Thursday, July 29, 2010

தடம் தடமறிய ஆவல்


(Picture by cc licence, Thanks JenTheMeister)

ஒன்று

ள்ளதிலேயே
சிறந்த புகைப் படத்தைத்தான்
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.

ந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.

தில் இல்லை.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

***

இரண்டு


(Picture by cc licence, Thanks aye jay )


ரொம்ப மாறியிருந்தது
திருமண மண்டபம்.
அங்கவளை முதலில்
கண்டது.

த்திருமணத்திற்கு
வருவேனென
அவளொன்றும் சொன்னதில்லை.

னால் தெரியும்
வருவாளென.

ப்படியே அக்கா மாதிரி
என்றாள் மகனின் தலை கலைத்து.

பார்த்து சாப்பிடுங்க
வெடிச்சிறப் போறீங்க
என்றாள் பந்தியில்.

ல்லாத்துக்கும் சிரிப்பா?
என்றாள் மொய் எழுதிய
இடத்தில்.

ண்டபம் பரவால்ல போல
மாற்றத்தில்.

***

Tuesday, July 27, 2010

டூரிங் டாக்கீஸ் பாட்டு (செகன்ட் ஸோ)

மனசு மட்டும் நிறைந்து போய் விட்டால் எவ்வளவு தூங்கிப் போகிறோம்!

"மாமா எந்திரிங்க, சாப்பிடுங்க" என்ற மாப்ள ஆனா ரூனா குரல் கேட்டுதான் எழுந்தேன். எழுந்து, குளித்து, சாப்பிட்டு புறப்பட தயாரானோம்.

இடையில் இரண்டு முறை அக்பர், ஸ்டார்ஜினடமிருந்து "புறப்பட்டீங்களா?" என்கிற அழை பேசி குரல்கள் வேறு.

"இனி பாட்டெல்லாம் வேணாம்டா. பார்!. பார்த்துக் கொண்டே இரு.. " என்றது உள்மனம். தயாரானேன். 'உள்'ளை நேசிக்கிற எல்லோருக்கும் கிடைக்கிற எல்லாம் எனக்கும் கிடைக்க தொடங்கியது...

இறங்கி, அக்பர் அறை அடைந்த போது, மனுஷன் இப்படியா சிரிப்பார் மக்கா? இரு கன்னத்திலும் குழி விழ, சிரித்து, பதறி, அணைத்துக் கொண்டார். கன்னக் குழிகளில் இருந்து "அண்ணே' என்கிற பூ மலர்ந்து கொண்டிருந்தது. (இந்த சிரிப்பை மறக்க ரொம்ப நாளாகும் அக்பர்)

ஸ்டார்ஜனோ வேறு தளத்தில் இருந்தார். நிதானம் என்கிற உன்னத தளத்தில். "பாராண்ணே..பாராண்ணே" என்று இடமும் வலமுமாக மூன்று முறை கட்டிக் கொண்டார். பாரா எனலாம். அண்ணே எனலாம். இதென்ன பாராண்ணே? என உடைந்து கொண்டிருந்தேன். (இந்த பாராண்ணேவில் எவ்வளவு என்னை இழக்கட்டும் ஸ்டார்ஜன்?)

அக்பரின் சகோதரர், மச்சினர், அறையில் இருந்தார்கள். கட்டிக் கொண்டார்கள். குறு குறு வென முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். போக, 'பேசட்டும்' என்று எங்களை அனுமதித்து விலகி நின்றார்கள். தனியாக, உயரமாக.

அவ்வப்போது, 'பாராண்ணே' என நெருங்கி அமர ஸ்டார்ஜனால் முடிகிறது. வேறு வழி இல்லாமல் சும்மா கை பற்ற முடிகிறது நம்மாலும்.

திட்டமிடாத அன்பை வைத்திருப்பார் போல அக்பர் எப்பவும். நம்மிடம் பேசிக் கொண்டிருந்தாலும், வீட்டிலும் இருந்தார்.(மகள் மற்றும் சகோதரர் மகள்கள் போடும் ஆட்டங்களை வீடியோவிலும் காட்டினார்) திட்டமிடாததில் உள்ள பூரிப்பை வாங்க முடியாத தவிப்பு எனக்கு.

வீட்டிற்கு விருந்தாளி வந்தாச்சு. என்ன செய்யும் வீடு? வந்த மனிதர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்கள் வீட்டு மனிதர்கள். பின்புலமாக சில நகர்வுகளும் இருக்கும்.அதிலும் இருப்பார்கள் வீட்டு மனிதர்கள். இல்லையா? அப்படி, அங்கும் இங்குமாக இருந்து கொண்டிருந்தார்கள் அக்பரும் ஸ்டார்ஜனும்.

பார்வையின் மூக்கு திறந்திருந்திருக்கும் போது,வாசனை நிரம்பிய, விழியின் ஆன்மாவை உணர முடியும். அப்படி, அங்கும் இங்கும் நகர்ந்து முகர்ந்ததில், அக்பர் குடும்பம் அங்கில்லை. இங்குதான் இருக்கிறார்கள். அவர் அறையில். ஸ்டார்ஜனில், தம்பியில், மச்சினரில், தன்னிலும் கூட!

அக்பரின் மச்சினர், "மச்சான் நீங்க இருங்க" என தன்னை அக்பர் இடத்திற்கு நகர்த்தும் போது அக்பர் யாரென நம்மிடம் சொல்கிறார். பேச்சுக்கு பேச்சு "ஷேக்" என்பதில் ஸ்டார்ஜன் யார் என்பதை அக்பரும் சொல்கிறார். எல்லோரும் யார் என்பதை, இவர்கள் எல்லோரையும் இங்கு கொண்டு வந்த அக்பரின் தம்பியும் சொல்கிறார். சொன்னால்தானா சொல் என்பது?

கிளம்பும் போதே, "பாட்டு வேணாம்டா" என்று கௌலி தட்டியது. இல்லையா? தட்டியது போலவே பாட்டெல்லாம் மறந்து போய் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"டேய்,குடிகாரா இது குடும்பம்டா" என்கிற படம். எனக்கும் லதா நினைவு வந்து, "சரி புள்ள. இனி குடிக்கல" என எனையறியாது, எனக்குள் பேசிக் கொண்டேன், வழக்கம் போல.

புறப்பட்ட நேரம் பிரியாணி ஓரை உச்சத்தில் இருந்திருக்கும் போல. ஆனா ரூனா அறையில் சிக்கன் பிரியாணி எனில், இங்கு மட்டன் பிரியாணி. (பேசி வைத்துக் கொண்டீர்களா பாசு?)

சமையல் குறிப்பெல்லாம் எழுதுகிறாரே ஸ்டார்ஜன், அவர் செய்ததாகத்தான் இருக்கும் என " சூப்பர் ஸ்டார்ஜன்!" என்ற போதுதான் தெரிந்தது, பிரியாணி அக்பரின் தம்பி செய்தது என.

அப்புறம் என்ன செய்றது? அசடு வழிந்த அதே சூப்பரை அக்பரின் தம்பிக்கு அனுப்பினேன். அவரும் ஒன்னும் சொல்லல. ஒரே சிரிப்பில், சூப்பரா வாங்கி வச்சுக்கிட்டார்.

சாப்பிட்டு முடிந்து, கொஞ்ச நேரம் சாரு, ஜெயமோகன், என கட்டப் பஞ்சாயத்து ஓடியது. சரவணனை நாட்டாமை ஆக்கி," தீர்ப்பை மாத்தி சொல்லு நாட்டாமை" என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

வெள்ளிக் கிழமையில் வந்திருக்கிறோம். வார அசதியை, ஒரே நாளில் அடிச்சுப் போட்டது போல தூங்குவார்கள். எழுந்து துணி துவைப்பார்கள். மீண்டும் தூங்குவார்கள். "போதும் மக்கா, புறப்படலாம்" என்று எவ்வளவோ மன்றாடியும் அழைத்துப் போனார்கள் ஜபல் காராவிற்கு.

கல்லூரி காலத்தில் சுற்றுலா போனது போல இருந்த அனுபவம் அது. அதை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார், ஸ்டார்ஜன். அது 'இது'

டாட்டால்லாம் காட்டி, அறை வந்ததும், கணிணியை திறந்தேன். "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்ற கணேஷ் கொட்டகை பாடலோடு, முத்திய இடம்...

கருவேல நிழலாக இருந்தது.

****

Sunday, July 25, 2010

டூரிங் டாக்கீஸ் பாட்டு

எவ்வளவுதான் பாட்டுகள் கேட்டாலும், கணேஷ் கொட்டகையில் இருந்து கசியும் பாட்டிற்கு ஒரு தனி மணம் உண்டு. பாட்டிற்கு மணம்? ஆம். மணம்தான். மனசை கிளர்த்தும் மணம்!

திசைகளில் நனைந்து காதடைகிற சன்னமா? தூரமா? மனசை இளக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு வருகிற வாசனையா? என அறுதியிட இயல்வதில்லை. மணம் என்றால் மணம், மனசென்றால் மனசு. இல்லையா?

மொட்டை மாடியில் நின்றபடி, "மாலைப் பொழுதின் மயக்கத்திலே, கனவு கண்டேன் தோழி" பாடல் கேட்கிற தருணம் போலாக வாய்த்தது, இவ்வளவு அடர்த்தியான சவுதி வெக்கையிலும் ஒரு நாள்!

"ஒரு நாளாவது எல்லோருமா பட்டறையை போட்டுரணும் அண்ணே" என்று சரவணன் வெகு நாட்களாக கேட்டுக் கொண்டே இருந்தார். அக்பர், ஸ்டார்ஜனை பார்க்க முடியாத நேர்த்திக் கடன் ஒன்று பாக்கியாகவே இருந்து கொண்டிருந்தது. இவை எல்லாம் மாப்ள ஆறுமுகம் முருகேசன் மூலமாக நிறைவேறின.

"பேசிக் கொண்டே இருந்தால் காரியம் ஆகாது. உதறி கிளம்புமையா..வியாழன் மாலை வர்றேன். தயாரா இரும். எல்லோரையும் பார்க்கலாம்" என்றார், ஆனா ரூனா மாப்ள.

சொன்னது போலவே வந்தார். முரட்டு காரில்! பார்க்கத்தான் ஆள் பூஞ்சை. முரட்டுத்தனமான அன்பு! காரைப் போலவே.

ஆறுமுகம் ரூமில் தங்குவது, வேலை முடித்து சரவணன் அங்கு சேர்ந்து கொள்வது, ஜுபைலில் இருந்து முடிவிலி சங்கர் தமாமில் இணைந்து கொள்வது, மறுநாள் அக்பர், ஸ்டார்ஜனை சந்திப்பது, என கொள்ளக் கூட்ட பாஸ் மாதிரி திட்டங்கள் வகுத்து தந்தார் சரவணன். ரைட் ஹேன்ட் ஆனார் ஆனா ரூனா.

திட்டங்கள் செயல் படத் தொடங்கியது. கணேஷ் கொட்டகையில் இருந்து, "விநாயகனே வினை தீர்ப்பவனே" பாடல் தொடங்கியது போல இருந்தது எனக்கு. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ" என்று தமாமில் இணைந்து கொன்டார் முடிவிலி சங்கர்.

மேலும் இரண்டு பாட்டு முடிவதற்குள் ஆனா ரூனா அறையில் இருந்தோம். 'சகல' ஏற்பாடுகளையும் ஆனா ரூனா கம்பனி செய்து வைத்திருந்தது. குப்பிகளை கண்டதும் "தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" என்ற பாடலானேன் நான்.

கொள்ளக் கூட்ட பாஸ் வேறு, நான் வர சற்று தாமதமாகும்ண்ணே . நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க" என்று அழை பேசியில் நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்தார். "சரக்கா? சரவணனா?" என்ற பட்டி மன்றத்தில் நான் சரக்கு சைடில் சாய்ந்தேன்.

கருணா அண்ணன்( ஆனா ரூனா நண்பர்கள்) சேட்டா, (பெயர் மறந்து போச்சு சேட்டா..குற்றவாளி நான் இல்லை. திரவம்!) முதல் ரவுண்டை தொடங்கி இருந்தோம். மாப்ள ஆனா ரூனா சரவணனை கூட்டி வரவேணும் எனும் எரியும் பொறுப்பில் எரிந்து கொண்டிருந்தார்.

முதல் ரவுண்டு முடிவதற்கும், "ரோஜா மலரே ராஜகுமாரி, காதல் கிளியே அழகிய ராணி" என ரோஸ் நிற சரவணன் வருவதற்கும் சரியாக இருந்தது. (சட்டைதான் பாஸ் இனி நினைவிற்கு வரும்)

சரவணன் வந்த சமயம் நான் இரண்டு ராஜாராமாக இருந்தேன். என்னிடமிருந்து பிரிந்து என்னிடமே பேசி சிரித்துக் கொண்டிருந்தேன். வந்த சரவணன் என்னையும் ராஜாராமையும் கட்டிக் கொன்டார். சங்கர்களையும் கருணா அண்ணன்களையும் கூட!

பிறகு, களம் சூடு பறக்க தொடங்கியது. மாப்ள ஆனா ரூனாவும் சபையில் அமர்ந்து பொறி பறக்க சாணை தீட்டிக் கொன்டார்." என் சாணைக்கு பிறந்த சோனை" என அவ்வபோது ஆனா ரூனாவை பதம் பார்த்துக் கொண்டிருந்தார் சங்கர்.

சும்மா சும்மா பேசிக் கொண்டிருந்தோம். சும்மா சும்மா சிரித்துக் கொண்டிருந்தோம். சிரிப்பு பேச்சாக மலர்ந்தது. பேச்சு சிரிப்பாக பூத்தது.

பேச்சு பேச்சாக இருந்தாலும், சாப்பிடும் பக்குவம் அறிந்து அண்டா நிறைய பிரியாணியை கொண்டு வந்தார் ஆனா ரூனா. (யோவ்.. இவ்வளவாயா செய்வீங்க?) அரக்கத் தனமாக தின்று கொழுத்தேன்.

சாப்பிட்ட தெம்பில், சரவணன் எனக்கு இடுகையை போஸ்ட் செய்வது குறித்தான பாடத்தை தொடங்கினார். நானோ, "வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்" என்ற கணேஷ் கொட்டகையின் கடைசிப் பாடலில் இருந்தேன்.

ஓடம், ஆடி ஆடி கரை தட்டிய போது விடிந்திருந்தது. மாப்ள ஆனா ரூனா, " சட்டி சுட்டதடா கை விட்டதடா" என்று படுக்க வைத்த ஆச்சர்யக் குறி போல எப்பவோ மல்லாந்திருந்தார்.

இன்று, கனவு நாயகர்கள் அக்பர் ஸ்டார்ஜனை சந்திக்க போகிறோம் என்ற கனவோடு தூங்கிப் போயிருந்தேன்...

--பயணப் பாடல் தொடரும்.

Thursday, July 15, 2010

பெயரில் என்ன இருக்கிறது?


(Picture by cc licence, Thanks Adam Jones, Ph.D.)

க் பக் பக் என அழைத்தால்
தானியம் தரவென அறிகிறது
பெயரில்லா கோழி.

தடு குவித்து ப்ரூச் என்றால்
புரியும் ரோசிப் பூனைக்கு.

கெத் கெத் கெத் என
மேல் அன்னத்தில் தட்டினால்
வாலாட்டி ஓடி வரும் ஜிம்மி.

"ந்தா" என்றதும் தட்டெடுப்பார்
முன்பு,
திரவியம் என்றழைக்கப்பட்ட
தாத்தா.

***

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

Thursday, July 8, 2010

எப்படி கண்டு பிடிக்கிறீர்கள் குருஜி?


Picture by cc licence, Thanks Avlxyz)

ஒன்று

நான்கு கட்டளைகள் இட்டார்
வீட்டிற்கு வந்த குருஜி.

"போகாதே"

"ராதே"

"பேசாதே"

"சும்மா இரு"

புத்தி வருவது போல்
பேசு பேசுன்னு பேசி...

ட்ட பிறகுதான்
போனார்.

இரண்டு

ர் வந்ததும் எழுப்பச் சொல்லி
உறங்கிப் போகிறீர்கள்.

டம் விட்டதும்
எப்படியும் எழுப்புவான் என
தூங்கிப் போகிறீர்கள்

சொல்லுங்களேன்...

ப்படி கண்டு பிடிக்கிறீர்கள்
எப்பவும் நமதிருக்கை
அருகருகே இருப்பதை?

***

Monday, July 5, 2010

இரண்டாம் பாகம்


(Picture by cc licence, Thanks krishnamohan01)

ஒன்று

தவை திறக்க வெளியே தள்ளு
என்று எழுதி இருக்கும்
ஸ்ரீராம் டாக்கீஸ் கதவில்

ப்புறம் இது
ரவிபாலா a/c தியேட்டர் ஆச்சு.

ப்போ அது
EXIT ஆச்சு.

***

இரண்டு

ழி அனுப்ப வந்த
ரயில் நிலைய முகங்களில்
எனக்கானது இல்லை.

யினும்,

டா..டா..வென அனிச்சையில்
அசையுமென் கையை
கட்டுப் படுத்தவில்லை.

***

மூன்று

"ரு சேர்ந்து பார்க்க"

எனும் ஒரு ஓவியம்
தொடங்கியிருந்தோம்.

ரிரு புள்ளிகள் பாக்கி.

நிலுவையை கருத்தில் கொண்டு
தலைப்பை மாற்றினோம்.

"ரு சேர்ந்து பார்க்கலாகாது"

***

Saturday, July 3, 2010

சேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ், ஆறுமுகம் முருகேசன், சு.சிவக்குமார்

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் - ஏழாம் நாள் - இங்கே சொடுக்கவும்

சேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ், ஆறுமுகம் முருகேசன், சு.சிவக்குமார்

நன்றி
பா.ராஜாராம்

Friday, July 2, 2010

செல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் ஆறாம் நாள் - இங்கே சொடுக்கவும்

செல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா

நன்றி
பா.ராஜாராம்

Thursday, July 1, 2010

நேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நந்தா

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள் - இங்கே சொடுக்கவும்

நேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நந்தா

நன்றி
பா.ராஜாராம்