(picture by CC licence, thanks Just Taken Pics' )
தவளை கூச்சலில்
விழித்துக்கொண்டு
தாழ்வாரத்தில் சொட்டும்
மழை போல
யாருக்கும் தெரியாது அழாவிடில்
எதற்கு தோற்கணும் காதலை?
நீ நேசித்த
மனுஷியின் கதையையும்
மனைவி நேசித்த
மனுஷனின் கதையையும்
பேசாமல் நிறையுமா
புணர்தலின் பின்னிறைவு சாந்தி?
சைக்கிள் முன்னிருக்கையில்
அமர்த்திய மகளின் வெறுங்கழுத்தில்
சவரம் செய்யாத நாடி கொண்டு
கூச்சம் செய்ய இயலவில்லையெனில்
என்ன பயன் பெண்ணை பெற்று?
கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?
பேரனின் சிறுநீர்
நனைக்காத நெஞ்சுக்குழி
இருந்தென்ன மயிறு வெந்தன்ன?
ஓவியமான
ஒரே ஒரு வாழ்வில்
உயிருக்கும் உயிருக்கும் கூட
கொடுக்கல் வாங்கல்
இல்லை எனில்...
ரசம் கரைக்க ஆகுமாடா
நம் அடுக்குப்பானை புளி?
விழித்துக்கொண்டு
தாழ்வாரத்தில் சொட்டும்
மழை போல
யாருக்கும் தெரியாது அழாவிடில்
எதற்கு தோற்கணும் காதலை?
நீ நேசித்த
மனுஷியின் கதையையும்
மனைவி நேசித்த
மனுஷனின் கதையையும்
பேசாமல் நிறையுமா
புணர்தலின் பின்னிறைவு சாந்தி?
சைக்கிள் முன்னிருக்கையில்
அமர்த்திய மகளின் வெறுங்கழுத்தில்
சவரம் செய்யாத நாடி கொண்டு
கூச்சம் செய்ய இயலவில்லையெனில்
என்ன பயன் பெண்ணை பெற்று?
கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?
பேரனின் சிறுநீர்
நனைக்காத நெஞ்சுக்குழி
இருந்தென்ன மயிறு வெந்தன்ன?
ஓவியமான
ஒரே ஒரு வாழ்வில்
உயிருக்கும் உயிருக்கும் கூட
கொடுக்கல் வாங்கல்
இல்லை எனில்...
ரசம் கரைக்க ஆகுமாடா
நம் அடுக்குப்பானை புளி?
56 comments:
நம்ம நேசன் சொன்ன மாதிரி 'ஆள சாகடிக்கறதே வேலையா போச்சு'
கவிதை அருமை
3,4,5 - அங்கதான் நிக்கறீங்க சித்தப்ஸு.. மிகவும் அருமை... ருசித்தேன்.
//சைக்கிள் முன்னிருக்கையில்
அமர்த்திய மகளின் வெருங்கழுத்தில்
சவரம் செய்யாத நாடி கொண்டு
கூச்சம் செய்ய இயலவில்லையெனில்
என்ன பயன் பெண்ணை பெற்று?
கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?//
மக்கா! ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல.
எத சொல்ல எத விட. எப்புடித்தான் எழுதிரீங்களோ பா.ரா. பிரமிப்பா இருக்கு.
//சைக்கிள் முன்னிருக்கையில்
அமர்த்திய மகளின் வெருங்கழுத்தில்
சவரம் செய்யாத நாடி கொண்டு
கூச்சம் செய்ய இயலவில்லையெனில்
என்ன பயன் பெண்ணை பெற்று?//
ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே..
ஆறு கவிதைகளும் அருமை.
//கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?//
இருப்பினும் எனக்கு பிடித்த கவிதை இதுதான்.
மகாப்பா, இந்த பதில்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தேடிகிளம்பி விட்டது மனசு. ஆக உங்களுக்கு வெற்றிதான்.
ரொம்ப நாளாச்சுங்க இந்த மாதிரியெல்லாம் யோசிச்சி..
:-)
இரண்டாவது பேரா அருமை.. நிறைவாய் வாழ்க்கை துணை பெற்றவர்களுக்கு மட்டுமே அமையும் இம்மாதிரியான பின்னிரவு.
//சைக்கிள் முன்னிருக்கையில்
அமர்த்திய மகளின் வெருங்கழுத்தில்
சவரம் செய்யாத நாடி கொண்டு
கூச்சம் செய்ய இயலவில்லையெனில்
என்ன பயன் பெண்ணை பெற்று?
//
உச்சி மோந்து பார்ன்னுவாங்களே அதுபோல்,,
//கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?
//
ஐயா....
//பேரனின் சிறுநீர்
நனைக்காத நெஞ்சுக்குழி
இருந்தென்ன மயிறு வெந்தன்ன?//
பாட்டையா...
எளிமையா மிகவும் அருமையா இருக்குங்க பா.ரா.
ம்ம்ம் என்னன்னு சொல்ல. வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து போய் விட்டதுங்க.
உங்கள் பேனாவை என்னிடம் கொடுத்து விடுங்கள்.
-அன்புடன்
வித்யா
எப்பவாவது பிடிக்கத்தான் போகிற உங்கள் கைகளை இப்பவே பிடிசுக்கிரனும் போல் இருக்கு ராசா.. என் ராசா பையா!(கண்டுக்கவேணாம்..உணர்சிவசபட்டால் அப்படித்தான் நான்!)
கவிதை வரிகள் அருமை!
-கேயார்
ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு பா.ரா.:)
நான் ரசித்தவரிகள் என்று சொல்லவேண்டும் என்றால் ஒவ்வொறு வரியயும் சொல்லவேண்டும் உங்கள் கவிதைக்கு முலுதாக கருத்துசொல்வதாக இறுந்தால் அதர்க்கு ஒரு பதிவு தான் போடனும் .சூப்பர் என்று ஒரு வார்த்தையில் சொல்ல மனம் வரவில்லை .வாழ்த்துக்கள்
மிகவும் ரசித்தேன்!!நல்ல வரிகள்!!
மாம்ஸ் உம்ம கையால ஒரு குட்டு வைங்க அப்பவாவது இந்த மரமண்டைக்கு
உரைக்குதான்னு பார்க்குறேன்
அருமைன்னு ஒத்த வார்த்தை சொல்லி . என்னத்த சொல்ல போங்க..................
காதலில் துவங்கி பேரன் பார்க்கும் பருவம் வரை
மழை ஈரம்
புணர்ச்சி திரவம்
கழுத்து முத்தம்
கண் பொத்துகையில் படும் உள்ளங்கை வேர்வை
பேரனின் சிறு நீர்
நீராலானது உலகும் வாழ்வும்
என்பதை சொல்ல வாய்த்திருக்கிறது
பா.ரா உங்களுக்கு
off the record :
@ கண்ணன் - ரமேஷ்
எவ்வளவு ரசனையான மனுஷங்கையா நீங்க
படம் கூட
just taken pics !!!
இந்த வரிகளை போலவே.....
இயந்திர வாழ்க்கையின் வெறுமையை இதைவிட வேறுயார் அழுத்தமாக சொல்லிவிட முடியும்
வித்யா கேட்டது பேனாவை
நான் கேட்பது தங்களது சிந்தனைகளை
தந்துவிடுங்கள் பா.ரா
வாழ்த்துக்கள்
விஜய்
ரசித்தேன். எல்லாமே கேள்வியாய் நின்று சிந்திக்க வைக்குது. கலக்குங்க.
எவ்ளோ அருமையான கவிதை, ரொம்ப ரொம்ப ரசித்தேன். அதிலும் முதல் மூன்று பத்திகள் மிக மிக அருமை.
நன்றி பா ரா
ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க
புது புத்தக வெளியீட்டு க்கு வாழ்த்து மக்கா
அம்மா காரைக்குடியில் நான் சென்னையில்
எனவேஅவங்க இங்க வரும்போதுதான் கலந்து கொண்டு ஆரம்பிக்கணும்
கேள்விதான் பதில்
அனைத்துமே அருமை
எப்படி எல்லா நிகழ்வுகளையும் மென்மையாக படம் பிடித்து எழுதுகிறீர்கள் மக்கா
//கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?//
ஆகா,.... அருமைங்க நண்பா! எப்பொழுதுபோல நல்ல நல்ல வரிகளுடன் நல்ல கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றிபா,... புதிய புத்தக வெளியிடலுக்கு வாழ்த்துகள்..... இன்னும் தொடரட்டும்...
அண்ணா அண்ணான்னு சொல்லிட்டு அன்பா ஒரு முத்தம் தராட்டி நான் என்ன தங்கச்சி.காத்தில அன்பு கலந்து ஒரு முத்தம் தரேன் வாங்கிக்கங்க அண்ணா.
அண்ணா அஷோக்குக்கு வயித்தெரிச்சல்.பாருங்க.
மிக அழுத்தமான வரிகள். அருமை பா.ரா. வாழ்த்துக்கள்
பாராட்டாமல் போனால் நெஞ்சுக் குழி வேகாது அய்யா.. சுரீர் கவிதை.. படிச்சதும் பிடிச்சிருச்சு
எல்லாமே நல்லா இருந்தா எத எடுத்து காட்டுவது? எல்லாமே சூப்பர்..
வாழ்வின் அழகியலை, பாசத்தை எவ்வளவு அழகாக கவிதையாக்கி இருக்கீறிர்கள். வாழ்க்கை நேசத்துக்குரியது என்பதை இம்மாதிரியான கவிதைகள் ஆணித்தரமாக நிருபிக்கின்றன.
அருமை. வைர வரிகள்.
வாழ்த்துக்கள் உங்கள் கவிதை புத்தகத்திற்கு.
அம்மம்மா விழி அசையாமல் ஒரேமூச்சில் விழுங்கிக்கொண்டேன் அத்தனையும். மிக அருமை
நம்ம பா.ரா. வுக்கு மட்டும் எங்கிருந்துதான் கிடைக்குதோ!! அருமையா இருக்கு.
பிரம்மாதம் ராஜாராம்
எல்லாம் அருமை.
//கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?//
ரொம்ப ரொம்பப் பிடித்ததுங்க.
பாசாங்கு செய்யாத வரிகள்.அனுபவத்தை
கிழித்து வெளிவரும் கவிதைகள்.
சித்தப்சு எனக்கு பொறாமையாயிருக்கு... இணையத்தல அதிக மனசுகல கொள்ளையடிச்சவங்க நீங்களா இருப்பீங்க போல.. சுத்தி போட்டுக்குங்க.. (அப்படியே அந்த சொத்து..) :)))))
இந்தக்கவிதைகளின் சுட்டு விரல் பற்றிக்கொண்டு அப்படியே காலாற செவக்காட்டுக்குள் நடந்துபோகிற உணர்வுகளே வந்து வந்து போகிறது. ஒற்றையடிப்பதையில் முகத்தில் வருடும் மரக்கொழுந்தின் சுகமான இம்சைப்போல
நினைவுகள் நெருடுகிறது. எல்லோருக்குள்ளும் பெய்துகொண்டிருக்கிறது தாழ்வாரத்து மழை.ஆனால் பாராவிடம் மட்டுமே கவிதையாய்ச் சிக்கிக்கொள்கிறது. இப்படித் தகப்பன்களை பிரிந்திருக்கிற செல்லக்குட்டிகள் உலகக் கவிதைகளைக் கண்ணுக்குள் ஒளித்தல்லவா வைத்திருக்கும்.
ஓவியமான
ஒரே ஒரு வாழ்வில்
உயிருக்கும் உயிருக்கும் கூட
கொடுக்கல் வாங்கல்
இல்லை எனில்...
ரசம் கரைக்க ஆகுமாடா
நம் அடுக்குப்பானை புளி?//
ரசனை இல்லாத வாழ்வு
இருந்தும் ரசம் வைக்க ஆகாத
புளியைப்போல்தான்.
பிடிச்சிருக்கு மக்கா
இந்த கொடுக்கல் வாங்கல்...
படிப்பவர்களை கண்கலங்க வைக்காம போறதில்லைன்ற முடிவோட எழுதறீங்களா பா.ரா.
நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியுமாய் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு உணர்வுகளைத் தந்தது.
தொடரட்டும் :)
அண்ணா வார்த்தையே கிடைக்கல. கண் நிறைய தண்ணிதான் நிக்குது. ரொம்ப அருமையா இருக்குண்ணா.
அற்புதம். அன்பு அனைவரும் பெற நினைக்கிற, தர நினைக்கிற ஒன்று. அது உங்கள் எழுத்தில் நிறைந்திருப்பதால் அனைவரும் நெகிழ்கிறார்கள். வாழ்த்துக்கள்.
உயிர்ப்புள்ள வரிகள் ! இந்நாட்களில் எளிதில் எங்கும் காணக் கிடைப்பதில்லை பா.ரா ...
இந்திர ஜாலங்களற்ற !
கருந்துகில் போர்த்தாத !
நனவின் நிதர்சனம் .....
இதுகாறும் பிறக்காத மகளுக்காய் ஏங்கச் செய்கிறது இரு வரிகள் .....
மயக்கம் விலகாமல்
ராஜன்
மிக அழகான பதிவு பா.ரா... நிதர்சனமான நிஜமான வரிகளில் வியக்க வைக்கிறீர்கள்... எப்படி இயல்பான சொற்களில் இத்தனை ஜாலம்? நுண்ணுணர்வுகளில் பின்னப்பட்ட கவிதைகள்... ராஜன் மயங்கியதில் வியப்பேதுமில்லை. உங்கள் பக்கத்தில் எனது முதல் பின்னூட்டம் இது... தொடருங்கள். வாழ்த்துக்கள்
unga kavithai kolluthunna.......
nesamithran sir pinnoottam innum kolluthu...
moththaththil.......
saahadikkirathey velaiya pochu:)
உயிர் தொடுகிறது ஒவ்வொரு கவிதையும்...
உறவைகளை உன்னதப்படுத்துவதில் உங்கள் கவிதைகளுக்கு நேர்த்தி அதிகம் அண்ணா...
அப்படியே கவிதையை காட்சியாக கற்பனை செய்யும் அளவில் ஒன்றிவிட செய்கிறது எனச் சொன்னால் மிகையாகாது...
அப்பாவா அப்புறம் பாத்துக்கலாம் , இருக்கும்போதே எங்க அப்பா கண்ணப் பொத்தி விளையாடிரனும் இன்னொரு தடவ பா.ரா ...
நினைவுகளை கிளறுகிறது வார்த்தைகள் ..
குழந்தைகளின் ஸ்கூல் வேலையாக ஒரு வாரமாய் அலைச்சல். அதனால் தளம் வரத் தாமதமாயிற்று. வந்து பார்த்தால் அதற்குள் மிக அருமையாய் பல படைப்புகள். போட்டிக் கவிதையில் வெற்றிபெற வாழ்த்துக்கள் சித்தப்பா.
கேள்விதான் பதில் கவிதை அழகான ஓவியம்.
கவிதை அருமை
எல்லாமே அழகு தலைவரே
mithran sir-in munnuraiyudan oru book veliyidureengalaame...
santhosham..
vaazhththukalum kooda!
:)
ketkanumnu ninachen.......
rajaram sir...,
appadiyenna karuvela maraththin meethu(mara nizhalin meethu) kaathal ungalukku...?
:)
ketkanumnu ninachen.......
rajaram sir...,
appadiyenna karuvela maraththin meethu(mara nizhalin meethum) kaathal ungalukku...?
:)
தலைவரே...உங்களைத்தேடி இக்கவிதைகளை படிக்கும்போது வரும் பிரமிப்பே தனிதான்....
அன்பு பாரா,
ஊர் கூட்டி அழுதகதை என் காதல். தோத்த காதலை போஸ்டர் போட்டு வேஷம் கட்டுனது எனக்கு காதலில் தோத்ததை கவுரமாய் இருந்தது. பெரும் ஒப்பாரி, கூட்டுக்குரலில் என் காதலை எல்லோருக்கும் புணரக்குடுத்தது போல இருக்கிறது உங்கள் கவிதையின் முதல் பத்தியை படிக்கிற போது. ரகசிய அழுகை..தோற்பதிற்கான ஆசையை மெல்கிறது பொக்கை வாயில்.
எல்லோருக்கும் வாய்க்குமா இது போல புரிதல் நிறைந்த உறவுகள்.. எல்லோரும் சொல்வார்களா இந்த ரகசிய பதுக்கல்களை... நினைவுகளில் செருமி வெறும் புகைச்சல் இருமலாய் இரவைக்கிழிக்காதா? புரிதல் நிறைந்த உறவுகள் பாக்கிய சிந்துகள் பாரா.
மகள், ஒரு அற்புதமான உறவு பாரா... மஹாவாய் இருந்தாலும், சுவர்ணாவாய் இருந்தாலும்...மகள்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள்... இந்த அப்பாக்களை பாருங்களேன்... இவர்களும் அப்படியே மழைக்கால பாப்பாத்திகள் மாதிரி மஞ்ச மஞ்சளாய்...
இந்த மூன்றும் எனக்கும் வெளியே முளைத்து துருத்துகிறது, கொத்து கொத்தாய் உறவுகளை சுமந்து கொண்டு.
அன்புடன்
ராகவன்
இந்த கவிதையை நான் எப்படி மிஸ் பண்ணேன் ??
அதிகாலையில் தூக்கக் கலக்கத்தில் இருந்த என்னை தட்டி எழுப்பி நிமிர்ந்து உட்கார வைத்தது இக்கவிதை.
ஒரு ரேஞ்சு !!!
//கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னையா தகப்பன் நாம்?//
மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை.
முதலில் மகனிடமும்,பின் பேரனிடமும்
இந்த விளையாட்டு தொடர்கிறது.
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
மிகுந்த உற்சாகமும்,நன்றியும் மக்களே!
Post a Comment