(Picture by CC licence, Thanks Life in pictures)
ஆள் காட்டி விரலையும்
நடு விரலையும் இணைத்து
வில்லு போல வளைத்து
டூ என்று விடுவான்.
ஆள்காட்டி விரலையும்
சுண்டு விரலையும்
கொம்பு போல காட்டி
பழம் என்றுகூட விடுவான்.
ஒரே ஒரு விரல் மாற்றி
இரு உலகம் காட்டுவான்.
***
சில்லுண்டிகள்
விரிக்கிறார்கள் பட்டத்தை.
ஒருச்சாய்த்தேனும்
நுழைகிறது வானம்.
***
வானம் தாண்டி என
கைவிரிக்கிறான்.
தொட்டுவிட முடிகிறது
தூரம்.
***
குழந்தைகளின் விரல்களில்
ஒட்டவில்லையெனில்
அது என்ன வண்ணம்?
அது என்ன வண்ணத்து பூச்சி?
***
போதும்பெண் என்ற
பெயர் கொண்டவளுக்கு
கூப்பிட தெரியலை.
போதும் அப்பா.
போதும் அம்மா.
நடு விரலையும் இணைத்து
வில்லு போல வளைத்து
டூ என்று விடுவான்.
ஆள்காட்டி விரலையும்
சுண்டு விரலையும்
கொம்பு போல காட்டி
பழம் என்றுகூட விடுவான்.
ஒரே ஒரு விரல் மாற்றி
இரு உலகம் காட்டுவான்.
***
சில்லுண்டிகள்
விரிக்கிறார்கள் பட்டத்தை.
ஒருச்சாய்த்தேனும்
நுழைகிறது வானம்.
***
வானம் தாண்டி என
கைவிரிக்கிறான்.
தொட்டுவிட முடிகிறது
தூரம்.
***
குழந்தைகளின் விரல்களில்
ஒட்டவில்லையெனில்
அது என்ன வண்ணம்?
அது என்ன வண்ணத்து பூச்சி?
***
போதும்பெண் என்ற
பெயர் கொண்டவளுக்கு
கூப்பிட தெரியலை.
போதும் அப்பா.
போதும் அம்மா.
45 comments:
//சில்லுண்டிகள்
விரிக்கிறார்கள் பட்டத்தை.
ஒருச்சாய்த்தேனும்
நுழைகிறது வானம்//
//போதும்பெண் என்ற
பெயர் கொண்டவளுக்கு
கூப்பிட தெரியலை.
போதும் அப்பா.
போதும் அம்மா//
அற்புதம் புதிய தசாப்தம் துவங்கும் நாளில் ....
//போதும்பெண் என்ற
பெயர் கொண்டவளுக்கு
கூப்பிட தெரியலை.
போதும் அப்பா.
போதும் அம்மா.//
:) இது அருமை....
வானம்தண்டி என
கைவிரிக்கிறான்.
தொட்டுவிட முடிகிறது
தூரம்.
அங்கே மட்டுமே சாத்தியப்படுகிறது மாம்ஸ்
சிலவினாடிகளுக்குள் வானம் கடத்தல்
***
குழந்தைகளின் விரல்களில்
ஒட்டவில்லையெனில்
அது என்ன வண்ணம்?
அது என்ன வண்ணத்து பூச்சி?
வண்ணப்பூசியின் இறகு தீண்டா சிறுபிராயம்
இனிமேல் கிராமத்திலும் :((((((((
அருமை
//
குழந்தைகளின் விரல்களில்
ஒட்டவில்லையெனில்
அது என்ன வண்ணம்?
அது என்ன வண்ணத்து பூச்சி?
//
அதானே! அருமைங்க...
பிரபாகர்.
அன்பின் பா.ரா
படமும் கவிதையும் அருமை
குட்டீஸ் கலக்கறாங்க
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
எல்லா வரிகளையும் ரசித்தேன்.
//குழந்தைகளின் விரல்களில்
ஒட்டவில்லையெனில்
அது என்ன வண்ணம்?
அது என்ன வண்ணத்து பூச்சி?//
வரிகளிலிருந்து காலத்துக்கும் விடுபட முடியாது என்றே நினைக்கிறேன்.
எனக்கும் ஒரு போதும்பெண்ணைத் தெரியும். அவள் குறித்து எழுதினால், அதற்கு நீங்களே அடியெடுத்துக் கொடுத்தவராய் இருப்பீர்கள்.
நல்லாருக்குது.. வாழ்த்துக்கள்...
குட்டீஸ் வைச்சு இந்த வருஷத்தை ஆரம்பிசிக்கிறிங்க
வாழ்த்துக்கள் அண்ணா
குழந்தைகளின் விரல்களில்
ஒட்டவில்லையெனில்
அது என்ன வண்ணம்?
அது என்ன வண்ணத்து பூச்சி?
வானம்தண்டி என
கைவிரிக்கிறான்.
தொட்டுவிட முடிகிறது
தூரம்.
கண் முன்னே விரிகிறது உலகம்
புது வருடத்தைக் குழந்தைகளுடன் வரவேற்பது அழகு :)
முதல் பதிவிலேயே வானம் வசப்பட்டுவிட்டது உங்களுக்கு :)
செல்போன் கோபுரத்தால் சிட்டுக்குருவிகள் அழிந்தது போல்
கல்வாரி மரங்கள் அழிந்ததால் டோடோ பறவை அழிந்தது போல்
ராபின் பறவை அழிந்தது போல்
ரசாயன உரங்களால் பட்டாம்பூச்சியும் அழிந்து கொண்டு இருக்கிறது
வாழ்த்துக்கள்
விஜய்
//போதும்பெண் என்ற
பெயர் கொண்டவளுக்கு
கூப்பிட தெரியலை.
போதும் அப்பா.
போதும் அம்மா//
ரொம்ப நல்லாயிருக்கு :) :)
மழலையின் புன்னகையோடு மலரட்டும் இவ்வாண்டு :)
அன்பு பாரா,
ஒருசாய்த்தேனும் நுழைகிறது வானம்... குழந்தைகளின் கையில் ஒட்டாத வண்ணம்... அமரிக்கையாய் தொடர்கிறது ஒரு குழன்தைகளுக்கான வருஷம் உங்கள் கவிதைகளுக்கான... எல்லா வருஷங்களும் குழந்தைகளுகானது தான் என்றாலும்... இந்த வருஷம் உங்கள் கவிதைகள் என்னும் வண்ணங்களை பூசி மகிழ்கிறது. எந்த பிரயத்தனமும் இல்லாமல் நீர்த்தாரைகளாய் கசியும் என்னை சுற்றி... சில கேள்விகள்...
கல்லூரி படிவம்
பூர்த்தி செய்யும் போது
தகப்பனார் பெயருக்கான
இடத்தை நிறைக்கையில்
என்னை பார்ப்பவளை என்ன செய்வது பாரா...
தலை கோதி பக்கமாய்
அணைப்பதை தவிர...
உற்சாகமாய் அவளின்
பிறந்த தினத்தை
பரிசு பொருட்கள் வாங்கி
நிரப்பியும் தீராத
வெற்றிடத்தை எதை இட்டு நிரப்ப பாரா...
வெற்றிடத்தில்
என்னை குத்த வைப்பதை தவிர...
முகத்தில் அவள் அம்மையையும்
குணத்தில் என் அப்பனையும்
கொண்டிருக்கும் அவளை
எப்படி அடையாளப்படுத்துவது பாரா...
கண்களை
மிதக்க விடுவதை தவிர...
தாலோலம் என்கிற ஒரு மலையாள படத்தில் வரும் யேசுதாசின் பாடல் என்னை சில வரிகள் எழுத தூண்டியது... ஒரு அப்பனுக்கும் பெண்ணுக்குமான உறவு எல்லா உறவையும் விட மேலானதாய் இருக்கிறது... " காளி உந்தன் பெருமை சொல்ல கவிகள் ஏதும் இல்லை, ஆழி விளை அமிழ்தம் எனக்கு நீ ஆனந்த தொட்டிலடி" ன்னு சொல்லும் போது மறுமுனையில் அழுதவளின் கண்ணீர் தந்தி கம்பிகள் கடத்தி என் கன்னத்தையும் காதையும் நனைத்தது... மறக்க முடியாது பாரா...
என்னை இவ்வளவு எழுத தூண்டும் உங்களை என்ன செய்வது பாரா... அபிவாதயே.. சொல்லி காலில் விழுவது தவிர...
அன்புடன்
ராகவன்
குழந்தைகளின் விரல்களில்
ஒட்டவில்லையெனில்
அது என்ன வண்ணம்?
அது என்ன வண்ணத்து பூச்சி?//
தும்பபூவையும்
தும்பசெடியில்
பட்டாம்பூச்சி
பிடித்ததையும்
நினைவுபடுத்துகிறீர்கள்
பா.ரா..
புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா..
உங்கள் வரிகள் மனதில் லயிக்கவில்லை எனில் அது என்ன மனது?? :)
ம்ம்ம் மனது குழந்தையாகிவிட்டது...
எப்போதும் நான் மழலைகளின் ரசிகன்.
உங்கள் குட்டீஸ் இல் குழைந்து விழுகிறேன்.. நன்றி உங்களுக்கு
இது எனது போ 2009 வா 2010இல்
கிராமங்கள் தோறும்
மழலைகள்
மடியினில்
மடிக்கணணிகள்
கொண்டுவா..
இணையத்தில் கிராமத்து
தமிழ்ப்பூக்கள்
நிதம்பூக்க வேண்டுமல்லவா....
குட்டீஸ் ஸ்பெஷல் எல்லாமே அருமையா இருக்கு மக்கா.
இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.
''குட்டீஸ்" பிடித்தது போல்
இந்த கவிதையும் பிடித்திருக்கிறது
மிகவும் நன்றாக இருக்கிறது...
பட்டம் பறக்கும் வானம் சாய்வது இன்னும் அழகு...
வாழ்த்துக்கள்...
மனித அவலங்களை பற்றி எழுதும் எனக்கு உங்கள் கவிதைகள் உதட்டோரப் புன்னகை. எல்லோருக்கும் நல்ல அப்பா அம்மா நல்ல குழந்தைகள் நல்ல வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. பலருக்கு அது மறுக்கபடுகிறது. வலிக்க வலிக்க மறுக்கபடுகிறது.
Anyway ur poems always pointing towards love.. pure love.. continue ur way... keep going.. keep loving
last para.. hats off u சித்தப்ஸ் :)
எப்போதும் போல் அருமை குட்டீஸ்.
விரல்களின் வழியே வாழ்க்கை. அருமை
//வானம்தண்டி என
கைவிரிக்கிறான்.
தொட்டுவிட முடிகிறது
தூரம்.//
நிச்சயமாய், குழந்தைகளால் தொட்டுவிடவும் முடியும்.
//போதும்பெண் என்ற//
கவிதை அருமை
//குழந்தைகளின் விரல்களில்
ஒட்டவில்லையெனில்
அது என்ன வண்ணம்?
அது என்ன வண்ணத்து பூச்சி?//
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் நண்பா.
superb...!
//சில்லுண்டிகள்
விரிக்கிறார்கள் பட்டத்தை.
ஒருச்சாய்த்தேனும்
நுழைகிறது வானம்//
அருமை பாரா எப்படியோ எல்லாமே கைக்குள்தான் சின்னைப்பிள்ளைகளுக்கு
அதே கலக்கல்.
அழகான குழந்தைகள் உலகத்துள் சந்தோஷமாய்ப் புகுந்து புகுந்து விளையாடியிருக்கீங்க அண்ணா.
அன்பு அண்ணாவுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
சித்தப்பாவையும்
கேட்டதாச் சொல்லுங்க.
எல்லாமே நல்லா இருக்குங்க..!!!
இருவிரலில் இரு உலகம் யதார்த்தம்..ரொம்ப பிடிச்சிருந்துது.
எல்லாமே நல்லா இருக்குங்க..!!!
இருவிரலில் இரு உலகம் யதார்த்தம்..ரொம்ப பிடிச்சிருந்துது.
புத்தாண்டு வாழ்த்துக்கள் பா.ரா. குட்டிஸ் ஸ்பெஷல் க்யூட்!!
ரசித்தேன்.
கடைசி இரண்டும் அருமை. வானம் தாண்டி என்பதில் நெடில் குறிலாகி விட்டது.திருத்தி விடுங்கள்.
உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் !!!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
புதிய ஆண்டு பதிவே அசத்தல் போங்க
குட்டீஸ் ... செல்ல குட்டீஸ்
அருமை பா ரா சார் .
குட்டீஸ்.. சுட்டீஸ்..
அருமையா எழுதி இருக்கீங்க.
குழந்தைகளின் விரல்களில்
ஒட்டவில்லையெனில்
அது என்ன வண்ணம்?
அது என்ன வண்ணத்து பூச்சி?
வரிகள் அத்தனையும் அருமை..
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
ellaame nallyirukku.....:)
iniya puththaandu vaazhthukal..
குட்டீஸ். அருமை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
@நேசா
புது வருஷம். முதல் ஆள்!ரொம்ப நெகிழ்வுடா மக்கா.நன்றி நேசா!
@செந்தில்
ரொம்ப நன்றி செந்தில்!
@பாலா
பின்னூட்டத்தின் கடைசி பாரா,மிகுந்த வலி.ஆனால் உண்மை..நன்றி மாப்ள!
@டிவிஆர்
நன்றி டிவிஆர்!
@பிரபாகர்
வாங்க ப்ரபா.ரொம்ப நாளுக்கு அப்புறம்.நன்றி மக்கா!
@சீனா அய்யா
வாங்க அய்யா.ரொம்ப சந்தோசம்.புத்தாண்டு வாழ்த்துக்களும்!
@மாதவன்
ரொம்ப நன்றி மாதவன்.என்னவோ உங்கள் குரல் கேட்கணும் போல் இருக்கு..
@அண்ணாமலை
ரொம்ப நன்றி அண்ணாமலை!
@ஜோதி
மிக்க நன்றி ஜோதி!
@கௌரி
சந்தோசம் கௌரி!நன்றியும்.
@விஜய்
நிறைய விஷயங்கள் பேசுகிறீர்கள் விஜய்.கவிதையிலும் பின்னூட்டத்திலும்.சந்தோசமாய் இருக்கு.வாழ்த்துக்கள் மக்கா!
@சிவாஜி
புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவாஜி.சந்தோசம்.மிக்க நன்றி!
@ராகவன்
பின்னூட்டத்தை இவ்வளவு நிறைவாய் அலங்கரிக்க என்னால் இயலவில்லையே என்று உணர்கிறேன் மக்கா,உங்களையும் சமீபமாய் கும்க்கியையும்.நெகிழ்வும் நன்றியும் ராகவன்!
@சங்கர்
வாங்க வாங்க சங்கர்.தும்பை பூவோடு அவ்வளவு வாசனையாக வருகிறீர்கள்.வாழ்த்துக்களும்,நன்றியும் அன்பும் மக்கா!
@பலா பட்டறை
ரொம்ப நன்றி மக்கா!
@ரமேஷ்
அருமையான பகிர்வு ரமேஷ்!நன்றியும் அன்பும்!
@நவாஸ்
ஆகட்டும் மக்கா.மிகுந்த நன்றியும்!
@வேல்கண்ணன்
ரொம்ப நன்றி கண்ணா!
@கமலேஷ்
நன்றி கமலேஷ்!
@அசோக்
ஆம் மகன்ஸ்!ஆனால் வாழ்வை பார்க்கிற கண்கள் என்னவோ நம்முடையது.நன்றி மகனே!
@வானம்பாடிகள் சார்
ரொம்ப நன்றி சார்!
@பின்னோக்கி
நன்றி பின்னோக்கி!
@அம்பிகா
நன்றி அம்பிகா!
@குமார்
ரொம்ப நன்றி நண்பா!
@கலகலப்ரியா
நன்றி பாஸ்!
@தேனு
ஆம்.நன்றி மக்கா!
@ஜெஸ்
ஆகட்டும் ஜெஸ்.நன்றி!
@hemaa
நன்றி ஹேமா!
@செய்யது
ரொம்ப நன்றி செய்யது!
@சபிக்ஸ்
ரொம்ப நன்றி மக்கா!
@ஜெரி
வாங்க ஜெரி.ரொம்ப நன்றியும் அன்பும்!
@sri
ஆம் ஸ்ரீ.தம்பி கொஞ்சம் அலுவலில் இருக்கிறான்.மாற்ற சொல்லிட்டேன்.மாற்றுவான்.ரொம்ப நன்றி மக்கா.
@சங்கர்
இதோ வரேன் சங்கர்.நன்றி மக்கா!
@staarjan
நன்றி மக்கா!
@சுசி
ரொம்ப நன்றி சுசி!
@மலிகா
அதே புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா!ரொம்ப நன்றி!
@ரசிகை
அப்பாடி..ரொம்ப நன்றி ரசிகை!
@akbar
நன்றி அக்பர்.புத்தாண்டு வாழ்த்துக்களும்!
எல்லாமே நல்லா இருக்கு
முதல் கவிதையும், கடைசி கவிதையும் அசத்தல் பா.ரா.
கடைசி கவிதை இதழில் புன்னகை வரவைத்தாலும், கண்ணில் நீரும் வரவைக்கிறது
குழந்தைகளை பிடித்ததை போலவே உங்கள் கவிதைகளையும் புடிச்சிருக்கு. புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா.
Post a Comment