Sunday, January 3, 2010

குத்திட்டேன் எசமான் குத்திட்டேன்

"கண்ணா தமிலிசில் ஓட்டு போட சொல்லி கொடுடா"

கண்ணனை உங்களுக்கு தெரியும். தெரியாதவர்களுக்கு, பெரியப்பா மகன்,கனடாவில் இருக்கிறான். என்னை தெரியும் உங்களுக்கு. தெரியாதவர்களுக்கு,நான் சவுதியில் இருக்கிறேன். நல்ல மூட்ல இருந்திருப்பான் போல கண்ணன்.

"சரி,ஆன்லைனுக்கு வா"

"லைன்லதாண்டா இருக்கேன்"

"ஆன் லைனுக்கு வாடான்னா."

"ஆன் லைனுலதாண்டா இருக்கேன்.இன்விசிப்ல இருக்கேன்." (இவன்லாம் இஞ்சினியர்??)

இங்கு கண்ணனை சொல்லியாகனும். என்னை விட நாலு வயது சிறியவன். மனநிலைக்கு தகுந்தாற் போல அண்ணன் எனவும் வாடா போடா எனவும் அழைப்பான். குடும்பத்தின் கடைக்குட்டி. வாய் துடுக்கு. காப்பியும் கெட்ட வார்த்தையும் ரொம்ப பிடிக்கும். கெட்டவார்த்தை என்பது குடும்ப கெட்டவார்த்தைதான். தாவில் தொடங்கும். 'லி' யில் முடியும். நேரம் வா(ய்)க்கிறபோது ஆ(ய்)சுவாசமாக யோசியுங்கள். ரொம்ப குழப்பிட்டேனோ?. இந்த பதிவிற்கு முக்கியமான வார்த்தை. அதை அப்படியே பிரயோகிக்க விருப்பம். பொண்டு பொருசு அலையிற வீடுன்னு சூசகமாய் சொன்னேன்.

கணினி மூலமாக தொடர்பு முயன்று,வீண்...அழை பேசினான்.

"நம்ம தளம் வேணாம். ஏற்கனவே ஓட்டு போட்டாச்சு. சித்தப்பா தளம் வாங்கண்ணே."

"வந்துட்டேன்."

"கவிதைக்கு கீழ ஓட்டு இருக்கு பாருங்க அதுல குத்துங்க."

"குத்துங்களா?.. குத்துங்க எசமான் குத்துங்களா?"

"டேய்...(கெட்ட வார்த்தை)கேபிள் சங்கர் தளம் போயிட்டியா?"

"இல்லைடா, சும்மா. உனக்கு மூடை கிரியேட் பண்றேன்."

"(கெட்ட வார்த்தை) ஐ.எஸ்.டி.பேசிக்கிட்டு இருக்கேன்"

"சரி சரி சொல்லு"

"குத்திட்டியா?"

"குத்திட்டேன்"

"பக்கத்துல ஒரு விண்டோ ஓப்பன் ஆகுதா"

"ஆமா ஆகுது"

"லாக் இன்ல யூசர்நேம் பாஸ் வேர்ட் அடி"

"அப்படி எதுவும் இல்லையேடா"

"இருக்கும். கீழ இருக்கும் பாரு. தேடு"

"கமென்ட் இருக்கு.ஹூ வோட்டடெட் இருக்கு, ரிலேட்டட் இருக்கு."

"கீழ இருக்கும் பாருடா"

ஒரு சிகரெட் பற்ற வைத்து கொள்கிறேன்..

"ம்ம்..இருக்குடா.லாகின்டூ கமெண்டுன்னு இருக்கு"

"லாகின்-ஐ மட்டும் குத்து. கமெண்ட்டை குத்தாத"

ரெண்டு சேர்ந்தே இருக்கு என சொல்ல விரும்பினேன். ஆனால் சொல்லவில்லை. குத்தினேன்.

"ம்ம்..இப்ப வந்திருச்சுடா"

"யூசர்நேம் பாஸ்வேர்ட் அடி."

"அடிச்சிட்டேன்"

"என்டர் கோடு"

"கொடுத்துட்டேன்"

"இப்ப பக்கத்துல ஓப்பன் ஆகுற விண்டோல ஓட்டு கூடியிருக்கா?"

"இல்லையேடா. அதே ஓட்டுதான் வந்திருக்கு. திருப்பியும் கீழ கமென்ட்,ஹூ ஓட்டட்,ரிலேட்டட் வந்திருக்கு."

"(கெட்ட வார்த்தை)என்னடா செஞ்சு தொலைச்ச?"

"நீ சொன்னதுதாண்டா செஞ்சேன்"

மற்றொரு சிகரெட் பற்ற வைக்கிறேன்..

"அப்புறம் ஏண்டா வரலை?"

"............"

"யூசர்நேம் பாஸ்வேர்ட் சரியா அடிச்சியா?"

"அடிச்சேண்டா"

"சொல்லு"

சொன்னேன்.

"சரி மேல என்ன இருக்கு"

"தலைப்புலையா?"

"ம்ம்"

"தமிலிசுன்னு இருக்கு"

"ஆப்போசீட்ல என்னடா இருக்கு?"

"கருவேலநிழல்ன்னு இருக்கு"

"(கெட்டவார்த்தை)ஒன்தளம் போயிட்டியா?

"கருவேலநிழல் பார் ஹோம் பார் ப்ரோபைல்ன்னு இருக்குடா"

"சரிதான். அப்பா ஏண்டா போலிங் ஆக மாட்டேங்குது?"

"இரு நான் செக் பண்றேன்"

(அவனுக்கும் யூசர் நேம் பாஸ்வேர்ட் தெரியும்)

கொஞ்ச நேரம் அமைதி.

"(கெட்டவார்த்தை) இந்தாத்தான் அழகு போல ஆகுதடா. இப்ப கட்டத்துல பாரு. கூடியிருக்கா?"

"ஆமாடா.கூடியிருக்கு?"

"அப்புறம் ஏண்டா உனக்கு மட்டும் ஆகல"

"........................."

"ஓட்டுலதான குத்துன?"

"ஓட்டுலதாண்டா குத்துனேன்"

"(கெட்டவார்த்தை)கம்ப்யூட்டரை எதுவும் பண்ணி தொலைச்சிட்டியா?"

மூன்றாவது சிகரட்டை பற்ற வைக்கிறேன்...

"சரி இனி சித்தப்பா தளத்துல ஓட்டு போட முடியாது. வேற எதாவது ஒரு தளம் சொல்லு அதுக்கு போகலாம்"

"நவாஸ் தளம் வா.அவர்தான் மைனஸ் ஓட்டு போட்டாலும் மைனஸ் ஓட்டு மிக அருமைன்னு பின்னூட்டம் போடுவாரு"

இங்கு அவன் சிரித்திருந்தால் ஆசுவாசமாக இருந்திருக்கும். இல்லை.

நவாஸ் தளத்தில் meendum தொடங்கியது...

"வந்துட்டியா?"

"குத்திட்டியா?"

"ஓப்பனா?"

"லாக்கின்னா?"

"யூசர்நேம் பாஸ்வேர்ட் சரியா?"

"ஓப்பனா?"

"கூடியிருக்கா?"

"இல்-லை-யே-டா"

மீண்டும்..

"மயிறு என்னடா பண்ணி தொலைச்ச கம்ப்யூட்டரை?"

"கம்ப்யூட்டரை என்ன பண்றாக வெண்ணை? உனக்கு ஒழுங்கா சொல்லித்தர தெரியலை"

எத்தனை கெட்ட வார்த்தையத்தான் நானும் பொறுக்குறது..குடும்ப கெட்ட வார்த்தையாகவே இருந்தாலும்..

"சரி போனை வை.முக்கா மணிநேரம் ஆகிப்போச்சு. இன்னொரு தடவை பார்க்கலாம்.கூமுட்டை கூமுட்டை."

வைத்து விட்டான்.

புதிதாக ஒரு சிகரட்டை பற்றவைத்துக்கொண்டேன். மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டேன்.ஓட்டு பட்டையவே கூர்ந்து பார்த்து கொண்டிருந்தேன். நான் குத்திய ஓட்டுக்கு பக்கத்திலேயே எழுத்தால் ஆன vote இருந்தது.

"பயபுள்ளை ஒருவேளை இதை குத்த சொல்லி இருப்பானோ?"

குத்தினேன்.

ஓப்பன் ஆச்சு. ஓட்டும் கூடியது.

கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வர தொடங்கியது

"சிங்கம்டா மக்கா..நீ!"

இந்த முறை நான் போன் பண்ணினேன்.

"டேய் ஆகுதுடா.கம்ப்யூட்டர் சரியாயிருச்சு போல"

"சரி.சந்தோசம்.வய்யி."

"கண்ணா..மைனஸ் ஓட்டு எப்படிடா போடுறது?"

"வைடா தாய்லி."

47 comments:

ரோஸ்விக் said...

சித்தப்பா நான் சொல்லித்தரவா?? :-)
அப்பறம் நம்ம ஊரு கேட்டவார்த்தைஎல்லாம் சொல்லி திட்டப்புடாது.... சரியா?? :-)))

ரோஸ்விக் said...

மேல தூக்கிகிட்டு இருக்குறதுல குத்துனா பிளஸ். கீழ தொங்கிகிட்டு இருக்குறதுல குத்துன மைனஸ்.
ஏதாவது தப்பா புரிஞ்சுகிட்டு.... ரெண்டு மூணு சிகரட்டை பத்தவச்சு என்னைய கேட்ட வார்த்தையால திட்டுனா __க்காலி நான் பொறுப்பு இல்லப்பா...

செந்தில் நாதன் Senthil Nathan said...

ஹீ..ஹீ.. கடைசியா சரியாய் குத்திட்டிங்க போல...

//தாவில் தொடங்கும். 'லி' யில் முடியும். நேரம் வா(ய்)க்கிறபோது ஆ(ய்)சுவாசமாக யோசியுங்கள். ரொம்ப குழப்பிட்டேனோ?. இந்த பதிவிற்கு முக்கியமான வார்த்தை. அதை அப்படியே பிரயோகிக்க விருப்பம். பொண்டு பொருசு அலையிற வீடுன்னு சூசகமாய் சொன்னேன்.//

ரெம்பவே குழப்பிட்டிங்க.எனக்கு இப்ப கூட இது என்ன வார்த்தைன்னு தெரியாது...நம்புங்க எசமான் நம்புங்க..

na.jothi said...

ம் காலையிலேயே சிரிச்சிகிட்டு இருக்கேன் ரூம்ல எல்லாரும் முறைச்சு
பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க
கள்ள ஓட்டா நல்லா ஓட்டா

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

நட்புடன் ஜமால் said...

ஏன் மக்கா இப்பூடி ...

கார்க்கிபவா said...

ரைட்டு..

Anonymous said...

அது ஏன் மைனஸ் ஓட்டு போட இப்படி ஒரு கொலைவெறி!

இரவுப்பறவை said...

சிரிச்சு தீரலை போங்க...
கண்ணுல தண்ணி வர்ற வரைக்கும் சிரிச்சாச்சு
புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அம்பிகா said...

நாங்களும் ஓட்ட குத்திட்டோம்
பா. ரா.
குத்திட்டோம்.

அம்பிகா said...

நாங்களும் ஓட்ட குத்திட்டோம்
பா. ரா.
குத்திட்டோம்.

Ashok D said...

சித்தப்பு சிறுகதை மிக நவினத்துடன் சமகால இலக்கிய நடையில் இருந்தது :) போட்டோ போடலியே?

பின்னோக்கி said...

இந்த மாதிரி ஒரு பதிவு போட்டுத்தான் “சுகுணாதிவாகர்” கிட்ட வாங்கி கட்டிக்கிட்டேன். ஆணியே புடுங்க வேண்டாம்னு திட்டினாரு. உங்களுக்கும் அதுமாதிரி எதாவது கிடைக்கும் :)

சைவகொத்துப்பரோட்டா said...

ஒட்டு போடறது மறந்துரும் போல இருக்கு. முதல்ல ஓட்ட குத்திட்டு வரேங்க்னா

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

இரசிகை said...

:)))

கல்யாணி சுரேஷ் said...

அண்ணா இப்படி ஆபீஸ் ல தனியா உட்கார்ந்து சிரிக்க வச்சுட்டீங்களே. சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்திடுச்சு. வயிறு புண்ணாகிபோச்சு. ஒழுங்கா வைத்திய செலவுக்கு பணம் அனுப்பி வச்சிடுங்க சொல்லிப்புட்டேன்ஆமா.

Paleo God said...

இது நல்லெண்ண தானே ....!

இரசிகை said...

naan ungalukku oru vishayam sollavaa?

athu..vanthu..

rajaram sir..,

namma thalathil pinnootam laam varuthulla,athellaam direct-ave post aayuduthillaiyaa?

appadi illaama,
namma thalaththukku post seiyappatta comments ellaame unga mail id-ku vanthu,appuram.. neengale athai post seiyum
muraiyai set seithukkonga.

appadi seitheenganaa..,
pazhaya kavithaikalukku varum comment-iyum neenga paaththukkalaam.

athu nalla idea..
yenakku yen frnz sollik koduththaanga.

neenga nesamithran sir-ta kettu set seithukkonga:)

ungalukkum use aagum

:)

Vidhoosh said...

ஹா ஹா... இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

ஆனாலும்!!

--வித்யா.

S.A. நவாஸுதீன் said...

ஆத்தி ஒரு வழியா ஓட்டுப்போட கத்துகிட்டாசில்ல.

இங்க வாங்க ராசா. உங்களுக்கு விரல்ல..... வேனாம் கண்ணத்துலதான் மை வைக்கனும். கண்ணு படாம இருக்க.

அங்க கண்ணனுக்கு விரலையே காணோமாம் மக்கா. பின்ன விரலைப்பிடிச்சி பழகிக்கொடுத்தா விவரத்தோட விரலையுமா கொண்டு வர்றது.

Rajan said...

எனது வலைப் பூவானது கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஓட்டிட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

நான் ஓட்டுப் போட்டுட்டேன்..

pudugaithendral said...

:))))))))

ஜெனோவா said...

பா.ரா , நல்லவேளை சொல்லித்தந்தீங்க , இத வச்சுதான் நானும் ஓட்டு போட கத்துக்கப்போறேன் .. வேறங்க இங்கதான் ;-))

ஹேமா said...

அண்ணா நானும் 50 நிமிஷமா கஸ்டப்பட்டேன்.ஆனாலும் ஜெயிச்சுட்டேன்.மெயில்லா நம்பர் ஒண்ணு வந்திடிச்சு.ஆனா நான் தனியா.யாருமே சொல்லித் தரல.

RaGhaV said...

சூப்பர் பதிவு.. வயிறு குலுங்க சிரித்தேன்.. :-)))

செ.சரவணக்குமார் said...

ஒரு ஓட்டு போடுறதுக்குள்ள மூணு சிகரெட்டா? ரைட்டு..
எப்பிடியோ ஓட்டுப் போட தெரிஞ்சிக்கிட்டீங்கல்ல சந்தோஷம். நான்தான் லேப்டாப்போட கோபர் வரணும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். நன்றி கண்ணன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

யாருக்கு மைனஸ் ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்.அப்புறம் எப்படிப் போடுவது என்று சொல்லித் தருகிறேன் மக்கா.

SUFFIX said...

நான் நல்ல ஓட்டு ஒன்னு போட்டுட்டேன்!!

rvelkannan said...

:-)..... :-(

நேசமித்ரன் said...

(முதல் மரியாதை ஜனகராஜ் குரலில்) ஆமா இந்த கேன்வாசிங் கேன்வாசிங்குன்னு சொல்றாவளே இது அதுதானா

(சிவாஜி முறைக்கிறார் )தா....லி

இல்லைங்க பதிவு நல்லா இருக்கு ஒரே சிப்பு சிப்பா .. சிகரெட்ட குறைச்சுக்கோங்கன்னு மதினி சொல்லி விட்டாங்க

'பரிவை' சே.குமார் said...

:))))))))

hi.......... hi..........hi.........

கமலேஷ் said...

சிரிச்சி சிரிச்சி வயித்த வல்லிக்குதுன்ன..
கவிதைலதான் கலகுவீங்கன்னு பாத்த இதை மாதிரியும் பின்னி பெடலேடுக்றீங்க...
ரொம்ப ராசிக்கு படியா இருக்கு..மீண்டும்..மீண்டும்...படிச்சுக்கிட்டே இருக்கேன்...

thamizhparavai said...

ROTFL :-) :-) :-) :-)

வினோத் கெளதம் said...

தல சிரிச்சிக்கிட்டே இருக்கேன்..:)

சிநேகிதன் அக்பர் said...

நல்ல நகைச்சுவை.

கவிதைக்கு இடையில் இதுவும் நல்லாத்தான் இருக்கு.

vasu balaji said...

உங்க நல்ல நேரம். தமிஷிஷ்ல மைனஸ் ஓட்டு எப்புடின்னு குடும்பதிட்டு திட்டாம விட்டாரே:))

சுசி said...

இன்னிக்குத்தான் உங்க பதிவுக்கு வந்து சிரிச்சுட்டு போறேன். நிறையா..

பா.ராஜாராம் said...

@ரோஸ்விக்
சரி,சரி விடுங்க என்ன பெத்த அப்பு!நன்றி மகனே.

@செந்தில்நாதன்
யாரு உங்களைத்தானே.நம்பிட்டேன்.நன்றி மக்கா!

@ஜோதி
:-)
நன்றி ஜோதி!

@டிவிஆர்
நன்றி டிவிஆர்!

@ஜமால்
மாலீஸ் மக்கா!

@கார்க்கி
நன்றி கார்க்கி!

@சின்ன அம்மிணி
ஹி..ஹி..எல்லாம் தெரிய விடமாட்டீங்களே...நன்றி சி.அ!

@soundhararajan rajendran
வாங்க மக்கா.நல்வரவு!மிக்க நன்றி!

@அம்பிகா
ஹா.ஹா..நன்றி அம்பிகா!

@அசோக்
எவ்வளவு கொழுப்பு?அந்த வார்த்தைய போட்டோவில் வேறு பார்க்கனுமா?கிரர்ர்ர்ர்..நன்றி மகன்ஸ்!

@பின்னோக்கி
just forget him பின்னோக்கி!பார்த்தேன்.இது நம் இடம்.நமக்கு சில எல்கைகள் உண்டு.அதை நாம் தாண்டவேணாம்.இதைவிட நாகரீகமானது உங்கள் இடுகை.அதற்க்கு அந்த பின்னூட்டம் அவருடையதாக இல்லாமலும் இருக்கலாம்.ஏனெனில் அவரின் இடுகைகள் மிக சிறந்ததும் உண்டு..மீண்டும்..மறத்தல் மனிதனின் உன்னத சுபாவம்.முக்கியமாய்..
just forget me also!ஹி..ஹி..

@சைவகொத்துபொரட்டா
ஹா..ஹா...ரொம்ப நன்றி எஸ்.கே.பி!

@அமித்தம்மா
மிக்க நன்றி,அமித்தம்மா!

@ரசிகை
நாலஞ்சு நாள் கூட என்னால் அறை வர முடியாமல் போகும் ரசிகை.பதிவை அவர்கள் பார்த்துகொள்வார்கள்.கமெண்ட்டை நான் கையாளனும் என்கிற விருப்பம் இருக்கு.அதனால்தான் கமென்ட் மாடரேசன் போக யோசனை.பார்க்கலாம் மக்கா.பழைய பதிவிற்கான கமெண்ட்டை சந்திக்க நீங்கள் சொல்வது உதவியாக இருக்கும் என தோணுது..செய்யலாம்.(நேசன் வாயாலும் இதே கெட்டவார்த்தை வாங்க திட்டம் போடுறீங்கன்னு நினைக்கிறேன்.ஆமா,நீங்க நல்லவரா கெட்டவரா?)நன்றி ரசிகை!

@பலா பட்டரை
இல்லைதான் பாஸ்!aanaal its my experiyance!அதை அப்படியே பதிந்தேன்.மிக்க நன்றி மக்கா!

.

இன்றைய கவிதை said...

அன்பரே

வாய் விட்டு சிரித்தேன்; சிரிக்க வாய்ப்பளித்ததற்க்கு நன்றி , அருமை


ஜேகே

இரசிகை said...

//நேசன் வாயாலும் இதே கெட்டவார்த்தை வாங்க திட்டம் போடுறீங்கன்னு நினைக்கிறேன்.ஆமா,நீங்க நல்லவரா கெட்டவரா//

:)

mothirak kaiyaala kottu vaangirathuku koduththu vachchirukkanumaakkum..:)

விஜய் said...

குத்துங்க எசமான் குத்துங்க இந்த தமிளிஷ் வோட்டே இப்பிடித்தான்

விஜய்

நேசமித்ரன் said...

ஆனாலும் மறுபடி மறுபடி படிச்சு சிரிச்சுக்கிட்டே.... இருக்குறேன் மக்கா

சொல்லி சொல்லி சிரிச்சுகிட்டே இருக்குறேன்

வந்து அழுத கதை உண்டு
நொந்து எரிந்த கதை உண்டு
சிந்தித்து சிலிர்த்த கதையும் உண்டு வந்தித்து நெஞ்சுள் தொழுத கதை உண்டு
இந்த நாள் போல் இரு விலா அலைவுற சிரித்த தடம் இல்லை இதுவரை

சந்தான சங்கர் said...

சிரிச்சு

சிரிச்சு

புண்ணாயிருச்சு மக்கா..

பா.ராஜாராம் said...

@கல்யாணி சுரேஷ்
அனுப்பிட்டா போகுது.நன்றிடா கல்யாணி! :-)

@வித்யா
இந்த"ஆனாலும்" போடாமல் போயிருந்தால் நீங்கள் வித்யா இல்லை.(அவ்வளவு சிரிச்சேன்.)நன்றி வித்யா!

@நவாஸ்
ஹா..ஹா..நன்றி மக்கா!

@ராஜன்
பார்த்தேன் ராஜன்.நன்றி மக்கா!

@ஸ்ரீ
நன்றி சீயான்!

@ராகவன் அண்ணாச்சி
எப்போ நீங்க ஓட்டு போடாமல் போயிருக்கீங்க?ரொம்ப நன்றி அண்ணாச்சி!

@புதுகை தென்றல்
நல்வரவு மக்கா.ரொம்ப நன்றி!

@ஜெனோ
போட்டுட்டீங்க போலயே.ஓட்டு போட்ட இடத்திலும் ஒரு பின்னூட்டம் பார்த்தேன்.இருந்தாலும் நீங்க தியேட்டர்ல்ல போய் படம் பார்த்திருக்கலாம்.கண்ணா,ஜெனோவுக்கு ஒரு பார்சல்..
:-)

@ஹேமா
நம்பர் ஒன்?ஹா..ஹா..அசோக் எங்கப்பா?நன்றிடா ஹேமா!

@சரவனா
மிக்க நன்றி சரவனா.. :-)

@ஜெஸ்
வேறு யாருக்கு?ஜெஸ்வந்திக்குதான்!சொல் பேச்சு கேட்காமல் கார் ஓட்டுவதால்.எப்போ கத்து தர்றீங்க?நன்றி ஜெஸ்!

@சபிக்ஸ்
:-)) நன்றி மக்கா!

@வேல்கண்ணா
சாரி கண்ணா! நன்றி மக்கா!

@நேசா
ஹா..ஹா..இங்க எல்லாம் முழு முழு சிகரட்டாதான் இருக்குன்னு உங்க மதினிட்ட சொல்லுங்க.(வெளில புலி நாங்க..யார்ட்ட?ஹ..)நன்றி மக்கா!

@சே.குமார்
ரொம்ப நன்றி குமார்!

@கமலேஷ்
ரொம்ப நன்றி கமலேஷ்!

@தமிழ் பறவை
ROTFL எனக்கு தெரியலை பரணி.குறியீடுகளை கொண்டு சிரிசிருக்கீங்கன்னு புரிஞ்சுகிட்டேன்.நன்றி மக்கா!

@வினோ
ரொம்ப நன்றி வினோ!

@அக்பர்
ரொம்ப நன்றி அக்பர்!

@வானம்பாடிகள் சார்
ஹா..ஹா..ஆமாசார்! ரொம்ப நன்றி பாலா சார்!

@சுசி
நீங்களே சிரிச்சிட்டீங்களா சுசி?அப்ப பதிவு வெற்றி!,அனுஜன்யா,நர்சிம்,ஜெகன்,கார்க்கி,நீங்க, ஐந்து பேரும்தான் இப்படியான எழுத்தின் கிரியா ஊக்கி!நன்றி சகா!

@இன்றைய கவிதை
ரொம்ப நன்றி மக்கா! கேயாருக்கு என் வாழ்த்தை சொல்லிட்டீங்களா ஜேகே?

@ரசிகை
அது சரி.எதிரியேதான் நீங்க! மோதிர விரல் கொட்டு உண்டு.மோதிர விரல் திட்டு உண்டா?கண்ணா,ரசிகைக்கு ஒரு பார்சல்ல்ல்ல்..நன்றி ரசிகை!

@விஜய்
குத்திட்டேன் எசமான் குத்திட்டேன்..ரொம்ப நன்றி விஜய்!

@நேசா
உன் ரசிகர் மன்றம் தொல்லை தாங்க முடியலைப்பா.கண்ணனுக்கு சப்போர்ட்டா ஆள் சேர்த்துக்கிட்டு இருக்காப்ல.
கேட்டா...மோதிரம்,வாட்ச்,மெட்டி,வளையல்,அருணாக் கயிறு,என்று சொல்கிறார்கள்..பத்தாதுக்கு நீ வேற சிரிச்சேன்கிற... நன்றிடா மக்கா!

@சங்கர்
புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா!ரொம்ப சந்தோசம்,நன்றியும் சங்கர்!