(photo by CC license, thanks Original Nomad)
அவசர அவசரமாய்
பேசி விலகுகிறோம்
அலுவலகம்
போகும் நாம்
ஆடுதுறை-20
ஐ.ஆர்.-8
குதிரை சம்பா
பொன்னி
பூக்காத பருத்தி
தீஞ்ச தென்னை
பூச்சிமருந்து
கரும்பு திருட்டு
காகம் அப்பும் கடலை
வங்கி கடன்
பிள்ளைக்கு வாந்தி
பிறகு பேதி வேறு
"என்னடா கெறக்கமா
இருக்கிற..மூதி
உனக்கு மட்டுமா
நொட்டையும் நொங்கும்
ஆக வேண்டியதை பாரு"
இடுப்பில் நிமிண்டி சிரிக்கிறான்
வெளியில்
வியர்வை மணக்கும்
ஒருவன்
தவ்வி விலகி
தாண்டி போகிறோம்
உள்ளில்
புழுத்து நாறும்
நாம்
19 comments:
தவ்வி விலகி
தாண்டி போகிறோம்
உள்ளில்
புழுத்து நாறும்
நாம்
நிதர்சனம் ராஜா ராம் சார்
நல்லா இருக்கு அண்ணா
சுயநலம் கூடிய இன்றைய உலகில் யதார்த்தமாய் சிந்தித்து இருக்கிறீர்கள்.
சத்தியம்
-ப்ரியமுடன்
சேரல்
//தவ்வி விலகி
தாண்டி போகிறோம்
உள்ளில்
புழுத்து நாறும்
நாம்
//
நான்கைந்து சொற்களில் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல வரிகள்.
ஆழமான கருத்துக்களை கொண்ட கவிதை.அருமை ராஜாராம்.
கவிதை அழகு.. :-)
இடுப்பில் நிமிண்டி சிரிக்கிறான்வெளியில்வியர்வை மணக்கும்ஒருவன்
தவ்வி விலகிதாண்டி போகிறோம்உள்ளில்புழுத்து நாறும்நாம் //
சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
excellent sir. romba pitichchurukku
பா.ரா
மேகங்களை சுருக்கி ஒரு ஊசிப் போடும் மருந்து டப்பாவில்
அடைக்கும் கலை கைவரப் பெற்றிருகிறீர்கள் நீங்கள் வேறென்ன சொல்ல
மிகவும் வெளிப்படையான வெளிப்பாடுகள் சார்
அருமையான கவிதை, உண்மை.
ப்ரியங்கள் நிறைந்த என் சக்தி,ஜோதி,ஹேமா, சேரல்,அ.மு.செய்யது,ராகவன்.அமித்து அம்மா,மண்குதிரை,நேசா,வசந்த்,யாத்ரா,மிகுந்த அன்பும் நன்றியும்.
ம்ம் நல்லாயிருக்கு நண்பா
அருமையான கவிதை!
இடுப்பில் நிமிண்டி சிரிக்கிறான் வெளியில் வியர்வை மணக்கும் ஒருவன்
தவ்வி விலகி தாண்டி போகிறோம் உள்ளில்புழுத்து நாறும்நாம்
அருமையா சொல்லிட்டீங்க நண்பா. பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை
ப்ரியங்கள் நிறைந்த என்,...சேகர்,சென்ஷி,நவாஸ் மிகுந்த நன்றியும் அன்பும்.
:)
நன்றியும் அன்பும் நந்தா.
nitharsanam.........:)
Post a Comment