Sunday, January 17, 2010

பா.ராஜாராம் கவிதைகள்-6


(picture by cc license thanks Jody)

1.
யாருமில்லை என்பதால்
பேசிக்கொண்டு இருந்தேன்.
வருத்தப்படுவேனே என்பதால்
கேட்டுக்கொண்டும் இருந்தேன்.

2.
லைகீழாக தொங்கியபடி
எப்படிநடக்கிறான்?
என்கிற கேள்வி
வவ்வாலுக்கு இருக்குமோ
என்கிற கேள்வி எனக்கு.

3.
ல்லோருக்கும் பொதுவான
நீதி ஒன்று இருந்தது.
பிரச்சினை என்னவெனில்
அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.

4.
குழந்தைகளை கூட்டிக்கொண்டு
அம்மா வீட்டிற்கு போகிற மகள்கள்
மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.

5.
மீன் தொட்டியில் இட்டு வளர்க்கும்
குழந்தை என நெளிவாள்
சம்பள நாளில்
இவள் எப்போதும்.

------------------------------------------
பா.ராஜாராம் கவிதைகள் - 1, 2, 3, 4, 5
------------------------------------------

56 comments:

Gowripriya said...

first :)

Gowripriya said...

அனைத்தும் அருமை, நான்காவது மற்றவையினும் அதிகமாய் ஈர்த்தது

அன்புடன் அருணா said...

ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு முகம் காட்டுகிறீர்கள்!பூங்கொத்து!

vasu balaji said...

அழகழகான கவிதைகளுக்கும் விருதுக்கும் பா.ரா.ட்டுகள்:)

பின்னோக்கி said...

விருதுக்கு பாராட்டு.
அழகான கவிதைகளுக்கு வழக்கமான பாராட்டு.

விஜய் said...

வவ்வாலுக்கு பாராட்டு

விருதுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

விஜய்

Paleo God said...

அனைத்தும் அழகு::))

Paleo God said...
This comment has been removed by the author.
Deepa said...

பா.ரா. ஸார்,
முதல் கவிதையைத் தாண்டிச் செல்ல மனமே வரவில்லை...
WOW!!! மிரட்டுகிறீர்கள்.

கமலேஷ் said...

எல்லா கவிதைகளுமே அசத்தலா இருக்கு, அதுவும் முதல் கவிதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு....விருதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா,,,

நந்தாகுமாரன் said...

No. 1 is No. 1

'பரிவை' சே.குமார் said...

//குழந்தைகளை கூட்டிக்கொண்டு
அம்மா வீட்டிற்கு போகிற மகள்கள்
மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.//

பூங்கொத்து!

விருதுக்கு பாராட்டு.

செ.சரவணக்குமார் said...

தமிழ்மணம் விருதிற்கு வாழ்த்துக்கள் அண்ணா.

ப்ரியமுடன் வசந்த் said...

வௌவ்வால் இன்னும் திங் பண்ணிட்டு இருக்கேன்....!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வவ்வாலையும் விட மாட்டீர்களா ? ஹ ஹ ஹா

ஹேமா said...

அண்ணா வௌவாலுக்கு வாழ்த்து.
எப்பவும் தலைகீழாவே இருங்க.
அப்பத்தான் சரி !

நேசமித்ரன் said...

அட்வான்ஸ் வாழ்த்துகள்

சுசி said...

விருதுக்கு வாழ்த்துக்கள் பா.ரா.

2.
3.
4.
1.
5.

அருமையான கவிதைகள்..

செந்தில் நாதன் Senthil Nathan said...

//யாருமில்லை என்பதால்
பேசிக்கொண்டு இருந்தேன்.
வருத்தப்படுவேனே என்பதால்
கேட்டுக்கொண்டும் இருந்தேன்.//

அருமையான வரிகள்...இத தாண்டி நான் இன்னும் அடுத்த வரிக்கு போகல...

பாலா said...

விருது விருதுங்குராங்களே என்ன விருது மாம்ஸ் ?
தமிழ் மணம் விருதா? ரைட்டு விடுங்க
இந்த "3,4,1" mithakka viduthu vaasaganai

நட்புடன் ஜமால் said...

எல்லோருக்கும் பொதுவான
நீதி ஒன்று இருந்தது.
பிரச்சினை என்னவெனில்
அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.]]

ரொம்ப கஷ்ட்டப்பட்டு தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது 3,4,1

--------------------

வாழ்த்துகள் மக்கா.

சைவகொத்துப்பரோட்டா said...

இரண்டாவது ஹா... ஹா... விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.

அம்பிகா said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
பா.ரா.

கவிதைகள் ஐந்துமே முத்துக்கள்.
ஒன்றும், மூன்றும்
நன்முத்துக்கள்.

Ashok D said...

1,3,4 ரொம்ப பிடிச்சிருந்தது. விருது வாங்குவீங்கன்னு தெரியும் அதனால no surprise :)

சுந்தரா said...

கவிதைகள் வழக்கம்போல அருமை.

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

Balakumar Vijayaraman said...

கவிதைகள் அருமை.

விருதுக்கு வாழ்த்துகளும்.

S.A. நவாஸுதீன் said...

////அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.///

////மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.////

////வருத்தப்படுவேனே என்பதால்
கேட்டுக்கொண்டும் இருந்தேன்.////

படிச்சிட்டு போறவனை பொழக்க விடுங்க மக்கா. முடிச்சதுக்கப்புறமும் இங்கனயே சுத்திகிட்டு இருக்கவேண்டியிருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

விருதுக்கு வாழ்த்துக்கள்

3,4 கவிதை ரொம்பவும் பிடித்திருந்தது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சொல்ல மறந்துட்டேன் முதல் கவிதை டாப் :))

Anonymous said...

அருமையான கவிதைகள்... முதல் கவிதை முற்றிலும் நிதர்சனம் :-)

Deepa said...

விருதுக்கு வாழ்த்துக்கள் பா.ரா!

அமுதா said...

எல்லாம் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை
விருதுக்கு பாராட்டு

rvelkannan said...

வாழ்த்துகள் , வாழ்த்துகள், வாழ்த்துகள்
எப்பொழுதும் போல் நெகிழ்வான கவிதை ஐந்தும் இனிமை.

ஸ்ரீராம். said...

கவிதைகள் பிரமாதம். முதல் மூன்றும் முத்து.

தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துக்கள்

VISA said...

அருமையான கவிதைகள்

மாதேவி said...

தமிழ்மணம் விருதிற்கு வாழ்த்துக்கள்.

அழகான கவிதைகள். வெவ்வால், மீன் பிடித்தது.

கல்யாணி சுரேஷ் said...

//எல்லோருக்கும் பொதுவான
நீதி ஒன்று இருந்தது.
பிரச்சினை என்னவெனில்
அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.//

பிரச்சினைகளுக்கு காரணமே இதுதானே.

//குழந்தைகளை கூட்டிக்கொண்டு
அம்மா வீட்டிற்கு போகிற மகள்கள்
மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.//

உணமைதான் அண்ணா.

goma said...

கவிதைகளுக்கும் விருதுக்கும் மனம் கனிந்த பாராட்டுகள்

உயிரோடை said...

கவிதை எல்லாம் நன்றாக இருக்கின்றன அண்ணா

அ.மு.செய்யது said...

விருதுக்கு வாழ்த்துக்கள் பா.ரா !!!

வெர்சடைல் ரைட்டிங் என்பார்களே !!! அது இது தானோ ?? அருணா சொன்ன மாதிரி கவிதையில் வெரைட்டியான முகங்களை வைத்திருக்கிறீர்கள்.

Thenammai Lakshmanan said...

அருமை பாரா சம்பளத்தேதி மீனும் மகளின் முகமாற்றமும் தனித்தனி நீதியும்

Thenammai Lakshmanan said...

விருதுக்கு வாழ்த்துக்கள் பாரா

முன்னமேயே தெரியாம போச்சே

கொஞ்ச நேரத்துக்கு முந்தி....

ஏதவது சர்ப்ரைஸ் பண்ணி இருக்கலாம்

காமராஜ் said...

அழகு பாரா.ஆமா எதுக்கு அப்படிச் சோகமா அவிங்க.பக்கத்தில் பட்டாம் பூச்சி.கைகுடுங்க மக்கா.

kovai sathish said...

நீங்க எங்க உட்கார்ந்து யோசிக்கறீங்க..
அந்த இடத்த கொஞ்சம் சொல்லுங்களேன்...?

na.jothi said...

நீங்க எழுதிகிட்டே இருங்க
நாங்க கேட்டுகிட்டே/படிச்சிகிட்டே இருக்கோம்
வாழ்த்துக்கள் அண்ணா தமிழ்மணம் விருதுக்கும்

"உழவன்" "Uzhavan" said...

4 ரொம்ப நல்லாருக்கு.
தமிழ்மணம் விருதுக்கும் வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

முதலில், தமிழ்மணத்தின் முதல் பரிசு
விருதைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

கவிதை அனைத்தும் அருமை.

மேலும்,மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

SUFFIX said...

அருமை அண்ணே. வாழ்த்துக்கள்.

சந்தான சங்கர் said...

ஆறாவது பதிவில்
ஐந்தும் அருமை
நாலு வார்த்தை சொல்லணும்
மூன்று முகம் உங்களுக்கு
இரண்டுற கலந்து எழுதுவதில்
ஒன்றுபடுகிறீர்கள் மக்கா..


தமிழ்மணத்தில் உங்கள்
கவிமணந்தது மகிழ்ச்சி மக்கா

வாழ்த்துக்கள் நிரம்ப...

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு..

இந்த "தகப்பனாக இருப்பது"கவிதைக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரமும்,விருதும் கிடைத்தது மிக்க சந்தோசம் மக்கா.இதை எழுதிய போது கிடைத்த சந்தோசத்தைவிட இந்த சந்தோசம் அலாதியாய் இருக்கிறது.இதற்க்கெல்லாம் உங்கள் எல்லோருடைய அன்புதான் காரணம் எனும் போது....

அகிலாண்டத்து அம்மாயி காலில் விழுந்து திருநூறு வாங்கும் போதெல்லாம் சொல்வார்கள் "பெரிய வீட்டுக்காரனாய் இருடா"வென.

"இவ்வளவு பெரிய வீட்டுக்காரனாய் இருப்பேன் என தெரியலையே அம்மாயி."

அம்மாயிக்கும், அம்மாயி போன்ற என் நண்பர்களுக்கும்,தமிழ்மணத்திற்கும்.........

"அந்த வார்த்தையை சொல்லனுமா மக்கா?"

பா.ராஜாராம் said...

இந்த கவிதைக்கான பின்னூட்டங்களுக்கு,

கௌரி தொடங்கி,இப்பவரையிலான சங்கர் வரையில்..

மிகுந்த நன்றியும் அன்பும் மக்கா!

Nathanjagk said...

தம்புராவின் ஒற்றை ஒலிக்குறிப்பில் காலங்கள் (காதுகளும்) மாற்றி மாற்றி மீட்டிக்​கொள்ளும் வெவ்வேறு ராகங்களாய் கவிதைகள்! அருமை ராஜா!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒவ்வொன்றும் நெஞ்சை அள்ளிச் சென்றது!!

இரசிகை said...

//படிச்சிட்டு போறவனை பொழக்க விடுங்க மக்கா. முடிச்சதுக்கப்புறமும் இங்கனயே சுத்திகிட்டு இருக்கவேண்டியிருக்கு//


navas sir sonnathu polave naanum...:)


muthal kavithai CLASS....

:)

இரசிகை said...

appuram NATHI kavithai....

superb..!