Saturday, August 29, 2009

ஆதி...

காயாம்பு வீட்டுக்கு
பக்கத்து வீடு
ஆச்சி வீடு.

ச்சி வீட்டில் இருந்து
பார்த்தால் தெரியும்
உடைசா ஊரணி.

ரையிலேயே வந்தால்
கோஹலே ஹால் தெரு.

தெருக்கோடியில்
செல்வ விநாயகர் கோவில்.

கோயிலுக்கு வரும்
ராமக்கா வீட்டு
புவனா.

புவனா பறித்த
மஞ்சள் அரளி.

ரளி வேரில்
இன்னும் கிடக்கலாம்

காலச்செதில் உதிர்ந்த
முதல் முத்தம்.
முதல் அறை.
முதல் தேம்பல்.

31 comments:

மாதவராஜ் said...

பின் தொடர வைத்து, சட்டென கலங்க வைத்து விட்டீர்கள்.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்... கடைசியில் வலிக்க செய்கின்றதே

ஷங்கி said...

ஆகா! மற்றொரு காலத்தின் வாசனை. மற்றொரு வடிவம்! நான் கூட இன்று என் முதல் தோழியைப் பற்றி எழுதினேன்!

துபாய் ராஜா said...

//காயாம்பு வீட்டுக்கு
பக்கத்து வீடுஆச்சி வீடு.
ஆச்சி வீட்டில் இருந்துபார்த்தால் தெரியும்உடைசா ஊரணி.

கரையிலேயே வந்தால்
கோஹலே ஹால் தெரு.
தெருக்கோடியில்
செல்வ விநாயகர் கோவில்.
கோயிலுக்கு வரும்
ராமக்கா வீட்டுபுவனா.
புவனா பறித்த மஞ்சள் அரளி.//

அழகான வர்ணனைகளில் காட்சிகள் கண்முன்.

//காலச்செதில் உதிர்ந்த
முதல் முத்தம்.
முதல் அறை.
முதல் தேம்பல்.//

ஆதியில் நடந்த அனைத்தும் அந்தம் வரை மறக்கமுடியாதவை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்ப நல்லா இருக்கு ராஜாராம்! சமீபத்துல எழுதினதா?

S.A. நவாஸுதீன் said...

அரளி வேரில் இன்னும் கிடக்கலாம்
காலச்செதில் உதிர்ந்தமுதல் முத்தம்.முதல் அறை.முதல் தேம்பல்.

காயாம்பு வீட்டிலிரிந்து கடைசிவரை விடாமல் தொடர வச்சிட்டீங்க நண்பா.

ஹேமா said...

அண்ணா அருமையாக அமைகிறது நினைவலைகள்.கொஞ்சம் வலியோடு...!

நட்புடன் ஜமால் said...

கஷ்ட்டமாகத்தான் இருக்கின்றது ....

அரளி வேர் :(

சந்தனமுல்லை said...

ஒரு நூல்கண்டு பிரிவதைப் போல நினைவுகள் அழகழகாக...கடைசியில் திடுக்கிடலோடும்..அருமையான கவிதை!!

sakthi said...

காலச்செதில் உதிர்ந்தமுதல் முத்தம்.முதல் அறை.முதல் தேம்பல்.

நன்றாக உள்ளது வரிகளும் அதில் நீங்கள் கூறியிருக்கும் வலிகளும் ராஜாராம் அண்ணா

தெய்வா said...

வர்ணனைகளோடும் வலியோடும்
கடந்த காலத்தின் வாசம் வீசும்
கவிதை.

Superb......

அ.மு.செய்யது said...

ஓரிரண்டு வார்த்தைகளில் மனதை பிழியும் கவிதைகளை எழுத உங்களால் மட்டும் எப்படி முடிகிறது
என்ற ரகசியத்தை கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன் ராஜாராம் !

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

ஓரிரண்டு வார்த்தைகளில் மனதை பிழியும் கவிதைகளை எழுத உங்களால் மட்டும் எப்படி முடிகிறது
என்ற ரகசியத்தை கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன் ராஜாராம் !

நானும் கேக்கனும்னு இருந்தேன். கொஞ்சம் எனக்கும் சொல்லுங்க நண்பா

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசிவரி ரொம்ப கஷ்டமாயிருக்கு சார்...

ஆரம்ப வரிகள் அசாத்தியமா எழுதியிருக்கீங்க உங்களால் மட்டுமே முடியும்.

பாலா said...

இன்னம் எத்தனை கிடக்கிறதோ அரளி வேரில்

சி.கருணாகரசு said...

உணர்வோடு இருக்கு கவிதை.

மண்குதிரை said...

romba nalla irukku sir

அமிர்தவர்ஷினி அம்மா said...

சின்னச் சின்ன வார்த்தைகளை வைத்து பெரிய அதிர்வின் நிகழ்வை சொல்கிறீர்கள்.

rvelkannan said...

கனத்த அதிர்வுகளை ஏற்படுத்துகிறது

ரௌத்ரன் said...

ரொம்ப நல்லாயிருக்கு இந்த கவிதை...

mathiyalagan said...

Pinnuriyadaaa....thangarasu....

Adhu oru nila kalathirkku kooti chentrai....

கவிதாசிவகுமார் said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு. வலி மிகுந்த உணர்வைக்கூட அசாத்தியமாக எழுத உங்களால் மட்டுமே முடியும். அருமை.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்...
மாதவன்..
சேகர்..
சங்கா..
ராஜா..
சுந்தரா..(ஆம் சுந்தரா..சமீபத்தில் எழுதியதுதான்.நன்றிடா.)
நவாஸ்..(ரெண்டு முறை நண்பா.)
ஹேமா..
ஜமால்..
சந்தன முல்லை..
சக்தி..
தெய்வா..(எங்கடா..நீ?)
செய்யது..
வசந்த்..
பாலா..
கருணா..
மண்குதிரை..
அமித்தம்மா..
வேல் கண்ணா..
ரௌத்ரன் ..
மதி..
உதிரா..

எல்லோருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை கனத்துக் கிடக்கிறது. கற்பனை என்று தெரியவில்லை. காலம் விந்தை செய்யும் நண்பரே.

RaGhaV said...

கவிதை உருக்கமாக இருந்தது.. :-(

சென்ஷி said...

மிகமிகமிகமிக அருமை.. கைப்பிடித்து கூட்டிட்டு போற கவிதையின் பாங்கு அழகு!

Nathanjagk said...

முத்தம் அ​றை ​தேம்பல்.. நான் படித்த மிகச்சிறிய காதல் க​​தை! ஆகாசம் அளவுக்கு அட்டகாசம்.. ராஜா!

பா.ராஜாராம் said...

ப்ரியங்களில் நிறைந்த என்...
ஜெஸ்...
ராகவ்..
சென்ஷி...
ஜெகா..
நிறைய அன்பும் நன்றியும் நண்பர்களே.

இரசிகை said...

:(

பா.ராஜாராம் said...

ப்ரியங்களில் நிறைந்த என் இரசிகை
நிறைய அன்பும் நன்றியும்

"உழவன்" "Uzhavan" said...

மிக மிக ரசித்தேன்