Wednesday, August 5, 2009

தொடக்கப்பள்ளி



துவரையிலுமான எனது பதிவுகளுக்கு ரசிகர்களாக இருந்து புகைபடங்கள் தேர்ந்தெடுத்தது எனது நண்பரும் எனது சகோதரரும் தான். எனது நண்பர்களாகிய உங்களின் (கவிதைக்கான, படத்திற்கான) எந்த ஒரு பாராட்டும் அவர்களையும் அடையும். அந்த நண்பர் சமீபத்தில் ஒரு புகைபடம் அனுப்பித்தந்தார். 2006ல் எடுக்கப்பட்ட பழனிக்கு அருகில் உள்ள அவருடைய கிராமத்திலிருக்கும் ‘அரசு துவக்கப்பள்ளி’யின் படம் இது. ஒரு மாற்றத்திற்க்காக ’படத்திற்க்கான கவிதையொன்று’ எழுத முடியுமா என்று கேட்டுக்கொண்டார்.

னக்கொரு யோசனை:
உங்கள் அனைவரையும் இந்த விளையாட்டிற்க்கு சேர்த்துக்கொள்ளலாமென்று. இப்படத்திற்கான எனது கவிதை கீழுள்ளது. உங்களுக்கு விருப்பமிருப்பின் இப்படத்திற்க்கான உங்கள் கவிதையை எழுதி எனது மின்மடல் முகவரிக்கு (rajaram.b.krishnan@gmail.com) அனுப்பவும் அதை உடனுக்குடன் இப்பதிவில் சேர்க்கிறேன். பரிசு நிறைய இருக்கிறது...எப்பவும் போல் என் நிறைய அன்புதான்...வேறென்ன!

கஸ்ட் 12ம் தேதிவரை உங்கள் கவிதயை எனக்கு அனுப்பலாம். உங்கள் தளத்திலும் வெளியிட விரும்பினால் தாராளமாக இந்த புகைபடத்தை அங்கே உபயோகப்படுத்தலாம்.


நன்றி

வ்வளவு சந்தோசமாய் இருந்தது.
அவரவர் கைமணம்.
நினைவு பிசைந்து உருட்டிய உருண்டை.
பேசி சிரித்த நாட்கள்.
நினைந்துருகிய சிநேகிதம்.
கை நழுவிய பால்யம்.

வ்வளவுக்கும் ஆதாரம் ஒருபடம்.
ஒரே ஒரு புகை படம்!

ன்ன சொல்வது..
"இப்படி,எப்பவாதுதான்
வாழ வாய்க்கிறது"
என்பதை தவிர.

ங்கள் அனைவரின் இந்த பங்களிப்பும் அன்பும் மகத்தானது. மறக்க இயலாதது. நன்றியும் அன்பும் மக்களே...
-பாரா


வெளியேறலின் வலி

ள்ளிக்கூடத்தின்
மேற்கூரையில்
ஒரு தனி ஓடு
சரிய தொடங்கிய
தருணத்தில்
எல்லாம் மறந்து
வெளியேறியவர்களை
சரிபார்க்கையில்
மனது லேசாக வலிக்கும்

விடுபடலின் பட்டியலில்
எடுக்காமல் விட்ட
புத்தகப் பையினுள்
தமிழ்ப்புத்தக நடுவே
இருக்கும் மயிலிறகு
போட்ட குட்டிக்கு
எப்படி அடிப்பட்டிருக்குமோ?


அம்மா போயிட்டு வாறேன்மா...

கடந்தகால வாழ்வை
அசைபோடும் பொக்கைவாய்த் தாத்தாவின்
நினைவில் கூட..
பள்ளிக் காலம் வந்து போகும்!!

நாமும் நினைவுத் தூசியைத்
தட்டிப்..
பயணிப்போம்.,
நம் பள்ளிக் காலப் படிமங்களுக்குள்!

மாவுக் குச்சி..
பென்சில்..
பேனா..என வெவ்வேறு எழுதுகோல்கள்
நம்மைக் கிறுக்கிய காலம் அது!!

கடித்து பகிர்ந்த
தின்பண்டம்...
அதன் எச்சிலைப்
பெரிதுபடுத்தாது வாங்கிச்
சுவைத்து
சிந்திய புன்னகைப் பூக்கள்...
கடனாய்கொடுத்த
மைத் துளிகள்-என்ற
சின்ன சின்ன
பரிமாற்றங்களில் தான்
நம் நட்பு வானம் விடிந்தது!!

பள்ளி மைதானத்தின்
விரிந்த வானத்தில்..
நிறைந்திருந்தது நம் உலகம்!

பள்ளி மணி ஓசை..
நட்ட மரக் கன்றுகள்..
முதல் சுற்றுலா..
முதல் தோழி..என
நாம் கடந்துவந்த
ஹைகூகளின் பட்டியல் நீளும்!

நடக்கவே தெரியாது நமக்கு
ஓடித்தான் நடந்தோம்..
உண்மை கூற வேண்டுமெனில்
பறந்தே திரிந்தோம்..
ஆம்!!
ஒரு கூட்டுப் பறவைகள் நாம்.
நமது சிறகுகள்..
சீருடையின் ஒரே வண்ணத்தால் மட்டுமே
அலங்கரிக்கப்பட்டிருந்தன..
இன.. மத..பேதமின்றி!!

விடுமுறை தினங்களிலும் கூட
பாடப் புத்தகங்களோடு பள்ளியில் நாம்..
சிரித்து விளையாடுவதற்காக!!

பழகிய விதிமுறைகள்..
திசைமாறிய குறிக்கோள்கள்..
நேராய் மாற்றிய தண்டனைகள்..
மதிக்க ஆரம்பித்த ஆசிரியர்கள்..
முயற்சிக்குப் பின்னும் தோல்விகள்..
தானாகவே வந்தமைந்த வெற்றிகள்..
இரசிக்க ஆரம்பித்த பாடல்கள்..
புரிய முயற்சித்த பாடங்கள்..,-எனத்
துவங்க ஆரம்பித்த போதுதான்
புரிந்தது..,
முடியவிருந்த பள்ளிக்காலத்தின் அருமை!!



மீண்டும் மீண்டும் உருப்போட்டுப் படித்து எடுத்த
முதல் ரேங்க்
யாரோ எழுதிய கட்டுரைக்குப் போட்டியில் வாங்கிய
முதல் பரிசு
குப்பில் பேசாமல் உம்மணாமூஞ்சியாய் இருந்ததால் வந்த
முதல் பாராட்டு
பெண்ணின் சடை பிடித்து இழுத்துக் குதூகலித்த
முதல் சீண்டல்
தனால் வைத்தாரென்று புரியாத அஞ்சாப்பு டீச்சரின்
முதல் பாசம்
ஸ்பண்ட் அடித்ததனாலென்ற கிசுகிசுப்புடன் பார்த்த ஆசிரியையின்
முதல் அழுகை
முதலும் கடைசியுமான நிகழ்வுகள் நிறைய நீங்காதிருந்தாலும்
(மீண்டும்)போகத் தூண்டுகிறாள்
நான் மறந்துபோன யாரிடமோ என்னை விசாரித்த
முதல் தோழி


சி செய்யப்பட்ட வகுப்பில்
முதல் பெஞ்சில் உட்கார்ந்து
டீச்சர் உதிர்க்கும் சாக்பீஸ்
தூள்கள் டஸ்ட் அலர்ஜியை
உண்டாக்குவதால்
சற்று பின் தள்ளி அமர வைக்குமாறு
கிளாஸ் டீச்சரிடம்
லெட்டர் எழுதிக் கொடுக்கும்படி
கெஞ்சுகிறான் மகன்
பூகோள வாத்தியர் வகுப்பில்
இடையில் பேசியதால்
இரு கையையும் தூக்கிக்கொண்டு
முட்டிக்கால் போட்டு
மூன்று மணி நேரம் மூத்திரத்தை
அடக்கிக்கொண்டிருப்பதால்
லெட்டர் எழுதமுடியவில்லை


ண்ணாம் மணி
இரண்டாம் மணி
அடிச்சதும்

ண்ணுக்கு மணி
சாப்பாட்டு மணி
அடிச்சதும்

ங்கில
தமிழ் வாத்தியார்
அடிச்சதும்

மிழ்த்தாய் வாழ்த்து
தேசிய கீதம்
படிச்சதும்

றுதிமொழி
எடுத்ததும்

ஞாபகமாய்......


நேற்று நடந்தது போல் உள்ளது


ன்றாக படித்தால் நல்ல எதிர்காலம்

என்றார் ஒருவர் கேட்கவில்லை மனம்
ன் எதிர்காலம் உன் கையில்
என்றார் ஒருவர் கேட்கவில்லை மனம்

ப்படி தன் சுயநலம் இல்லாமல்
மாணவர்களின் பொது நலதிற்காக

பாடுபட்ட ஆசிரியர்கள்


நேற்று நடந்தது போல் உள்ளது


மூக்கொழுகி தலையில் எண்ணை ஒழுகி
வீட்டு பாடத்தை தவிர வேறு கவலை இன்றி


நேற்று நடந்தது போல் உள்ளது


குச்சிஐஸ் விற்கும் தாத்தா

வெள்ளரிபிஞ்சில் உப்பும் மிளகாய்த்தூளும்

தடவி விற்கும் பாட்டி


நேற்று நடந்தது போல் உள்ளது


போனால் மூவரும் பள்ளி அறை இல்லை

என்றால் மூவருக்கும் வயிற்றுவலி

நல்ல நண்பர்கள்


நேற்று நடந்தது போல் உள்ளது



ழகாக உடை உடுத்து
அலங்கார பவனி வரும் ஒரு டீச்சர்
ஆங்கிலப் பாட நேரம்
அவதிப் பட வைக்கும் ஒரு டீச்சர்

குடையைப் பிடித்துக் கொண்டு,
குடையைத் தேடும் ஒரு டீச்சர்
வீட்டு வேலை செய்யா விட்டால்
வீட்டில் போட்டுக் கொடுக்கும் ஒரு டீச்சர்

லக்கியப் பாடமென்று
இம்சை தரும் ஒரு டீச்சர்
இவர்கள் தான் என் முன்னோடி
இப்போ நானும் ஒரு டீச்சர்.


ள்ளிக் கூடம் போக
பல மைல் நடந்தாராம்
என் அப்பா

ளைத்துப் போய் சேர்ந்தவரை
கனிவின்றி கடிந்தாராம்
அவர் டீச்சர்

டைவேளை நேரத்தில் இனிப்பு வாங்க
இரண்டணா கொடுத்தாராம்
அவர் அப்பா

ரிதவித்து பசியுடன் விடுவந்தால்
பலவேலை சொன்னாளாம்
அவர் அம்மா

ள்ளிக் கூட வாசலிலே-என்னை
பவித்திரமாய் இறக்குகிறார்
என் அப்பா

யிறு முட்டத் தின்ற பின்பு-கொறிப்பதற்கு
மூன்று பவுண் தருகின்றாள்
என் அம்மா

நான் கொடுத்து வைத்தவள்.

பொன்னையா மாஸ்டர் சுளகில் அரிசி புடைத்தபடியே

தமிழ் பாடம் சொல்லித் தந்ததை மறக்க முடியவில்லை


முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு

பாடமாக்கினதையும் மறக்கவில்லை.


மூத்திரக்காய் உடைத்து ஊற்றி

சிலேட்டில் எழுத்து அழித்ததையும் மறக்கவில்ல.


"ண்டா லேட்"என்று வாத்தியார் கேட்க

பிட்னிப் புல்லில யாரோ செத்துக்கிடக்கிறாங்க.

அவங்க எழும்பிப் போறவரைக்கும்

பத்தைக்குள்ள ஒழிச்சிருந்தேன் சார்"

வெங்கடாசலம் சொன்னதையும் மறக்கவில்லை.


சின்னக் காளிகோவில் அதுவர ஒரு அரசமரத்தடி புத்தர்

பிறகு ஐயனார் சிலை - பாலம் - வயல்வெளி - ஆறு கடக்க

ஒண்ணு ரெண்டு மூணு என்று மேல்கணக்கு முக்கில்

படிகளைப் பாடமாய் படித்தபடி

அப்பாவின் கை பிடித்து நடந்ததையும் மறக்கவில்லை.


போன வருடம் போய்

என் மலையகத்து ஆரம்பப் பள்ளி பார்த்து

பாதம் தொட்டு வணங்கி வாய் விட்டழுது

பிரியமுடியாமல் பிரிந்து

இனியும் பார்ப்பேனா உன்னை என்று

கண்ணீரோடு வந்ததையும் மறக்க முடியவில்லை

-ஹேமா(சுவிஸ்)



ழை மேகம் பிரதிஎடுத்த
காகிதம் மிதந்து வீழ்ந்திருக்கிறது முற்றத்தில்
மின்னல் வேயும் விரலகள்
நட்சத்திரப் புள்ளிகளுக்கிடையில்
தலை கோதிக்கொள்கின்றன
சரியும் குழல் திருத்த
நகர்த்திக்கொண்டிருக்கிறது காற்று பிரதியையும்
மேகங்கள் போலவே
இசைக் குடித்து வளரும் தாவரம் போல
ஒளிக் குடித்து வளர்கிறது நிழல் முற்றம்


ல்பம் திங்குரியா
வேணாண்டா அப்போ கடல முட்டாய் தாடி
ன்னுதாண்டா இருக்கு கடிச்சுக் குடு
ஸ்கு புஸ்கு உன்சட்டயகுடுறா கடிக்கிறேன்
உன்பாவடயில கடிச்சுத் தர்றதா இருந்தா தா
இல்லாட்டி எனக்கொண்ணும் வேணாம்
ஊளமூக்கு நாயே இந்தா
எம்பாவாடையிலையே கடிச்சுத் தாரேன்

லேய் சேகரு அந்த நொட்டாங்கை குமாருகிட்டயிருந்து
எப்புடியாச்சும் ரசினி பிலிமா எடுத்துட்டு வந்துர்ரா
உனக்கு எம்ஜாரு பிலிம் தாரேன்டா
கொடிக்காபுளி தரியா சொல்லு கொண்டாறேன்
புளியம்பழம் வேனாத்தறேன்

ன்னடா ஆச்சு
கல்பனா டீச்சர் செத்துப் போய்ட்டாங்கலாண்டா
ஐயயோ எப்பிடி டா ..தெரியலடா கொழஞ்சி
நேத்து ரவி வாத்தியாரோட செமசண்டடா
ஸ்டாப்பு ரூம்புல

ங்கடா இனிமே பள்ளியோடத்துக்கு வரமாட்டியா
இல்லடா எங்கையனுக்கு
ஒரு காலு வரல ஆத்தாதான் பள்ளியோடதுக்கு
அடுத்த வருஷம் போயிக்கிரலாம்
திராட்ச தோட்டத்துக்கு
காக்கா வெரட்டபோன்னு சொல்லிருச்சு


ரையில உட்கார்ந்து அ படிச்சது
தடுக்கி விழுற தூரத்தில வீடு இருந்தது
அத்தைமார்க தான் வாத்திமார்க
ஒத்தைச் சொல்லு தடிச்சி சொன்னதில்ல

சேர்ந்து படிச்சவகள விரலால எண்ணிரலாம்
சோர்ந்து போயி நின்னவக பாதி பேரு
கிழிஞ்ச டவுசரு ஒட்டு போட்ட காலம்
ஒழிஞ்சி போனாலும் மாறலை அந்த கோலம்

ருக்குள்ள போறப்பல்லாம் பள்ளி தென்படுது
தொடக்கம் கொடுத்ததை எண்ணி கொண்டாடுது
காரு பங்களானு நிறைய வாங்கியாச்சு
சாரு பேருனு வகைவகையா சேர்ந்தாச்சு

டு போட காசு கேட்டாக
உட்கார நல்ல சேரு கேட்டாக
கூடப் படிச்சவக கண்ணுல படல
தேட மனசும் இடமும் தரல
தொடக்கம் தந்த பள்ளி இன்னமும்
முடக்கம் மட்டுமே பார்த்து கிடக்கு.


பசலிக்கீரை சண்டை (தொடக்கப்பள்ளி நினைவுகள்)
திய உணவுக்கு பின் இரு குழுக்களின் முன்னிலையில் பிரதிநிகள் பேசி முடிவெடுத்தனர். வாரக்கடைசியில் வரும் விளையாட்டு நேரத்தில் சண்டையை வைத்துக்கொள்வதென்று முடிவாயிற்று. கிருஷ்ணமூர்த்தி சார் புறப்பட்டு முக்கு திரும்பும் வரை காத்திருக்கவும், கவனிக்கவும் நால்வரை நியமித்தாகிவிட்டது.

வாரக்கடைசி, சார் புறப்பட்ட அடுத்த நிமிடம் பரபரப்பு பற்றிக்கொள்ள காசி முதலில் தயாரனான் சண்டியன் இன்று வரை. எங்கள் வீட்டின் சந்தில் படர்ந்திருந்த பசலைக்கொடிகள் கைமாறத்தொடங்கியிருந்தன அழுங்காமல் எல்லோருக்கும். சிறிது நேரத்தில் நால்வரும் ஆளுக்கொருவராய் துரத்த ஆரம்பித்திருந்தனர். சண்டையின் முதல் கட்டமாக சமாதன படுத்தும் முயற்சி ஒருவனால் ஆரம்பிக்க அவன் சட்டையை இன்னொருவன் இழுக்க சண்டை ஆரம்பித்தது சிவப்பு நிறத்தில் தற்காலிக கரையை ஏற்படுத்தும் பசலிக்கீரைகளே ஆயுதமாக பயன்படுத்தப்பட்டன. இந்தச்சண்டை முடிவுக்கு வந்ததாக நினைவு இல்லை. விளையாட்டு நேரம் முடிந்தவுடன் அடுத்த வாரகடைசி வரை ஒத்திவைக்க பட்டுக்கொண்டிருந்தன ஒவ்வொரு வாரமும்.

ந்த விளையாட்டுச்சண்டைகளில் நடந்த வரைமுறைகள் நினைவுகளை தூண்டிக்கொண்டே இருக்கிறது இன்று நடக்கும் போர் செய்திகளைக்கண்டு.


யிரினம்
மெய்யினம்
என்னுயிர்
படித்தது
இங்கினம்.


ரொண்ணு ஒண்ணு

ஈரொண்ணு ரெண்டு

உன் நினைவு

எப்போதும்

எனக்குண்டு.


நான்

படித்த

பள்ளி

விட்டு

சென்றேன்

ரொம்ப

தள்ளி.


ற்றி

விட்ட

ஏணி.

ர்

கடக்க

உதவிய

தோணி.

டிக்கும்

முன்

பார்க்க

வா நீ.

-துபாய் ராஜா.



னா
வன்னா
ங்கதான் படிச்சேண்ணா.
ரெண்டு நாலுன்னு
ருப்போட்டு
ர் போனா,
ன்னத்தடா படிக்கிற
ட்டுகறி ருசிக்குமாடான்னு
யா கேட்டாருண்ணா.
க்காந்து யோசிச்சு
ட்டுறது இப்ப ஏருங்கண்ணா


ந்த ஊதா கால் சட்டையை அணிய
ஆசையாய்த்தான் இருக்கிறது
இப்படி தினம் திண்பண்டம் கிட்டுமென்றால் சரி..
ஈ போல் மச்சம் இருக்கும்
என் வாத்தியை
ஏன் ஒரு நாள் நானும் அடிக்ககூடாது
ஒரு நாள் நிச்சயம்
ஓங்கி விடத்தான் போகிறேன்
ஒளவையாரின் ஆத்திச்சூடியை
அடித்து சொல்லி கொடுத்ததுக்காக


விழி நிறைகிறது
விஸ்வ ரூபம்.

கையில் எடுக்கிறாள்
அழுது நிறைகிறேன்.

வா..காட்டித்தருகிறேன்
என கூட்டிப்போய்
குப்புற தள்ளுகிறாள்

வாயிலும் மீசையிலும்
மண் என்கிறேன்.
கை தட்டி சிரிக்கிறாள்.

டு நடுங்கி மூலைக்கு நகர
மீண்டும் விரட்டுகிறாள்.

ட இடமில்லை.
விலகவும் அனுமதிக்க காணோம்.

"ட்ட பல்லு சங்கரா
ஒரு வீட்டுக்கும் போகாத
ஆப்பம் வாங்கி திங்காத
அடிபட்டு சாகாத"

மீட்டெடுக்கவென
இசைக்கிறாள்.

நிற்கிறேன்.
அனுமதிக்கிறாள்.

டக்கிறேன்.
அனுமதிக்கிறாள்.

ட ஆசை என்கிறேன்
அனுமதிக்கிறாள்.

டியே வருகிறேன்.

ன்னுக்கு மணி இரைகிறது.

ங்கு வரையில்
இப்பவரையில்.


38 comments:

யாத்ரா said...

அண்ணா, படமும் கவிதையும் அருமை, இப்புகைப்படம் பார்த்தவுடன் என் நாகப்பழ நாக்கு கவிதை நினைவு வந்தது.

நட்புடன் ஜமால் said...

இப்படி ஓடாவது
போட்டு இருக்கக்கூடாதா


--- கும்பகோணத்து பெற்றோர்.

மணிஜி said...

நண்பரே..தாங்கள் சென்னையில் இருந்தால் ஒரு சந்திப்பு சாத்தியமா?(சுந்தருடன்)

பா.ராஜாராம் said...

தண்டோரா
==========
வாருங்கள் நண்பரே...உங்களை எனக்கு முதல் அறிமுகம் செய்து தந்ததில் நிறைய அன்பும் நன்றியும்.தளம் வந்திருந்தேன்.அடிச்சு ஆடியிருக்கீங்க.உங்கள் மைதானத்திலும்,முதல் வருகையிலேயே என் பள்ளி மைதானத்திலும்.நிறைய அன்பும் நன்றியும் தண்டோரா...(அடி வயிறு அதிர்கிறது)

யாத்ரா
========
தம்பு,யாத்ரா...நல்லா இருக்கியா மக்கா.இன்று அதி காலையில் வாசித்த "ஒருபொழுது",இப்பவரையில் மீட்டி கொண்டிருக்கிறது.பிசக நாளாகும்! நாகப்பழ நாக்கும் கூட... நன்றியும் அன்பும் யாத்ரா.

நந்தாகுமாரன் said...

Timelines? I'm bad at instant poetry? :)

Veera said...

என் சிறுவயது நினைவுகளைக் கிளறி விட்டது இந்தப் பதிவு.

உங்களின் கேள்விக்கு, என்னாலான ஒரு கவிதை முயற்சி என்னுடைய பதிவில் - தொடக்கப்பள்ளி. :)

பா.ராஜாராம் said...

அன்பு மிக்க நந்தா,ஆகஸ்ட்-12 வரையில் இதை நிர்ணயம் செய்யலாம்.முன் பக்கத்தில் இதை அறிய தந்திருக்கிறேன்.நினைவூட்டியதற்கு எப்பவும் போலான நன்றி நந்தா.but we know that you are stong in poetry.

பா.ராஜாராம் said...

தண்டோரா
==========
பின்னோட்டத்தில் இருந்த கவிதையை முகப்பிற்கு மாற்றி இருக்கிறேன்,மக்கா.தற்சமயம் நான் சவுதியில் இருக்கிறேன்.இல்லாவிட்டால் "இன்னியாரத்திர்க்கு"சுந்தருடன் ஜோதியில் ஐக்கிய மாயிறுப்பேன்தான்.பிறகு நீங்கள் வால் பையனை விட்டு விட்டு என்னை கலாய்த்து இருப்பீர்கள்.நன்றியும் அன்பும் மக்கா.

நட்புடன் ஜமால்
================
புரியலை ஜமால்.விளக்கம் தர இயலுமா?

வீரா
=====
மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா.நம்ம வீட்டு விசேசம் என கூப்பிடாமல் வந்து இழுத்து போட்டு வேலை பார்க்கிற ஞான மாமாவை நினைவு படுத்துகிறது உங்கள் அன்பு!

நட்புடன் ஜமால் said...

இப்படி ஓடாவது
போட்டு இருக்கக்கூடாதா


--- கும்பகோணத்து பெற்றோர்.]]

கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடம் எரிந்ததே, கூறை வேயப்பட்டிருந்தது அங்கே, இதை பார்த்தவுடன் அந்த பள்ளியிலும் இது போல ஓடு போட்டு இருக்க கூடாதான்னு அந்த குழந்தைகளை இழந்த பெற்றோர் கூறுவது போல் நினைத்து சொன்னேன்.

ஆ.ஞானசேகரன் said...

கவிதைகள் அருமை.. நல்ல முயற்சி பாராட்டுகள்

S.A. நவாஸுதீன் said...

அது ஒரு பொற்காலம்

மண்குதிரை said...

romba nalla irukkungka

rasiththeen

பா.ராஜாராம் said...

நட்புடன் ஜமால்
===============
நண்பருடன் அலை பேசிக்கொண்டிருந்த போது,உங்கள் பின்னோட்டத்தின் தீவிர நினைவு கிளறல் குறித்து, நண்பர் கூறி அறிய நேரிட்டது.ஆடிப்போனது மனசு.ஒரே ஒரு புகைப்படம்.எவ்வளவு விதமான நினைவு கிளறல்கள்.முயற்சியின் இலக்கும் இதுதான் ஜமால்.இதுகூட மீண்டும் ஒரு அஞ்சலியாகட்டும்.உங்களின் சமுதாய பார்வைக்கு மீண்டும் ஒரு வந்தனம் ஜமால்.

ஆ.ஞானசேகரன்
================
வணக்கம் சேகர்.உங்களின்"நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்"தொடர் பதிவு மற்றொரு விழிப்புணர்வு பதிவு சேகர்.தொடர்ந்து தரும் உங்களின் பிரியமும் ஊக்கம் எனக்கு.அன்பும் வாழ்த்தும் மக்கா.

S.A.நவாசுதீன்
=============
அழகிய ஒரு வரி நினைவு கிளறல் உங்களின்"அது ஒரு பொற்காலம்".நன்றியும் அன்பும் நவாஸ்.

பா.ராஜாராம் said...

ஆகட்டும் மண்குதிரை.அவ்வளவு அன்பும்,அவ்வளவு நன்றியும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதையில் புதுமை பண்ணுகிறீர்கள் நண்பரே! கலக்குங்கள்.

நட்புடன் ஜமால் said...

.ஒரே ஒரு புகைப்படம்.எவ்வளவு விதமான நினைவு கிளறல்கள்]]

உண்மை தான் நண்பரே.

எனக்கு வேறொரு ஞாபகம் (முதலில்) வந்தது ...


பரமக்குடியில் ஒரு பள்ளிக்கூடம் - அங்கே வந்து இருக்கேன் நான். அந்த ஞாபகங்கள் வந்தன.

மணிஜி said...

கும்பகோணம் பள்ளி தீ விபத்து..குழந்தைகளுக்கு அஞ்சலி இந்த லிங்கில் படியுங்கள் தோழரே..

http://vilambarakkaaran.blogspot.com/2009/07/blog-post_6418.html

இரசிகை said...

jamaal sir in pinoottam yeththunai nijam......


naanum yezhutha muyarchikkiren...

பா.ராஜாராம் said...

ஜெஸ்வந்தி
=============
ஆகட்டும் ஜெஸ்...உங்களுக்கும் உங்கள் தொடக்க பள்ளி நினைவு வந்ததா?..நவாஸ் சொல்லுவதுபோல் அது ஒரு பொற்காலம்தான்.இல்லையா.நேரமும் மனசும் சரியாக இருந்தால் எழுதுங்களேன் மக்கா.

ஜமால் & தண்டோரா
===================
முன்பே இந்த பரிதாப நிகழ்வு அறிந்ததுதான் என்றாலும்,நண்பர் மூலமாகவே(அலைபேசி)நம் ஜோதி தூண்டபெற்றது.(நம்ம பல்பு ...நீளமா,வெள்ளையா இருக்குமே அதுங்க அண்ணா!)என்றாலும் மீண்டுமொரு முறை பதற வாய்த்தது.நன்றியும் அன்பும் ஜமால்,தண்டோரா...

இரசிகை
=========
ஆஹா!...இது உங்கள் தளம் நீங்கள் எழுதாமலா...சீக்கிரம் வாருங்கள் ரசிகை.அன்பும் நன்றியும்.

ஹேமா said...

ராஜா,நானும் முயற்சி செய்கிறேன்.எழுதினால் அனுப்புகிறேன்.ஆர்வமான உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.உங்கள் கவிதையும் அடுத்து வந்த கவிதைகளும் நல்லாயிருக்கு.

துபாய் ராஜா said...

வணக்கம்.வாழ்த்துக்கள்.

தங்கள் அழைப்பை ஏற்று என் வலைப்பூவில் தனிப்பதிவாக இட்டுள்ளேன்.

http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_06.html

தங்கள் இணையமுகவரிக்கும் தனியாக அனுப்பியுள்ளேன்.

தங்கள் பதிவிலும் எனது படைப்பை சேர்த்திடுங்கள்.

நன்றி.வணக்கம்.

na.jothi said...

கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பது
எப்பொழுதும் சுகம் அதிலும் தொடக்கப்பள்ளி
காலங்களில் மீட்டெடுக்க தூண்டியிருக்கிங்க
அண்ணா
உங்களுக்கு மற்றுமொரு மின்னஞ்சலும்
அனுப்பியுருக்கேன்

Radhakrishnan said...

சிறப்பான முயற்சி, கவிதைகளும் சிறப்பாக இருக்கிறது. இதோ எழுதி அனுப்பிவிடலாம். மிக்க நன்றி ஐயா.

Karthikeyan G said...

அய்யா.. இங்க கமெண்டே போட முடியல, ரம்ப சிரமமா இருக்கு. பார்த்து எதாச்சும் பண்ணுங்க... :)

பா.ராஜாராம் said...

யாத்ரா...

அமிர்தவர்ஷிணி அம்மா...

kaarthikeyan G...

பின்னூட்டமிடுவதின் சிரமம் குறித்தான கவனத்தை கொண்டுவந்ததால்,coments page இப்போது முழு பக்கத்திற்கு மாற்ற பட்டுள்ளது.இதிலும் சிரமங்கள் இருப்பின் என் மின் மடலில் தெரிவிக்க வேணும்.தயை கூர்ந்து....யாத்ரா,அமித்து அம்மா,கார்த்தி மன்னியுங்கள்.மிகுந்த அன்பும் நன்றியும்!

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் ஹேமா,துபாய் ராஜா,ஜோதி,ராதா,..எதிர் பார்க்காத அன்பும் மறு மொழிகளும்.வார்த்தைகளற்று வெறிச்சோடி கிடக்கிறது ஏற்பும் அன்பும்.போர்த்திக்கொண்டு சும்மா கிடைக்கணும் போல் இருக்கு.வேறொன்னும் சொல்ல தெரியலை பயல்களா.எங்கும் நிறைந்திருக்கட்டும் அன்பு!

ப்ரியமுடன் வசந்த் said...

//அழகாக உடை உடுத்து
அலங்கார பவனி வரும் ஒரு டீச்சர்
ஆங்கிலப் பாட நேரம்
அவதிப் பட வைக்கும் ஒரு டீச்சர்

குடையைப் பிடித்துக் கொண்டு,
குடையைத் தேடும் ஒரு டீச்சர்
வீட்டு வேலை செய்யா விட்டால்
வீட்டில் போட்டுக் கொடுக்கும் ஒரு டீச்சர்//

ஜெஸ்வந்தியின் வரிகள் ரசனை

Anonymous said...

என் பின்னோட்டத்தை கவிதையாக்கியதர்க்கு நன்றி

Anonymous said...

கவிதை திருவிழாவே நடத்திக்க்கொண்டு இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

வழக்கமா நேசமித்ரன் கவிதைகள்தான் புரியாது, இங்க உங்களோட கவிதை புரியல பாரா!

ஜெஸ்வந்தி கவிதைகள் அழகு
ரவிஷங்கர் கவிதை நிதர்சனம்
நேசமித்ரன் வழக்கம்போல் உயரம்
ஹேமா இயல்பு
ராதாகிருஷ்ணன் அனுபவம்
புன்னகை நடப்பு

மற்றகவிதைகள் அனைத்தும் அருமை
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இரசிகை said...

rajaram sir...ungal azhaippirku yaerppa...


naan pallik koodam kavithaiyai en blog il post seithullen...(thuvakkap palli mattum alla... moththamaai pallik koodam)

sir,yenakku intha computer laam oru 4 maathamaagaththaan pazhakkam.yen blog il yeppadi post seiyanumngirthu mattumthaan yenakkuth theriyum.so,thappa yeduththukkaatheenga.oru yettu vanthu paarththuttup ponga:)

ippadikku namuttu sirippu rasihai...:)

ஷங்கி said...

போன வாரம் என் பிரச்சினையினால் இதற்கு எழுத முடியவில்லை. இந்தத் தத்துக்குட்டியின் கிறுக்கல் கீழே!
மீண்டும் மீண்டும் உருப்போட்டுப் படித்து எடுத்த
முதல் ரேங்க்
யாரோ எழுதிய கட்டுரைக்குப் போட்டியில் வாங்கிய
முதல் பரிசு
வகுப்பில் பேசாமல் உம்மணாமூஞ்சியாய் இருந்ததால் வந்த
முதல் பாராட்டு
பெண்ணின் சடை பிடித்து இழுத்துக் குதூகலித்த
முதல் சீண்டல்
எதனால் வைத்தாரென்று புரியாத அஞ்சாப்பு டீச்சரின்
முதல் பாசம்
ஹஸ்பண்ட் அடித்ததனாலென்ற கிசுகிசுப்புடன் பார்த்த ஆசிரியையின்
முதல் அழுகை
முதலும் கடைசியுமான நிகழ்வுகள் நிறைய நீங்காதிருந்தாலும்
(மீண்டும்)போகத் தூண்டுகிறாள்
நான் மறந்துபோன யாரிடமோ என்னை விசாரித்த
முதல் தோழி

பா.ராஜாராம் said...

nizamroja01
=========
வணக்கம் நிஜாம்.உங்கள் முதல் வருகையிலேயே கை நிறைய கவிதையுடன் வந்ததுக்கு அன்பும் நன்றியும் மக்கா.

அமிர்தம்
=========
உங்கள் உங்கள் உற்சாகத்திற்கும்,தேர்ந்த பார்வைக்கும் நன்றி நிறைய!தொடர் வருகை மற்றொரு உற்சாகம் எனக்கு.அன்பும்!

ரசிகை
=======
ஆகட்டும் ரசிகை.வந்து பார்த்து நிறைந்தேன்.எப்பவும் போலான அன்பும் நன்றியும் ரசிகை..

சங்கா
=========
ரொம்ப சந்தோசம் அன்பரே.அவ்வளவு வேலைகளுக்கு இடையேவும் ஞாபகமாய் வந்து கை கோர்த்து கொண்டது நெகிழ்வாய் இருக்கிறது.நன்றியும் அன்பும்.

sakthi said...

வித்தியாசமான சிந்தனை ராஜா சார்

வாழ்த்துக்கள் !!!

Anonymous said...

இன்று கடைசி நாள் பதிந்த கவிதையில் தாங்களுக்கு பிடித்த ஒன்ரை கட்டாயமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இடுஹிரேன் !



ஹி...ஹி கடைசியில்
மாட்டிகிட்டிங்கலா

பா.ராஜாராம் said...

சக்தி
=======
வரணும் சக்தி..ரொம்ப சந்தோசம்.வரும் போதே இனம் புரியாத நிறைவையும் தருகிறீர்கள்.வெறும் கையோடு போகாதீர்கள்.என் நன்றியையும் கொண்டு போங்கள்.அன்பு நிறைய..

nizamroja01
==========
ஆகட்டும் நிஜாம்.செஞ்சுட்டா போச்சு."அன்பு கட்டளை"என்று நீங்கள் சொன்னதில்..(கட்டளை என்றால் மீறுவது எளிது எப்பவும் எனக்கு).ஆனால் ,அன்பை மீற இயலாது...ஆகவே...இதில்..ஆக சிறந்த கவிதை....

நமக்கெல்லாம்,இந்த உணர்வை தந்த,..

"இந்த புகை படம்!"

(நீங்களும்தானே மாட்டிகொன்டீர்கள் இந்த புகை படத்தில்..ஹி..ஹி..)நன்றியும் அன்பும் மக்கா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மலரும் நினைவுகளால் மனம் நிறைந்த பதிவு இது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மலரும் நினைவுகளால் மனம் நிறைந்த பதிவு இது.

பா.ராஜாராம் said...

நன்றியும் அன்பும் அமித்து அம்மா.