Wednesday, January 13, 2010

புத்தகச்சந்தையும் ஒரு மனுஷியும்


(picture by cc licence thanks unforth)

புத்தகம் புத்தகமாய்
வாங்கி குமிச்சிருக்காங்க
எங்க பப்புக்கு, பப்பு ஆச்சி.

ந்த கடையில
நெறைய புத்தகம்
இருக்கும் போல.
போனா வாங்கலாம் போல.

னக்கும் கூட தோணுச்சு
ஏன்டா புள்ளைகளுக்கு
புத்தகமே வாங்கி தந்ததில்லைன்னு.

ங்க காலத்துல
ஒரு பப்பு ஆச்சி இருந்துச்சு.
ஒரு ஊர்லன்னு தொடங்கி
கதை கதையா சொன்னுச்சு.

து எங்க காலத்துலேயே
செத்து போச்சு.

48 comments:

தெய்வா said...

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பின்னூட்டம்...
அதுவும் முதலில்...

புத்தகம் படிப்பதற்கும் கதை கேட்பதற்கும் உள்ள இடைவெளியை உன் கவிதை உணர்த்துகிறது....

மகாவுடன் பேசினேன். ரொம்ப சந்தோஷமாயிருந்தது.

பொங்கல் வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//அது எங்க காலத்துலேயே
செத்து போச்சு. //

ம்ம்ம்ம் ஆமாங்க பா.ரா

இனிய திருநாள் வாழ்த்துகள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

சூர்யா ௧ண்ணன் said...

தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

படிச்சிக்கிட்டே வரும்போது திடீர்னு ஜெர்க் ஆகிட்டேன்...அட்லீஸ்ட் உங்க காலத்து பப்பு ஆச்சிக்கு வேற பேராவது வச்சிருக்கலாம்..எனக்குத்தான் கொஞ்சம் திகிலா இருக்கு! ;-)

சீக்கிரம் ஊருக்கு வந்து பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்லுங்க! :-))

சந்தனமுல்லை said...

பொங்கல் நல்வாழ்த்துகள். முந்தைய பின்னூட்டத்திலே சொல்ல விட்டுப்போச்சு! :-)

vasu balaji said...

:). இனிய பொங்கல் வாழ்த்துகள் பா.ரா.

அன்புடன் அருணா said...

பப்பு ஆச்சியைத் தெரியுமாதலால்....எனக்கும் கூட "பக்"னு இருந்துச்சு!

Paleo God said...

பொங்கல் வாழ்த்துக்கள்...::))

அம்பிகா said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Dr.Rudhran said...

neat and well written

நட்புடன் ஜமால் said...

எனக்கு அப்படியே தான் இருந்திச்சி மக்கா ...

பின்னோக்கி said...

பப்பு ஆச்சிங்கறது “சந்தனமுல்லை” அவர்களா ?

அந்த ஆச்சி இருந்தா புத்தகம் விக்காதுங்க. ஆனா இந்த ஆச்சி நல்லவங்க, இவங்களால நிறைய புத்தகம் விக்குது.

ஜெனோவா said...

நல்லதங்காள் கதையை பாட்டாவே பாடி கதை சொல்லும் எங்க செல்லம்மா ஆச்சியை நினைவுபடுத்திவிட்டீர்கள் ...

இன்னொரு கவனித்தீர்களா இப்பொழுது குழந்தைகளும் கதை சொல்லச் சொல்லி ரொம்ப நச்சரிப்பதில்லை ... படம் , பாடம் , கணிப்பொறி விளையாட்டுகள் இப்படி ஏதாவது ஒன்றில் கதையாகிக்கொண்டிருகின்றன ...

மிகவும் யதார்த்தமான கவிதை .. வாழ்த்துக்கள் பா.ரா

மாதவராஜ் said...

//படிச்சிக்கிட்டே வரும்போது திடீர்னு ஜெர்க் ஆகிட்டேன்...//

நானும்......

கவிதை அருமை!

பொங்கல் வாழ்த்துக்கள் மக்கா!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கதை சொல்வதைக் கேட்டு வளர்ந்தவன்தான் நானும். ஆனால் இப்போதுள்ள குழந்தைகளுக்கு ஜெடிக்ஸ்தான் பிடிக்கிறது .என்ன செய்ய? அருமையான கவிதை.பொங்கல் வாழ்த்துகள்.

Gowripriya said...

எப்போதும் போல் அருமை..
பொங்கல் வாழ்த்துகள் :)

Gowripriya said...

படம் அருமை பா.ரா சார்.. என்னென்னவோ கதை சொல்லுது..

சிநேகிதன் அக்பர் said...

கதை கேட்கும் சுவாரஸ்யமே தனி.

குழந்தைகள் கதை கேட்க தயாராகத்தான் உள்ளன சொல்லத்தான் நேரமில்லை.

ஊருக்கு செல்லும் சமயம்,மின்சாரம் இல்லாத நேரத்தில் கதை சொல்வதுண்டு.

MJV said...

கதைக் காலங்கள் புத்தகங்களில் வாயிலாகவே இப்பொழுது கிடைப்பதால் குழந்தைகள் பாட்டிக் கதைகளை மறந்தே விட்டார்கள். பாட்டிகளையும்தான், யதார்த்தம் தான் உங்களின் ஆணி வேர் தலைவரே. நடத்துங்க. அமோகமா வந்திருக்கு வரிகள்!!!

Jerry Eshananda said...

உயிரோட்டம் உள்ள வரிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்.. ஆமா அந்த ஆச்சிக்கு வேற பேரு வச்சிருக்கலாமில்ல..

அவங்களப்போல தாத்தாவும் ஆச்சியும் உயிரோட இருந்தாலும் கதை சொல்லும் தூரத்துல இருக்கிறதில்லையே..

S.A. நவாஸுதீன் said...

நான் என்ன மக்கா புதுசா சொல்லப்போறேன். ஆனாலும் என்னை ரொம்ப ஃபீல் பண்ண வச்ச கவிதை.

vasu balaji said...

ம்ம். ஏங்க வைக்கிறீர்கள். இனிய பொங்கல் வாழ்த்துகள்.

Radhakrishnan said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

நல்லதொரு கவிதை.

நேசமித்ரன் said...

இனிய திருநாள் வாழ்த்துகள்
பா.ரா

Kumky said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் பா.ரா.
பிற பிறகு.

சுசி said...

பொங்கல் வாழ்த்துக்கள் பா.ரா.

கவிதையின் பொருள் சொல்றா மாதிரி ஒரு படம்.

குமார்ஜி said...

குமார்ஜி பெயரில் ஒரு பதிவு தொடங்கியுள்ளேன்.

kumarjee.blogspot.com

பார்த்துவிட்டு சொல்

வினோத் கெளதம் said...

ம்ம்ம்..எல்லாம் படிச்சி தெரிஞ்சிக்க வேண்டியதா போச்சு..

செ.சரவணக்குமார் said...
This comment has been removed by the author.
தெய்வா said...

குமார்ஜி பெயரில் பிளாக் தொடங்கியதே நான் தான்..
அவன் கவிதைகளை வாங்கி லக்ஷ்மி டைப் செய்து பிளாக்-ல் வெளியிடுகிறேன்

செ.சரவணக்குமார் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா.ரா அண்ணா.

பாலா said...

நல்ல இருக்கு மாம்ஸ்
கதை சொல்லிகிழவிகள் !!! தேடவேணும் ......... :(
--

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அக்பர் said... கதை கேட்கும் சுவாரஸ்யமே தனி.
குழந்தைகள் கதை கேட்க தயாராகத்தான் உள்ளன சொல்லத்தான் நேரமில்லை.//
இது தான் உண்மை. குழந்தைகள் மாறவில்லை. நாங்கள் தான் மாறி விட்டோம்.
கதை சொல்லிப் பாருங்கள். 'வேண்டாம் போ' என்று சொன்னால் அதன் பின் சொல்லுங்கள். என் பிள்ளைகளுக்குக் கதை சொல்லி என் 'ஸ்டாக் ' தீர்ந்துபோச்சு.

Ashok D said...

சித்தப்ஸ்.. அதான் கதை சொல்ல.. கவிதை சொல்ல இப்ப நீங்க இருக்கீங்கல... :))

rvelkannan said...

கவிதை அருமை!
பொங்கல் வாழ்த்துக்கள்

நசரேயன் said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

//... படம் , பாடம் , கணிப்பொறி விளையாட்டுகள் இப்படி ஏதாவது ஒன்றில் கதையாகிக்கொண்டிருகின்றன ...//

ஜெனோவை வழிமொழிகிறேன்.முன்னொரு காலத்தில் பாட்டி தாத்தா சொன்ன கதைகளை இப்போது போகோவும்,கார்ட்டூன் நெட்வொர்க்குகளும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன.

நல்ல கவிதை பா.ரா !!!

இன்றைய கவிதை said...

கவிதை அருமை...!
கருத்தும்!!

-கேயார்

Deepa said...

நல்ல கவிதை!
எனக்கும் ஜெர்க் ஆச்சி.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஹ்ம்.. ஆமா அந்த ஆச்சிக்கு வேற பேரு வச்சிருக்கலாமில்ல..

// ம் ஆமாம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ராகவன் said...

அன்பு பாரா,

உங்களுக்கு பப்பு ஆச்சி மாதிரி எனக்கு என்னோட பெத்த நைனா, குழந்தைகள் இல்லாத அவர் எங்களுக்காகவே புத்தகங்கள் வாங்குவார்... குமுதம், விகடன், தினமணிக் கதிர், அம்புலிமாமா மற்றும் பாலமித்ரா. என் பால ச்நேஹிதியுடன் சண்டையிட்டு படிக்கும் புத்தகங்கள், புத்தகம் படிக்கும் தருணங்களை விட சுவாரஸ்யமானவை... வெளியில் குழந்தைக்கு ஏங்குவதாக தெரியாது அவரைப் பார்த்தாள், ஆனால் அவரின் ஒவ்வொரு அசைவும் குழந்தைகளை கவருவதாகவே இருக்கும், குறிப்பாய் எங்களை...

அவரின் கதை சொல்லும் திறனும் அலாதியானது... அவரின் பிரத்யேக வீர சாககச மாயக் கதைகளில் எங்களை கட்டி போடும் திறன் வியப்புக்குரியது... பாங்கில் இருந்து வந்தவுடன் கைகால் கழுவி, காபி குடித்தவுடன் காம்பவுண்ட் நடையில் ஈசி சேரை போட்டு படுத்துக் கொண்டு எங்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்... இந்த கதைகள் எங்களுக்காகவே செய்தது போல் இருக்கும்... அவரின் கதாபாத்திரங்களுக்கு பெயர் விநோதமாய் அதே சமயம் நம்பகத்தனத்துடன் இருக்கும்... இரண்டு மாவீரர்கள் சுண்டு விரல், கட்டை விரல் இது தான் இரண்டு பராக்கிரமசாலிகளின் வீர பிரதாப பெயர்கள். இதில் நானும் என் தம்பியும் ஒரு கதாபாத்திரத்தை கதை ஆரம்பிக்கும் போதே எடுத்து கொள்வோம், சிலசமயம் நான் கட்டை விரலாகவும், அவன் சுண்டு விரலாகவும் இருப்போம். எங்களின் தேவைக்கு ஏற்ப இரண்டு கதாப்பாத்திரங்களையும் மாற்றி, மாற்றி ஜெயிக்கவும், தோற்க்கவும் வைப்பார் அவர்.

அவர் வாங்கும் அம்புலி மாமா, பாலமித்ராவை அவர் படித்தமாதிரியே இருக்காது ஆனாலும், அவரின் கதையில் தொங்கும் நாங்கள் படித்த சிறுவர் கதைகளின் வந்த வீரர்கள், வித்தைக்காரர்கள். ஒரு கதம்பமாய் இருப்பதால் விக்கரமாதித்யன், பட்டி விக்கிரமாதித்யன், மதன காமராஜன், வேதாளம், வீரப்ப்ரதாபன் என்று கலந்து கட்டி எங்களை உறங்காமல், உணவில்லாமல் கதை கேட்க வைக்கும்... எங்களை ரீகல் தியேட்டருக்கு அழைத்து போய் ஆங்கில படத்தின் அறிமுகங்களை அரங்கேற்றியவர் அவர், மேக்கனாசின் தங்கம், மண் வித் எ கோல்டன் கண், கேப்டன் மார்வெல், சிந்த்பாத், பை மென் ஆர்மி, ஹை ஐஸ் என்று எத்தனையோ படங்கள், தமிழக எண்ணெய் பலகார கடையின் பட்டர் சேவில் நொறுங்கி இருக்கிறது என்று பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே இருக்கும்.

நாங்கள் அந்த காம்பவுண்டை காலி செய்து சொந்த வீடு வாங்கி குடியேறியதும், படித்து முடித்து வேறுவேறு ஊர்களுக்கு போனதும், குறைந்த தொடர்பு இழை அற்றுப் போகாமல் இருந்தது நிறைய நாட்களுக்கு... என் மனைவியிடமும் இன்னமும் சொல்லிக் கொண்டே இருப்பார் எங்கள் கதை ஆர்வத்தையும், அவரின் கதை சொல்லி லட்சணத்தையும். தீராத சர்க்கரை நோயில் அவதி படுகிறார், கிலக்கொமாவினால் இரண்டு கண்களையும் இழந்து மாயா உலகத்தில் சஞ்சரிக்கிறார் இன்னமும். கதை சொல்ல இன்னும் அவருக்கு கதைகள் இருக்கு, அமர்ந்து கதை கேட்கத்தான் யாரும் இல்லை இப்போது... என் பெத்தம்மாவிர்க்கு கதைகள் அலுத்துப் போனதற்கு காரணங்கள் இருக்கலாம்.

பாரா! ஒவ்வொரு முறை உங்கள் கவிதை படிக்கும் போதும் இது போல எதாவது எழுத தோன்றுகிறது... ஆழ உழ முடிகிறது... தட்டுப்படுவது சில சமயம் செம்புக்குடத்தில் பொற்காசுகளாகவும் , சில சமயம் மக்கி போன நம்பிக்கைகளாகவும் இருக்கிறது...

அன்பு பாராவிற்கு ஆயிரம் நன்றிகள்!

அன்புடன்
ராகவன்

Unknown said...

அன்பு ராஜாவுக்கு உனது கவிதைகளை படிக்கும் போது எனக்கு பழைய நிகழ்வுகள் வருகின்றது

பா.ராஜாராம் said...

@தெய்வா
நன்றிடா தெய்வா.

@சேகர்
வந்தாச்சா சேகர்?யாவரும் நலமா?நன்றி மக்கா!

@சூர்யா
அப்பா...எவ்வளவு காலங்களுக்கு பிறகு உங்கள் பின்னூட்டம்!நன்றி சூர்யா!

@முல்லை
நன்றி முல்லை.இதுதான் புரிதல்.

@பாலா சார்
நன்றி சார்!

@அருணா
நன்றி டீச்சர்!

@சங்கர்
நன்றி சங்கர்!

@அம்பிகா
நன்றி அம்பிகா!

@ருத்ரன்
நல்வரவு சார்.மிக்க நன்றி.

@ஜமால்
மிக்க நன்றி மக்கா!

@பின்னோக்கி
ஆம்,பின்னோக்கி.சம காலத்தின் அற்புத அம்மா அவர்கள்.நன்றி மக்கா!

@ஜெனோ
சந்தோசம் ஜெனோ.மிக்க நன்றி!

@மாதவன்
நன்றி மாது!

@ஸ்ரீ
நன்றி சீயான்!

@கௌரி
மிக்க நன்றி மக்கா!

பா.ராஜாராம் said...

@அக்பர்
:-)மின்சாரம் இல்லாதபோது.அதுகூட நான் சொல்லலை மக்கா.நன்றி அக்பர்!

@காவிரி
மிக்க நன்றி தலைவரே!

@ஜெரி
தொடர்வருகை!நன்றியும் அன்பும் ஜெரி!

@முத்துலெட்சுமி
வாங்க வாங்க முத்தக்கா.(சென்ஷி நினைவு...அந்த முத்தக்காதானான்னு தெரியலை.)
பெயர் ஒரு குறியீடு அவ்வளவே,முத்தக்கா.(விடுங்கள்.வசதியாக இருக்கிறது.ராஜா தாத்தான்னு கூட கூப்பிடலாம்.)மிக்க நன்றிங்க.

@நவாஸ்
நன்றி மக்கா!(trade mark ஸ்மைல் உங்களுடையது.பீலிங் எல்லாம் வேணாம்.)

@வி.ஆர்.
ரொம்ப நன்றிங்க வி.ஆர்!பொங்கள் வாழ்த்துக்களும்!

@நேசா
நன்றி நேசா!

@கும்க்கி
நல்லா இருக்கீங்களா மக்கா?மக்கா,உங்கள் அலை எண் தெரிய படுத்த இயலுமா?ரொம்ப நன்றி கும்க்கி!

@சுசி
ஆம்,சுசி.பிரமிச்சு போயிட்டேன் நானும்.நன்றி சுசி!

@குமார்ஜி
பார்த்துட்டேன்டா தெய்வா.நன்றிடா பயலே.

@வினோ
மிக்க நன்றி வினோ! :-)

@சரவனா
பொங்கள் வாழ்த்துக்களும் சரவனா!

@அண்ணாமலை
மிக்க நன்றி அண்ணாமலை!

உயிரோடை said...

கவிதையா இல்லாமா கதையா ஏக்கம் மிகும் வலியை சொல்லி இருக்கு கவிதை

பா.ராஜாராம் said...

@பாலா
சரிங்க மாப்ள கிழவா.நன்றி மாப்ள!

@ஜெஸ்
ஸ்டாக் எல்லாம் தீரலை.உங்கள் தளம் வாசிக்க சொல்லுங்கள் குட்டீஸ்களிடம்.நன்றி ஜெஸ்!

@அசோக்
மிக்க நன்றி செல்ல மகனே!

@வேல்கண்ணா
பொங்கள் வாழ்த்துக்களும் நன்றியும் வேல் கண்ணா!

@நசரேயன்
பொங்கள் வாழ்த்துக்கள் மக்கா.நல்வரவும் நன்றியும்.

@செய்யது
எங்கிருந்து உங்கள் பின்னூட்டம் தொடங்க போகிறீர்கள் என அனுமானிக்கவே முடியாது செய்யது.அப்படி ஒரு நன்றி மக்கா!

@இன்றைய கவிதை
மிக்க நன்றி கேயார்.நண்பர்கள் நலம்தானே?

@தீபா
எல்லோரும் சொல்லும் போது எனக்கும் கூட ஜெர்க் ஆகுது தீபா.யோசிக்காமல் எழுதிட்டோமோவென..பிள்ளையார் மன்னிக்கட்டும் குரங்கை.நன்றி தீபா.

@அமித்தம்மா
தீபாவுக்கு சொன்னதுதான் அமித்தம்மா.மன்னியுங்கள்.நன்றியும்.

@ராகவன்
உங்களுக்கும் புரை ஏறிக் கொண்டு இருக்கிறார்கள் ராகவன் மனிதர்கள் எப்பவும்.நீங்கள்,கும்க்கி,நானெல்லாம் ஒரு குடும்பத்தில் பிறந்த முன் நினைவு வந்தால் அழையுங்கள்.ஆமென்று சொல்லணும் எனக்கு.நன்றி ராகவன்!

@காளியப்பன் அண்ணே
ரொம்ப நன்றிண்ணே..வேறு என்ன வேணும் எனக்கு?

@உயிரோடை
அண்ணனை விட்டுக் குடுக்காம புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி லாவண்யா!

இரசிகை said...

appaththaatta kathai ketta ninaivu... vanthathu:)

inimai...