Sunday, December 20, 2009
ரிசல்ட்
(Picture by CC licence, thanks Tetsuro)
ஒன்று
கரி எண்ணையில் தொட்டு
வெறும் நம்பர் நம்பராக எழுதியிருந்தது
ஆஞ்சேநேயர் கோயில்
கல்மண்டபத்தில்.
பார்த்துக்கொண்டு
சும்மா போக மனசு வரவில்லை.
நம்பர்களைவிட
பிஞ்சு விரல்களை.
அக்கரி எண்ணெய் தொட்டு
கடவுளாகி எழுதினேன்.
"எல்லோரும் பாஸ்"
ரெண்டு
ஜாதகம் பார்த்துட்டு
லெட்டர் போடுறோம் என்று
போனார்கள் வந்தவர்கள்.
கண்ணாடி பார்த்தபடி
கழட்டி கொண்டிருந்தாள்
ஜோதியக்காவின் கம்மலையும்
சொந்தக் கண்ணீரையும்.
மூன்று
பரிசோதனையில்
பாசிட்டிவ் என்றார்கள்.
குழந்தையின் வாழ்வு
நெகட்டிவ் ஆனது.
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
கழட்டி கொண்டிருந்தாள்
ஜோதியக்காவின் கம்மலையும்
சொந்தக் கண்ணீரையும்.]]
செம :(
--------------
குழந்தையின் வாழ்வு
நெகட்டிவ் ஆனது.
வாழ்வின் எதார்த்தம் தானே மக்கா
எல்லா கவிதையும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு....
வாழ்த்துக்கள்...
இரண்டாவது கவிதை நல்லா இருக்கு....!!!
முதலாவது ரொம்ப பிடிச்சிருக்கு
நம்பிக்கைக்காக
இரண்டும் மூன்றும் கூட
அக்கரி எண்ணெய மறக்காத உள்ளம்..
மகாப்பா, முதலிரண்டும் உங்க டச், அதிலும் இரண்டாவது நச்.
மூன்றுமே ரொம்பப் பிடித்திருக்கின்றன.
ஆனாலும் முதலாவது சற்று கூடுதலாய்.
!!!!!
பாருங்க எத்தன நாளா பாக்கறோம்..
உங்களுக்குதான் சொல்ல வருது இவ்ளோ அழகா.. SUPER.::))
///பரிசோதனையில்
பாசிட்டிவ் என்றார்கள்.
குழந்தையின் வாழ்வு
நெகட்டிவ் ஆனது./// .................சோகமான உண்மை.
கவிதைகளாக இருக்கு மூன்றும்.
முதல் ரெண்டும் ரொம்பவும் பிடித்தன.
மூன்றாவது .. ஏன் தலைவா அவ்ளோ எதிர் மறை சிந்தனை ?
எல்லாமே அருமை
முதல் கவிதை - விவரிக்க முடியாத ஆனந்தக் கொந்தளிப்பை அள்ளித்தந்துவிட்டுச் சென்றுள்ளது.
பா.ரா. அண்ணே.. அனுபவக்குறிப்பேட்டை கவித்துவமா மாத்துற கலையில உஙளை மிஞ்ச இப்போதைக்கு யாரும் வரமுடியாது... ரொம்பப் பிடிச்சிருக்குது.
===============
மூன்றாவது கவிதை போன்ற சோதனை முயற்சிகள் வேண்டாம் என்றுத்தான் தோன்றுகிறது ;(
இதை எல்லாரும் பார்த்திருக்கலாம் .. ஆனா இதை உங்களுக்கு எப்படி கவிதையாக்க தோணியது..
பா.ரா வுக்கே வெளிச்சம்.. வாழ்த்துக்கள் அண்ணா... :))
ஒரு நாள் நானும் 'அண்ணன்' மாதிரி கவிதை எழுதிடுவேன்.
அண்ணன் மாதிரி வாழ்கையின் சுவையை ருசித்து சாப்பிடுவேன்
--வித்யா
ஒன்றுக்கும்
மூன்றுக்கும்
இரண்டு..
வித்தியாசம்
மூன்றுமே பரிட்சைதான்
நமக்கு பரிச்சையமான
பரிட்சை....
அருமை மக்கா...
(சில சமயங்களில் உங்க பின்னோட்டமும்கூட...)
அழகான வரிகள் பா.ரா.
நேற்று ஈரோடு பதிவர் சந்திப்பில் நண்பர் அகநாழிகை வாசுதேவன் உங்கள் புத்தகத்தை எனக்கு அன்போடு கொடுத்தார். நள்ளிரவு வீடு வந்ததும் அந்த புத்தகம் உங்களை மீண்டும் நினைவுபடுத்தியது. விரைவில் படித்துவிட்டு வருகிறேன்.
அன்புடன்
ஆரூரன்
//ஜாதகம் பார்த்துட்டு
லெட்டர் போடுறோம் என்று
போனார்கள் வந்தவர்கள்.
கண்ணாடி பார்த்தபடி
கழட்டி கொண்டிருந்தாள்
ஜோதியக்காவின் கம்மலையும்
சொந்தக் கண்ணீரையும்.//
ரொம்ப பாவம் அவங்க அப்பு!
சின்ன சின்ன விஷயங்களையும் எவ்வளவு நுணுக்கமா எழுதுறீங்க. வழக்கம் போலவே ..............
நல்லாயிருக்கு.
ரொம்ப நல்லாருக்கு...
ஒன்று
புன்னகையுடன் ரசிக்க வைத்தது.
இரண்டு
நடுத்தட்டு வர்க்கத்து மனிதர்களை காட்டி செல்கிறது.
மூன்று.
இது.............. வேண்டாம் அண்ணா. ரொம்ப வலிக்குது.
:)
:(
:(
மூன்றும் நல்லாயிருந்தது சித்தப்ஸ்
முதல் கவிதை பிடித்திருக்கிறது.
இரண்டாவது கவிதையைப் போலப் பல கவிதைகள் எழுதப் பட்டு விட்டன என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?
மூன்றாவது கவிதை எளிமைப் படுத்தப்பட்ட முரண் மூலம் கவிதையாகப் பார்க்கிறது. ஆனால் ஆகவில்லை.
கவிதைக்கான புகைப்படங்களைத் தேர்வு செய்வதற்காகவே சகோதரர்கள் ரமேஷ், கண்ணன் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். எத்தனை தேர்ந்த ரசனையாளர்கள் அவர்கள். கவிதையும் வழக்கம்போல சிறப்பு.
முதல் கவிதை நல்லாயிருக்கு.
இரண்டும் மூன்றும் ரொம்ப பிடிச்சிருக்கு
அன்பு பாரா,
முதல் மரியாதை படத்தோட ஆடியோ டேப்பில் பாரதிராஜா, ஆர்.செல்வராஜ் பற்றி ஒன்று சொல்லி இருப்பார் அது உங்களுக்கும் பொருந்தும்னு நெனைக்கிறேன். அதாவது 'வாழ்க்கையை எல்லோரும் எழுத்து கூட்டி வாசிப்பதற்கு முன்னால் அதை மனப்பாடமே செய்து விட்டவன்" னு. முதல் கவிதையில் உங்களின் கடவுள் அவதாரம், உங்க மனச காட்டுது.. எல்லோரும் பாசாகனும்னு.. இப்போ புதியதாய் முளை விட ஆரம்பித்துள்ள கல்வி தரங்கள் பாஸா, பெயிலா ன்னு இல்லாம எல்லோருக்குள்ளும் இருக்கிற திறனை வெளிக்கொண்டு வர முயல்கின்றன.. வெற்றி தோல்விகளே ஒரு விதமான வேஷம் தானே எல்லோருக்கும்...
இரண்டாவது கவிதை எல்லா கீழ் நடுத்தர, மற்றும் ஏழை குடும்பங்களில் காண கிடைக்கிற ஒன்று... ஜோதி அக்காக்களும் தான் இரவல் வாங்கிய காலத்தை நினைத்து எத்தனை முறை கேட்டாலும் தயங்காமல் தருவார்கள். சில சமயங்களில் பல முறை கேட்க வேண்டிய நிலையும் வரலாம், கண்ணில் கருவளயம் கண்ட என் சகோதரிகளுக்கு. அருமையா இருக்கு... பாரா!!
மூன்றாவது கவிதை மற்ற கவிதைகளின் முன்னால் கொஞ்சம் மூசு கம்மியாக இருக்கிறது....
மாறா அன்புடன்
ராகவன்
அருமையான சிந்தனை.
ரொம்ப பிடிச்சிருந்தது.
நான் சொல்ல நினைப்பதை என் வலைப்பக்கம் வந்து பாருங்க.
ஒன்றும் இரண்டும் எக்கச்சக்கமா இருக்கு மக்கா.
//கண்ணாடி பார்த்தபடி
கழட்டி கொண்டிருந்தாள்
ஜோதியக்காவின் கம்மலையும்
சொந்தக் கண்ணீரையும்.//
கண்ணீரை வரவழைக்கும் வரிகள்...
அழகான கவிதைகள்..
முதல் கவிதை எழுந்ததாகவும் மற்றவை எழுதப் பட்டதாகவும்
சென்ஷி மற்றும் ஜ்யோவின் கருத்தே எனதும்
:)
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு பாரா அவர்களே. கலக்கல்ஸ்
முதல் கவிதை வெறும் வாசிப்பு அல்ல.. அன்பின் வெளிப்பாடு
//அக்கரி எண்ணெய் தொட்டு
கடவுளாகி எழுதினேன்.
"எல்லோரும் பாஸ்"//
super.super.
சூரியன் ஒளி கொடுக்கிறது.
அரசியல்வாதி செய்த ஊழல்.
இது மாதிரி பா.ராவின் கவிதை சூப்பர். இனிமேல் சொல்ல வேண்டாம்னு பார்க்கிறேன்.
1.அற்புதம்.
2.சோகம் (முதலில் ஜோதிகான்னு படிச்சுட்டேன். அப்படியும் அர்த்தம் மாறலை)
3.சமூகம்
எல்லாமே அட்டகாசம் ரசித்து படித்தேன்..;)
எல்லாமே சும்மா நச்சுனு இருக்கு மக்கா அருமை
ஒன்று
மிக
நன்று
ஹிஹி நானும் கவிதை எழுதிப் பழகுகிறேன்.
மூன்றும் அருமை. அதிலும் ஒன்று எனக்கு மிகப் பிடித்தது.
ஒரு விஷயத்தை நாங்கள் பார்ப்பதற்கும், நீங்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் பார்த்தால்... அது ஒரு விஷயமே இல்லை. நீங்கள் பார்த்தால் அது கவிதையாய் மலர்கிறது.
முதல் கவிதை மனதை தொட்டது
மூன்றாவது புகுத்தப்பட்டது போல உள்ளது மக்கா
வாழ்த்துக்கள்
விஜய்
கவிதைகளை ரொம்ப ரசித்தேன், ரெண்டாவது என்னை மிக மிக பாதித்தது.
சாதாரண விஷயத்தைக் கூட நீ பார்க்கும் போது ......
கவிதையாக மாற்றுகிறாய்..
எத்தனை முறை படித்தாலும் அலுக்காத விஷயம் கவிதை தான்...
சாதாரண விஷயத்தைக் கூட நீ பார்க்கும் போது ......
கவிதையாக மாற்றுகிறாய்..
எத்தனை முறை படித்தாலும் அலுக்காத விஷயம் கவிதை தான்...
@ஜமால்
ஜமால் மக்கா,நன்றி!
@கமலேஷ்
நன்றி, கமலேஷ்!
@செய்யது
மிக்க நன்றி செய்யது!
@ஜோதி
நன்றி ஜோதி!
@வசந்த்
நன்றி வசந்த்!
@முரளி
நன்றி முரளி!
@ராமலக்ஷ்மி
நன்றி சகா!
@கௌரி
நன்றி கௌரி!
@பலாபட்டரை
நன்றி மக்கா!
@சித்ரா
நன்றிங்க சித்ரா!
@லாவண்யா
நன்றி லாவண்யா!
@மோகன்
நன்றி மோகன்,எதிர் மறையா அது? :-)
@டிவிஆர்
நன்றி டிவிஆர்?
@சென்ஷி
மிக சந்தோசமும்,கைக்குள் சிக்காத சித்திரங்களும் சென்ஷி.நன்றி!
@சிவாஜி
மிக்க நன்றி சிவாஜி.!
@வித்யா
ஒரு நாள் இல்லை ஒரு நாள் அக்கா மாதிரி சாதாரணமாய் சகலமும் எழுத தாங்க என்னை பெத்த அப்பு!..
:-)மிக்க நன்றி வித்யா!
@சங்கர்
ரொம்ப நன்றி சங்கரா!
@விஸ்வா
ஆகட்டும் விஸ்வா.மெதுவா வாங்க.நன்றி மக்கா!
@குன்றா
நன்றிப்பு!
@அம்பிகா
நன்றி அம்பிகா!
@அண்ணாமலை
உங்களால்தான் சுருக்கமாய் ஆனால்,அப்போதைக்கு அப்போது பதில் சொல்லணும் என தோன்றியது அண்ணாமலை!மிக்க நன்றியும்,அன்பும்!
@கல்யாணி
நன்றிடா கல்யாணி!
@அசோக்
ஓகே மகன்ஸ்!மிகுதி சந்தோசம்.நன்றியும்!
@சுந்தரா
உனக்காகவே மாற்று கவிதைகள் எழுத தீர்மானம்,சுந்தரா.(மாற்று கவிதைகள் மாற பார்க்கிறது. ஆனால் மாறவில்லை.:-))
மிக்க நன்றி மக்கா.விமர்சனம் இதுவே!
@சரவனா
கேச் பிடித்து கொள்ளுங்கள் ரமேஷ்,கண்ணா,சரவணின் அன்பை!நன்றி சரவனா!
@வேல்கண்ணா
நன்றி வேல்ஸ்!
@ராகவன்
கை குறைந்தது போல இருந்தது ராகவன்.இப்படி மனசு திறந்து பேசி எவ்வளவு நாளாச்சு?மிக்க நன்றி ராகவன்!
@அக்பர்
ரொம்ப நன்றி அக்பர்!
@நவாஸ்
எக்கச்சக்க நன்றி மக்கா!
@பாலாஜி
ரொம்ப நன்றி பாலாஜி!
@நேசா
மிக்க நன்றி என் பீனிக்ஸ் பறவை!
@உழவன்
ரொம்ப நன்றி உழவரே!
@ரிஷபன்
சந்தோசம்.நன்றியும் அன்பும் ரிஷபன்!
@ஸ்ரீ
சியான்,சீக்கிரம் வர்றேன்.நன்றி ஸ்ரீ!
@பின்னோக்கி
உடல் நலத்தை பாருங்க அப்பா!நன்றி மக்கா!
@வினோ
நன்றி வினோ!
@ஷங்கி,
மக்கா,உங்கள் பின்னூட்டம் பார்க்கிற போதெல்லாம் பெரிய குற்ற உணர்ச்சி எனக்கு.போடா வெண்ணை என்று வருகிறீர்களே.அதில் இருக்கிறீர்கள் நீங்கள்!மிக்க நன்றியும்,உங்களுக்கு பிடித்த நிறைய அன்பும்!
@வானம்பாடிகள் சார்.
ரொம்ப நன்றி பாலா சார்!
@தமிழ்உதயம்
ரொம்ப சந்தோசமும் நன்றியும் மக்கா!
@விஜய்
சரிதான் விஜய்.மாத்திரலாம்.நன்றி மக்கா!
@தெய்வா
டேய்,பயலே..வந்துட்டியா?.முதலில் எழுத தொடங்கு.பாரு அப்புறம் எவ்வளவு எவ்வளவு சந்தோசமுன்னு..நன்றி தெய்வா!
இதுக்குமேல நான் என்னத்தே சொல்லி ????
அதான் எல்லாம் மேலையே முட்டிஞ்சுட்டே
சித்தப்பா... மூன்றும் முத்தப்பா... :-) என் அன்பான வாழ்த்துகள் என் சித்தப்பனுக்கு. :-)
”ஆய்த” எழுத்தில் இரண்டாம் புள்ளிக்கு கனம் அதிகம்...!
@பாலா
தஞ்சாவூர் குசும்பு அதிகம் என்பது உண்மைதான்.உன் கருத்தை சொல்லுயான்னா...மிக்க நன்றி மாப்ஸ்!
@ரோஷ்விக்
பாருங்க மகனே,அசோக்,ராஜவம்சம்,நீங்க,எல்லோருமா பார்த்த வேலை.
நம்மளை இப்போ "சித்தப்பு பிளாக்"என்கிறார்கள்.எப்படியும் சொல்லட்டும் மகனே..நமக்கு இது வரம்!
நன்றி மகனே!
@சத்ரியன்
மாப்ள,அருமையான சுட்டல்!எனக்கும் அதுவே விருப்பம்.ரொம்ப நன்றி மாப்ள!
மூன்று கவிதைகளையும் மிகப் பிடித்திருக்கிறது. குறிப்பாக முதலிரண்டும் என்னவோ செய்கின்றன.
-ப்ரியமுடன்
சேரல்
இரண்டாவது கவிதை நெஞ்சை தைத்தது பா.ரா,
கழட்டி கொண்டிருந்தாள்
ஜோதியக்காவின் கம்மலையும்
சொந்தக் கண்ணீரையும் //
இது மாதிரி சொல்ல உங்களால மட்டும் தான் முடியும்.
நம்பர் கவிதை பிரமாதங்க...
Post a Comment