(photo by CC licence #)
அவசரமில்லை
ஒழிந்த நேரங்களில்
தேடுங்கள்
ஞாபக பரணில்
நினைவு சேந்தியில்
தோட்டத்தில்
வெளித்திண்ணையில்
காலணி இடும் இடத்தில்
நீங்கள் அறியாது
நிகழ்ந்ததாகத்தான்
இருக்கும்
மறந்த
மயிலிறகின் பீலியை போல்
கிடைக்கிறதாவென
பாருங்கள்
கிடைக்காது போகிறபோது
மட்டுமே
இறைஞ்சுகிறேன்
என் பிரியமானவர்களே....
ஒருமுறைக்கிருமுறை
யோசியுங்களேன்
தூக்கி எறியும் முன்பாக
என்னை
31 comments:
உனது படைப்பில் மிகச் சிறந்ததாக இதைக் கருதுகிறேன், மீண்டு எழ நாழியானது
அற்புதம்
படம் அழகான கவிதைக்கு மெருகு தருகிறது நண்பரே!
அழகான படம்.அருமையான வரிகள்.
//ஒருமுறைக்கிருமுறை
யோசியுங்களேன்
தூக்கி எறியும் முன்பாக
என்னை//
படமும் வரிகளும் அழகு...
போகிறபோதுமட்டுமேஇறைஞ்சுகிறேன்
என் பிரியமானவர்களே....
ஒருமுறைக்கிருமுறையோசியுங்களேன்தூக்கி எறியும் முன்பாகஎன்னை
வாவ்
அற்புதம்
ஒளிப்படமும் கவிதையும் அருமை
பிரிவதற்கு முன் யோசியுங்கள்
பிரியமானவர்களே!
-------------
கவிதை அழகு நண்பரே.
அழகிய கவிதைகள் வடிக்கும் கவிசிற்பியை தூக்கியெறிய முடியுமா? மிகவும் நெகிழ்வான கவிதை.
பிரியமுள்ள நண்பா. அழகான வரிகள் அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள்
//காலனி இடும் இடத்தில்//
'காலணி' என இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
மிகச்சாதாரணமான தலைப்பாக இருந்தாலும், அந்த "பிரியமான" என்ற வார்த்தைக்கு இருக்கும் கணம் வெகு அதிகம்.
வெகுவாக ரசித்தேன் கவிதையை ராஜாராம் !!! பின்னிட்டீங்க...
அழகான கவிதை.. :-)
வரிகளின் ஊடே ஒரு சோகம் படர்ந்து செல்கிறது....
நிராகரிப்பு அல்லது அங்கீகாரம் கிடைக்காமைதானே ஆகக்கூடிய சோகம். அருமை அன்பரே!
என்ன சொல்ல? இப்போதைக்கு நன்றி மட்டும்....
-ப்ரியமுடன்
சேரல்
மிக அருகில் உணர்ந்தேன்.
அலையாடிக் கிடக்கையில் கால் தட்டும் எலும்பு மாதிரி நினைவுக்கு வந்து தொலைக்கிறது முன்னொரு நாள் கரைத்த கலயமும் சாம்பலும் .இந்தக் கவிதையின் எலும்பும்தான் என்பதை சொல்லணுமா பா.ரா.
வார்த்தைகள் கங்கணம் கட்டிகொண்டு
அழைக்கின்றன
ப்ரியங்கள் நிறைந்த என்...
கண்ணா..
வசந்த்..
ஜெஸ்..
ராஜா..
சேகர்..
சக்தி..
நந்தா..
ஜமால்..
உதிரா..(நல் வரவு உதிரா)
நவாஸ்...
j.s. ஞானசேகர்...(நல்வரவு ஞானம்.மாத்தியாச்சு.நன்றி நண்பரே.)
செய்யது...
ராகவ்...
மாதவன்...
சங்கா...
சேரல்...
நர்சிம்...
நேசா..(யாவரும் நலமா நேசா?..)
ஜோதி ...
மிகுந்த அன்பும் நன்றியும் நண்பர்களே...
அருமையான கவிதை, ரொம்பப் பிடித்திருக்கிறது.
ராஜா அண்ணா,எப்போதுமே பழையதை மறந்ததில்லை.
திரும்பிப் பார்க்கவும் மறந்ததில்லை.
romba nalla irukku enru sollamutiyavillai purakkanippin vali sollum kavithai
ப்ரியங்கள் நிறைந்த என்..
யாத்ரா..
ஹேமா..
மண்குதிரை..
நிறைய அன்பும் நன்றியும்.
//மறந்த
மயிலிறகின் பீலியை போல்
//
மிகவும் அருமையான கவிதை
pidichirukku...........:)
ஞாபக பரணில்
நினைவு சேந்தியில் //
அழகான வார்த்தைகள்
அற்புதமான கவிதை
ப்ரியங்கள் நிறைந்த என்..
பெருமாள்...(நல்வரவு நண்பரே)
ரசிகை...
அமித்து அம்மா..
நிறைய அன்பும் நன்றியும்.
'காரணப் பெயரிலிருந்து'......'பிரியமானவர்களுக்கு' வரை கவிதைகள்,கதைகள் முழுவதையும்
ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.கவிதையில் ...நீங்க சொல்ல வர்ர விஷயத்தை நெஞ்சை
கிழிச்சு ஈசியா உள்ளே வச்சிட்டு போயிட முடியுது.அதிலிருந்து விடு படுவதற்கு நாங்கள் படும்
பாடு சொல்லி மாளாது!கதையிலே....'காலத்தின் வாசனையில்'......“நீங்கல்லாம் என்னத்துக்குடா வெளிநாடு போறீங்க? எல்லா மயித்தையும் தொலைக்கிறதுக்கா...".என்ற ஒரு வரியில் கதையின் மொத்த நோக்கத்தையே சொல்லி விட முடிகிறது.'அனுபவ நீதிக் கதையில்'....வயிறை குலுங்க வைக்க
முடிகிறது.
ஒன்னு தெரியுமா?...சுஜாதாவின் பலமே..நகைச்சுவைதான்.கடைசி ஒருவரியில் அழ வைக்க அவரால் மட்டுமே முடிந்தது.கவிதையின்
பயணம் நிஜ அழகு.கதையில்...சுஜாதாவைத் தொட்டுவிட...தூரம் அதிகமில்லை பா.ரா.
ப்ரியங்கள் நிறைந்த என்..
திரு.கதிர்வேல்..
என்ன சொல்லட்டும்..
மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.
இந்த அன்பு மறக்க இயலாதது.
நன்றியும் அதே அன்பும்.
வாழ்த்துகள்!
Post a Comment