முகத்தில் நிறைய
கரும் புள்ளி வந்துருக்கேடா
கரும்புள்ளி என்றால்
கஷ்ட காலமேடா
என்றாள் அம்மா.
முகத்தில் தானேம்மா புள்ளி
புள்ளியில் இல்லையே முகம்?
என்றதற்கு,
புள்ளியையும் சேர்த்து
முகத்தை வழித்து
சொடுக்கிக் கொண்டாள்.
கஷ்ட காலம்
இந்த அம்மா.
***
இரண்டு
(Picture by cc licence, Thanks Hector Garcia)
எப்படிப்பா உங்களுக்கு சித்தி
வந்துட்டு போனவுங்க?
என விசாரித்தான் மகன்.
அப்பா இருக்கேன்லடா
அப்பாவோட அப்பா இருக்கார்ல
அவரோட தம்பி இருக்கார்ல
அவரோட...
என்று தொடங்கியிருந்தேன்.
ஒங்கப்பா எனக்கு என்ன முறைன்னு
முன்னாலேயே தெரிஞ்சிருந்தா
நாமளாவது நல்லாருந்திருப்போம்டா
என முடித்து வைத்தாள்...
மகனின் அக்காவோட
அம்மாக்காரி.
***
டிஸ்கி:- எனவே நண்பர்காள், வீட்டிற்கு வரும் போது, "இவர் எனக்கு வெறும் சித்தப்புதான்" என்று சொல்லி வைத்தால் போதும்.
***
நன்றி தமிழ்மணம் மற்றும் நண்பர்காள்!