Wednesday, April 28, 2010

தொடங்கி முடிவன


(Picture by cc licence, thanks Manish Bansal)

ஒன்று

ழை பிடிக்குமா?
குழந்தைகள்?
பட்டம் ஏன் பறக்குது தெரியுமா?
மருதாணிக்கு இங்கிலீஸ்ல என்ன?
சிகரெட் பிடிப்பீங்களா?
கவிதை எழுதும் போதுமா?
என்றவள்,
பேசாமல் உங்களையே
லவ் பண்ணியிருக்கலாம்.
என்றாள்.

இரண்டு

வெள்ளியோடு வெள்ளி எட்டு
சனி ஒம்போது நாளாச்சு,
கோபமாய் நீ பேசாமல் இருந்து.
என்று பேசும்போது புலம்புகிறாய்.
இடையில் கிடந்த,
சனி,ஞாயிறு,திங்கள்,
செவ்வாய்,புதன்,வியாழன்,
வெள்ளி,சனியை..
எப்படி இப்படி தாண்டிப் போகிறாய்?

மூன்று

குழந்தைக்கு சோறூட்டிக் கொண்டே
நிலவை பார்த்தாள்.
நினைத்துக் கொண்டார் போல
பாலா என்றாள்.
குழந்தை திரும்பியது.
உன்னை இல்லைடாவென
கண் நிறைந்தாள்.

Sunday, April 25, 2010

நண்பர்கள்@ஆண்டிமடம்.காம்


(picture by cc licence, thanks Procsilas)

ப்ப தொடங்கப் போகிறாய்?
என்றுதான் தொடங்கினார்கள்.

தொடக்கத்தில் மலைப்பாக இருக்கும்.
பிறகு அதுபாட்டுக்கு போய்க் கொண்டிருக்கும்
என்று ஊக்கினார்கள்.

ளாளுக்கு எதையாவது சொல்வார்கள்.
இந்தக் காதில் வாங்கி
அந்தக் காதில் விடுவது நல்லது
என்று வேறு ஆற்றுப் படுத்தினார்கள்.

செய்வது என
முடிவு செய்து விட்டால்
முட்டித் தூக்கணும் போல.

ங்களிடம் சொல்ல
ஒன்று விட்டுப் போயிற்று

முன்னதாக,
எதையாவது தொடங்கணும்.
எதை தொடங்கலாம்?
என்று கேட்டதற்குத்தான்...

ப்ப தொடங்கப் போகிறாய்?
என்று தொடங்கினார்கள்.

Thursday, April 22, 2010

அவரவர் பா(ட்)டு


(Picture by cc license Thanks itchys )

"னியனே,
விருந்து சொல்ல
உனக்கு வேறு வீடா கிடைக்கலை?"
என இரைந்து கொண்டிருந்தாள்
வெஞ்சனத்துக்கு
முருங்கை ஒடித்துக் கொண்டிருந்தவள்.

"பார்த்துடி,
முட்டை இருக்கு"
என கரைந்து கொண்டிருந்தது
ஓட்டுத்தாவர காகம்.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


Monday, April 19, 2010

விருதோம்பல்-ஒன்று


நண்பர் அக்பர் பகிர்ந்தளித்த விருது இது.சுணங்கிப் போச்சு அக்பர் பகிர்ந்து கொள்ள...

நன்பன் தெய்வா வங்கியில் பணி புரிகிறான்.வாழ்த்து அட்டைகள் வாங்க அவனிடம் காசு இருக்கும்.ஆனால் அப்படியெல்லாம் செய்ய மாட்டான்...

சகோதரி லக்ஷ்மிக்கு(தெய்வா மனைவி) ரெண்டு குழந்தைகள்.குனியநிமிர, குழந்தைகளை பராமரிக்க,என நேரம் சரியாகவே இருக்கலாம்.ஆனால் இத்துடன் நின்று விட மாட்டார்கள்,லக்ஷ்மியும்...

அழகழகு வாழ்த்து அட்டை செய்வார்கள்.அந்த வாழ்த்து அட்டையைத்தான் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைப்பான் தெய்வா.

குடும்பத்தோடு வாழ்த்து சொல்ல,பிரியத்தை காட்ட எவ்வளவு உன்னதமான மொழி இது!

போலவே,வலை உலகிலும் இப்படி ஒரு உன்னத மொழியை உணர்ந்து வருகிறேன்..

ஒருவர் ஒரு விருதை உருவாக்குகிறார்.தன்னை தைத்த நாலு நண்பர்களுக்கு அல்லது நபர்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.தன்னை போலவே நண்பர்களையும் பணிக்கிறார்.

வார்த்தை போதாமலும்,அன்பின் அழுத்தத்தை தாங்க இயலாமலும்,எதிரில் பேசிக் கொண்டிருப்பவரின்
கைகளை தன்னிச்சியாக பற்றும் செயலாகவே கருதுகிறேன்-இதையும்.

அப்படி,

அக்பரின் அன்பில் தோய்ந்த இவ்விருதை அவ்வன்பு மாறாமல் இவர்களுக்கு கடத்துகிறேன்.அந்த இவர்கள்...


1. இரசிகை

2.அம்பிகா

3.பத்மா.

4.பிரேமா மகள்.

5. Matangi Mawley

6.kutipaiya

7.சே.குமார்

8.இராமசாமி கண்ணன்.

9.ஆரண்ய நிவாஸ் ஆர்.ராம மூர்த்தி.

10. shakthikumar

11.பனித்துளி சங்கர்.

இன்னும் மிக,மிக பிடித்த என நிறைய...ஆனால் போதும்.

அக்பரின் அன்பு மற்றவரின் மூலமாக மற்றவர்களுக்கும் சேரட்டும்.நன்றி அக்பர்!

**

Wednesday, April 14, 2010

ப்ளஸ்-ஒன்


(Picture by cc license Thanks neoliminal )

முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்

ரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும்படி கேட்டவளிடம்

சொன்ன காரணத்தை

தெல்லாம் ஒரு காரணமா?
என்றவளையும் சேர்த்து

ப்ப இவனிடம்
ஆயிரத்தொரு காரணங்கள் இருந்தது.

-ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி
சுகுணா, விகடன்!

Sunday, April 11, 2010

கொடுக்கல் வாங்கல்


(Picture by cc license Thanks jesse.millan)

பெயர்களை கூடையில் வைத்து
கூடையை தலையில் வைத்து
விற்றுப் போய்க் கொண்டிருந்தாள்
பேரிளம் பெண்ணொருத்தி.

பெண்ணை பிடித்திருந்ததால்
கூப்பிட்டு பெயரை விசாரித்தேன்.

பெயர்களை விசாரித்ததாக
நினைத்தாளோ என்னவோ
கூடை இறக்கி
விலை சொல்லத் தொடங்கினாள்

யானை விலை
குதிரை விலையாக இருந்தது
ஒவ்வொன்றும்.

தென்னடா வம்பா போச்சென
கையில் இருந்த காசுக்கு பெயர் கேட்டேன்.

தூக்கிப் போட்டாள்
ரெண்டு பெயர்களை.

பெண் பித்தன்
ஸ்த்ரி லோலன்
என்பதாக இருந்தது.

ற்று கூச்சமாக இருந்தாலும்
ஊதி, துடைத்து மாட்டிப் பார்த்தேன்.

"ராசா கணக்கா இருக்க ராசா"
என்றபடி கூடையை தலைக்கு தூக்கினாள்.
ராணி கணக்கா.

Thursday, April 8, 2010

பிராப்தம்


(Picture by cc license Thanks William)

போதும் என்பதை
சொல்லத் தெரிவதில்லை.
வேணும் என்பதும்
அது போலவே.

ரு மூக்கு துவாரத்தில் நுழைந்து
மறு மூக்கு துவாரத்தில்
வருகிறதெப்போதும்
கயிறுகள்.

லையாட்டல்களில்
ப்ரியங்களை விட
பயிற்சி உதவுகிறது.

ப்புறம் பழகிப் போகிறது.

டிங் டிங் ஓசையும்
தட்டில் விழும் அரிசி மணிகளும்.

Monday, April 5, 2010

அப்பன் பிள்ளை(Picture by cc license Thanks mckaysavage)

சேவுக மூர்த்தி என்ற
'குண்டக்க மண்டக்க' மூர்த்தியை
தேடிப் போயிருந்தேன்.

பூட்டியிருந்தது வீடு.

ட்டிய சந்திலிருந்து
ஓடி வந்த சிறுவனொருவன்
மூர்த்தியை ஒத்திருந்தான்.

மூர்த்தி மகனாடா என்றேன்.

ல்ல...
வந்து...
அது வந்து...
என்றெல்லாம் இழுத்தவன்
மூர்த்தி எங்கப்பா என்று
ஓடிப் போனான்.

மேற்கொண்டு
மூர்த்தியையும் வேறு பார்கனுமாவென
திரும்பினேன்.

**