Saturday, January 23, 2010

பிளாக்மெயில்


(picture by cc licence, thanks strollers)

"பிள்ளைகளுக்கு லீவுதானே
இருந்துட்டு வாரேன் ஒரு மாசம்"
இவள்பாட்டுக்கு சொல்லிப் போனாள்.

யிர் வலி வாலோடு போச்சென
வாலை விட்டுப் போனது
கதவிடுக்கு பல்லி.

றும்பிழுக்க
எப்பவும் நகரலாம்
வாலின் மீதம்.

சீக்கிரம் வாடி..

பிள்ளையார் எறும்பு
பொல்லா எறும்பு.
-----------------------

பின்குறிப்பு:
90'-களில் எழுதிய என் கவிதை ஒன்று தெய்வாவிடம் இருந்திருக்கும் போல, அனுப்பி தந்தான். சற்று டிங்கரிங் பார்த்தேன். நன்றி தெய்வா.


57 comments:

விஜய் said...

அலைபாயுதே வசனம் மாதிரி சில சமயம் தேவதையாயும் சில சமயம் ராட்சசியாகவும் இருப்பவளே மனைவி

அருகில் இல்லாத போது தான் அருமை தெரியும்

விஜய்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான சிந்தனை

நல்லாருக்கு பா.ரா சார்

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஃப்டர் மேரெஜ்க்கு அப்புறம் படிச்சா ஒரு வேளை புரியலாம்...!

படம் அழகா இருக்கு....!

அ.மு.செய்யது said...

எனக்கு கொஞ்சம் புரியல...!!! புரியற மாதிரியும் இருக்கு...!!!

வசந்த் சொல்ற மாதிரி ஒரு வேள கல்யாணம் ஆயிட்டா புரியுமோ ??

vasu balaji said...

ஓஹோ. 90ல எழுதினதா?

/சீக்கிரம் வாடி..

பிள்ளையார் எறும்பு
பொல்லா எறும்பு.//

பொல்லா பா.ரா:))

ஹேமா said...

அண்ணா பிள்ளையார் எறும்பு பொல்லாதது இல்ல.பாக்கத்தான் பயமாருக்கும்.கடிக்காது உங்களைப்போல !
பொய் சொல்லினீங்களா !

கமலேஷ் said...

உங்களின் சிந்தனையும் அதை வெளிபடுத்தும் விதமும் என்னை வியக்க வைத்து கொண்டே இருக்கிறது அண்ணா...

S said...

u deservingly won the top prize for ur poems. congrats n wishes for many more.

செ.சரவணக்குமார் said...

நல்ல சிந்தனை, வாசித்து முடிக்கையில் மெல்லிய புன்னகை எழுகிறது. கலக்குங்க மக்கா. அப்படியே சிறுகதைகளும் எழுதினால் நல்லா இருக்கும்.

நேசமித்ரன் said...

ஆஹா பிளாக்மெயிலு...!

”கழிவறை கண்ணாடி ஸ்டிக்கர் பொட்டு
பவளமல்லிக் குப்பை
துளசிமாடத்தில் காய்ந்த பூ

உனக்கென்ன ...
சமைக்க விடுதலை
பின்னெழுதல்
பழைய தோழிகள்

என்னால் முடிந்தது உன் தங்கைக்கு
அழைத்து உன் ஊடல் ரசிப்பது
இரவுகளில் உன் இரண்டொரு அழைப்புகளைத் தவற விடுவது”

*****************************

பா.ரா முத்திரை
வார்த்தைகளில் வாசனை
சொல்லித்தீராத வாசனை

கலகலப்ரியா said...

கவிதை ரொம்ப அழகு பா.ரா. :)..

சைவகொத்துப்பரோட்டா said...

பிள்ளையார் எறும்பு சிவனேன்னுதான இருக்கும் :))

Radhakrishnan said...

நல்லதொரு அருமையான கவிதை. பழையது எனினும் சொல்லும் இனிமை புதிது.

நிஜமா நல்லவன் said...

கவிதையும் படமும் அழகு.

Paleo God said...

பிள்ளையார் எறும்பு சிவனேன்னுதான இருக்கும் :))//

துள்ளுவதோ வால் ஆச்சே..:))

ஆ.ஞானசேகரன் said...

90 ரிலே நல்ல அழகான வரிகள்

அன்புடன் அருணா said...

ஆஹாஹா!பூங்கொத்து!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல சிந்தனை

காமராஜ் said...

பிரியப் பிரிய முறுக்கேறும் கயிறு.

சந்தனமுல்லை said...

ஓட்டு போட்டிருக்கிறேன்றாலும் இந்தக்கவிதை எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு உடலாக அல்லது நுகர்வு பொருளாக பார்ப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தவறாக இருப்பின் மன்னிக்கவும்!

சுந்தரா said...

:) படிச்சு முடிக்கவும் சிரிப்பு வந்தது.

கவிதை அருமை பா.ரா!

அன்பேசிவம் said...

இதையெல்லாம் மகாம்மா படிச்சாங்கன்னா உங்களை விட பாக்கியசாலி யாருமில்லை, இங்கே..
சந்தனமுல்லை கேள்வி நியாயமாகத்தான் படுகிறது. இருப்பினும் வார்த்தை விளையாட்டு ரசிக்கவைக்கிறது.

:-)

கண்ணகி said...

இப்ப்த்தெரியுந்துங்களா மனைவியின் அருமை....தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

விருதுக்கு வாழ்த்துகள் மக்கா

------------------

திருமணம் ஆகாத போதும் இதை உணர்ந்ததுண்டு தந்தைக்கு துணையாக கடைசி மகனான என்னை விட்டுவிட்டு தாய் செல்லும் பொழுது.

-------------------

பள்ளியின் வாலாக உருவகப்படுத்தி கொள்ளாமல் அதனுடைய துடிப்பை மட்டும் கருத்தில் கொண்டேன்.

மாதவராஜ் said...

இப்பதான் படிச்சேன்.

முல்லையின் புரிதலில், அவர்களுக்குத் தோன்றிய கருத்துக்களை வெளிப்படையாக வைத்ததற்கு முதலில் நாம் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அது, வலைப்பக்கங்களில் அதிகமாகத் தேவைப்படுவதாய் நினைக்கிறேன்.

எனக்கு இந்தக் கவிதை இப்படித்தான் அர்த்தமாகிறது. இங்கு வால்தான் உடல். உயிரற்ற அதனை எதுவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தூக்கிச் செல்ல முடிகிறது.எங்கே உறுத்தல் என்றால், எறும்பில்தான்.

S.A. நவாஸுதீன் said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா. உங்க ”குசும்பை” ரசிச்சேன்.

Prathap Kumar S. said...

கலக்கல் சார்...

sathishsangkavi.blogspot.com said...

படமும், கவிதையும் கலக்கல்....

பா.ராஜாராம் said...

very good!

முல்லை & மாது.

அருமையான பார்வை இருவரிடமும்.

என்றாலும் மாது,

முல்லை சொல்வது வாஸ்த்தவம்தான்.இதை நான் எழுதிய சமயம் அப்படியாக யோசித்திருக்கிறேன் போல என்றுதான் புரிகிறது எனக்கும்.உங்களின் எறும்பு குழப்பத்திற்கு என் டிங்கரிங்கில் தவறும் இருக்கலாம் போல.அந்த பழைய கவிதையை கீழே அப்படியே பதிகிறேன்.

முல்லை,

மன்னிப்பெல்லாம் வேணாம் மக்கா.உண்மையில் சந்தோசமாக இருக்கிறது.மாது சொல்வது போல் இது நம் வலை குடும்பத்தில் தேவையான ஒன்றே..ஆனாலும் முல்லை,அதுவும் சேர்த்துத்தானே தாம்பத்யம்?

:-)

S.A. நவாஸுதீன் said...

நிழலின் 100-வது இடுகை. வாழ்த்துக்கள் மக்கா.

பா.ராஜாராம் said...

பழைய கவிதை இது..
**

கதவிடுக்கில் அடிபட்ட பல்லி
வாலை மட்டும் விட்டுச் செல்லும்
உயிர் வலி வாலோடு போச்சு!...

“பிள்ளைகளுக்கு லீவுதானே
இருந்து வாரேன் ஒருமாசம்”
அவள் பாட்டுக்குச் சொல்லிப் போனாள்
பல்லிக்கும் அவளுக்கும் ஒரே வலி
வலிக்குப் பயந்து வாலறுத்ததுகள்.....

வெறும் வாலின் இழ்ப்பு பல்லிக்கு
பல்லியே இழ்ப்பு வாலுக்கு

துள்ளித்திரிந்த வாலின் மீதம்
எப்ப நகருமோ எறும்பின் நடுவே
கடிக்காமல் வலிக்காமல்
இதென்ன இம்சை
உடல் முழுக்க ஊறிக்கொண்டு.

சீக்கிரம் வாடி...

பிள்ளையார் எறும்பு
பொல்லா எறும்பு.

சிநேகிதன் அக்பர் said...

அருமையான கவிதை பா.ரா அண்ணா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//சீக்கிரம் வாடி..
பிள்ளையார் எறும்பு பொல்லா எறும்பு.//

அருமை.:-)))

அப்துல்மாலிக் said...

நல்லாயிருக்கு சார்

Ashok D said...

ஒரு ஐஞ்சாறு வயசுல பாண்ட்ஸ் டப்பால ஷெல்ப்ல இருந்த பல்லியை நான் மடக்க அதன் வால் துடித்த துடிப்பு இன்னும் என் கண்ணுக்குள் இருக்கு. பல்லி மட்டும் சமத்தா ஓடிடுச்சி. அந்த குற்றவுணர்ச்சி இன்னும் என் மனசுல இருக்கு. நிற்க!

பல்லி வாலினையும், புள்ளையார் எறும்பையும் வைச்சி பின்னீட்டீங்க.

//பா.ரா முத்திரை
வார்த்தைகளில் வாசனை
சொல்லித்தீராத வாசனை//
நேசனின் இந்த வார்த்தைகளோடு ஒத்துபோகிறேன் சித்தப்ஸ் :)

பா.ராஜாராம் said...

S.A. நவாஸுதீன் said...

நிழலின் 100-வது இடுகை. வாழ்த்துக்கள் மக்கா.

நவாஸ் மக்கா,

நான் கவனிக்கலை இதை.

மிகுந்த நன்றியும் அன்பும் மக்கா!

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

100-இடுகை ஆயிருச்சு போல.

கண் மூடித் திறந்தது போல் இருக்கு.

எல்லோருக்கும் நன்றி மக்கா!

ஸ்ரீராம். said...

இப்போது மாற்றி எழுதியதை விட முன்பு இருந்தது எனக்குப் பிடித்திருக்கிறது. விளக்கமாக இருக்கிறது. நன்று.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த கவிதைக்கு கமெண்ட் எழுத
ஆசை தான். என்ன செய்ய..
எனக்கு திருமணம் ஆகி விட்டது!

நேசமித்ரன். said...

முகப்பில் வாசித்த போதும் சரி
பின்னூ வில் முன் எழுதியதை வாசித்த போதும் சரி நுகரத்தருவதான பாவனைதான் நுகர்வாக பார்ப்பதாய் என் புரிதல் இல்லை

ஆனால் சந்தோஷமாக இருக்கிறது அம்மா பிரியத்தில் இதுதான் இவன் என்று இருக்கையில் ஒரு நாள் வீடு வரும் தோழி திட்டிக் கொண்டே அறையை ஒழுங்கு செய்வது போல

இப்பிடியும் வரணும்ல அதுதானே ஆரோக்கியம்


100 ஆ
ம்ம்....!

இளவரசர் நிறைய ஊர் சுற்றட்டும்

காமராஜ் said...

தங்கை முல்லை சொன்ன பின் இன்னொரு பார்வை தேவையெனப்படுகிறது. இந்தக் கவிதையை மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம்.அதற்கு எங்கள் அன்பு பாராவும் வழிவிட்டிருக்கிறார். இந்த விவாதம் புதிதாகவும் நேர்மையானதாகவும் இருக்கிறது. தகப்பன் சாமி என்பதை நான் பெண்பதப் படுத்துகிறேன்.

அம்பிகா said...

சதமடித்ததற்கு வாழ்த்துக்கள், பா.ரா.

தமிழன்-கறுப்பி... said...

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE


அண்ணன் இங்க இருக்கு நீங்க கேட்ட விசயம். மின்னஞ்சல் முகவரி சரியான்னு தெரியல, அதனாலதான் இங்க.

:)

சுசி said...

நல்லா இருக்கு பா.ரா.

ரிஷபன் said...

பிள்ளையாருக்கு பிரச்னை இல்லை.. கல்யாணம் பண்ணிகிட்டவனுக்குத்தான் வாலின் வலி..!

உயிரோடை said...

க‌விதை ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து. ஆனால் பிள்ளையார் எறும்புக‌ள் சைவ‌மாச்சே அது வேற‌ எறும்பா இருக்கும் அண்ணா ந‌ல்லா யோசித்து பாருங்க‌.

Vidhoosh said...

ரொம்ப அருமையான இணக்கம் "அந்த வாடி"யில் தெரிகிறது. :))

திரும்பி கொண்டு நிற்கும் பிங்க் பொம்மை சூப்பர் அண்ணே. எப்டீங்க... எப்டீங்க.. எப்டீங்க.. எப்டீங்க.. எப்டீங்க.. எப்டீங்க.. எப்டீங்க..

rvelkannan said...

இதனுடன் சேர்த்து 100 க்கும் வாழ்த்துகள் பா.ரா

na.jothi said...

வாழ்த்துக்கள் அண்ணா
100 வது பதிவுக்கும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப நல்லாவே டிங்க்கரிங்க் பார்த்திருக்கீங்க பா.ரா ;)))))))))

பின்னோக்கி said...

அட டிங்கரிங் பண்ணாததே அருமையா இருக்கே. சுஜாதா அவர்கள் சொன்ன மாதிரி 1990 களில் உங்கள் உணர்வு அது. அதனை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் 1990 களில் என்று குறிப்பிட்டுவிட்டீர்கள்.

பாலா said...

நல்லா இருக்கு மாம்ஸ்
அதோடு சின்ன மாம்ஸ்(நேசன்) கவிதை செமையா இருக்கு

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

அதிகாலையில்,ரியாத் பயணம்.தனி தனியாக கை பற்ற இயலவில்லை.எல்லோருக்கும் நன்றி மக்கா.

"உழவன்" "Uzhavan" said...

//
பிள்ளையார் எறும்பு
பொல்லா எறும்பு//
 
அருமை மக்கா :-)

Nathanjagk said...

பசலை மணம் வீசும் கவிதை. எறும்பு ஊற கல்லும்​தேயும்.. ​அப்படியா? பழைய கவிதையை திருத்திய பாங்கில் வியந்து​போகிறேன்!
100க்கு வாழ்த்துக்கள் பாரா!
நிழல் நீண்டு​நெடியதாய் எல்லாத் திணைகளையும் கடந்து விரியட்டும்.

thamizhparavai said...

ரசித்தேன் பாராண்ணே...(பழைய கவிதைதான் என் மரமண்டைக்குப் புரிஞ்சது... :-( )

இரசிகை said...

ithai yeppadi purinjukkanumnu theriyala rajaram sir...

aanaal... chella blackmail nu mattum thonuthu!!