Monday, December 14, 2009
பசி விருந்து
(Picture by CC licence, thanks sashafatcat)
மனைவி குழந்தைகளுடன்
அமர்ந்து சாப்பிட்டு
கொண்டிருக்கிறீர்கள்.
வந்து விடுகிறேன் நான்.
சாப்பிட சொல்லாமல்
இருக்க முடியாது உங்களால்.
சொன்னதும் அமரவும்
முடியாது என்னால்.
வராத விருந்திற்க்கென
சோறுக்கும் குழம்பிற்கும்
கொல்லையில் ஓடும் குழந்தைகள்...
என் வீட்டிலும் உண்டு.
********************************************************
சாப்பிடுடா எனவும்
எங்க வீட்டிலெல்லாம் சாப்பிடுவீங்களா?
எனவும் அடுத்தடுத்து
கேட்கிறாள் பெரியம்மா.
பதில் பிடிச்சிருக்கு.
கேள்வி குழப்புகிறது
பசியில் இருக்கும் எனக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
52 comments:
என் வீட்டிலும்!!
ஒகே...
பதில் பிடிச்சிருக்கு.
கேள்வி குழப்புகிறது
பசியில் இருக்கும் எனக்கு.//
பசியாறும் மனம்
புசியாதோ அடுத்தவர்
பசியை...
அருமை பா.ரா
பசிக்கும் விருந்துக்கும் நடுவில் எத்தனை இருக்கிறது? அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.
பெரியம்மா மாதிரி உறவுகள் நிறைய உண்டு ஒரு காரணம் மனமில்லாதது மறுகாரணம் பணமில்லாத பற்றாக்குறை...
தீர்ந்தது என் கவிதைபசி அருமை அண்ணா.. :)
நானே அந்த குழந்தையாக இருந்திருக்கிறேன். :-)
அருமை
என் வீட்டிலும்
**************
எனக்கும்.
அருமை.. மிகவும் பிடித்திருக்கிறது..
பெரும்பாலும் அய், நான் கூட என்றும், ஏன் எனக்கு இப்படித் தோன்றவில்லை என்ற ஏக்கமும் உண்டாக்குகின்றன உங்கள் கவிதைகள்.
இரண்டுமே அழகான உண்மைகள்...
ம், பா.ரா.வரிகள். என்ன சொல்ல...
எத்தனை கூர்மையான கண்கள் உங்களுக்கு ராஜாராமா.... அதே போன்ற பேனாவும்..
வித்யா
வழக்கம் போலவே !!! என்னத்த சொல்ல..!!!
"விரதம்" சிறுகதையில் ஆறேழு பக்கங்களில் நாஞ்சில் நாடன் சொல்ல வந்தததை
ஆறு வரிகளில் சொல்லி விட்டீர்கள்.அதான் பா.ரா !!!
enakku pasikkuthu...
///வராத விருந்திற்கென
சோறுக்கும் குழம்பிற்கும்
கொல்லையில் ஓடும் குழந்தைகள்...///
///பதில் பிடிச்சிருக்கு.
கேள்வி குழப்புகிறது
பசியில் இருக்கும் எனக்கு///
எங்களை அடிச்சி விருந்து வக்கிறதே வேலையாப் போச்சு உங்களுக்கு.
நல்லவேளை மக்கா! போட்டிக்கு ஒரு கவிதைதான் அனுப்பனும்னு விதி வச்சிட்டாங்க. இல்லேன்னா இருபதும் உங்க நிழல் தேடி தானாவே வந்திருக்கும்.
நன்றாக இருக்கிறது பா.ரா.
இது மாதிரி நானும் நிறைய முறை பிடிச்சு, குழம்பினதுண்டு.
பா.ரா...
தனி முத்திரையாக இருக்கிறது
பசிக்குது தலைவா !
:)
சூப்பர் கவிதை...
//வராத விருந்திற்க்கென
சோறுக்கும் குழம்பிற்கும்
கொல்லையில் ஓடும் குழந்தைகள்...//
ரொம்ப நல்லா இருக்குங்க இதனோட பாதிப்பு.
உண்மை!! நல்லா இருக்கு அண்ணே!!
தனித்துவமான மொழிநடை, வடிவ நேர்த்தியில் அழகியல் என்று மிளிர்கிறது எங்கள் பா.ராவின் கவிதைகள்.
//சாப்பிடுடா எனவும்
எங்க வீட்டிலெல்லாம் சாப்பிடுவீங்களா?
எனவும் அடுத்தடுத்து
கேட்கிறாள் பெரியம்மா.
பதில் பிடிச்சிருக்கு.
கேள்வி குழப்புகிறது
பசியில் இருக்கும் எனக்கு.//
யாதார்த்தம்,ஆனால் உண்மை பா.ரா.
கவிதை அருமை.
பசி இல்லாத மனிதகுலம் என்ன ஆகும்? :)
சாப்பிடுடா எனவும்
எங்க வீட்டிலெல்லாம் சாப்பிடுவீங்களா?
எனவும் அடுத்தடுத்து
கேட்கிறாள் பெரியம்மா.
:))))
என்னத்த சொல்ல? முகத்திலறைகிறது நிதர்சனம்.
பட்டைய கிளப்புங்க பா.ரா !
ஆகா!!
arumai.........
naanum thaandiya tharunam athu..!!
:)
சொல்ல வந்த விடயத்தை நறுக்கு தெரித்த மாதிரி எடுத்துவைத்த விதம் அழகு
:)
பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்பார்கள். ஆனால் இதை எல்லாம் உன்னிப்பாய்க் கவனித்து கவிதை வேறு சிலர் வடிக்கிறார்கள் பாருங்கள். இதுக்கு என்ன சொல்வது?
ரசிக்கும்படியான, வலியான வரிகள் பா.ரா.
வாழ்த்துக்கள்
கவிப்பசியாறினேன்
விஜய்
//சாப்பிடுடா எனவும்
எங்க வீட்டிலெல்லாம் சாப்பிடுவீங்களா?
எனவும் அடுத்தடுத்து
கேட்கிறாள் பெரியம்மா.
பதில் பிடிச்சிருக்கு.
கேள்வி குழப்புகிறது
பசியில் இருக்கும் எனக்கு.//
இது... பொறுளாதாரத்திற்கும்... தன்மானத்திற்கும் உள்ள இடைவேளி.
நான் பசிக்கு கேட்டு சாப்பிடுகிற ஆளுங்க.... கவிதை நல்லாயிருக்கு.
மனைவி குழந்தைகளுடன்
அமர்ந்து சாப்பிட்டு
கொண்டிருக்கிறீர்கள்.
வந்து விடுகிறேன் நான்.
சாப்பிட சொல்லாமல்
இருக்க முடியாது உங்களால். அவர்களுக்கும் தர்மசங்கடம். நமக்கும் தர்மசங்கடம். அளவாக சமைக்கிறவர்கள் பாவம் என்ன செய்வார்கள்
kutty kavithai super
அருமை..மறுபடியும் அருமை..
ரசித்தேன்...
அடுத்த கவிதை தொகுப்பு சீக்கிரமாய் வெளிவர வாழ்த்துக்கள்.. :-))
அண்ணா பசியோட இருக்கேன் உங்க கவிதை பசியைக் கூட்டுது.
தைக்கவில்லை
superb..கடைசி வரிகளில் யதார்த்தம் அப்பட்டமாக...! மிக மிக அருமை பா ரா..!
அருமை ராஜாராம், இப்படியெல்லாம் கவிதையெழுத வாய்த்திருக்கிறது உங்களுக்கு. மிகவும் பிடித்திருக்கிறது.
கவிதை உங்களுக்கு வாய்த்திருக்கிறது.. சின்னச் சின்ன நிகழ்வுகளில் கூட அது புலப்பட்டு வடிவமாகி விடுகிறது..
கவிதை உங்களுக்கு வாய்த்திருக்கிறது.. சின்னச் சின்ன நிகழ்வுகளில் கூட அது புலப்பட்டு வடிவமாகி விடுகிறது..
கவிதை நல்லா இருக்குங்க அண்ணா
அறையுது கவிதை!
-கேயார்
தத்ரூபமான கவிதை. அருமை.
நல்லாருக்குங்க ..
ப்ரியங்கள் நிறைந்த என்,
மணிஜி,
வசந்த்,
சங்கர்,,
ராமலக்ஷ்மி,
தமிழ்,
சிவாஜி,
முரளி,
வேல்கண்ணா,
வானம்பாடிகள் பாலா சார்,
கௌரி,
பாலாஜி,
விக்னேஷ்,
வித்யா,
செய்யது,
நைனா,
நவாஸ்,
ஸ்ரீ,
கல்யாணி,
கதிர்,
ராஜன்,
அசோக்,
mrs.dev,
சபிக்ஸ்,
சரவனா,
குன்றா,
RVC,நல்வரவு மக்கா,
அமித்தம்மா,
ஜெனோ,
கலை,நல்வரவு மக்கா,
ரசிகை,
அடலேறு,
நேசா,
ஜெஸ்,
விஸ்வா,
விஜய்,
மண்குதிரை,
கருணா,
தமிழ் உதயம்,
கேபில்ஜி,
வினோ,
ராகவ்,
ஹேமா,
பாலா,
ப்ரியா,
வாசு,
ரிஷபன்,
லாவண்யா,
கேயார்,
கவிதும்மா,இப்ப இப்படி கிளம்பிட்டியா?
பலாபட்டரை,
எல்லோருக்கும் நிறைய அன்பும் நன்றியும் மக்கா!
Post a Comment