கோட்டை முனியாண்டி கோயில்
சுற்று சுவற்றில்
"சிறுநீர் கழிக்காதீர்கள்" என்று
எழுதி வைத்திருக்கிறார்கள்.
இதில் எனக்கு
இரண்டு கேள்விகள் உண்டு.
ஒன்று,
சிறுநீர் கழிப்பவர்களுக்கு தெரியாதா
கோட்டை முனியாண்டி
துடியான தெய்வம் என?
இரண்டு,
சிறுநீர் கழிப்பது
தெய்வ குற்றமாவென
தெரியாதா
கோட்டை முனியாண்டிக்கு?
50 comments:
கேள்வியின் நாயகன் நீங்களா?
படமும் அருமை;
கவிதையும் அருமை.
:-)
கவிதை அருமை.
:) கோட்டை முனியாண்டிக்கு தெரியாது போல இதையும் நீங்கள் கவிதையாக்குவீர்கள் என?
நல்ல கேள்வி நண்பரே...
இந்தக் கேள்விக்கான பதில் தெரியாதோர் நம் நாட்டில் பல ஆயிரம்..
ஆஹா! மக்கா அடிச்சி ஆடுங்க ...
ஹஹா.. மாம்ம்ஸ் அழகான நகையான கவிதை :)
//அமிர்தவர்ஷினி அம்மா said...
:) கோட்டை முனியாண்டிக்கு தெரியாது போல இதையும் நீங்கள் கவிதையாக்குவீர்கள் என?//
:)
எதையும் விட்டு வைக்க மாட்டீங்களா, எல்லாத்தையும் கவிதையாக்கிடுறீங்க. நல்லா இருக்குண்ணா.
எப்படி சார்... எப்படி?
-வித்யா
சூப்பர் சூப்பர்
நல்லாருக்கு...:-))))))))
http://nesamithran.blogspot.com/2010/01/blog-post_10.html
இந்தக் கவிதையின் தொடர்ச்சி
மக்கா மன்னிப்ப்பாராக
கேள்வியின் நாயகன், வேற யாரு, நீங்கதான் மக்கா நீங்கதான்.
////:) கோட்டை முனியாண்டிக்கு தெரியாது போல இதையும் நீங்கள் கவிதையாக்குவீர்கள் என////
////அது சரி பிள்ளையார் என்ன செய்வார்////
ஹா ஹா ஹா இதையும் ரசித்தேன்.
எனக்கும் அதே டவுட்டுதான்.
முதல் கேள்விக்கு:
ஹி ஹி ஹி
இரண்டாம் கேள்விக்கு:
ஹா ஹா ஹா
(பா. ரா, நேசமித்ரனின் தொடர்ச்சி மனதை தொடுகிறது )
தெய்வ குற்றம் இல்லதான், ஆனா அது நிறய பேர் வர போற இடங்கறாதல நோய் தொற்று ஏற்படாம இருக்க சொன்னதா இருக்கலாம்..
இந்தக் கேள்வி எப்போ தோணுச்சு அண்ணே?
அண்ணா அங்க தொட்டு இங்க தொட்டு முனியாண்டி சாமியையுமா !ஆனாலும் சரியான கேள்வி.
அண்ணா நீங்க எழுதுற கவிதைபோல ஒரு கவிதைமாதிரி எழுதியிருக்கேன்.
அதுதான் போட்டிக்கும் அனுப்பப் போறேன்.
:)
:-))
நாங்களும் எழுதுவோம்ல
எச்சில் துப்பாதீர்கள்
குருக்கள் மீது (காஞ்சிபுரம்)
விஜய்
அருமை
அண்ணே நல்லா கேட்டீங்க.. ::)) ஸூப்பர்ப்....
நல்ல கேள்விகள் தான்.
நல்லா இருக்குங்க கவிதை..
எங்கிருந்து மாம்ஸ் தோணுது இப்பிடியெல்லாம்...?
அருமை போங்கோ.!
இது என்ன புதுசா கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு.. :-)
எல்லாரும் சொன்னதுதான். அருமை
அன்பு பாரா,
நல்லாயிருந்தது உங்கள் பார்வை... கோட்டை முனியாண்டிக்கு தெரியாதது எதுவும் இல்லை...கோட்டை முனியாண்டியை தெரியாதவர்கள் யாருமில்லை... ஆனாலும் தெரிந்த விஷயங்களை தெரியாத கோணத்தில் பார்ப்பது தான் உங்கள் பார்வை...
நிறைய இடங்களில் இது போல சிறுநீர் கழிக்காதீர்கள் என்று எழுதுவது உண்டு ஆஸ்பத்திரி சுவர், இரண்டு வரிசை ஜன்னல் இல்லாத வீடுகளின் குறுக்கு சுவர், குட்டி சுவர் (அது குட்டியா போனதுக்கு காரணமே இது தான் )... அவசரத்தில சுவர் இருந்தா, நம நமன்னு சித்திரம் எழுது தோனுகிறது எல்லோருக்கும்... கொஞ்சம் இருட்டு போதும், யாரும் பார்க்க மாட்டாங்கன்னு ஒரு நினைப்பு வந்துடும் போல எல்லோருக்கும்... கோட்டை முனியான்டிக்கும் ஆத்திரம் புரியத்தானே செய்கிறது. எவ்வளவோ பாவங்களை கழுவி களைபவர் இதையும் மன்னித்து விட மாட்டாரா என்ற நம்பிக்கை தான்.
எல்லோரையும் மூக்கு மேல விரல (விரல்களை) வைக்க வச்சிட்டீங்க
போங்க !
ஆத்தங்கரை பிள்ளையாருக்கு அவசியம் இல்லை, ஆத்தோட போய்டும்... அரசமர பிள்ளையாருக்கு அரசமர வேரிருக்க பயமேன். மத்த பிள்ளையார் எல்லாம் அபிசேக தண்ணியில சத்தமில்லாமல் போய்டுவார், பால் குடிக்க தெரிந்த பிள்ளையாருக்கு... இது கூட தெரியாதா என்ன...
கார்ப்பரேசன் ஆட்களை வச்சு கொஞ்சம் மருந்தடிங்க பாரா... இன்பெக்ஷன் வந்துட போகுது...
அன்புடன்
ராகவன்
தங்கள் புத்தக விமர்சனம் எனது ப்ளாகில் எழுதியுள்ளேன். இயலும் போது வாசியுங்கள்
:-)
நல்லா இருக்கு பா.ரா !!!
புத்தக கண்காட்சியில் உங்கள் புத்தகம் வாங்கி விட்டேன்.
என் வீட்டில் அனைவரும் உங்கள் கவிதைகளை ரசித்து படித்து கொண்டிருக்கின்றனர்.பெருமிதத்தோடு பார்த்து கொண்டிருக்கிறேன் நான்.
உங்க புத்தகத்தை நாளைக்குத் தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும். அடுத்த தொகுதிக்கு தயாராகிட்டீங்க போல :)
//அண்ணாமலையான் said...
தெய்வ குற்றம் இல்லதான், ஆனா அது நிறய பேர் வர போற இடங்கறாதல நோய் தொற்று ஏற்படாம இருக்க சொன்னதா இருக்கலாம்..//
hahaha fine anna.
and fine paaraa...
அருமை. வேறு என்ன சொல்ல..?
தல அருமை..பக்கா..
மிகவும் ரசித்தேன்..
:).. நல்ல கேள்வி பா.ரா..
நேக்கும் 2 கேள்வின்னா...
கோட்டை முனிக்கு எதுக்குவோய் சுற்றுசுவர்?
'பக்கி' யோட கவிதையைப் பார்த்தேளா?
அதாண்ணே..!
ஓ
இருவரும் கல்(ள்)...ஹிஹிஹி
கவிதையும் படமும் அருமை.
ரசித்தேன்...
முட்ட வருவது
மாடா இருந்தா பரவாயில்லை
ஒதுங்கி ஓடலாம்
முட்டிக்கிட்டு வருவத
என்ன செய்வது மக்கா..
நல்லாத்தான்யா கேள்வி கேட்குறீங்க :-)
அருமை...உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
வழக்கம் போல பணிச் சூழல்.தனித்தனியாக கை பற்ற இயலவில்லை.எப்பவும் போலான அன்பும் நன்றியும் என் மக்களே.
இதை மிஸ் பண்ணுவேனா? ஹ ஹ ஹா சிரித்து முடியல.
பலருக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
hi.. rajaram sir.
nallaayorukkeengalaa?
naan yeththanai kavithai vaasikkanum paatheengala...
aththanaiyum vaasiththu comment pass seiya poren...
:)
inthak kavithai nallaayirukku...
Post a Comment