Wednesday, September 30, 2009

ஒன்றிரண்டாக இவள்


(picture by CC license, Thanks Javier )

ஒன்று:
அழைத்து போக
வந்தார்கள்.
ஆடிக்கு.

அழுதாள்
இவள்.

அழுது கொண்டே
இருப்பவளின்
ஆகச்சிறந்த அழுகை
அது.

இரண்டு:
ஓட்டிடை
எட்டிப்பார்த்து
கீச் கீச் என்கிறது
அணில் குட்டி.

" நீ வேறையா?.."
என்றாள் இவள்.
என் மேல் உள்ள
எரிச்சலில்.

தருணம்
தளர்த்தித்தந்தாள்
அணில் குட்டி.

மூன்று:
"திறந்து
கிடக்கு முண்டம்"
என மூடிக்கொண்டாள்
இவள்.

கதவு மூட
எழுகிறேன்
கனவு கலைகிறது.

34 comments:

செ.சரவணக்குமார் said...

//அழுது கொண்டே இருப்பவளின் ஆகச்சிறந்த அழுகை அது.//

உங்கள் எழுத்தின் தரம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள்.

என்னாச்சுண்ணே திடீர்னு இப்பிடிக்கெளம்பீட்டிங்க ஊர் ஞாபகம் வந்துருச்சா?

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல படைப்பு. வாழ்த்துக்கள் பா.ரா.

Nathanjagk said...

உங்களின் எல்லாக் கவிதைகளைப்​போலவே இதுவும் கனத்த அனுபவங்கின் ​செரிவாக இருக்கிறது. //அழுது கொண்டேஇருப்பவளின்ஆகச்சிறந்த அழுகை அது// அற்புதம்!

தமிழ் நாடன் said...

ரொம்ப அருமை!
முடிவுகள் ஒவ்வொன்றும் முத்தாய்ப்பு!

சந்தனமுல்லை said...

மிக அருமை!

சந்தான சங்கர் said...

கனவுகளிலே
ஆகச்சிறந்த
கனவு...

Vidhoosh said...

:) தவிரவும் அதிக உணர்வுகள்.
அருமை.

வித்யா

Ashok D said...

வித்தியாசமான நடை புதுசா இருக்கிறது

மணிஜி said...

முத்துக்கள் மூன்று
அனைத்தும் நன்று

அ.மு.செய்யது said...

நல்லா பண்ணியிருக்கீங்க ராஜாராம்...

ரசித்தேன்.

Good one !!!

இரசிகை said...

nantru...!!

:)

rvelkannan said...

கவிதை நன்று
கலைந்த கனவுகளுக்கு
வருத்தபட்டு கொண்டியிருக்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

அழுது கொண்டே இருப்பவளின் ஆகச்சிறந்த அழுகை அது.

தருணம் தளர்த்தித்தந்தாள் அணில் குட்டி.

"திறந்துகிடக்கு முண்டம்"என மூடிக்கொண்டாள்இவள்.

முத்துக்கள் மூன்று ராஜா. எத்தனை முறை எத்தனை கவிதைதான் நல்லா இருக்குன்னு சொல்றது. வாய் வலிக்குது நண்பா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

எனக்கென்னமோ கவிதை இப்போ ஒரு தினுசாகப் போற மாதிரித் தோணுது. ஏன் ராஜாராம், லதா இந்த வலைப் பக்கமே போவதில்லை என்று உங்களுக்கு நிச்சயமாய்த் தெரியும் என்றும் தோணுது. சரிதானா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமை

மண்குதிரை said...

munum enakku pitichchirukku

konjsma sirippum.

நந்தாகுமாரன் said...

நல்லா இருக்கு ராஜாராம்

பாலா said...

மாம்ஸ் எனக்கு உங்க கவிதையோட தாட் இப்படி புரிஞ்சிருக்கு
திருமணப் புதிதில் இருந்த அன்பு அடுத்த்கட்டங்களில் வார்த்தைகளில்
எரிச்சலை உமிழும் எதார்த்தத்தை முன் வைப்பதாய் தோன்றுகிறது
(இது என் புரிதல் மட்டுமே மாம்ஸ் ) மத்தபடி மத்தவங்க எல்லாம் சொல்லிட்டு போய்டாங்க
நான் என்னத்த சொல்ல

நேசமித்ரன் said...

முதல் முத்தம்
கொள்ளி..

உயிருள்ளவரை நான்..,
நடமாடும் சிதை!!

-ரசிகை

இந்த வரிகளில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கும் போது வாராய் என்று இழுத்து வந்து விட்டது பா.ரா வாசனை

நர்சிம் said...

இது...தான்...

நேசமித்ரன் said...

பா.ரா அனுமதியுடன்

ஒன்றிரண்டாக -2

வாங்க மாப்ள உட்காருங்க
ஏம்மா யார் வந்திருக்கா பாரு
அப்பறம் .... இல்ல மாமா ஒரு வசூல்
மசங்குனதுக்கு பெறவு வர சொனாங்க அதான்
அதுக்கென்ன மாப்ள சரவணா மோட்டார் எடுத்துட்டு வர சொல்றேன்
வெய்யத்தாழ ......
......................
வந்து ரெண்டு நாள் கூட ஆகல
ஐயோ என் மானத்த வாங்குறதுக்குன்னே
சரி நான் கிளம்பட்டுமா ? டாய் ..!
ஏதேது மரியாதை பலமா இருக்கு
அப்புடித்தான் கூப்டுவேன்
அப்புடியா அப்போ ...........

சரிங்க மாமா அப்ப....
ஆகட்டும் மாப்ள
அடுத்தால வரும்போ
தாக்கல் சொல்லிட்டு வந்தா
வண்டி அனுப்பிடறேன் மாப்ள
ஏபுள்ள வெளிய வந்து மொகத்த காட்டு
சொல்லிக்கிராங்கள்ள
எதுக்கு கண்ணக் கசக்குரவ
ஏ அழாத புள்ள .........
..................
மச்சான் பஸ்சு போயிருச்சு
அடுத்த பஸ்சு இனி கருக்கல்ல தான்
.......................
அடிப்பாவி இதுக்குத்தான் அப்பிடி அழுதியா
சீ போடா ......

கவிதாசிவகுமார் said...

சின்னம்மாவைப்பற்றிய அதீத நினைவின் வெளிப்பாடுதான் இந்தக் கனவு. சரிதானே?

Deepa said...

//அழுது கொண்டேஇருப்பவளின்ஆகச்சிறந்த அழுகைஅது.//
வெகுவாக ரசித்தேன்.

அனைத்தும் அருமை.

மாதவராஜ் said...

மூன்றாம் பால் என்பதால் மூன்றா?
அருமை. ரசித்தேன்.

velji said...

it requires guts and skill to write this kind of kavithai.you proved yourself!

Anonymous said...

சுவையான உண்மை...தித்திக்கிறது ஆனால் திகட்டவில்லை

ஹேமா said...

ஒரு கோர்வையில் அசல் மூன்று முத்துக்கள் அண்ணா.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்,
சரவணா,
விஸ்வா,
ஜெகா,
தமிழ்நாடன்,
முல்லை,
சங்கர்,
வித்யா,
அசோக்,
மணிஜி,
செய்யது,
ரசிகை,
வேல்கண்ணா ,
நவாஸ்,
ஜெஸ்,
அமித்தம்மா,
மண்குதிரை,
நந்தா,
பாலா,
நேசா(அருமை மக்கா)
நர்சிம்,
உதிரா,
தீபா(நல்வரவு தீபா..)
மாதவன்,
வேல்ஜி,
தமிழ்,
ஹேமா,

வேலையாக ரியாத் வந்திருக்கிறேன் நண்பர்களே.தனி தனியாக கை குலுக்கி கொள்ள வாய்ப்பில்லாமல் போச்சு.எல்லோருக்கும் நிறைய அன்பும் நன்றியும் மக்களே..

கல்யாணி சுரேஷ் said...

கலக்கிட்டீங்கண்ணா.

ஷங்கி said...

கலைந்த கனவுகளின் நினைவுகளருமை.

உயிரோடை said...

ஒன்றொடு ஒன்று கொஞ்ச‌ம் ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாது போல‌ இருந்தாலும் க‌டைசி வரியில் எல்லாம் இணைகின்ற‌ன‌. அந்த‌ க‌டைசி வ‌ரியே ஒரு க‌விதையாகும்

SUFFIX said...

அண்ணே கணக்கு நல்லாவே போடுறீங்க!! நடக்கட்டும் நடக்கட்டும்!

இன்றைய கவிதை said...

//"திறந்து
கிடக்கு முண்டம்"
என மூடிக்கொண்டாள்
இவள்.


கதவு மூட
எழுகிறேன்
கனவு கலைகிறது.//

ஸார்! கலக்கிட்டீங்க போங்க!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நச்
நச்
நச்

-ப்ரியமுடன்
சேரல்