புதம் நண்பா!

Nathanjagk said...

//நாற்காலியில் மேலும் சாய்ந்து அமர்ந்தாள். அந்த சாய்வு உண்மையில் எனக்கு அறவே பிடிக்க காணோம். உங்களுக்கும் அது பிடிக்க வேணாம். இரண்டில் ஒன்றுதான் சாத்தியம் உங்களுக்கு. //
அய்யோ.. சாமி..! முடியல! ஊருக்கு கிளம்பி வாங்க, நாம உக்காந்து பேசுவோம்!!

Nathanjagk said...

//"அனிதா & மிஸ்ஸஸ் கோவாபரேட்டிவ் ஏஜன்சி அட் அண்டார்டிக் ஓசன்" என்றேன் (அனிதா மற்றும் மனைவியின் கூட்டு முயற்ச்சியை அண்டார்டிகா பெருங்கடலில் அமிழ்த்துங்கள் என்பதற்கு வேறு ஆங்கிலம் இல்லை தானே) வயிறு எரிந்தது எனக்கு... // எனக்கோ வயிறு வலித்தது.. சிரித்து.. சிரித்து!

பா.ராஜாராம் said...

ரொம்ப சந்தோஷமும் நெகிழ்வும் ஜெகா...அன்பு நிறைய.

ஷங்கி said...

இயல்பான நகைச்சுவையுடன் எழுதியிருக்கீங்க. அதி அற்புதம்! உங்க கரண்டி நகர்த்தல்கள் ஜீலியா ராபர்ஸையும், பிரிட்டி வுமனையும், என்னுடைய ஒரு அனுபவத்தையும் மீட்டியது.

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றி சங்கா...மிகுந்த நெகிழ்வும் கூட.