(picture by cc license, thanks ideowl)
இந்த முக்கு போய்
அந்த முக்கு திரும்பினால்
அக்கா வீடு.
ஆறேழு மாதமாகிறது போய்.
இந்த ஊர்லதான் இருக்கியா
என தொடங்கி
எல்லாத்துக்கும்
ஒரு சிரிப்பு வச்சுருக்கடா
என முடிப்பாள்
கண் நிறைந்து.
வழக்கம் போல்
மறக்காமல்
எடுத்து வைக்கிறேன்
ஆறேழு மாதத்து
பள்ளத்தை மேவும்
சிரிப்பையும்.
ஒருவேளை
இன்று பார்க்கலாம்
அக்காவும் நீங்களும்..
"உலகத்தில் இல்லாத தொம்பியை"
(இப்படித்தான் உச்சரிப்பாள்,இறுதியில் அக்கா!)