Wednesday, January 6, 2010

நான்


(photo by cc license, thanks Napalm filled tires
)

க்கரத்தாழ்வார்
சங்கு புஷ்பத்திற்கு என
தனி வண்ணமும் வாசனையும்.
சாமி விரும்பாவிட்டாலும்
நுகர தவறுவதில்லை.

வீராயி அம்மாச்சி கொண்டு வரும்
மாம்பழம் பெயர் கழுதை விட்டை.
ருசி அது இல்லை.

பூர்வீக குழுமையில் சேகரிக்க விருப்பம்
அண்ணாதுரை சித்தப்பா சிரிப்பை.
உபயோகத்தில் இருப்பதை
சேமிப்பானேன்?

காளியப்பன் அண்ணன்
சொன்னால் வேதவாக்கு
அப்பாவிற்கு கிட்ண தாத்தா போல.
ஆயினும் நடை பிரண்டிகளை
அறிகிறார்கள் தாத்தாவும் அண்ணனும்.

ரி,
உன்னுடையது என்னடா வெண்ணை?

சொல்லவந்ததும் அதுதான்..

வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்.

37 comments:

T.V.Radhakrishnan said...

//அனு//

???!!!

சந்தான சங்கர் said...

வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்.//

வண்ணங்களை ஒன்றாக
பார்க்கும் உங்கள் கருவேழ நிழல்
நிறம் ஒன்றுதான் என
உணர்த்தியிருக்கின்றீர்கள் மக்கா..


அன்பு ததும்பும் வாழ்த்துக்கள் மக்கா..

நட்புடன் ஜமால் said...

பூர்வீக குழுமையில் சேகரிக்க விருப்பம்
அண்ணாதுரை சித்தப்பா சிரிப்பை.
உபயோகத்தில் இருப்பதை
சேமிப்பானேன்?
]]

கலக்ஸ்

மக்கா அருமை ...


-----------------

வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்.]]

படிப்பவருக்கே விட்டு விட்டீர்கள்
“நான்” ...

ஜோதி said...

ஆத்து தண்ணீர்
போகிற இடம் எல்லாம் சந்தோசம்
வயல், வரப்பு,பயிர்,கிணறு ,மரம் செடி
விலைவாசி இறக்கம் சொல்லிகிட்டே போகலாம்
சரியாண்ணா

D.R.Ashok said...

//வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்//

ஏன்னா சித்தப்ஸு ஒரு கவிஞர்.

வானவில் வானத்தின்
கவிதை அல்லவா :)

கடைசி பாரால சிக்ஸர் அடிக்கிறீங்கல. நல்லாயிருந்தது.

இரசிகை said...

//
பூர்வீக குழுமையில் சேகரிக்க விருப்பம்
அண்ணாதுரை சித்தப்பா சிரிப்பை.
உபயோகத்தில் இருப்பதை
சேமிப்பானேன்?
//

superb...

//
வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்.
//

ithu puthusaayirukke...

arumayaana..."NAAN"
RAJARAM SIR-i mattume vilakkum "NAAN"

:)

THODARUNGAL...:)

கல்யாணி சுரேஷ் said...

//வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்.//

கலக்கிட்டீங்க அண்ணா.

ஹேமா said...

//பூர்வீக குழுமையில் சேகரிக்க விருப்பம்
அண்ணாதுரை சித்தப்பா சிரிப்பை.
உபயோகத்தில் இருப்பதை
சேமிப்பானேன்?//

அண்ணா சித்தப்பா எப்பிடி இருக்கார்.
ரொம்ப நாளாச்சு.சுகம்தானே.உங்க கவிதகள் எப்பவுமே உறவுகளோட பேசிக்கிட்டே இருக்கும்.
சந்தோஷமாயிருக்கு அண்ணா.

க.பாலாசி said...

//பூர்வீக குழுமையில் சேகரிக்க விருப்பம்
அண்ணாதுரை சித்தப்பா சிரிப்பை.
உபயோகத்தில் இருப்பதை
சேமிப்பானேன்?//

அதானே.. இதையே நானும் மிக ரசிக்கிறேன்.

அம்பிகா said...

//வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்.//

உண்மைதான்

குழந்தைகளுக்கு இயந்திரத்தனமாய்
vibgyor என்றே பழக்கிவிட்டோம்.
உங்கள் அணுகுமுறை
அழகாயிருக்கிறது.

பூங்குன்றன்.வே said...

//வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்.//

ம்ம்..புரியுது அப்பு !!!

வானம்பாடிகள் said...

ம்ம்ம்.மணம்:).நிறைவு. தவிப்பு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

// வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்.//


பாரா சார் , அருமையான அணுகுமுறை உங்களுக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

// வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்.//

இந்த அணுகுமுறையால் தான் போலும், உங்கள் கவிதைகளில் எப்போதுமே ஒரு நெகிழ்வான உணர்வு இருக்கிறது.

S.A. நவாஸுதீன் said...

////பூர்வீக குழுமையில் சேகரிக்க விருப்பம்
அண்ணாதுரை சித்தப்பா சிரிப்பை.
உபயோகத்தில் இருப்பதை
சேமிப்பானேன்?////

///வானவில்லை vibgyor என்று
அணுகுவதில்லை
நான் எப்போதும்///

இனிமே எதும் சொல்றதா இல்லை மக்கா. வாயும் கையும் வலிக்குது. இருந்தாலும் பட்ட இடத்தில தானே படும். அதான் நீங்களும் இப்படி தந்துகிட்டே இருக்கீங்க.

பலா பட்டறை said...

எதுக்கு பிரிக்கணும் :) அப்படியே பாத்துட்டு கரஞ்சிடவேண்டியதுதான் ....::))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை நல்லாயிருக்கு ராஜாராம்.

இரவுப்பறவை said...

நல்லா இருக்குங்க உங்க வானவில்...

அக்பர் said...

கவிதைகளில் எண்ணங்கள் வண்ணங்களாக.

அருமை.

உயிரோடை said...

//சக்கரத்தாழ்வார்
சங்கு புஷ்பத்திற்கு என
தனி வண்ணமும் வாசனையும்.
சாமி விரும்பாவிட்டாலும்
நுகர தவறுவதில்லை.//

ந‌ல்லா இருக்கு ம‌க்கா

ராகவன் said...

அன்பு பாரா,

வானவில்லை வர்ணங்களாய் பார்ப்பதில்லை என்ற அர்த்தமா அல்லது அறிவியல் பூர்வமான அணுகுமுறை இல்லை என்பதா! இரண்டுமே பொருந்தும்... எழுதி முடிக்கும் போது அர்த்தங்கள் படிமங்கள் உங்கள் கவிதைக்குள்ளே தன்னை தானாக வந்து பொருத்திக் கொள்ளும் என்று தோன்றுகிறது...

நவாஸ் வியந்தது போலவே எனக்கு சித்தப்பாவின் சிரிப்பு ரொம்ப பிடிச்சது...உபயோகத்தில் இருப்பதை சேமிப்பதேன்... உபயோகத்தில் இருப்பது தானே பயமே... பாரா!

அழகான பார்வை, கவிதைத் தொனி... ஊரோரத்து கோவிலின் வெண்கல மணியின் ஒற்றையை மனசுள் விழுகிறது அதிர்வுகளுடன்..


அன்புடன்

ராகவன்

கலகலப்ரியா said...

அருமை... வழக்கம்போல..

Vidhoosh said...

//உபயோகத்தில் இருப்பதை
சேமிப்பானேன்?///

இங்கேயே சிக்கிக் கொண்டே நிற்கிறேன் நான்.

நேசமித்ரன் said...

//நடை பிரண்டிகளை
அறிகிறார்கள் தாத்தாவும் அண்ணனும்.

சரி,
உன்னுடையது என்னடா வெண்ணை?//

நெருக்கமாக நெய்த பட்டுப் புடவை

ஒரு கவிஞனின் மனவியலை
வாழ்வை பிரியத்தால் மட்டும் பகுத்து பார்க்கும் மனசை .மனிதர்களை மனிதர்களாக மட்டும் பர்ர்க்க பழகிய கண்களை விரயம் அற்ற வார்த்தைகளால் சொல்லி இருக்கிறது கவிதை

இந்த கவிதையில் தெரியும் மொழி மாற்றம் பிடித்திருக்கிறது

விக்னேஷ்வரி said...

திரும்ப திரும்ப படிச்சேன் பா.ரா. நல்லாருக்குங்க.

ஸ்ரீ said...

wow....:-)))

தமிழ்ப்பறவை said...

நல்ல நான்...ரசித்தேன்...

பா.ராஜாராம் said...

corrected... (அனுக -> அணுக)
நன்றிகள் TVR!

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா...வாழ்த்துக்கள்...

சுசி said...

ரொம்ப நல்லாருக்கு ராஜாராம்.

thenammailakshmanan said...

வானவில் விப்ஜியார் இல்லை புரிகிறது

ஆனால் வி பார் வென்டேட்டா வந்துவிட்டாரே பாரா ...

:-)))))

உங்கள் கவிதைகள் மொழி மாற்றம் செய்யப்படும் அளவுக்கு தர நேர்த்தி வாய்ந்தவை...

" உழவன் " " Uzhavan " said...

நல்லாருக்கு தலைவா

விஜய் said...

உறவியல் வலிகளை, சந்தோஷங்களை தங்கள் பாணியில் படிப்பது ஒரு தனி சுகம்

வாழ்த்துக்கள்

விஜய்

Ganesh Gopalasubramanian said...

// உன்னுடையது என்னடா வெண்ணை?

எல்லோரும் இந்நேரம் கேட்கத்தொடங்கியிருப்பார்கள்.

மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கக் கூடிய கெட்ட பழக்கம் உங்களிடம் இருக்கிறது. அதனால் தான் மனிதத்துவத்தை அழகாக சொல்லாடுகிறீர்கள். அடிமனதில் பரவும் வாசக வேட்கை உங்கள் கவிதை வரிகளுக்கான பரிசுகள்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்,

டிவிஆர்
சங்கர்
ஜமால் மக்கா
ஜோதி,
அசோக்,
ரசிகை,
கல்யாணி,
ஹேமா,
பாலாஜி,
அம்பிகா,
குன்றா,
பாலா சார்,
staarjan,
அமித்தம்மா,
நவாஸ்,
ஷங்கர்,
இரவுப் பறவை,
அக்பர்,
லாவண்யா,
ராகவன்,
ப்ரியா,
வித்யா,
நேசா,
விக்னேஷ்,
ஸ்ரீ,
பரணி,
கமலேஷ்,
சுசி,
தேனு,
உழவரே,
விஜய்,
கணேஷ்,

மிகுந்த நன்றியும் அன்பும் மக்காஸ்!

velkannan said...

கால தாமத்திற்கு வருந்துகிறேன்.
ஏதாவது சொல்லாம் என்றால் எல்லோரும் சொல்லிவிட்டார்கள்
ஆகையால், வந்த போன தடம் மட்டுமே

மாதவராஜ் said...

நல்லாயிருக்கு!