Monday, January 25, 2010

சந்தோசம்

(picture by cc license, thanks SantaRosa)

தேடிக் கொண்டிருந்தேன்.

ன்ன மாமா தேடுறீங்க?
என்று வந்தான்
பக்கத்து வீட்டு கார்த்தி.

"தெரியலைடா
தெரிஞ்சாதான் கண்டு பிடிச்சிருவனே"
என்றேன் யோசனையாக.

"லூசு மாமா" என்று
போய்விட்டான் கார்த்தி.

தேடியது கிடைத்த சந்தோசத்தில்
வந்து அமர்ந்துவிட்டேன்.

63 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்ன ராஜா? கவிதையா? புதிரா? உண்மையில் எனக்குப் புரியவில்லை.
மற்றவர்கள் கருத்துப் பார்க்க பின்பு வருகிறேன்.

ஸ்ரீராம். said...

எழுதுவதற்கான கருதானே....

இலக்கற்ற தேடல்கள்..

Ramesh said...

மழலையின் மொழிகள் மனதுக்குள் என்றுமினிக்கும் அப்படியா பா.ரா அண்ணே..

நட்புடன் ஜமால் said...

’தன்னை’ பற்றிய தேடலா மக்கா!

Paleo God said...

இனி பாரா ‘சித்தார்த்தன்’ என அழைக்கப்படுவாராக...:))

அட இது கிடைக்காமத்தானே அவனவன் தவம் பண்ணிகிட்டுருக்கான்..
:))

செந்தில் நாதன் Senthil Nathan said...

//நட்புடன் ஜமால் said...
’தன்னை’ பற்றிய தேடலா மக்கா!//

இது தான் சரி-னு தோணுது..

ஆனா, ஒன்னு சொல்லுங்க.. எப்படி இப்படி ரெண்டே வரில எங்கள கொலை பண்றீங்க.. :)

காமராஜ் said...

சிரிச்சு சிரிச்சு புரையேறிப்போச்சு.
மத்தியானம் மாதுவோடு சேர்ந்து சரிசெய்யனும்.

மாதவராஜ் said...

ஆஹா....
நானும் அப்படியொரு லூசுதான்..

@காமராஜ்!
ஓஹோ!

அண்ணாமலையான் said...

அசத்துங்க

அம்பிகா said...

எல்லோருக்குமே இப்படியான சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போல!!
நல்லாயிருக்கு.

சந்தனமுல்லை said...

ஓ..நீங்கல்லாம் ஒரே செட்டா!! :-))கவிதையும் காமராஜ் அண்ணாவின் பின்னூட்டமும் மாதவராஜ் சாரின் பின்னூட்டமும் ரசிக்க வைக்கின்றன!

இந்த கவிதைக்கும் போன கவிதை/பின்னூட்டங்களுக்கும் சம்பந்தம் ஒண்ணுமில்லைதானே...:-)))

ராமலக்ஷ்மி said...

அருமை பா ரா:)!

ராகவன் said...

அன்பு பாரா,

பைத்தியக்காரர்கள் நிறைந்த உலகம் இது பாரா. எல்லோரும் கைகொட்டியோ, அல்லது கைதட்டியோ ரசிக்கிறார்கள் குறும்புகளையும், கோணங்கித்தனங்களையும். வரிசையில் ஆளுக்காள் முண்டியடித்துக்கொண்டு முந்த முயல்கிறார்கள், யார் சீரிய பைத்தியம் என்பதில்.

என்னை எப்போதும் லூசு, கோட்டி, பைத்தியக்காரன், மெண்டல்,கிறுக்குப்பய மற்றும் ராகவன் என்றும் சொல்கிறார்கள் சில சமயம் எல்லாமே ஒன்று போல தான் தோன்றுகிறது பாரா. பிறழ்வு நிலைதான் சாஸ்வதம் பாரா...

வாழ்த்துக்களும், அன்பும்
ராகவன்

மாதவராஜ் said...

//இந்த கவிதைக்கும் போன கவிதை/பின்னூட்டங்களுக்கும் சம்பந்தம் ஒண்ணுமில்லைதானே...:-))//

@முல்லை!
வம்புக்கும் ஒரு அளவில்லையா :-)))))

ப்ரியமுடன் வசந்த் said...

:))

na.jothi said...

ஓரிரு நேரங்களில்
பைத்தியக்காரனாக இருத்தலே
வடிகாலாகவும் அமைகிறது
இல்லையா அண்ணா

Deepa said...

நல்ல கவிதை பா.ரா.
:-))

முல்லை!

அங்கிள்களையும் கும்மி அடிக்க வெச்சிட்டியா? வாழ்க உன் சேவை!

Deepa said...

//ராகவன் said... பிறழ்வு நிலைதான் சாஸ்வதம் பாரா... //
அற்புதம்!

Ashok D said...

அட அட....

S.A. நவாஸுதீன் said...

///என்னை எப்போதும் லூசு, கோட்டி, பைத்தியக்காரன், மெண்டல்,கிறுக்குப்பய மற்றும் ராகவன் என்றும் சொல்கிறார்கள் சில சமயம் எல்லாமே ஒன்று போல தான் தோன்றுகிறது பாரா. பிறழ்வு நிலைதான் சாஸ்வதம் பாரா... ///

ராகவனுக்கு பதிலா நவாஸை வச்சிப்பார்த்தாலும் பொருந்துகிறது மக்கா. இங்கே உங்க ரெண்டு பேர் கையையும் பிடிச்சுக்கிறேன்.

Ashok D said...

அத்தைதான் அப்டின்னு நெனச்சேன்... நீங்க கூடவா... நம்ம பேமிலியே... ஹிஹிஹி

vasu balaji said...

:)வேறென்ன சொல்ல. அருமை.

அன்புடன் அருணா said...

நல்ல தேடல்!:)

MJV said...

தலைவரே என்ன நடக்குது? இருந்தாலும் அந்த உள்மன தேடலின் முடிவாக, ஒரு தீர்க்கமான முடிவு கிடைத்தால் சரிதான். கருவேல நிழல் வாசித்து வருகிறேன். ஒவ்வொரு எழுத்தா செதுக்கி இருக்கீங்க..... வாழ்த்துக்கள்....

பின்னோக்கி said...

என்ன தேடுனாருன்னு சொல்லவேயில்லையே.. ஒருவேளை நாங்க கண்டுபிடிச்சு சொல்லணுமா ? :)

செ.சரவணக்குமார் said...

சந்தோஷம் அண்ணே. எனக்குத்தான் இன்னும் கிடைக்கலை.

ஹேமா said...

அண்ணா உங்களை நீங்களே ஒத்துக்கிட்டீங்களா !

அஷோ.....க்கு.....!

Radhakrishnan said...

ஹா ஹா! அது சரி! நன்றாக இருக்கிறது.

விநாயக முருகன் said...

லூசு மாமா... :)

விஜய் said...

ஓஹோ லூசுங்களுக்குதான் கவிதை வருமோ

ஹா ஹா ஹா

நேசமித்ரன் said...

பித்தேறி பேயுருக் கொண்டு பிறை நுனியமர்ந்து தியானித்து கிட்டாத ஞானம் சீம்பால் வாயொடு ..த்தா என்றபடி குழல் பிய்த்தாடியபடி சொரிந்த நீரில் சித்தித்தது

உப்பு நீர் கரையும் சாம்பல்
உணர்வின் வெப்பெலாம் தூளாம் அன்பில்

மெய்யுணர் தருணம் நம்மை சிறியராய் அறியும் போதில்

ஆண்டவன் பேச மாட்டான்
ஆனால் கார்த்தியிடம் கவிதை கிடைக்கும்

taaru said...

//தேடியது கிடைத்த சந்தோசத்தில்
வந்து அமர்ந்துவிட்டேன்.//
இன்னும் அமரவில்லை பா.ரா., சார்...
குறள் மாதிரி சின்னதாய் அடி சொல்லி தீப்பிடிக்க வைக்குறீகள் சார்...
முழுதுமாய் எரிகிறது என் மனம்... அடங்குமோ? அமருமோ?!!

ரோஸ்விக் said...

சித்தப்பு எனக்கு முன்னாடி கார்த்தி முந்திக்கிட்டானே....:-)

ரொம்ப குசும்பு சித்தப்பா உங்களுக்கு...

அப்துல்மாலிக் said...

நாலே வரியிலே சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறீங்க தல‌

SUFFIX said...

என்னவோ போங்க...

வினோத் கெளதம் said...

எழுதுவது கொஞ்சம் தான் ஆனா அதிகம் யோசிக்க வைக்கிறிங்க மக்கா..:)

சுசி said...

சட்டுன்னு சிரிச்சிட்டேன் பா.ரா.

ரொம்ப வித்யாசமா இருக்கு.

Nathanjagk said...

டோட்டலா ஒரு குக்கிராமத்தையே டேமேஜ் பண்ணிட்டுத்தான் சவுதிக்கு போயிருக்காரு!
நல்லாயிருக்குப்பா!

//ஆண்டவன் பேச மாட்டான்
ஆனால் கார்த்தியிடம் கவிதை கிடைக்கும்//

நேசன்: அருமைப்பா!

அ.மு.செய்யது said...

குட் ஒன் பாரா.

//பித்தேறி பேயுருக் கொண்டு பிறை நுனியமர்ந்து தியானித்து கிட்டாத ஞானம் சீம்பால் வாயொடு ..த்தா என்றபடி குழல் பிய்த்தாடியபடி சொரிந்த நீரில் சித்தித்தது //

நேசமித்ரன், இத தமிழ்ல மொழிபெயர்த்து தர முடியுமா ??

Vidhoosh said...

//பித்தேறி பேயுருக் கொண்டு பிறை நுனியமர்ந்து தியானித்து கிட்டாத ஞானம் சீம்பால் வாயொடு ..த்தா என்றபடி குழல் பிய்த்தாடியபடி சொரிந்த நீரில் சித்தித்தது //.
:)) செய்யது: ஆன்மீகங்கள் தராத ஞானத்தை, இன்னும் பால்குடி மறக்காது குழந்தை கொடுத்துதிருச்சுன்னு சொல்றாரு:))

Vidhoosh said...

லூசு அண்ணே..

Gowripriya said...

:))))))))))

உயிரோடை said...

ம்ம் ச‌ரிதான்

வ.மு.முரளி. said...

படித்துக் கொண்டிருந்தேன்.

''என்ன மாமா படிக்கறீங்க?''
என்று கேட்டாள்
பக்கத்து வீட்டு கீர்த்தி.

''தெரியலைடா
தெரிஞ்சாத் தான் படிச்சிருவேனே!''
என்றேன் தலையைப் பிடித்தபடி.

''கிறுக்கு மாமா''
செல்லமாகக் கிள்ளிவிட்டு
ஓடிவிட்டாள் கீர்த்தி.

படித்தது புரிந்துவிட்ட
சந்தோஷத்தில்,
மறுபடி
படிக்க ஆரம்பித்தேன்.
-வ.மு.முரளி.

rvelkannan said...

அண்ணே
புத்தனுக்கு போதி மரம்
உங்களக்கு கார்த்தி
(ஹா ஹா ஹா)-
[படம் மிக அருமை ]

ஜெனோவா said...

நடத்துங்கையா.. நல்லாயிருக்கு பா.ரா !

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))))))

அன்பேசிவம் said...

"தெரியலைடா
தெரிஞ்சாதான் கண்டு பிடிச்சிருவனே"
என்கிற இந்த சிறுவனுக்கான பதிலில் உள்ள இழப்பம் அல்லது கோபம். அதை தவறென உணர்த்திய கார்த்தி.
தவறை உணர்ந்த நீங்க.
ஓற்றை சொல்லில் தன்னை அறிதல்
தவம்.

அப்புறமென்ன நிம்மதியா உக்கார வேண்டியதுதானே?

ANU said...

நல்ல தேடல்!

சிநேகிதன் அக்பர் said...

நானும் தேடிக்கிட்டே இருக்கேன்.

அருமை பா.ரா. அண்ணா.

Ashok D said...

Iam the 51st.

சித்தப்ஸ் கவிதைக்கு 51 கமெண்டு.. 34 ஓட்டு 17 தமிழ்மனம் ஓட்டு ... அப்புறம் நெறய இதய திருட்டு...நடத்துங்க...
சித்தப்ஸ் அடுத்தவாட்டி நாந்தான் உங்க கவிதை புக்க பப்ளிஷ் பண்ணுவேன்.. சொல்லிட்டேன் :) seriousathaan சித்தப்பு..

(அப்புறம் உங்களுக்கு உரைநடையெல்லாம் வருதுன்னு சொல்றாங்க.. நம்பிடாதீங்க.. தொடர்ந்து கவிதையில் concentrate பண்ணவும்...

இப்படிக்கு THE GREATEST MAGAN
D.R.Ashok

(அப்புறம் அந்த மைனஸ் ஓட்டு அனேகமாக ஹேமாவாதான் இருக்கும்... ஏன்னா இன்னும் ஹேமா கண்ணாடிய மாத்தல சித்தப்ஸ்.. எப்பூடி)

பா.ராஜாராம் said...

@ஜெஸ்
நான் லூசாக இருப்பது "கவிதை",புதிராகவெல்லாம்" உங்களுக்கு தோணத்தான் செய்யும் ஜெஸ்.திருப்பி வந்தும் இதைத்தான் சொல்ல போறீங்க...நன்றி மக்கா! :-)

@ஸ்ரீராம்
இதுவும்தான்.ரொம்ப நன்றி ஸ்ரீராம்.தொடர்வருகை சந்தோசம்.

@ரமேஷ்
ஆம் ரமேஷ்.அதுவும்தான்.நன்றி மக்கா!

@ஜமால்
அப்படியும் சொல்லலாம் மக்கா.ரொம்ப நன்றி ஜமால்!

@ப.ப.சங்கர்
கிரர்ர்ர்ர்..சங்கர். :-)
நன்றி சங்கர்!

@செந்தில்
அவ்வளவுதான் செந்தில்.ஹா..ஹா..ரொம்ப நன்றி செந்தில்!

@காமு
அடப்பாவிகளா. ஆ,ஊ-ன்னா மாடில சேர்ந்துர்றதா?.கொஞ்சம் பாக்கி வைங்க மக்கா.நானும் வந்துர்றேன்.ரொம்ப நன்றி காமு!

@மாது
இங்கயும் அடுத்தடுத்து வந்தாச்சா?காமராஜிற்கு கொடுத்த அந்த ஓஹோவில் அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சேன் மாது.உங்களுடன் இருந்தது போலவே இருந்தது.
//@முல்லை!
வம்புக்கும் ஒரு அளவில்லையா :-)))))//
விடுங்க மாது.நமக்கும் ஒரு காலம் வராதா?"காய்கறிச்சந்தையும் ஒரு மனுஷியும்"என்று வேறொரு கவிதை எழுதுவோம்.

என்ன ஒன்னு, காமராஜ்தான் அடிக்க வருவாப்ல. :-))

@அண்ணாமலை
ரொம்ப நன்றி வாத்யாரே!கொஞ்சம் வேலைப்பளு.உங்கள் தளம் வரமுடியாமல் இருக்கு.வர்றேன் அண்ணாமலை.தொடர் வருகை சந்தோசம்.

@அம்பிகா
போச்சுடா.அம்பிகா,உங்களுக்குமா?நன்றி அம்பிகா!
:-)

@முல்லை
ஹா..ஹா..ரொம்ப ரசிச்சேன் முல்லை.timing!!

சரி..நடத்துங்க.
:-))

@ராமலக்ஷ்மி
ரொம்ப நன்றி சகா!

@ராகவன்
ஹா..ஹா..ராகவன்,

//சில சமயம் எல்லாமே ஒன்று போல தான் தோன்றுகிறது பாரா. பிறழ்வு நிலைதான் சாஸ்வதம் பாரா...//

அதானே..சொல்லுங்க இந்த முல்லையிடம்.கேட்டீங்களே முல்லை,"ஒரு கை குறையுதே?"ன்னு.
:-)
நன்றி ராகவன்!

பா.ராஜாராம் said...

D.R.Ashok said...

//அத்தைதான் அப்டின்னு நெனச்சேன்... நீங்க கூடவா... நம்ம பேமிலியே... ஹிஹிஹி//

முல்லை,
இதோ இன்னும் ரெண்டு கை.

:-))

மகனே,
நம்ம பேமிலியே என்று சொல்லும்போது இங்கு ரெண்டாவது கை..ஹி..ஹி..வேற யாரு?

'பரிவை' சே.குமார் said...

நல்லாருக்கு. வாழ்த்துக்கள்...

கலகலப்ரியா said...

touchy ba.ra.!

பா.ராஜாராம் said...

@வசந்த்
நன்றி வசந்த்!

@ஜோதி
கிட்டத்தட்ட ஆமாம்தான் ஜோதி.நன்றி மக்கா!
:-))

@தீபா
நன்றி தீபா!
"செட்டே லூசாப்பா?"ன்னு கேட்கிறது சேவையாம் மாது? :-)

Deepa said...
//ராகவன் said... பிறழ்வு நிலைதான் சாஸ்வதம் பாரா... //
அற்புதம்!

ஐ!..இன்னொரு கை.
:-)

@அசோக்

//அட அட....//
அடடே..

//அத்தைதான் அப்டின்னு நெனச்சேன்.//
:-)

//அப்புறம் உங்களுக்கு உரைநடையெல்லாம் வருதுன்னு சொல்றாங்க.. நம்பிடாதீங்க.//
மண்ணள்ளி போட்டுட்டீங்களே மகனே.. :-)

//அப்புறம் அந்த மைனஸ் ஓட்டு அனேகமாக ஹேமாவாதான் இருக்கும்... ஏன்னா இன்னும் ஹேமா கண்ணாடிய மாத்தல சித்தப்ஸ்..//
கிக்கி கிக்கி கிக்கி..

நன்றி மகனே..

பா.ராஜாராம் said...

@நவாஸ்
முல்லை,அடுத்த விக்கட்! அதுவும் கிளீன் போல்டு.நன்றி மக்கா!
:-))

@வானம்பாடிகள் சார்
நல்லவேளை தப்பிச்சீங்க பாலா சார்!ரொம்ப நன்றி சார்!
:-)

@அருணா
நன்றி அருணா!

@காவிரி
ரொம்ப நன்றி காவிரி..இப்படியெல்லாம் நடக்கட்டும் காவிரி.ஜாலியா இருக்குல்ல..

@பின்னோக்கி
நீங்கவேறையா பின்னோக்கி? :-) நன்றி மக்கா!

@சரவனா
கிடைக்கும் கிடைக்கும் எங்க போயிரப்போகுது எல்லாம்.நன்றி சரவனா! :-)

@ஹேமா
//அஷோ.....க்கு.....!//
க்கு-குக்கு முன்னால ரெண்டு எழுத்து.பின்னால?நன்றிடா ஹேமா?

@ராதா
:-) நன்றி ராதா!

@விநாயகம்
வாங்க கார்த்தி.. :-)
நன்றி விநாயகம்!

@விஜய்
விஜய் பாவி..நீரும்தாயா.. :-)
நன்றி விஜய்!

@நேசன்
//பித்தேறி பேயுருக் கொண்டு பிறை நுனியமர்ந்து தியானித்து கிட்டாத ஞானம் சீம்பால் வாயொடு ..த்தா என்றபடி குழல் பிய்த்தாடியபடி சொரிந்த நீரில் சித்தித்தது

உப்பு நீர் கரையும் சாம்பல்
உணர்வின் வெப்பெலாம் தூளாம் அன்பில்

மெய்யுணர் தருணம் நம்மை சிறியராய் அறியும் போதில்//

முல்லை,
இனி ஒரு ஆளும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது.வந்துட்டாருல"தலைவரு"
(காப்பாதுனடா மக்கா!).
நன்றி நேசா! :-)))

@taaru
வாங்க மக்கா.ரொம்ப சந்தோசம்.ரொம்ப நன்றியும் பாஸ்!

@ரோஷ்விக்
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் கார்த்தியா தானே வந்துருக்கீங்க மகனே..குசும்பு அப்பனுக்கா?மகனுக்கா?
:-) ரொம்ப நன்றி மகனே..

@அபு அப்சர்
சந்தோசம் மக்கா.ரொம்ப நன்றி அபு!

@சபிக்ஸ்
அழை பேசியில் சிரிச்சதுதான் நினைவு வருது..சபிக்ஸ்.நன்றி மக்கா!

@வினோ
ரொம்ப நன்றி வினோ மக்கா!

@சுசி
சந்தோசம் சுசி.மிக்க நன்றி சகா!

@ஜெகா
பாவிகளா..நல்லாருங்கப்பா!
:-) நன்றி ஜெகா!

@செய்யது
ரொம்ப நன்றி செய்யது. நேசா,:-)

@வித்யா
// :)) செய்யது: ஆன்மீகங்கள் தராத ஞானத்தை, இன்னும் பால்குடி மறக்காது குழந்தை கொடுத்துதிருச்சுன்னு சொல்றாரு:))//
முல்லை,
வந்துட்டாங்கல்ல எங்க தாணைத்"தலைவி"
அண்ணேன்னு சொல்லாமலாவது தப்பிச்சிருக்கலாம் நீங்க...விதி வலியது.. :-)

@கௌரி
ரொம்ப நன்றி கௌரி!

@லாவண்யா
முன் ஜாக்கிரதையா? :-)

@வ.மு.முரளி
வாங்க வாங்க வி.எம்.எம்!(ஏற்கனவே ஒரு முரளி இருக்கார் நம்ம டீம்ல.அதுனால எனக்கு வி.எம்.எம்..)ஜாலியான ஆள் போலேயே..
சந்தோசம் மக்கா.ரொம்ப நன்றியும்!

விக்னேஷ்வரி said...

ஐ, ரொம்ப நல்லா இருக்கு.

பா.ராஜாராம் said...

@வேல்கண்ணா
ரொம்ப நன்றி வேல்கண்ணா!

@ஜெனோ
:-)
ஆகட்டும் ஜெனோ.நன்றி!

@அமித்தம்மா
சிரிப்பை பார்த்தால்,டீமில் இருக்கிறீர்கள் போலேயே?நன்றி அமித்தம்மா!

@முரளி
உட்கார்ந்தாச்சு முரளி. :-)
நன்றி மக்கா!

@அனு
வாங்க அனு.நல்வரவு.நன்றியும்!

@அக்பர்
தேடலை நிறுத்துங்க.கிடைக்கும். :-)
நன்றி அக்பர்!

@குமார்
ரொம்ப நன்றி குமார்!

@ப்ரியா
நன்றி மக்கா!

@விக்னேஷ்
இந்த "ஐ" எங்கேயோ கேட்ட நினைவு! :-)
நன்றி விக்கி!

Thenammai Lakshmanan said...

என்ன பாரா சித்தார்த்தனா சித்தனா

thamizhparavai said...

ரசித்தேன்...

பா.ராஜாராம் said...

@தேனு
ஹா..ஹா..தெரியலையே தேனு மக்கா.தெரிஞ்சாத்தான் கண்டு பிடிசிருவேனே! :-)
ரொம்ப நன்றி தேனு!

@தமிழ்ப்பறவை
ரொம்ப நன்றி பரணி!

இரசிகை said...

ungalaiththaan theduneengalaa...:)